திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900

பாடல் எண்:- 1801
காலியுங்கழிந் தோடுவ தாகையால்
வாலிபங்கள் வளர்பிறை மாறிடும்
பாலனாய்வாலி பங்களில் கற்பங்காண்
வாலையாமினி வச்சிர தேகமாஞ்
சீலவாசி சிநேகித மானதால்
தூலமேயுடல் சோதிப்பிர காசமாய்
மாலியேது மறலியு மேதுகாண்
சூலிகபாலி சுடர்கொடி தீபமே.

பாடல் எண்:- 1802
தீபகுண்டஞ் செழுந்தேன் பொழிந்திடுங்
கியாபகங்கள் கணேச னிருப்பிடம்
பாவமேது பரமெனும் பாவமுஞ்
சாபமேது சாரத்தா லழிந்திடுந்
தூபதீபங் காரசாரமுங் காதலால்
தாபமெல்லாம் க்ஷணத்தி லொழிந்திடும்
ஆவதென்ன அழிவது மன்னமால்
சாவதில்லைகாண் சண்டனு மில்லையே. 

பாடல் எண்:- 1803
உப்புங்கார முணர்ந்த ருசிப்பதாய்
அப்பும்உப்பும் மறிவறிந் துண்பர்காண்
இப்பொருள் கண்டிரவி மதியுமே
கைப்பொருளுன் னுள்கணக்கில்லை வேதைகாண் 
செப்பினார்கள் தெளிந்தபண் போர்களும்
அப்படியாண்டே யகத்தியர் வாக்கினால் 
சொற்படி யினிசுரோ ணிதசுக்கும்
இப்படிக்கண் டியம்பினே னாண்டையே. 

(வேறு-விருத்தம்)
பாடல் எண்:- 1804 
அந்தணர் முனிவ ரோடு ஆய்ந்தநூல் பதினெண் பேருஞ்
சந்தத மாகத் தானுஞ் சாஸ்திர நூல்கள் பாடிச் 
செந்துகள் தனிலு மாண்பர் சுத்தராய்த் தெளியத் தானும்
சுந்தர ஞான வெட்டி சூட்சமு மறிந்திடீரே. 

பாடல் எண்:- 1805
ஞானத்தை வெட்டி நாத விந்துவின் கருத்தி னாலும்
பானத்தை யுண்டு ஆண்டு பழக்கம தாகை யாலும்
வானத்தி னீரால் சுத்தி வாசியால் காயஞ் சித்தி
ஊனற்று உறக்க மற்றுப் போகத்தி லிருந்தே னாண்டே. 

பாடல் எண்:- 1806
யோகத்தின் விதிதா னென்ன உடலுயிர் பலக்கத் தானும்
ஆகமப் படியே ஞான ஆயிரத் தைந்நூறு சொச்சம்
பாகமா யாய்ந்து பானம் பழக்கமோ ராண்டு உண்டால்
சாகத்தான் போமோ இல்லை சாக்காடு தவறிப் போமோ?

பாடல் எண்:- 1807
சாரமோ ராண்டு உண்டு சடமதும் வலுக்கச் செய்து
காரமு மிரண்டாண் டில்தான் காலைபோய் மாலை யுண்ண
மாறவுங் கழித்து மூன்று வருஷமும் கடந்த தானால்
வீரமா முதகம் பாயும் வேதையு மாச்சு தாண்டே. 

(வேறு- கவி)
பாடல் எண்:- 1808
வாலையபி ராமியெனுங் கமலந் தன்னில்
மலரடியைப் பணிந்துமதி யமிர்த முண்டு
பாலையமிர்த மூலமெந்தன் இல்லற வாழ்க்கைப்
பன்னிரண்டு வருஷமதுஞ் சென்று மேலும்
ஆலவிட முண்டசிவ னருளா லாண்டே
ஆயிரத்து ஐந்நூற்று அறுபத் தொன்றும்
சீலமருள் ஞானவெட்டி நிறைந்த சோதி
சிவசமயந் தழைத்தருள்வாய் சித்தி முற்றும். 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1809
முத்து தித்த வெண்மதி யுதித்த சந்திர மால்மயம்
விந்து தித்த நேர்மையால் விளங்கு மிந்நூல் வாய்ந்தனர்
கற்று தித்த சித்தர்கள் கடந்தி டுங்க ருத்தினால்
பத்தி ரண்டீ ராறுங்கூடிப் பலித்த திந்த தீட்சையே. 

பாடல் எண்:- 1810
தீட்சை பெற்றி ரண்டுடன் தசதீட்சை பெற்ற பேர்களும்
தீட்சை யான பேர்தமக்குத் தீங்கு வாரா தாகிலுந்
தீட்சை யாமீ ராறும்பெற்ற சித்தர் கடக தீதமாய்த்
தீட்சை பெற்ற யோகிகட்கு சேத மில்லை யில்லையே. 

பாடல் எண்:- 1811
சரியை கிரியை யோகஞான சங்கைக ளதீதமாஞ்
சரியை யாவ தேதுலக தந்தைவிந்து நாதமும்
சரியையி லுதித்த ஞான சாஸ்திர மறிந்ததால்
சரியை கிரியை யோகஞான சாட்சியிந்நூல் காண்பரே. 

பாடல் எண்:- 1812
நூலறிவ தேதுகா ணுழைந்து பார்த்த பேர்களே
நூலறிந்து பின்பு யோனி நோக்கமு மறிவதோ
வாலை யுந்தன் தாயெனு மறந்ததோ விழியொளி
வாலை யின்வயிற் றில்வந்த வாறறிந்த பேர்களே. 

