திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 501- 600

பாடல் எண்:- 501
சீரணியுஞ் சிற்றிடைக்குத் தண்டைக்காலில்
செழித்ததுடை யிடையதுக்கே யரைநாணிட்டு
நேராக விருகரத்தில் காப்பு நல்கி
நெற்றிதனில் சிந்தூரப் பொட்டுஞ்சாற்றிக்
கூரான இருவிழிக்கு மையிட் டேன்பின்
கொண்டைதனில் ரத்தினத்தால் சுட்டியிட்டு
ஆராரோ வென்றுதொட்டி லசையத்தானும்
ஆட்டினா ளிருகரத்தை நீட்டி னாளே.
பாடல் எண்:- 502
நவரத்ன ஊஞ்சல்தனி லெனையே வைத்து
ரதிமாது மங்கையர்க ளருகே சூழ்ந்து
கவனமுடன் பலகலைகள் சிந்து பாடிக்
கருதினா ரெனைத்தள்ளிக் கவிக ளோசை
தவனம்வரு காமலசைந் தாட்டி னார்கள்
தாயான அன்னையுமே யமிர்த மூட்ட
அவரவர்கள் பகுதிமுறை யதாக ஆட்டி
னாரசைய வூஞ்ச லாட்டி னாரே.

தொட்டிலாட்டுஞ் சிறப்பு
(தரு)
ஆட்டினார்தொட்டிலிட்டு அன்னையுமென்னை
ஆராரோவென்றுஊஞ்ச லாட்டினார்காணும்.

பாடல் எண்:- 503
ஆட்டினாரூஞ்சலதனிலன்னை
நானுமசையாமல்நித்திரைகள் செய்தேனாண்டே
சூட்டியபொற்பணியொரு புறமிருக்க
இருசெங்கையிருந்த வளைதான்குலுங்கக்
கூட்டியசிங்கார திட்டிக்கதவடைக்கக்
கோட்டைக்காரர்கொல்லர்கண்டு எனைமறிக்க
பாட்டியவூஞ்சலசைய நாட்டியமாதர்
பரதசங்கீதமுதபாங்கிகளாட- ஆட்டி.

பாடல் எண்:- 504
ஈராறும்வாங்கிசுழிமுனைமேனின்று- பின்பு
இருநாலைக்கட்டியொருமேனிமூட்டி
கூரானவாசிமுனைவழிநடக்க- நல்ல
கோகிலம்போலன்னையென்மேல் சிந்துகள்பாட
வீரானமாதவர்வந்துவீணைவாசிக்க- அன்னை
மேலணைத்துக்கொஞ்சி முத்தமேவிதுதிக்கச்
சீரானகொங்கைமட மாதுகள்- பாடச்
சித்திரசதுர்கூடமெல்லாம் பிரகாசிக்கவே- ஆட்டி.

பாடல் எண்:- 505
கண்டமத்திலொன்றுடனிரண்டு மாறவும்- வளர்
காலோடிநாலுமவன்மேல் துதிக்கவும்
கொண்டதிருச்சக்கரத்திலொன்று சுழிக்க- என்மேல்
கோகிலச்சிந்துகள்பாடி- அன்னைதுதிக்க
நின்றுநடனஞ்செய்தல்ரஞ்சிதங்கள் போல்- மாதர்
நேசமுடன்பக்ஷம்வைத்துப்பாசமுடனே
வண்டுமொழிக்கிள்ளையெனுமாதர் கூடியே- மதுர
வாக்கியமுடனேபதங்களோக்கிமதாக- ஆட்டி. 

பாடல் எண்:- 506
சொற்பனஞ்சுழுத்தியெனுஞ் சாக்கிரத்தினு- நல்ல
துரியந்துரியாதீதமுஞ் சேர்ந்துமேலாடக்
கற்பனையால்நித்திரைவந்து புத்தியினால்- பின்னுங்
கருத்தினால்தெரிசனங்கள் கண்டு நிற்கையில்
விற்பவமதாகிவளருற்பனத்தைக்கா- ணெந்தன்
மெய்தனில்துய்யமதிமையத்திலும்
தற்பொருளின் கற்பனையாலெப்போது மாண்டை- யெந்தன்
சாதனையால்வாசிவந்து சட்டமதாச்சே- ஆட்டி. 

பாடல் எண்:- 507
குறைவிலாமதுமெப்போதுமுறைவின் முறைகள்- கூன்
கோதாட்டிமுத்தாட்டி யன்னைதாலாட்டியே
சரசரவென்றுவூஞ்சல்பதுமைகளாட- நல்ல
சதுர்கூடமெல்லா நிறைந்துதாதிகள்பாட
அருவிநதிக்கரையிலளவாய்ச் சென்ற-பொறி
ஐந்துபுலனைந்ததனை அழைத்துக்கொண்டுநல்ல
முறிகிக்கனலெழுந்தச் சுழிமுனைக்குள்- மெத்த
முழங்கையுடலசைத்துக் குலுங்காமலும்- ஆட்டி.

பாடல் எண்:- 508
கள்ளஇந்திரியமதைக்கருத்தில் வைத்துக்
கலையிலீரேழுமதைச் சுழியிலடக்கி
உள்ளத்திலும்பாழ்க்கதவைப்பூட்டி யெனக்கு- அன்னை
உறக்கம்வரஊஞ்சலினில்சிறக்கவே நின்று
வள்ளலெனுமன்னையு மாமதுரமூட்டித்- தாலாட்டி
வைத்தணைத்துச்சற்றுமவள் புத்திகலையாமல்
எள்ளளவெனைக்கைவிடாஏந்தியே யன்னை- பின்னு
மெடுத்துமடிமீதினில்வைத்துப் பிரியாது- ஆட்டி.

பாடல் எண்:- 509
சுத்தவெளிகோட்டையிரண்டுங் கதவை- மூடி
நல்லசித்திரவீதியலகையின் பாரியோடவும்
வைத்துமேசோதிவிசுத்திவாசி கலைகள்
சுவாசமாறியபோதுகவிகளாறியே நின்று
சித்திரத்தெருவீதியும் வாசியோடவும்- நல்ல
தெசவாயுவுபத்தும் பெருவிசையோடவும்மூல
முத்திரைகம்பத்தடியில் நித்திரைசெய்ய- சென்ம
முன்னும்பின்னுமென்னைத்தள்ளியன்னைதயவாய்- ஆட்டி. 

பாடல் எண்:- 510
இருபத்தோராயிரத்தறுநூறு- பேரு
மிழுத்தூஞ்சலெனைத்தள்ளிக் கருத்துகந்துசுவாசம்
வருத்தம்பாராமலுமேவைத் தணைத்துமே
மதிமாமலர்கொங்கைவலக்கை வாயிலூட்டினள்
சருக்காய்த்திருத்தமதாகவும் யானமிர்தமுண்டேன்
வாசிசுழியில்கலைகொண்டிழுத்தேதொடர்ந்துமேவிஅந்தத் 
திருத்தமுடலும்வச்சிர ஊஞ்சலசைய- மாதர்
தெளிந்துகவிகள்பாடியெனைத் தள்ளவே- ஆட்டி.

(விருத்தம்)
பாடல் எண்:- 511
இருந்தவுரந் தன்னை யிரு நாடி நீட்டி
யியல்பான சுழிமுனைதான் கிடத்தி வைக்கக்
கருவான கூர்மனவன் கதவ டைக்க
கனகசக்ர திரிகர்த்தன் சுழுத்தியோட
அருவமெனுங் குபேரனுந் தான்சு ழியிலே
ஆதார மைம்பூத மூலஞ் சேர
மருகாம லென்னையன்னை தொட்டி லாட்ட
வன்னிநதிக் கரைமேலுந் தூங்கி னேனே. 