பாடல் எண்:- 1813
யோனி யாசை தீனியி லுழலு கின்ற மாண்பர்கள் 
யோனி யாசை யாலுயி ரொடுங்கு வாற றிந்திலீர்
யோனி யிலுதித் தபின்னு பஸ்தங் கொண்டு மாய்கிறீர்
யோனி யாசை யும்மறந்து ஊது தாரை யோகமே. 

பாடல் எண்:- 1814
தாரைகொண்டு வூதி யோக சாதனை நிலைத்திடும்
வாதை யேது ஆண்டுபின்பு வாரியால்முப் பாழதாம்
வேறுகூறு மும்மலம் வெறுப்பு கொண்டு மாறுமாய்த்
தேறுங்காய சித்தியெண்சாண் தேகவச்சிர காயமே. 

பாடல் எண்:- 1815
பசைந்த மண்ப ழமலம் பரிகரிக்க வல்லிராம்
இசைந்த தீவி னையிரண் டினிபறந்து ஏகிடில்
பசைந்த மண்ணு தர்மமும் பகர்ந்தகங்கை கர்மமும்
பசைந்த மண்ணுந் தண்ணிகாண் பாரும்உப் பகற்றியே. 

பாடல் எண்:- 1816
உப்ப கன்று கர்மமு முவர்ப்புகார சாரமும்
அப்பு உப்பு மாற்றினா லவர்பெருமை யென்னகாண்
கைப்பு மாற மாறதேக காந்தியென்ன சூரியன்
உப்பு முன்னைக் கொல்லவந் துளவனென் றறியுமே. 

பாடல் எண்:- 1817
கைப்பல்லோ இருந்து உப்பில் காலனாகு மூழ் வினை
அப்பல்லோ இருந்து லோக கானது மழிவதும்
உப்பல்லோ விரக தாப காமித முணர்வதாய்
இப்பொரு ளிருந்தல் லோஎ ழுந்துஎண் சாண்தேகமே. 

கெந்திதிராவகம்
(தரு)
அந்தபரிபூரணகெந்திதிராவகங்காணும்- அருள
அதின்பிரகாசங்காணவாயிரங்கண்வேணும். 
பாடல் எண்:- 1818
இந்திரனுந்துய்யவெண்ணந்தமதியொளியாய்
இந்தவர்ணமுடைத்தால்விந்துநாதநீர்காணும்
இலகுபற்- கதிர்சூரியன்- அழகுமுலசரகும்படி- அந்த. 

பாடல் எண்:- 1819
அந்தமதிசாரநீரமுரிநாலுபடிகொண்
டறிந்துபாண்டத்தில் தாக்கியகத்தியரைப்பணிந்து
அதுபானநீர்- கரமால்கரை- வடினாள்திரி- எடுநாதநீர்- அந்த. 

பாடல் எண்:- 1820
விந்துநாதநீர்கொண்டுவேறொருஏனத்திலூட்டி
சுந்தரப்பூநீர்பலம்பத்தொடுத்துடனும்பின்புகாண்
தொழுதுப்பணி- வழுவாமலும்- பழுதேதுகா- ணிதுவேகமும்- அந்த. 

பாடல் எண்:- 1821
சிந்தையில்லாமல்காணுந் தெளிவாய் மடையன்
சுண்ணம்வெந்துநீறானதுவுமிடவும் பலம்பத்தாகும்
வெகுவாய்கரைத்- ததுமூன்றுநாள்- சொகுசாய்சுத்த- சலநீரது- அந்த. 

பாடல் எண்:- 1822
துய்யகெந்திதனையுந் தோளாந்திரங்கள்செய்து
தூக்கிக்கிழியாய்க்கட்டிச் சுடர்மலம்போல்வன்னி
சொரிந்துகனல்- பொழிந்துகுறி- யறிந்தும்பதம்- மெரித்துத்தணல்- அந்த. 

பாடல் எண்:- 1823
எரியஎரியதணலிதுநீர் தொக்குந்தொங்கிடும்
இனம்பார்கெந்திமெழுகு இளகுமிதனைவாங்கி
எரிப்புத்தனி- விந்துநீர்சல- மிருபத்துட னெருப்பாறியே- அந்த. 

பாடல் எண்:- 1824
காரசாரசெயநீர் கருதுமிந்தநீர்முன்பு
கருநீரெடுத்தோரினவறுநீர் பதனஞ்செய்து
கணக்காயெடு- பலமொன்றது- எனக்கானது- இரவிமதி- அந்த. 

பாடல் எண்:- 1825
இரவிமதியளவாலிருந்தகற்பகாலங்கள்
சுரவிகுளிகையினால்சிவராஜாங்கயோகஞ்
சுழிபேதக- முனைமீதினில்- விழிபார்த்திரு- நடனங்களில்- அந்த. 

பாடல் எண்:- 1826
கெந்திமெழுகுதன்னை முந்திக்கலுவத்திலிட்டு
இந்தநாதநீரிட்டுஇணைவிடாமலொருநாள்
இதுநீர்விட- மயனப்பத- மதுபோல்வரும்- வழித்தேயெடு- அந்த. 

பாடல் எண்:- 1827
மயனங்கொண்டுவாலைரவிதன்னிலும்வருங்காண்
நயனபார்வையுநாடியடிக்கடிவினாடி
ரவிதன்சுடர்- கனலொன்பது- கவியும்பாடி- யருணனொளி- அந்த. 