பாடல் எண்:- 512
தொட்டிலிட்டு அன்னையென்னை ஆட்டி நிற்கச்
சுகந்தெளிந்து சுழித்திவிட் டெழுந்த சோதி
முட்டிமுட்டித் துடித்தகர்மப் பகையைப் பார்த்து
முறுக்கிவினஞ் செருக்கையிலே யன்னை தானும்
கட்டிமுட்டி முட்டென்னை யெடுத்த ணைத்துக்
கனக்கும்ப ஸ்தனவமிர்தம் வாயி லீந்தாள்
எட்டி யெட்டித் தவழ்ந்தன்னை மடியி லேற
எளிதாக விளையாடி யிருந்தே னாண்டே. 

பாடல் எண்:- 513
பாராட்டிப் பலவிதமாய் வளர்த்தா ளன்னை
பதியான பாகமெல்லா மோடி யாடிச்
சீராட்டி வீதியெங்குந் தவழ்ந்து யானும்
சிற்றடியால் தத்தடியிட் டிருந்தேன் பின்பு
நீராட்டி மையுமிட்டுத் திலதந் தீட்டி
நேர்மையொரு வர்னமதாய் வளர்த்தா ளன்னை
ஆராட்டி யெனைவளர்த்துப் புவியி லேதான்
அருமையுடன் பிறந்துவய தைந்து மாச்சே. 

பாடல் எண்:- 514
அந்தமுள்ள திங்களொரு ஐந்து மாச்சு
அருமையதா யெனைவளர்த்த அன்னை தந்தை
சந்தமுள்ள சாஸ்திரங்கள் கல்வி நூல்கள்
சமத்தான கணக்கெழுதப் புவியின் மீதில்
விந்தையுடன் பிழைக்குமென்று பள்ளி தன்னில்
வேதியர்தன் வசத்திலே வைத்து மேலும்
எந்தனுள்ள மகிழ்ந்துவொரு திங்கட் குள்ளே
யெண்ணறிவுஞ் சாஸ்திரமு மெழுதி னேனே. 

பாடல் எண்:- 515
கற்றறிந்தேன் சாஸ்திரங்கள் கல்வி நூல்கள்
கருத்தறிய வயதெனக்கு ஈரைந் தாச்சு
சித்தறிந்து விளையாடக் கவன மாச்சு
செயலறிந்து மாதர்களைச் செயிக்க லாச்சு
வித்தறிந்து விளையடி வயது போச்சு
மேன்மேலும் பொருளாசை மிகவு மாச்சு
பற்றில்லா வுறமுறையு மேலுண் டாச்சு
பார்மீதில் பேராசை படைத்திட் டேனே. 

பாடல் எண்:- 516
கருத்ததனில் முன்னிருந்த அறிவும் போச்சு
கனத்தபொரு ளாசையெனக் கதிக மாச்சு
விரிந்தபுவி பெண்டிர்மக்கள் மயக்க மாச்சு
வேகமுடன் பொருளாசை மேன்மே லாச்சு
வருத்தமுடன் பலசூதும் பொய்கள் பேசி
வாய்மைதெரி யாமல்மிக வாழ்ந்தேன் யானும்
உருத்தமுடன் தரித்தபடி யுலகுக் குள்ளே
உகந்துவெகு பாக்கியங்கொண்டிருந்தே னாண்டே. 

பாடல் எண்:- 517
விதமான புவிதனிலே யான்பி றந்து
வெகுதனமு மாடுமக்கள் பெண்டிர் சுற்றம்
நிதமாக வாழ்ந்துஇனி யிருந்த நாளில்
நிஷ்டைசிவ பூசையிலு நிபுண னானேன்
சதமான மோக்ஷமுனக் களிப்பே னென்று
சமத்தான காரியத்தின் குருக்கள் வந்து
பதமான அருள்பெற்று வாழ்வீ ரென்று
பதியில்வந்து தீட்சைதந்து பகர்ந்திட்டாரே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 518
ஜெனனமுத்தி சித்திபெறுந் தெய்வசி த்திமோக்ஷவரை
இனமறிந்து வுலகுதனி லீடேறி வாழ்ந்தவற்கு
கனரத்ன மேலதிக காரியமாஞ் சற்குருவந்
தினமறிந்து தீட்சைவைத்து இயம்பினவா றெய்திலனே. 

பாடல் எண்:- 519
அஷ்டஅயிஸ் பரியமதும் யானளித்து வான்புவியில்
கஷ்டமணு காமலுமே காரியகுருக் கள்வந்து
இஷ்டமறை வேதசிவ இன்பருள் பூசைவிதி
சிஷ்டையெனக் களித்துத் தீக்ஷைவைத்து ஓதினரே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 520
கைப்பொருள் வாங்கி யுபதேசஞ்சொல்லிக் கருதியேதான்
மெய்பொரு ளாவி மேன்மேலெ னக்கெய்து விளக்கமறி
மைப்பொழி தேவ மந்திரக் கியான வாறுதன்னைச்
சைப்படி தீட்சை தவமிது வென்று சாற்றினரே. 

பாடல் எண்:- 521
கனமான பூசை பலிதூப தீப காரணமாய்
இனமாகச் சொல்லி யெடுத்துரைத்தா ரிந்தப்பூமிதனில்
தனகன மேவிச் சிவபூசை ஓம தர்ப்பணமே
உனதனுஷ் டான உபதேச வாக்கிய மோதினரே. 

(வெண்பா)
பாடல் எண்:- 522
அவ்வும் உவ்வென்று ஐயுங் கிலிச்சவ்வும்
சிவ்வுமவ் வென்று செப்பினார்- யவ்வெனவும்
நகரமகர நாடி யருளோ மெனவும்
பகரமெனுந் தீக்ஷையிது பார். 

பாடல் எண்:- 523
எட்டிரண்டும் பத்து விளிய தொருதீக்ஷை 
அஷ்டமா சித்தி விளையாடு- மிஷ்டமுடன்
ஐயஞ்சு மாற அவனி முதல்வான
மெய்யிதுபார் ஜெகவசிய மேல். 

சிவபூசைசெய்த விவரம்
(தரு)
பூசைகள்செய்தேன் காண்- சிவக்கியான
பூசைகள்செய்தேன்காண். 

பாடல் எண்:- 524
வாசிக்குதிரைமேலேறிக் கேசரத்தின்
வழியோடேசென்றுச் சுழியறியாமலும்
வேசிக்குளாசை விரகத்துடனேயான்
வெறும்பூசைமணியாட்டி வீணுக்கேயன்
ஆசித்துசற்குரு தெய்வமிதுவென்று
அர்ச்சித்து ஆத்துமந்தன்னையறியாமல்
நேசித்துப்பூசைநிஷ்டையறியாமலும் நின்றே
நிமித்தமாய்க்கண்டுருச் செய்தேன்யான்- பூசை. 
பாடல் எண்:- 525
கோலமறியாமல்காலையில் வில்வக்
கொழுந்தைமுறித்தினிகூகைகள் போலவும்
சாலவுந்தேவாரமோதித்துதித்துடன்
சங்கையறியாமல் பங்கப்பட்டேயினி
காலைதனிலெழுந்தாலயஞ் சுற்றிக்
கருத்தினில்வாசியைக்கண்டு துதியாமல்
சீலமலரையுயிரென்றறியாமல்
சென்றுபறித்துயான் கொண்டுவந்தர்ச்சனை- பூசை.  