பாடல் எண்:- 1828
கருவாய்மெழுகெடுத்துக் கருவந்தனிலடக்கி
கம்பியுப்பதுசேர்த்துக் கலக் கஜாமமுமாட்டி
கருதும்பொடி- வருகாண்பதம்- காணுங்கன- வேகத்துடன்- அந்த. 

பாடல் எண்:- 1829
செப்புக்குடத்திலூட்டிச் செம்பினால் வாளைபூட்டி
அம்புமதின்மேல்சோர அடிக்கடியும்நீர்பாய
அனல்கொண்டுட- னொருசாமமு- மனல்சூழ்ந்துடன்- வருந்திராவகம்- அந்த. 

பாடல் எண்:- 1830
தேய்வைச்சேர்ந்தசரக்கில் தீநீர்கெந்திசரக்கு
பாயும்ரோகந்தனிலும் பற்பமதாகுமனேகம்
பரிபத்தது- கழஞ்சாவதுங்- குறியொத்துடன்- குகைக்கிட்டுமே- அந்த. 

பாடல் எண்:- 1831
மேலுங்கொல்லனுலையில் மேவியருகும்பதம்
வேகமாங்கெந்திதிராவகம்விடுங்குன்றியெடைவீதம்
மிதங்காண்குகை- யதமாம்இடும்- வெடிகாண்கெடி- யரைநாழியில்- அந்த. 

பாடல் எண்:- 1832
சித்தர்சாபவிரத்தி செப்புமிந்நூல்வகையில்
உத்தசெய்தியுண்டா மொருதுளியில்வட்டாகு
மூலகந்தன்னில்- தசதீட்சையிது- ஒருதீட்சைகா- னருள்பெற்றிடில்- அந்த. 

பாடல் எண்:- 1833
வெட்டையுருக்கத்தங்கம் வெள்ளையென்னசொல்வேன்காண்
அஷ்டதிசையுஞ்செம்பொ னதிகமாற்றுமிருநால்
அதுகுன்றிடை- பரிவெள்ளையும்- ரசிதமிடை- பதமொன்றுகாண்- அந்த. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1834
வாரிகடந் தோராண்டு மற்றவோ
ராண்டுமுதல் வருக லேசாய்க்
காரியென்ற உப்புசல மமிர்தபா
னங்களினால் களிப்ப தற்று
வீரியமென் னால்விளங்க ஆத்மசத்தி
தேகசுத்தி விளக்க மாகுந்
தேறிடும்பேர் முதற்கொண்டு செல்கையினா
லிருந்தவமுஞ் சித்தி யாண்டே. 

பாடல் எண்:- 1835
பலமதற்குக் குன்றியெடை பரிவெள்ளை
யெனுங்குருவைப் பாச்சு வீராய்
விலைமதிப்பா ரொருவரில்லை வெளிசெம்பு
காண்பதறி தெதிர்வந் தாற்போல்
சலமதுபோல் நீர்தெளியு முருக்கிக்
குழியினில்விடவு மொருப் பிரகாசந்
தளதளென நிகநிகென மகாசூரிய
னெதிர்வருதல் காண்கி லீரே. 

பாடல் எண்:- 1836
நவரத்ன மிதுக்குநிகர் நானிலத்தி
லறிவதுண்டே ரவிகண் தேய்வு
கவையுலகத் தார்தமக்கு எய்திடுஞ்
செம்பது பலங்காண் கனமாய்மூசை
சிவயநம ஓங்கிலிவோம் அம் உம்மென்
றேசெபி இருநூற் றெட்டு
துலவுஅலை கடல்புக்குத் தீவுதீ
வாந்தரத்தில் சொக்குந் தானே. 

பாடல் எண்:- 1837
ரசிதசெம்பு குன்றியெடை தேய்வுசெம்பி
மலமதனில் நாடிச்சொல்ல
உசிதமிது வயதீரையுஞ் சொளிவதுகாண்
சூரியனை யொளித்துப் போடும்
வசியமிதுபவுத்திரஞ்செய் மகாமந்திர
எட்சணியு மருகை யோடும்
பசிவரும்போ திதையெடுத்துக் கரமதனி
லிடும்வழிசெல் பரிதா னாண்டே. 

பாடல் எண்:- 1838
வரித்தவளை யெனுமதுகேள் குழித்தயிலம் 
காட்டெருவாம் வன்னி மூட்டிக்
குறித்தஅந்தத் தயிலமதி லொருபலந்தா
னாகமதுங் கொண்டு மேலும்
விருத்துருக்கித் தயிலம்விடு மேழுவிசை
உருக்குருக்கி விளங்கச் செய்தால்
துரிதபச்சை வண்டதுபோ லொளிவாந்தர
காசமோ கோடி கோடி. 

பாடல் எண்:- 1839
பச்சையென்றஒளிவதுவாம்பரிநின்றகாண்
வர்ணமதுபரிசோதித்தால்
கஷ்டமில்லா நாகபச்சை விலையெல்லா
மதிரவியுங் கடந்து வோடும்
பிச்சையென்று வருமவர்க்குத் திரவியங்கள்
கொண்டுவரும் பேசப் போகா
சச்சரவம் பூண்டசிவ ஞானகுரு 
நற்கமல நான்ப ணிந்தேன். 

பாடல் எண்:- 1840
நாகபச்சைதனைஎடுத்து மூசைதனிலிட்டு
மேன்மேல்நாடி நாடிக்கொல்லன்
வாகதுவா யுலையிலிட்டு உருக்குமுகம்
பறிவெள்ளை வசனி குன்றிப்
பாகமதாய்த் தாக்கிடவும் பரிகோடி
மதிகோடி பானு கோடி
மோகமெனும் மடுத்தகலில் சாய்த்திடவு
நாகசெம்பை மொழியலாமே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1841
மதிரவியு மொன்றாகில் மாளுவதேன் மாள்வதில்லை
விதியிருந்தோர்க் கெய்துமிது வித்ததனா லாவதென்ன
அதிசெயமா லெபிக்குமாண் பிறவி நீயால்
கெதிமோட்ச சற்குருவின் கிருபையனுக் கிரகமதே. 

பாடல் எண்:- 1842
பச்சையிலு நாகபச்சை பரியில்பனி ரெண்டுகளை
வைச்சபொருள் மதிபனார் மாலின் களையிரண்டொன்றாய்க்
கச்சணிசே ரம்பிகைப்பெண் கருணைமதி பானமதை
இச்சையுட னொருமனதா யிருந்திடினுங் காண்கிலிரே. 

பாடல் எண்:- 1843
நாதவிந் தேநரகம் நாறுமலம் போக்கிமறு
சாதனைசெய் தபெரியோர் தாரணி யிலுமறியார்
மாதவிடாய்த் துன்மயமாய் வாறுதண்மை நாதமுன்னுள்
வேதமிந்தப் படியைவிட்டு வெறுங்கூறு மாடினரே. 

பாடல் எண்:- 1844
ஜெகமதிலு நாகசெம்பு சித்தர்செய்வார் வாதிசெய்வார்
அகமாண்ப ராசையினா லம்புவியி லும்மறிவார்
சுகமதனு போகசுக சூழுமன்ன சாரமுடன்
அகமாயு றக்கம்ரவி அஞ்சைவிட வுஞ்சுகங்காண். 

பாடல் எண்:- 1845
இந்தசுக மன்னவித மேகபோக மாயுலகம்
அந்தபரி பூரணத்தை ஆரறிவா ராண்டையேகேள்
விந்தையிது நாகசெம்பு மேவியொரு குன்றியெடை
சந்ததமெ னுங்குடவன் தனித்தொரு பலமதற்கே. 

பாடல் எண்:- 1846
அண்டபிண்டக் கூறறிந்து அக்குகைக்கொல் லன்னுலையில்
விண்டதிது வேயுருக்கி மெய்விழிக்கண் ணாடிவரும்
கண்டவுடன் குன்றியெடை காட்டிடவு நாகசெம்பு
உண்டிடுங் குடவனைத்தா னுகவரைக்கு முண்டிடுமே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1847
நீடாழி சூழுங் கதிர்மதி கோடி நிலவொளியாய்
நாடாளும் ராஜ கெம்பீர சிங்க ராஜரிஷி
மேடான மேடி யகத்தீசர் பொற்பதம் வேதரிஷி
கோடானு கோடி அதிவித ஞானகுரு சிஷ்டையே. 

பாடல் எண்:- 1848
ஈரைஞ்சு மாற்று அரைமாற்றுக் கூடி யிருபத்தரை
பாரஞ்சு பூதம் பொன்னிது மாச்சுது பார்தனிலும்
ஆரறிந் தாங்கரை யில்லைகோடி அளவில் லைகாண்
நூறில்லை ராச பயமில்லை மோதிரந் தொடுத்திடுமே. 

பாடல் எண்:- 1849
ஆக்கினை சத்த மறிவுக்கு ஞான ஆண்டவரைப்
பாக்கிய சவுக்கிய மஷ்டாங்க யோகப் பதவியிலும்
நீக்கிய நிராதர நிர்மல சுரூப நிஷ்டைதனில்
வாக்கிய மெட்சணி யுனக்கேவல் செய்குவள் வசனித்தனே. 

பாடல் எண்:- 1850
மேருவில் வாசங் கருங்கூளி நேச மேதினியில்
காருமே வாசங் காட்டக தேசங் கானகத்தில்
பாருமே பாறை பலகோடி வர்ணம் பலவிதத்தில்
பேருமே யொன்று தனியாக நிற்கும் பிறவியதே 

பாடல் எண்:- 1851
இருவினை போக்கிக் காயாதி கற்ப மெய்திடுவோர்
அருந்தவ ஞான ஐயஞ்சு மாற்று அவருளமுங்
கருவியைக் காண்க ஐப்பசி மாசங் கனபிசலில்
குருவனுக் கிரக மெய்மதி யூறக் குணமதுவே. 

பாடல் எண்:- 1852
அவிடம் போய்ச்சேர்ந்து அநேகநாள் வாச மதினருகே
பவுர்ணமி கூடும் நாள்வருங் காலம் பாறையின்கீழ்
அவிடத் தில்சேர்ந்து வலைகொண்டு வீசி அறவுளதாய்
மவுன சாபத்தி னிவர்த்திநா னூறு வசனியுமே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1853
நாட்டுக் கருங்காக்கை நாயில்கரு நாயானு
பூட்டுங் கரும்பூனை யதன்புகழ்கேள்- நாட்டுகரு
வாலியின் கரிக்குருவி வால்நீண்ட பட்சியதுங்
காலைவிலங்கு மெரியோந்தி காண். 