பாடல் எண்:- 526
வானத்திலெழுந்த வாலாம்பிகையை
மதியாலறிந்து கெதியடையாமலும்
ஏனந்தனில்முளைத்தெழுந்த கொழுந்தை
யிறுக்கிநானினிமுறுக்கிக் கிள்ளியே
ஞானப்பிரகாசமெய்ஞ்ஞான வித்தையால்
நாடிக்கருவூரில் நாதத்துடன்
மீனமேஷமறியாமல் குருவந்து
வீணதாம்பூசைவிருதாவிற் செய்யவும்- பூசை. 

பாடல் எண்:- 527
ஆத்துமலிங்கத்தமுரியைக் கொண்டு
அறிவினாலர்ச்சனை யான்துதியாமலும்
பார்த்திபலிங்கம்பிடித்துருமன்தனை பாலித்துப்
பூசித்துக்கங்கையைத் தூற்றினான்
பூத்தமலர்கொண்டறுத்து ஆவிடைமேல்
பொழிந்து அர்ச்சனைவழிந்து பாய்ந்துமே
வேற்றுமையென்றறியாமலுங் காரிய
வீணர்சொற்படியே யானும்பூசித்தேனே- பூசை. 

பாடல் எண்:- 528
தில்லைக்குளத்தின்கரை நந்தவனத்தில்
முல்லையிதழ்கொண்டு அர்ச்சணைசெய்யாமல்
கல்லைத்தெய்வமென்று சொல்லறியாமலும்
வில்வமலரைவெடுக்கென்று போட்டுயான்
அல்லல்லோ இதுயாதுமறியாமல்
அம்பரபூசையடுத்துங் கிடையாமல்
வெல்லுநீரிறைத்துப் புவிக்குள்ளாக
வெகுவுயிர்கொன்று வதைத்துப்பலிசெய்து- பூசை. 

பாடல் எண்:- 529
தெண்டிரைக்குள்ளேசெழித்த மலர்க்குள்ளிள
ஜீவனிருப்பதுபாவமென்றுஞ் சற்றே
கண்டறியாமல்கருத்தால் பறித்துக்
கடைத்தேறப்பூசை நடத்தினேனிப்படி
அண்டர்கள் போற்றுமுடலுக்குள்ளாத்துமம்
அங்கிருப்பதென்றறியாமல் யானுமே
வண்டக்குருக்கள்மொழி தவறாமலு
மனத்தினாலேவலுவாயுருச் செய்து- பூசை. 

பாடல் எண்:- 530
காரணசற்குருபாதமே நம்பியே
பூரணத்தைப்பார்த்துப் பூசைகள்செய்தேன்காண்
தாரணி யென்றறியாமலுநேமகந்தான்
செய்து ஆத்துமலிங்கமறியாதே
வாரணிமாமலர் வாலாம்பிகைபதம்
வாழுங்கருவூரில் வாழ்ந்திடும்போதிலே
பாரணையாகிய வாசியைவாவென்று
பாலித்துஅன்னையின் பாதம்பணிந்தேனே- பூசை. 

பாடல் எண்:- 531
விந்துநாதத்தொனியந்தம் பொருந்திய
சுந்தரஞானச்சுகாதிதம் பெற்றுமே
இந்திரியசுகஇன்பச்சுழிமுனை
சந்தனகுங்குமகந்த பரிமள
தத்துவக்கியானந்தவமறி யாமலும்
உத்தமஞானஉபதேசங் காண்கிலார்
வித்துவித்துநாதசத்தறி யாமலும்
பெற்றபேரிப்படிச்சித்தர் சொல்வாக்கியம்- பூசை. 

பாடல் எண்:- 532
மூலச்சுழிமுனைவாலை குண்டலியே
ஞானத்திலேறிமெய்ஞ்ஞானமுங் காண்கிலார்
பாலத்திலுமயிர்ப்பாலமறியாமல்
காலத்திலுங்கற்பசாதனை செய்யாமல்
ஆதாரமாறுமேலாதாரங் காண்கிலார்
வேதாகமத்தில்விவேகமறியாமல்
நாதாக்கள்சொற்படி ஞாயமறிந்துமே
பேதாபேதமறிந்தாதியைக் காண்கிலார்- பூசை. 

பாடல் எண்:- 533
முத்திதருஞ்சுழிசித்திரக் கூடத்தினில்
அத்திமுகனருளர்ச்சனையார்த்திடார்
சித்தியருள்சிவசின்மயரூபமே
நித்தம்பூசியாமல் நின்றுமயங்கிநான்
பஞ்சபூதமறியாமலுஞ்சுறு
வஞ்சகக்காரிய பஞ்சகுருக்களால்
எஞ்செயலொன்றுமினியறியாமலு
நெஞ்சகமேநிலையாமலும் யானொரு- பூசை. 

பாடல் எண்:- 534
மதிமலராயிரத்தெட்டிதழ் சுற்றிலுங்
கெதிபெறுஞ்சிவக்கியானமறியாமல்
விதிமலர்சுழிமேவுஞ்சிங்காதனம்
பதியறிந்துபஞ்சாக்கினை காண்கிலார்
பத்துடன் தீக்ஷைப்பா லித்துச்செய்யாமலுஞ்
சத்திசிவரூபத்தையறியாமல்
இத்தனைகாலமிகுத்தவஞ்ஞானமே
யெத்தனைபூசையியல்புமறிகிலேன்- பூசை. 

பாடல் எண்:- 535
நாளுநாளுமிகநாடியெந்நாளுமே
நாகன்றிருவடிநானறியாமலும்
கோளுங்காரியகுருவினாலிப்படிக்
கூறறியாமலுங்கூட்டத்துடனேயான்
நூறுநூறுநூறுகோடிசதுர்யுகம்
நாடிநாடிஞானம்யானினிக்காண்கிலா
தூறுந்தூறுஞ்சித்தர்தூறினாலிப்படி
வாடிவாடிவாசிமாறாட்டமாகியே- பூசை. 

பாடல் எண்:- 536
உள்ளத்திலுள்ளமொருமைப்படாமலும்
ஊதுந்தாரைசுழியோசைகாணாமலும்
வள்ளலெனுஞ்சிவமாதுவம்பிகையின்
மலர்பொற்பாதமகிழ்ந்திருக்காமலும்
அண்டபிண்டமகண்டகடாகமு
மண்டலமூன்றுமதிமலர்ச்சனை
கண்டதாரையறிந்தூதிடும்வாசியை
நின்றறியாமல்நிராதரங்காண்கிலா- பூசை. 
பாடல் எண்:- 537
காயசித்தியறியாதகருத்தினை
மாயசித்திமகிழ்ந்துடன்மாய்கையில்
பேய்கள்கூத்துகளாடிப்பேரின்பங்காண்
வாய்மதத்தால்ஜெகவாழ்க்கையில்சிக்கியான்
காரமுஞ்சாரமுங்கண்டறியாமலும்
ஊருகள்தோறுமுழன்றுஅலண்டுமே
தேறுமெய்ஞ்ஞானசிவபதம்போற்றிடார்
வேறுடன்காரியவித்தையில்சிக்கியே- பூசை. 

பாடல் எண்:- 538
உப்புடன்புளியுவர்ப்பறியாமலும்
சொற்படிசொற்குருவாஞ்சையாலிப்படிக்
கைப்பொருள்தோற்றுக்கருத்தறியாமலு
முற்பகபூசாபலனருள்முத்தியில்
காரிக்குதிரைக்கனவேகப்பாய்ச்சலின்
ஏறியங்குபடியிறுக்கிமூலத்தினில்
சாரிவாராமல்தனிப்படவேஜெக
நாரியர்கையிலகப்பட்டுயானுமே- பூசை. 