பாடல் எண்:- 1854
கழுவி லிறந்திடுவோர் கண்டமட்டுந் துண்டுசெய்து
முழுதுமுரலி லிட்டு வோரிடியாய்- முழுதும்
அண்டத் துடன்மழலை ஆறுடனே ஏழாச்சு
என்றறிமூ லப்புளிகா ணீது. 

பாடல் எண்:- 1855
அம்புவியி லெட்சணியெட் டஷ்டசெக சித்துமதும்
நம்பியொரு நாட்டமதாய் நாடினால்- அம்புவியில்
அறுபத்து நாலுமது ஆடுமந்த அஷ்டகரு
துறவிகட்கு வேணுமெனச் செப்பு. 

பாடல் எண்:- 1856
எட்சணிக ளெட்டுக்கு மெண்கருவி யெண்ணெழுத்துப்
பட்சணிக்கு மாகுமிந்தப் பாகம்- தெட்சணிகாண்
அன்னம்வருஞ்சொர்னம்வரும்அயிஸ்வரியக்கியானம்வருஞ்
சின்னவய தாகுமன்னை சொல். 

பாடல் எண்:- 1857
என்னையன்னை யீன்றபல னெவ்விதங்காண் கல்லுரலில்
அன்னைசொல்ல யானறிந்து அஷ்டவிதம்- முன்னையுமே
நாடியியக் கம்பமதனால் நாலிரண்டு எட்டையுமே
சாடிவிடு நாள்மூன்று தான். 

பாடல் எண்:- 1858
காட்டெருவு கொண்டு கண்டதிடம் பாண்டமதில்
நாட்டிமுடி சந்ததமு நாலிரண்டு- காட்டெருகாண்
குழித்தயில மெண்ணதிதங் கோடானு கோடிரவி
பழித்திடலா காதுவன்னி பார். 

பாடல் எண்:- 1859
கெந்திமெழு கெடுத்துக் கேளுமொரு குப்பிதனில்
அந்தரமாய்த் தொங்கவிட்டு ஆனதால்- கெந்திமெழு
குழியில் குழித்தோண்டி கொண்டுகுப்பி பந்தனஞ்செய்
வழியதுவாய்ப் பாண்டம்வைத்து மண். 

பாடல் எண்:- 1860
எருதுகொண் டக்கினியு மிட்டுஅனு போகமதாய்
உருவதுவா யானபின்பு வோசைபார்- எருவதுகொண்
டக்கினியை மூட்டியன லாறி விடும்பதமும்
உக்கிரம தாயிறங்கு மே. 

பாடல் எண்:- 1861
தயிலமிது பதனஞ் சந்தனஞ்சவ் வாதுடன்
மயிலமதி யிலகு மாண்புழுகு- தயிலமது
குங்குமப்பூ கஸ்தூரி கோரோசனையுங் கொண்டுஎடை
அங்கமொரு கழஞ்சி யாட்டி. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1862
தயிலங் குப்பிதனில் பதன மாமெனவுந்
தயில மானதுவுந் தயிலமாகும்
தணிய வும்மிழிதன் மண்ட லம்பிலகு
சாட்சி பாரதுவு மைபதம்
குயில்கள் போலுமட மாது வம்பிகையின்
குறைவி லாக்கமல பொற்பதம் 
கும்ப மேவிவரும் வாசி வாவெனவுங்
கூறும் ரேசிகண்ட தாரையில். 

பாடல் எண்:- 1863
ஒயில்கள் போலு மசைவாகி யெங்கும்
வளரொவ் வொன்றூதிடு மூதிடு
ஓங்கா ரமூலகனதேவ தேவகுருவ
உழ்வொன் றூதிஉருத் தாக்கவும்
கயிலை மேவுசுழி வாலை புவனையருள்
கமல மும்பணிந் தெழுவதாய்க்
கருணை திரிபுரையும் யேந்தி ரியாமளையும்
வராகி சாமளையு மேழதே. 

பாடல் எண்:- 1864
சாகாதே வியருள் பாத பங்கயமுந்
தாள்ப ணிந்துமதி மலர்தொழும்
சனகா திரிஷி கள்பதி னெண்பேர்
கமலபதஞ் சரணபரிபுர சற்குரு
அக்க ரங்கள்பிதுர் துர்க்கி சாமுண்டியு
மாயி ரந்தலைகல் லெறிவனும்
அகோர வீரஅனு மந்த னோடுகுட்டிச்
சாத்தி யுமஷ்டப யிரவர். 

பாடல் எண்:- 1865
சக்க ரங்கள்சுழிக ணேச சுப்ரமண்ய
சாடன் மாடன்வே தாளமும்
சத்தி யெட்டுகரு பதுமை யோடுசெப
மணியு மெட்டுஅஷ்ட திசையதும்
உக்கிர சீலையிரு நாலு டனதித
ஓரிகண் டதுகை யாசனம்
உண்மை யுண்மையஷ்ட எட்சணிகளது
உனையும் விட்டு அகலாதுமே. 

பாடல் எண்:- 1866
கட்டி வாமெனவு மோதி ரந்தனையுங்
கருவி மைதடவி கரமதில்
இட்டு ஸ்திரீகள்தனை முகம லர்தடவி
யிடது கைப்பிடியும் வாவெனவும்
கெட்டி காரனெனும் பின்து டர்ந்துவரு
வார்கள் மாதர்களின் பேதமை
அட்டி யேதுஅவ ரிட்ட ஆபரண
மாதி தம்முனக்க ளிப்பரே. 

பாடல் எண்:- 1867
சார்வ காலமுனை தழுவிபின் தொடர்வர்
சரணஞ் சுவாமியெனை ரட்சியும்
பார்வை வைத்துஅடி யாளைக் காத்துப்பர
கெதிக்கு ளாய்வழிதன் பாலியும்
தார்பு விகள்மலை மிருக மாதலவர்
சத்தி ராதிகளுன முன்வரும்
ஆர பாரமிருக ஆனை யோடுபுலி
யனேக மிருகமுதல் வசியமே. 

பாடல் எண்:- 1868
ஆனை வாவெனவு மோதி ரக்கரமு
மதித மாகஅதின் மேல்பட
வான மேவும்புவி சூழும் பின்துடர
வாருஞ் சுவாமியெனை வாழ்வியும்
நானு முன்பிறகு நாடி யும்வருதல்
ஞாய மாவென்தன் ரட்சியும்
சேனை யானைமுதல்  சர்வ மிருகங்களுந்
தேடி யும்வருவர் தேவரா. 

பாடல் எண்:- 1869
பரிட்சை பார்பரியன் மோதி ரந்தனையும்
பத்தி யுமொருவர் கரமதில்
துரித மாகயிதில் தயிலம் பூசியொரு
சின்ன பையல்கரந் தன்னிலும் 
வரிசை யாயவர்தன் கரமு மேவிவிட
மான கர்க்கடைப ஜாரினில்
குழிசி ராப்புகரங் கொடுத்து மாறிவிடு
குணம தாம்வயது பத்துமே. 

பாடல் எண்:- 1870
மாறி வும்வரவுந் தேடி ராவுதனில்
வசிய ஓம்ஶ்ரீயும் வாவெனும்
வசிய மாம்பரிதன் மோதிரங்கள் பையும்
வங்குசிங் கெனவும் வருதலாய்
ஏறியுமேயுனது இல்லந் தேடிவரும்
எமசொர்னமெனும் ரசிதமும் 
இனிய தோரளவை ஆதி தங்களுமே
யாவ துமுனது சொந்தமாம். 

பாடல் எண்:- 1871
வெறிகள் கொண்டுமிக வேதையாகிசெக
மேவியோடியலை வார்கள்தான்
மீறிப் பேய்களது வாடி யோடியழு
மேவு ஞாயமது போலெனத்
தேறுந்தேறுசெக ஞானபண்டிதர்கள்
தெட்சணாயனருள் கிருபையால்
தேச தேசரச வாத யோகிகளுந்
தேறுந் தேறுஞான வெட்டியே. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1872
கெடிதன் சூரான மோடி வைக்கும்விதங்
கேள்வி நாடதிலுங் கெடியதாம்
கேளுங் கேளும்பெரி யோர்கள் செய்கைதனைக்
கேட்டுங் கேள்வியது மில்லையோ
நாடியுஞ்சபையில் மோடி காரர்வரும்
நானெ டுப்பனெனு மோடிதான்
ஞாய மாகவரு வார்கள் தானெனவும்
யானு மேவிசபை மோதிரம்
சாடி மஞ்சளினில் பசுமை காணரிசி
தயில மேவியதைத் தடவியும்
தரணி மீதில்பவுத் திரத்தின் மோதிர முந்
தயிலந் தொட்டுதனை யெரியவும்
மோடி மோடியெடும் பேர்கள் மீதிலெறி
ஓகோ செங்குளவி வண்டெனும்
ஒருகோடி கோடிகோடி குளவி வண்டுகளு
முயிர்வ தைத்துஉடல் மாயுமே. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1873
மோதிரமு மெடுக்கவரு வோர்களதன்
சேஷரிசி மொழிவீ ராகில்
வீதியெல்லாங் கருங்குளவி செங்குளவி
கருவண்டு வீசிக் கொட்டும் 
சாதிபுளி யிலையுருவித் தயிலமது
பிறட்டி சபை யோரஞ் சென்று
பேதியிலை தூவிவிடத் தேளரணை
காலிசெய்யா னரவந் தானே. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1874
குளவிவண்டெனுஞ் செங்கு ளவியோடு
கொடூரமானவிஷ மதீதமும்
கொட்டுந் தேளரவ காலி செய்யானுடன்
கொல்லு மாகிலெரி மண்டலம்
அளவி லாதித அரவஞ் சூழ்ந்திலு
மள்ளி சேஷரிசி தூவிட
அகோர மானபுர மெரிவு தேகமெது
கூற றிந்துஎடுப் பார்களோ
நளின மாகவுங் கமல பாதமதில் நமஸ்க
ரித்து அடிதொழு திட
ராஜ ராஜாமகிழ் மோடி யாமிதனை
நாமி தெங்குமறி யோமென
வளமி தாகுமொரு நாக செம்படைய
வசிய மோதிரமும் வாங்கிடில்
மையெ னுந்தயிலம் விசரி மோதிரமும்
வைத்தெ டுமெனவும் வாழ்த்தினார். 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1875
வாழ்த்தி னாரெனை மோடி யெடுப்பவர்
மணலை யள்ளியதில் கருகூட்டியுந்
தாழ்த்தி யோம்சாம ளாதேவி சாம்பவி
சவ்வும் ஓம்சிவசங் கரிநசமசி
போற்றி யம்மம்ம சர்வ காரணியம்ம
போட்டெவு பெருங்காற்று மழையுமாய்ச்
சாத்தி னார்கக்கி ரெத்தங் களாகிச்
சபைக ளெலாஞ்சற்றுச் சிரிப்பார்களே. 