பாடல் எண்:- 539
கட்டாதுவாசிகணக்கில்லையானுமே
கட்டினாலெட்டுடன்மட்டுப்படுமது
எட்டாதுஎட்டுமேகஷ்டமிராதிடில்
அஷ்டதிசைசுத்தியண்டம்பாய்ந்திடவும்
ஒன்பதுவாசல்பஞ்சபூதமாளிகை
ஓராறுசத்துஈராறுமதில்களும்
பொன்புசக்கரக்கோட்டைநவரத்னபீடம்
பூரணச்சந்திரபுஷ்பகரணிசுற்றி- பூசை. 

பாடல் எண்:- 540
அச்சுநகர்சுற்றிஆறதுஏழுமேகச்சிப்பதிக
மாலயஞ்சூழ்நகர்தச்சனுளிபடாதண்டபிண்டங்களும்
மச்சுமாளிகையில்வச்சபொருள்கண்டு
பூட்டுந்திறவுகோல்மூட்டுஞ்சுழிமுனை
பூரணசந்திரபொற்கமலாலயம்
வீட்டிலிருந்துவிளங்குந்
திரவியமெய்ஞ்ஞானபொக்கிஷம்
விந்துநாதத்தொனி- பூசை. 

பாடல் எண்:- 541
சுழிமுனையேவிழிமாய்கைப்பெருங்கடல்
சூக்ஷசடாதாரமூலத்தின்குண்டலி
அழியாமதிமலரர்ச்சனைசெய்து
விந்தமிர்தபானமாராதனைகண்டுயான்
ஆழிக்கடல்கடைந்தமிர்தபானமே
வழியறிந்துமதுவெனுமாறினால்
ஊழியுமேவினையோடிப்பறந்திடும்
வழியறிந்துவினாட்டம்வினாடிகாண்- பூசை. 

பாடல் எண்:- 542
மருவுயர்ந்த கமலமல ராயிரத்தெட்
டிதழின்வளர் மதியை வேண்டித்
திருவுயர்ந்த வம்பிகைப்பெண் சீர்பாத
பங்கயத்தில் தெரிசித் தேதான்
கருவுயர்ந்த வளநாடு தில்லைநதிக்
கரையோரங் கருதி வாழ்ந்தேன் 
அருவுருவாய் மெய்ஞ்ஞான மருளியகத்
தியரெனக் கருள்தந் தாரே. 

பாடல் எண்:- 543
இடகலையின் சுழியின்முனை யிலகுமதி
ரவியொளித னியல்பாய் நின்ற
கடல்பெருகு மதுரவின்ப வமுர்தந்தந்து
புகழ்கருணை கருவூர் நாட்டில்
விடமருந்தி சிவரூப ஞானவா
ரியருள்வி ளங்குஞ் சோதி
திடமருவுங் கமலமல ரம்பிகையைப்
போற்றியினி தெரிசித்தேனே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 544
ஆசைப் பயனுரைத்து வசடுதனைத் தீர்ப்பமென்று
பாசமுகப் பூண்டிந்தப் பார்மீதில் போயுரைத்துக்
காசுபணம் பறிக்குங் கசடர்கள்தான் சொற்கேட்டு
நேசமுடன் பூசைசெய்த நிச்சயம் விளம்புவனே. 

பாடல் எண்:- 545
தீராப் பெருங்கவடு செய்வினையி னாலுரைத்த
நேராப்பொய் யாசை சொல்லி நேர்மையரு ளாலுரைத்த
ஏராப் பணம்பறிக்கு மிவ்வுலகிற் சூதர்களால்
பேரா விலகுபிதிர்ப் பூசையில் மயங்கினேனே. 

(வெண்பா)
பாடல் எண்:- 546
மனத்திலுந்தான் வளர்ந்த மலர்க்காவி யிரண்டுளதா
இனத்திலிதை யறிந்து இயம்பினேன்- கனத்திலேன்
காரியத்தின் குருவே காரணமாய் நின்றதல்லால்
வீரியமென் றேயுரைப்பர் வீண். 

பாடல் எண்:- 547
நீட்டியிரு கரத்தால் நெடியகிளை யேவளைத்துக்
கூட்டி மலரெல்லாங் கொய்தேன்காண்- சூட்டியதோர்
கும்பிட்டா லேதாச்சு குவலயத்தி லொன்றுமில்லை
வெம்பிட்டால் பாவம்வரும் வீண். 

(கலித்துறை)
பாடல் எண்:- 548
உதிக்கின்ற வேளையிலெழுந்தோடி யானவ னுட்புகுந்து
கதிக்கின்ற கந்தமலரெடுத் தேன்கன பாவமென்று
விதிக்கின்ற நெஞ்சினில் சற்றறியாமல் விரைந்துகொய்தேன்
துதிக்கின்ற மோக்ஷம் வருமென்று பூசைதுணிந்து செய்தேன். 

பாடல் எண்:- 549
தீக்கரம் போலவுஞ் சீர்மேவுஞ் சித்தி சிறந்தபின்பு
பார்க்கின்ற பேருக் கலங்கார மாய்க்கன பத்தியுடன்
சேர்க்கையில் தூளித முடல்நதி யாடிய திருடரைப்போல்
ஏர்க்கையில் மந்திர மோதலெனை யன்றி யெதிரில்லையே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 550
பத்தியுட னொருமலரைக் கரத்தி லேந்திப்
பரிவாகக் கடுகில்பதி னாறிலொன்றை
வெற்றியுட னர்ச்சனைகள் செய்வோ மென்றால்
விளங்குமிந்த நினைப்புவரு முலகுக் கெல்லாஞ்
சுத்தியொரு நொடிக்குள்ளே யகம்பு குந்து
சொல்லுகிறேன் பொல்லாத மனதை நாடிச்
சத்தியுடன் சிவனிருந்த நிலையைக் காணார்
சரியென்பார் மனக்குரங்குச் சாரி டாதே. 

பாடல் எண்:- 551
நீரினில்முழு கும்போது பொருள்மே லாசை
நிலையான கரையில்வந்தால் நிலமே லாசை
கூர்ந்துநெற்றி தனிலும்வெண்ணீ றணியும்போது
குறிப்பான மக்கள்பெண்டிர் சுற்றத் தாசை
ஊர்தனிலு மந்திரங்க ளோதும் போது
உற்றபசி யாகுமனம தின்மே லாசை
பார்தனிலே தேவார மோதும் போது
பலவிதமாய் மனமோடிப் பார்த்த தாண்டே. 

பாடல் எண்:- 552
சித்தமுடன் செபதபங்கள் செய்தோ மென்பார்
செப்புகிறே னவர்களுட செய்தி யெல்லாங்
கர்த்தனுட பாதமலர் நினைக்க மாட்டார்
காடுசுற்றி யோடியபின் கலங்கு வார்கள்
நித்யமுடன் நிஷ்டையிலும் நிற்க மாட்டார்
நிலத்திலுள்ள வாசையெல்லாம் நினைத்து கொள்வார்
சத்தமுடன் தேவாரங் கூகை போலுஞ்
சதாநித்திய மோதிகுடி கெடுப்பா ராண்டே. 

பாடல் எண்:- 553
மறவாம லனுதினமும் பூசை யென்பார்
மாந்தர்களுக் காணிதந்து கோடி வாங்க
இறவாமல் புவிதனிலே யிருப்போ மென்று
இடும்பரெல்லாம் தலைகீழா யிறந்து போனார்
உறவான காயமிது வொடுங்கும் போது
உலுத்தர்கள்தன் பின்னர்கைக் காகம் போகா
அறிவாலே யறியாமல் புவியி லுள்ளோர்
அலகையெனத் திரிந்துலக மலைந்தா ராண்டே. 

பாடல் எண்:- 554
மண்டலத்தில் யானும்வந்து பிறந்தபின்பு
மருவுபெண்டிர் மக்கள்சுற்ற மாடு கன்றும்
தன்கரத்தால் வெகுகாசு செம்பொன் காணி
தரணிதனில் தனம்பெறவுஞ் சார்ந்தே னென்று
என்றுமிந்த வாழ்க்கையெனக் கேற்கு மென்று
இருந்ததனால் திருவள்ளுவ னிசைந்து பார்த்தேன்
ஒன்றுமில்லை பிரபஞ்சம் வீண் தாச்சு
உகந்தெந்தன் சாதிகுல முரைசெய் வேனே. 

ஜாதிவேற்றுமை
(தரு)
சாதிகுலமானவகைசபையிலாண்டே- நின்று
சாற்றுகிறேன்சாதகமா யானறிந்தாண்டே. 

பாடல் எண்:- 555
ஆதிகுருவானசிவநாதவிந்துமே- சுழியி
லணுகிமுனைபெருகியா கமம்வந்து
வீதியெனுந்திருவாலங்காட்டகத்திலே- சேர்ந்து
மிகுத்தசுக்கிலமென்றுங்குலங்காணுமாண்டே
நீதியெனும்மூலம்விட்டுநாதவிந்துமே- பரையில்
நின்றிலங்குஞ்சுக்கிலத்தாலெடுத்தவுடல்தான்
சோதியிதுஞானகுலஞ்- சாதிபார்
செந்துகளாவதுமொருசாதியிதாண்டே- சாதி. 

பாடல் எண்:- 556
மூலமதிலானசுழிசதுஷ்கோணத்தி- லிலகு
முதலெழுத்தாகுந்தும்பிமுகவனென்றும்
கோலமுள்ளகுஞ்சரத்திலின்செம்புநிறமாவெள்ளை
கூறாகுமெங்கள் குலவம்மிசங்காணும்
ஓராறுதித்தெழுந்துமோங்குபுவியில்- தாங்கி
உதித்துவுருவெடுத்துஉற்பனமதாய்ப்
பாலமுதாகுமேலிங்கத்திருவாலங்காடு- முன்பு
பரப்பிரமமெந்தனுக்குச்சேர்ந்தகுலமாண்டே- சாதி. 

பாடல் எண்:- 557
திருவுருமேலானநதி அறிவுடைமாயன்
செங்கமலமேவுந்திருசிறந்திருக்கும்நேயன்
கருவூருநாட்டிலிலகுமதியின்பிறைகோணங்
கல்வியும்வாழ்வுந்தரும்திதிசெய்யுமுபாயன்
மருவுறைஅக்கினிசூழ்ந்தமுக்கோணத்தின்வீடு- அந்த
வட்டத்திலமர்கின்றருத்திரகுலங்காணும்
பறையிருக்கும் நாதவிந்துபரப்பிரமவீடு
இந்தப்பாரில்என்னையறியாமல்பறையனென்றாராண்டே- சாதி. 

பாடல் எண்:- 558
கண்டத்தினுள்ளேயழைத்தறுகோணங்காட்டி- சோதி
கருணைமயேஸ்பரத்தின்வம்மிசத்தானாண்டே
நின்றதமையன்பொய்யல்லஎன்குலங்காண்- சொல்வேன் 
நின்புவியில்நீசனென்றுபேர்குறித்தாராண்டே
அண்டபிண்டங்களும்ரெண்டுமொன்றதா- மிரண்டு
மாயிரத்தெட்டிதழினில்யானுதித்தேன்காணும்
என்றுமெவ்வுயிர்க்குமெங்குமெறும்புகடை- யானை
யாருக்குமென்தந்தைசதாசிவன்காணாண்டே- சாதி. 

பாடல் எண்:- 559
பொங்குகடல்சூழுலகம்பதினாலுங்- கூடிப்
புவனமிருநூற்றிருபத்துநாலுமேவும்
எங்குநிறைந்தேயெழுந்துவளர்கின்ற- சோதி
எங்கள்குலஞ்செங்கதிரில்பங்கமில்லைகாணும்
கங்குல்பகலுங்கதிருமதிசூழும்- வானங்
காரணமாகஇரண்டுங்கூடிவருமாயில்
திங்களும்ஞாயிறுமெங்கள்குலமென்மேலாகுஞ்
சேர்ந்ததிந்தப்பறையினால்நேர்ந்ததுஆண்டே- சாதி. 

பாடல் எண்:- 560
கற்றிடுங்கல்விக்குச்சித்தமகிழ்ந்திடும்- புத்தி
கருத்திலிந்துமதியுகந்திடுங்காணுஞ்
சத்தம்பிறக்கையில்கூடசரஸ்வதியுமெங்கள்
சாதியிலுதித்ததெந்தன் தாய்தந்தைகாணாண்டே
வித்தையும்புத்திவிளங்குஞ்சதுஷ்கோணபீட
மெய்ஞ்ஞானகுலத்தில்பிர்மவேதகுலங்காணுஞ்
சுத்தகுலபிர்மசுக சூழுங்கரணாதி
சோதிமயமாதிகுலஞ்சொர்னமயமாண்டே- சாதி. 

பாடல் எண்:- 561
துய்யமதிசூழும்பரைஅம்பரவீதி
சூக்ஷசடாதாரசோதிமூலத்தில்காணும்
வையமுழுதும்படைத்தவாலாம்பிகை- யாண்டே
வாள்புவியுமெங்கள்குலவம்மிசங்காணும்
செய்யதிருகருவூரிலகுமவள்- நாட்டில்
செங்கநதிபொங்குகரையெங்கும்பிரகாசிக்கும்
மையசுழிமூலம்வளர்வாலாம்பிகை- யெங்கள்
வர்க்கத்தில்வாழும்பரைதான்வம்மிசங்காணாண்டே- சாதி. 

(விருத்தம்)
பாடல் எண்:- 562
சுக்கிலசுரோ ணிதமீது இலகுபரி
பூரணத்தின் செயல்தன் னாலே
எக்குலமும் நாதவிந்தா லெய்தும்வகை
வளப்பமெல்லா மிடரில் லாமல்
பக்குவமா யகத்தியர்தன் னுபதேச
மருளபரி பாஷை யாய்ந்து
திக்குமெட்டுப் பதினாறு கோணமதி
லண்டபிண்டந் திசையு மொன்றே. 

பாடல் எண்:- 563
என்றான மனிதர்பல செனனமொன்று
செந்துவொன்று வுலக மொன்று
நின்றிலங்கும் வானமொன்று புவியுமொன்று
அண்டரண்டம் நிலைதா னொன்று
இன்றுமன்றுங் கதிர்மதியு மின்னலிடி
காற்றுமழை யெல்லா மொன்று
தென்றுலகெ லாம்படைத்த நாதவிந்தா 
லெடுத்தவுயிர் செனனமொன்றே. 

சாதிவகை
(தரு)
சாதியைச்சொல்லுகிறேன்- என்னாண்டையே
சாதியைச்சொல்லுகிறேன். 

பாடல் எண்:- 564
சாதியினில்பரப்பிரமகுலத்தினில்
தந்தையெனுஞ்சதுர்வேதசிந்தாமணி
சோதிதனில்ஞானசூக்ஷசடாதார
துய்யமதிசந்திரஜயனெங்கள்குலம்
பூதாதிஐந்தும்புனலில்மருவிய
வேதாகமத்தில்விளங்குஞ்சுகாதீத
மாதாரமூலமேலாதாரமீராறடங்கிய
வீட்டினிலாண்டையவன்சாதிகாண்- சாதி. 

பாடல் எண்:- 565
ஓதிவைத்தபிர்மஓங்கார தீட்சைதான்
ஓகோகோவானம்புவிபடைத்ததாகையால்
ஆதியுமந்தமெனக்குள்ளடங்கிய
ஆக்கினைசத்தமதீதமென்குலமே
பிர்மக்ஷத்திரியர்வைசியர்சூத்திரர்
பேதமறையிதுநாலுநாலும்விளங்கிடும்
கர்மிகள்கூடிகோத்திரமுண்டாக்கினர்
கலியுகமிதுவரலாறுகாணாண்டே- சாதி. 

பாடல் எண்:- 566
அந்தரவட்டத்தின்வானம்புவிக்குள்
அலங்காரமாகப்பதினுலுஞ்சேர்ந்திடுஞ்
சந்திரன்போலுந்துலங்கியபூரண
சாதிகுலந்தன்னிலா திகுலங்காணும்
இந்திரனக்கினியேமனிருதிவாய்
வேகவருணன்குபேரனீசானியன்
சந்திரப்பிரகாசத்தின்மூலத்தினுள்ளே
தழைத்திடுமென்குலசாதியிதாண்டையே- சாதி. 

பாடல் எண்:- 567
முப்பத்துமுக்கோடிதேவர்முனிவர்
முதலானஇந்திரநாரதாகின்னரர்
உற்பத்தியாகநாதவிந்தாலே
யுதித்தவாறெல்லாமாதித்தன்குலங்காணும்
அம்புவியாலுமனேகவுயிர்களும்
அண்டபிண்டமதிலாச்சுதனேகமுந்
தப்பில்லையேபரையம்பிகைதன்குலஞ்சாம்ப
சதாசிவன்தந்தைகாணாண்டையே- சாதி. 

பாடல் எண்:- 568
சிற்பரையானசிவசாம்புவன்குலஞ்
செந்துக்களெல்லாமென்சாதியின்வம்மிசந்
தற்பரைசோதிப்பிரகாசவர்க்கத்தினில்
சாம்புவனென்குலசாதிகாணாண்டையே
சின்மயமென்மயம்பொன்மயன்தன்மயஞ்
ஜீவசெந்தாதிஜெகமயமானதும்
நன்மயனாதச்சிரோன்மயமென்குலம்
நாதனென்வம்மிசநற்குலமாண்டையே- சாதி. 

பாடல் எண்:- 569
பறைபதினெட்டும்படைத்ததென்வம்மிசம்
பாருலகாதீதம்பார்க்கப்பலவிதஞ்
சீரருள்ஞானச்செழுஞ்சுடராதீத
திருவுருமூலச்சிவசாம்புவன்குலம்
ஆதியுமந்தமநேகமுண்டான
அண்டகடாகமதீதசெகங்களுஞ்
சோதியருள்சுழிமூலத்திலேசுக
ஞானகுலத்திருவள்ளுவனாண்டையே- சாதி. 

பாடல் எண்:- 570
சிஷ்டியிலுந்திருவள்ளுவனாயன்
தெளிந்தவேதாந்தச்சிவஞானசாதிகாண்
அஷ்டதிக்கெங்கும்புகழ்சிவசாம்புவன்
ஆண்டையேயுந்தனருள்பரசொர்க்கமே
சோதிச்சுழிமுனைதில்லைப்பதிநகர்ஆதிக்
கருவூர்வளர்திருநாட்டினில்
ஓதியவள்ளுவசாம்புவனாலுலகாதீத
மெங்குமுதித்தவராண்டையே- சாதி. 

பாடல் எண்:- 571
எங்கும்புகழ்திருசாம்பசதாசிவன்
எங்கள்குலவம்மிசாதிவர்க்கத்தினில்
இங்கதினாலுலகாதிதமீரேழுங்
கெங்கையுமக்கினிவாய்வுசத்தங்களும்
பிர்மாவிஷ்ணுருத்திரன்மூவரென்வம்மிசம்
பேரும்பிரகாதீதநாடுலகம்புகழ்- சாதி. 

பாடல் எண்:- 572
மண்ணும்விண்ணும்வன்னிவாய்வுசத்தங்களும்
பண்ணுமறைவேதநாலுமுதித்தவ
ரண்ணுமிண்ணுமாறுசாஸ்திரசூக்ஷமும்
எண்ணுமினியென்குலத்திலுய்த்தவாறு
பேதியரிட்டகட்டளைப்பிரகாரமும்
மேதினியோர்விளங்குமனுநீதி
ஆதியென்றேபலசாதிகுலவர்க்கஞ்
சேதியானபெண்ணிருசாதிகளாவதுஞ்- சாதி. 

பாடல் எண்:- 573
இப்படியேகுறித்தெங்கும்பிரகாசமாய்க்
கற்பனையாய்மறைவேதங்களோதினார்
எப்போதுமேயுலகெங்கும்வழக்கமாய்ச்
சொற்பிடிசொல்லுடுஞ்சூதுகளாண்டையே
பிர்மக்ஷத்திரியர்வைசியர்சூத்திரர்
கர்மசூஸ்திரங்கள்கட்டினார்துய்யமதி
துர்மவிசேஷசுயஜெகஜாலமேவர்ம
மறிந்தருள்வள்ளுவனோதினான்- சாதி. 

பாடல் எண்:- 574
இந்தவிதமென்றறியாருலகில்
எந்தன்குலத்தையிகழ்ச்சிகள்பேசினார்
உந்தன்செயல்சிவசாம்பவமூலமே
அந்தவிதியோடன்றறியாரென்னாண்டையே
மாலப்பறையனென்றேசேரன்சோழனு
மாடுகள்செத்துமேவாறறிந்தானதே
யோலமென்றேயதையுண்ணும்படிசெய்தார்
ஓகோபாவிகாளுற்பத்திகாண்கிலார்- சாதி. 

பாடல் எண்:- 575
ராஜாங்கஞ்செய்தநடத்தையின்குறி
வேதாகமத்தில்விதித்தவாறல்லகாண்
ஆசாரமல்லபீசாபலயோகமே
கோசபீசத்தில்குலங்கள்செனித்ததே
மனிதனாய்ப்பிறந்தவனிமீதினில்
மானுகாளுங்கள்வளப்பமறிவதும்
யோனிநாலல்லவோவேழுவகைப்படி
யோகதிசைஞானமெட்டில்விளங்குமே- சாதி. 

(விருத்தம்)
பாடல் எண்:- 576
அருபுரத்தில் மனோன்மணியென் தாயே யாகு
மடுத்தவட்டஞ் சதாசிவன்தான் தந்தை யாகுந்
திரிபுரத்தில் மயேஸ்பரனுந் தந்தை யாகுஞ்
செவந்தகனல் ருத்திரனு முன்னோ னாகும்
சிறுபிறைக்கு ளிருந்தவரென் தமைய னாகும்
ஜெகம்படைத்த பிர்மாவுஞ் சகோத ரன்தான்
மருமிகுந்த ஐயருக்குள் பின்ன தாக
வந்துதித்த சாம்புவனும் யான்கா ணாண்டே. 

பாடல் எண்:- 577
ஓங்கார சத்தங்குண் டலியே யாகும்
உன்னறியுங் குண்டலியென் பாட்ட னாகும்
ரீங்கார மானவுடல் மச்சை யேழும்
நிலவாங்க ணெங்களுற முறைதா னாகும்
ஶ்ரீங்கார மானதெல்லா முதிர மாகுஞ்
செனித்தவுட லென்தாயின் கூறே யாகும்
நீங்காத நாதவிந் துதித்த நேர்மை
நீள்புவியிற் பிறந்தாரென் குலத்தா ராண்டே. 

பாடல் எண்:- 578
இந்தவித மென்குலத்தா ரென்று மேவி
யென்னுள்ளே பார்க்கஇந்தப் படியே யாச்சு
சந்தையந்தா னறியாமல் நீங்கள் நீரில்
தவளையைப்போல் வேதமெல்லாஞ் சாற்று கின்றீர்
வந்தவழி யறியார்க்கு மந்திர மேது
வகையறியா மாந்தருக்குச் சாஸ்திர மேது
விந்துதித்துப் புவிதனிலே பிறந்த பேர்க்கு
வேறில்லை சாதிகுலஞ் சரிதா னாண்டே. 

பாடல் எண்:- 579
சத்தேழு புவிதனிலே பிறந்து யானுஞ்
ஜாதிகுல மானவகை சார்வாய்ச் சொன்னேன்
சித்தமுள்ள நாதாக்க ளறிந்து கொள்வார் 
தீங்கான மாந்தரிதை யறிய மாட்டார் 
கற்றவரைப் பழிப்பவர்க ளுலக மாண்பர்
கசுமால மடையர் சொல்லுங் கவியைப் பாடி
வித்தையிலு மலங்காரக் கவிதா னென்பார்
வீணர்கள்தான் வீண்புளுகு விளம்பு வாரே. 

பாடல் எண்:- 580
வியாசர்சொல்லும் பாரதத்தில் வெகுபொய் வீணாம்
மேதினியோர் மாய்கையினில் விருப்பச் சொன்னார்
ஆய்ந்துகவி பாடிவிட்டான் கம்பன் வம்பன்
அதீதரா மயானத்தி லனேகம் பொய்தான்
சாயாம லதிவீர பாண்டியன் சொல்லுந்
தமயந்தி சரித்திரநை டதமுஞ் சொன்னார்
சுகமாகா திதுகவிகள் சுத்தப் பொய்தான் 
தொடுகவிமா ணிக்கவா சகர்சொன் னாரே. 

பாடல் எண்:- 581
தேவார மானதிரு வாச கத்தைச்
செகத்தோர்கள் படித்துமெத்தத் தியங்கி னார்கள்
பேயான ஆண்டிகட்குப் பிழைப்புக் காகப்
பேசிவைத்தார் மற்றொன்றும் பிசகோ இல்லை
சாவாதார் மாய்கைதனி லடிபட் டோர்க்குத்
தளர்ந்தபின்பு ஞானவிதி சாரா தென்னில்
துவாதசாந் தவெளிய றிந்தோ ரல்ல
சுக்கிலமு மழிந்தபின்பு துலங்கார் தானே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 582
நீடுலகு மாய்கைதனில் நின்றழிந்தால் நாதவிந்து
காடுசுடு காடொழிய காயசித்தி யாகுமோசொல்
பேடியர்கள் மோடிதனில் பேய்மனமே பின்துடரத்
தேடுவதென் ஞானவிதி தேகமழிந் தாலழிந்தே. 

பாடல் எண்:- 583
சீழுதிர மச்சையுவர் தேங்கும் உமாதருவி
வாழுங்கசு மாலந்த மாரிபொழிந் தேயொழுகு
மூழ்குஞ்சல மூத்திரப்பை மூலப்பா ழூத்தையினில்
ஊழியெம் துற்குழிக்கோ வயிர்ப்பெலிக்கு ளாமனமே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 584
ஊத்தைக் குழிதனி னாதவிந் தூறி யுடலெடுத்தால்
நாற்றமெண சாணுட லவ்வழிக் கேமன நாடிடுங்காண்
சோற்றுத் துருத்தி யெரிகும்பி மாய்கை துலைததுவிட்டார்
காற்றும் வசப்படா ஞானசுகா தீதங் காண்கிலரே. 

பாடல் எண்:- 585
ஜெகத்தாசை யோனி மறவாத சேணி செழுங்கனல்பார்
அகத்தாம லெப்படி யக்கினி சூழ்ந்திடு மவ்வனலில்
உகத்தாசை வைத்து வுழன்றிடு வோர்க்கென்ன வுற்பத்திகாண்
அகத்திற் பிறந்து கடலைக் கடந்தவர்க் கமைப்பதுவே. 

பாடல் எண்:- 586
பஞ்சவிந் திரியம் பாயுமா றூறதின் பாய்ச்சலிலே
தஞ்ச வரமிருந் தாடுது காண்விட நாகசர்ப்பம்
மிஞ்சுமும் மூலச் சுழிநாத விந்து வெளிவருகால்
கஞ்ச மலர்த்திரு கருணைமெய்ஞ் ஞான கற்பகமே. 

பாடல் எண்:- 587
அரவங் கடிக்க விடமே றிடுமுன் னதற்குமொரு
திரமாய் மணிமந்திர சிவஞான பூபதி செய்முறைகாண்
இரவா திருக்கரச் சூதகற்ப மினிதறிந்து
பிறவா திருக்கச் சுழிமுனை காணப் பிறப்பில்லையே. 

பாடல் எண்:- 588
ஞானப்பிர காசத்தின் னாட்டத்தி லேமன னாடிமுன்
வானத்தி லேசுத்த மேகங்கள் கூடிப்பின் வாரிதனில்
பானத்தில் யுண்டு பசியாறும் பாவனை பன்மையைப்போல்
சோனைப் பொழிந்த வுலகாதி யெங்குந் துதிப்பதுவே. 

பாடல் எண்:- 589
ஒன்றுணர் பூரண ஞானசு காதித மொன்றறிய
கண்டுணர்வோர்க் கெய்து நாதவிந் துற்பத்தி காயத்திலே
நின்றறி வானந்த பேரின்ப சோதி நிராமயத்தை
அன்றுமின் றொன்றல்ல பிரபஞ்ச மாய்கை யகற்றுவதே. 

பாடல் எண்:- 590
செந்துக ளாவது மிந்திரி யத்தினில் சேர்க்கையுங்கண்
டிந்த விதமென் றறிந்திடி லாரென் காரணமோ
ஐந்துரு நாதவிந் தாவதுமேசெனித் தம்புவியில்
விந்தை யென்ஜாதி லோகாதி லோகம் வெளிப்படுமே. 

(வெண்பா)
பாடல் எண்:- 591
எங்கள் குலவிந்தி லெறும்புகடை யானைமுதல்
செங்கமல வமிசத்தில் சேருமே- உங்கள்குலம்
வந்துதித்த வண்மைவர லாறுதிரு வள்ளுவனால்
அந்தவிதி கண்டறியா தே. 

பாடல் எண்:- 592
உள்ளம் பெருங்கோயி லுற்றுணர்வ தாமாகில்
எள்ளளவின் சொன்னமறப் பொன்னமயம்- உள்ளபடி
ஒன்றொன் றுலகு வுன்குலமு மென்குலமுங்
கண்டறிவ தென்மொழியில் காண். 

உலகவுற்பத்தி
(தரு)
தனனாந்தனதனனாந் தனதன- தனனாந்தன தனதனதனனா

பாடல் எண்:- 593
ஞானசிகாமணியே- தெய்வ- நாயகனால்ஜெகமாதிதமும்
வானமும்புவியுமுதல்- மதி- சந்திரனும்ரவிசூரியனுங்
காணவொளிவீசும்- கார்- மேகங்களுமிடிமின்னல்களுந்
தானாய்விளங்குமுயல்- மாரி- தாபரமும்வாய்வுசாகரமுஞ்
சேனாதிபதியிலகும்- சத்த- தீவுதீவாந்தரசெந்துகளுஞ்
சோனையருவிவளர்- சுழல்- சோதிப்பிரகாச விருட்சங்களும்
தேனூறல்பாயுமந்த- சல- செம்புநதிமகமேருகளும்
பானுகனல்சொரியும்- தன்னி- பாயுஞ்சூதரசக்கேணியுமே- தன. 

பாடல் எண்:- 594
நவரத்தினம்விளையுந்- திவ்விய- நாகரிகசெந்துநாடுகளும்
எவ்வர்னமாய்விளங்கும்- சந்திர- இந்திரபட்சியன்னபட்சிகளும்
புவனங்களில் மிகுந்த- அண்ட- பூச்சக்கரவாளகிரிசூழிடமுங்
கவனாதிராக்ஷதர்கள்- பிறவி- கந்தருவதேவகந்தருவர்
பவனமளாயிடுவர்- பகி- ரண்டமளாவியகவனாதிகள்
தவத்தில்மிகுத்தவம்- ஏழு- சங்காரஞ்சூழ்நடுரோமபுரி
சிவஞானசித்திபெற்ற- குளிகை- சித்தர்கள்வாழுமதீபாந்தரமும்
புவனஏமகிரியுங்- கெந்தி- மாமலைராக்ஷதரூபகமே- தன. 

பாடல் எண்:- 595
பொதிகைநகரெனுமே- இந்தப்- புவனஞ்சூழ்சாகரமத்திபத்தில்
அதிதமென்னாலருள- மெத்த- அதிசயரோமாபுரிநகரில்
நதிசூதக்கேணியொன்று- அது- நற்சதுரம்நூறுகாதவழி
மதிகோடிரப்பையொனி- ரவி- மாமதிக்குக்கதிரொட்டியதாய்
விதியாலமைப்பதென்ன- அண்ட- மேருவுஞ்சுற்றிமதில்சூழ்ந்திடும்
பதியாயுதித்திடுங்காண்- பஞ்ச- கர்த்தரிருப்பிடமஞ்சுசபை
கெதிவாள்கயிலாசகிரி- சுற்றிக்- கேணியொன்றுசூதவாசலாங்
கொதிதான்கொதித்திடுமே- சித்திரைக்- கோடைதனில்சித்தர்கொண்டுபோவார்- தன. 

பாடல் எண்:- 596
என்னுஞ்சிரஞ்சீவிதான்- அந்த- ஈசனருள் காயசித்தி பெற்றோர்
மண்ணும்விண்ணுள்ளளவும் - தேகம்- மரணமவர்க்கொருகாலமில்லை
உண்ணுமறுசுவையில்- அப்பு- உப்பொன்றுமாகாதிருப்பவர்காண்
தின்னும் பதார்த்தங்களில்- ஜீவ- செந்துவகைகளுயிர்வகைகள்
உண்ணும்படியகற்றி- யோக- சாதனையில்நித்திரையொன்றறியார்
அண்ணலருள்பதமே- நித்திய- மர்ச்சித்துமூல அமிர்தமுண்பார்
கண்ணைமூடியறியார்- மவுனக்- கண்ணாடிமீதில் கருத்துணர்வார்
சென்னாட்டமாயிருந்து - தெசதீட்சைபெற்றுக்கவனம்பாய்ந்திடுவார்- தன. 

பாடல் எண்:- 597
சதாசிவசாம்புவனால்- ஜெகந்- தானேபடைத் துயிருண்டாச்சு
இதானவாறறிந்திடிலோர்- புவி- யெழுவகைத் தோற்றநால் யோனியுமே
தாகமத்தினுற்பத்தியால்- பரை- சோதியொளியில் சுயம்பதுவாய்
நிநானமாவ தெறும்புகடை- யானை- யாவதுவே முன்பின்னேக முயிர்முதலாய்
விதாவிதங்களானபல- விந்து- நாதமது விளைவானதுகாண்
குதாவெனும்பரைச்சாம்புவனால்- அண்ட- கோளகைவடவாக்கினி
மதாவினோத பேதமதால்- வரும்- வந்தவழியறிந்திந்தவிதம்
இதார்த்தமாக இனியுரைக்கும்- எங்கள்- தெய்வம்வேறா உங்கள் தெய்வம்வேறோ- தன. 

பாடல் எண்:- 598
உலகம் பிறந்தவிதம்- பரை- யுந்திதனில் பிர்மயேந்திரங்காண்
கலகப்பிரியர்கூடி- புராண- கட்டளைவெவ்வேறு பிரித்துணர்வார்
அலகையதினளவா- லான- அச்சது வேயறிந்துச்சிதமாய்ச்
சிலபேர்மதபேதங்கள்- மனு- செய்கையினால் விதிநூல்களுமே
பலபேர்கள்கூடி- பரி- பாஷை யறிந்து பகர்ந்திடிலோர்
நிலவுபொழிமதுரஞ்- செக- நீடுலகாதிதமே தழைக்கு
முலகாதிதம்புகழும்- திரு- வள்ளுவசாம்புவனுற்பவத்தைப்
புலையனென்றே யுரைத்த- மவுனப் பொக்கிஷமே ஞானகக்கிஷங்காண்- தன. 

பாடல் எண்:- 599
அம்பிகையின் பொற்கமலம்- பணிந்- தர்ச்சனை செய்து அடியனுமே
நம்பிதிராவியத்தை- மூல- நாதவிந்தையுண்டு நான் வெளியாம்
தும்பிமுகனருளில்- துரியந்- துரியாதீதங் கடந்தே துதித்துத்
தம்பித்திடைகலைபின்- மூலஞ்- சாதித்து வாசிகொண்டே யிழுத்துக்
கும்பிதனிலிருந்த- ரத்தினங்- கோடானுகோடி திரவியத்தைச்
செம்பொனருள் பொருளும்- இனி- சித்திக்க வாசிகொண்டே திறந்தேன்
பம்பகமாயிருந்த- கொல்லர்- பத்துந்தகவாயுவு நித்திரைசெய்து
தெம்பாயிருக்கையிலே- திவ்ய- செங்கநதி யகழிதாண்டி விட்டேன்- தன. 

பாடல் எண்:- 600
மூலாதாரங்கடந்து- முளை- முச்சுடர்வட்டமதில்கடந்து
பாலமது கடந்து- வாசி- பாய்ந்துவிட்டேன் சதுஷ்கோண
ஞாலத்திலேயறிதல்- பிரம- ஞானசுவா திஷ்டானங்கடந்து விட்டேன்
சிலம்பொழியும்ரத்னந்- திரு- மால்மணிபூரகமீதருகே
சந்திரபுஷ்கரணி- திவ்விய- சாவடிசித்திரமண்டபத்தில்
இந்திரசுரூபசித்தி- பெற்ற- எமனாட்டுச்சித்தரிருபதுபேர்
வந்துமறித்தார்கள்- போட்டேன்- வாசிக்குதிரை மேலங்குபடி
அந்தரமாயெழும்பி- சவாரி- யனாகதக்கோட்டைமுக்கோண வட்டந்- தன. 














Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900