பாடல் எண்:- 1876
மண்ணை வாரிமலை போலவும் போடுவாய்
கண்ணுங் கெட்டுக்கடக் கப்போ வார்கள்காண்
சொன்ன மோடிசுக்கல் சுக்க லாகுமாய்ச்
சோப தாபந்துயரப் படுவர்தான்
என்ன மாயினி யிவ்வித மாகினால்
ஏக்கங் கொண்டுவிளைத்துள றுப்பர்காண்
அன்ன வாலை யருகி லிருந்துமே
முன்ன மேமொழி முத்திய ளிப்பதே. 

பாடல் எண்:- 1877
இந்தமோ டியெடுக் கும்சபை
விந்தையால் குழி வட்டிச் சதுர்த்திசை
அந்தமா கக்கழற்சி யின்காய் தனில்
ஆறுமே யறியாமலு மார்க்கமாய்த்
தொந்த மாகத் துப்பாக்கி மருந்துகாண்
சோதித்தே பலமஞ்சு அந்நூறதும்
தந்திரம்மிது தார்புவி மூலைநால்
இந்தவித மியம்பிடீ ராண்டையே. 

பாடல் எண்:- 1878
நாலுமூலை நடுமையவாமிது
நாடியேகரிவாலைபந்தனம்
தேடிடாமலுஞ்சீலைமண்மூடியுஞ்
சேருங்கில்லுசிறுகத்துவாரமாம்
வாலதரகவளமெனும்நூலினால்
சீலதாமச்சிரங்களைப்பாய்ச்சியும்
நூலுமேலும்நுனிதெரிந்தேவிட
காலமேகளி மண்ணினால்பந்தனம்
வேலையாயிவெளியிதையானருள்
வீதியில்விரும்பாமலொளித்திடே. 

பாடல் எண்:- 1879
கதிரவனொளிகாலையில்மோடிதான்
அதிரவுமிடியாகாசமாகவும்
பதறிடாமலும்பாரில்மகாசனம்
பக்கஞ்சூழப்பலபேரதிதமும்
விதியதாகவிட்டெறிபச்சிலை
கெருடனாயிரங்கிலியுஞ்சவ்வுமெனும்
மதியிலாடுமகாமந்திரத்தினால்
கதியவுங்கல்வத்திக்கருதுமே. 

பாடல் எண்:- 1880
கருதும்வன்னிகனல்படவத்தியில்
விருதுமோவெடிசத்தங்காணுமாய
துரிதமாகுந்துப்பாக்கிமருந்தினால்
தூக்கிவாரிச்சுடர்புகைசூழுமாய்
அரிதுகாய்களதுவெடித்தங்ஙனே
பொருதுமேபொடியாகவுந்தூசிபோல்
சுருபமோடியைச்சூழ்ந்தசபையெலாம்
சொக்கியோடிச்சுழன்றலைவார்களே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1881
சபைதனி லிலகு மாண்பர் சனங்களு மோடிப் போவார்
அபையமென் றழுது போடிப் பரிதவித் தலைந்து போவார்
உபையமாங் கழற்சிவித்தை யொருநொடிக்குள்ளேதானு
சபையெனுஞ் சூக்ஷ மோடிச் சூஸ்திர மறிந்தி டீரே. 

பாடல் எண்:- 1882
வணக்கமாய் மோடிக் காரர் மலரடிக் கமலம் போற்றி
இணக்கம்வைத் தெங்க ளைத்தானிடரது வருகா மேலும்
அணுக்கமா யடியோர்க் காக நுண்கருத் ததனை வைத்து
அணுக்கமா ருள்வைத் தேதா னாதரித் தருள்செய் விரே. 

பாடல் எண்:- 1883
செய்கையின் கருத்தினாலுஞ் சேவடி வணங்கும் போதில்
வையக மனித ரெல்லா மகாமோடி வைத்தா ரென்று
மையெனு மகிழ்ந்து மேலு மிணையடி தொழுதா ரென்றால்
சையெனமோதிரத்தைக்ஷணம்வையாதெடுத்துப்போடே. 

பாடல் எண்:- 1884
எடுத்துவிட் டியம்பக் கேளீ ரினியதோ ராவின் பாலில்
விடுத்துடன் மோதி ரத்தை விட்டுமே கழுவிப் போட்டுத்
தடுத்தும்ஓம் சிங்வங் ஶ்ரீயுஞ் சக்கரம் ராரா வென்று
தொடுத்துட னுருவஞ் செய்து திருநீறு மவர்மேல் வீசே. 

பாடல் எண்:- 1885
வீசிடும் போதி லுந்தான் எரிசுர மிரத்தங் கக்கல்
தூசியாய் விடுபட் டேபோஞ் சுகமெனும் சபஸ்தம் வாறே 
ஏசிடு மவர்க ளைத்தா னிருத்திடுஞ் சனங்கள் யாவும்
பேசியே ளிதங்கள் கோடிப் பின்புரைத் திடுவ னாண்டே. 

பாடல் எண்:- 1886
தயிலமும் வாங்கி நெற்றி தனிலொரு பொட்டும் போட்டு
அகிலமாம் புவனந் தன்னி லப்புவி யரசர் வீட்டில்
கயிலைநா தனையும் போற்றிக் கடவுளின் கமலம் போற்றித்
தொழிலெனும் வேண செம்பொன் தூக்கியும் போகலாமே. 

பாடல் எண்:- 1887
போனதட் சணத்தில் காணும் பொக்கிஷ மாந்தங்கொண்டு
தேனெனும் ராஜதேவி ஸ்திரீயுமுன் கரத்தால் தொட்டால்
மானெனுந் துடரு வார்பார் வரவழைத் துடனுஞ் செல்லத்
தானெனும் வசிய மாகிச் சதா காலம் பிரியாள் தானே. 

பாடல் எண்:- 1888
மையெனுந் தயில வித்தை மகாஜால மாடும் மாடும்
சையெனுந் தாயைப் போற்றித் தனதுமோதிரத்தைத் தாங்கிக்
கையெனுங் குறுவை வைத்துக் கனகமும் வாங்கி மேலும்
செய்கையா யுனது வில்லந் தேடியும் வருவார் தானே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1889
நாடியல்வந்  தேடிவர நான்குதுவை வைத்தநகை
வாடியவர் கிலேசமிட வந்துவிடு மில்லமதில்
ஆடிதிரு வம்பிகையி னாத்தாளைப் போற்றிசெய்து 
மோடியெனு மிந்தவித்தை விவேகிகளைச் செய்துமதே. 

பாடல் எண்:- 1890
பாடியமோ திரத்தைப் பத்திரமாய் வைத்திடிலுங்
கூடியருள் தந்தவித்தை கோடானு கோடிவரை
வாடாமல் சித்துவித்தை வையமதி லும்மதிகம்
வீடுகள்தோ றுஞ்சுவைகள் வேண்டியழைத் தேயிடுவார். 

பாடல் எண்:- 1891
வேண்டியெனையாண்ட குருவிவேகமதால் யான்தெளிந்தேன்
ஆண்டேயென் சற்குருவால் அகத்தியரை யான் பணிந்தேன் 
தூண்டுகுரு மாமுனிவர் சூட்சஉப தேசமதால்
ஆண்டி வேஷம் பூண்டுமதி ஆராய்ந்தேன் பூரணமே. 

பாடல் எண்:- 1892
ஒன்றான பூரணத்தை யோகவிதி காரணத்தால் 
அன்றாட மென்மதியா லாய்ந்துவுட லாத்துமத்தை
வென்றேன் வினைப்பயனை வேதனை சாரமதுங்
கண்டேன் கருவிதொண்ணூற்  றாறுங்கடந் தேன்சுடரே. 

பாடல் எண்:- 1893
சுட்டுவிட்டே னுப்பதனால் தொண்ணூற் றறுவரையும்
மட்டுமித மில்லாத வாரியுப்பை நீற்றிவிட்டேன்
சுட்டுக் கழன்றதுகாண் கருநீ றமுரியினால்
விட்டகுறையாலும்விந்து தொட்டதெல்லாம் பொன்மயமே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1894
பொன்மயம் பூண்டு மனோமய மாகிய பொக்கிஷமுந்
தன்மயம் பூண்ட மதிபலங் கார தற்பரத்தில்
தன்மய சற்குரு ஞானப் பிரகாச நாதவிந்தால்
சின்மய மாச்சுது சிற்பர சுரூப சிவசிவமே. 

பாடல் எண்:- 1895
சுரூப சுரூப சூட்ச சடாதார சுகாதிதம்
நிருபகிரு பாகர நிரஞ்சன நிர்க்குண நிராதரமுங்
குறுமுனி யாதி தமிழ்மொழி ஞான குண்டலிக்குஞ்
செயசித்தி முத்தி யருள்பெற்ற பேர்க ளதிசயமே. 

பாடல் எண்:- 1896
ஜெயசித்தி முத்தி யருள்ஞான தீப சிவபதங்காண்
பயமற்ற போதி லிராப்பக லொன்று பகரறியும்
பயமற்றும் போச்சு வலுவாகு தேகமும் வச்சிரமாம்
சயனத்தி லாடவும் அம்பிகா யோக சவுக்கியமே. 

பாடல் எண்:- 1897
ஆண்டாண்டு ஒன்று அதுமூன்று ஆண்டி லசவதுவும்
நீண்டாடி நின்று நிலையொன்று மூல நிலையிலிரும்
ஆண்டாண்டு அண்டி லம்பிகா யோக மறுவதனில்
தூண்டா மணிவிளக் கேற்றிய தீபச் சுடர்கெதியே. 

பாடல் எண்:- 1898
செடியான சித்து அறுபத்து நாலுங் கிரகிக்கவும்
துடிதபற் றறிந்து அதினதி னுள்ளதுன் பங்களெல்லாம்
படி படி யாய்ந்து கருக்கண்டு தேறிப் பலகலையும்
முடிப்பித்து ஞான முத்தியுண் டாக்கு முனைசுழியே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1899
முத்தி சித்தியுண்டா மூலச் சுழி நடுவில் 
சத்திசிவம் ரெண்டுமொன்றாய்த் தான்தோற்றும்- நித்தியமும்
காலை யொடுமாலை கண்டமதி லும்மசவு
வாலைவய தாயிது மாற்று. 

பாடல் எண்:- 1900
மாற்றும் வகையறியார் வாசியெனுங் காணளவு
பார்த்துக்கொண்ட தாரைவிடாப்பாலித்து- மாற்றும்வகை
அன்னைக்கண் ணாட மசவு மதுபிரியா
விண்ணையொட்டி வாசிகட்டு மே. 

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு