Posts

Showing posts from May, 2020

ஞானவெட்டியான்

https://youtu.be/cQ0vhY9j-Bg

ஞானவெட்டியான்

https://youtu.be/egIHhl6ijMA

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான்  http://thiruvalluvaringnanavettiyan.blogspot.com/search?updated-max=2020-05-19T17:28:00-07:00&max-results=7&start=17&by-date=false திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1- 100 http://thiruvalluvaringnanavettiyan.blogspot.com/2020/05/1-100_26.html திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 101- 200 http://thiruvalluvaringnanavettiyan.blogspot.com/2020/05/101-200.html திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 201- 300 http://thiruvalluvaringnanavettiyan.blogspot.com/2020/05/201-300.html திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 301- 400 http://thiruvalluvaringnanavettiyan.blogspot.com/2020/05/301-400.html திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 401- 500 http://thiruvalluvaringnanavettiyan.blogspot.com/2020/05/401-500.html திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 501- 600 http://thiruvalluvaringnanavettiyan.blogspot.com/2020/05/501-600.html திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 601- 700 http://thiruvalluvar

Sivayogi Facebook YouTube channel link

https://www.facebook.com/groups/369920250087700/?ref=share https://www.youtube.com/user/MrSivayogi

சிவயோகி ஞானவெட்டியான்

Image

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1901- 1913 முற்று பெற்றது

பாடல் எண்:- 1901 மேல்கீழும் வாசி விரும்ப வொருவழியாய்க் கால்வாங்கிப் பாயாது காலையதும்- மேல்கீழும் சுவாசமது மோடாது சொக்கா தசவெனவும் உவாசமது வூதுமோ டாதே. பாடல் எண்:- 1902 அன்னமய மதித மடிக்கடிதா னாகாது வின்னம் பரவிபழ மேலுஞ்- சொன்னேன்காண் பசும்பாலுஞ் செய்கையொன்று பாலாகா மற்றொன்று வீசாவின் பாலொன்றே மேல்.  பாடல் எண்:- 1903 வருஷமூ வாண்டில் வாசிகொண்டு தாரை உருவேற்றங் கண்டங்கி யுபாயமதாய்- வருஷமாம் கீழிருந்து மேலுங் கீழ்மேலும் பாயும்விதம் பாய்வீட்டைச் சுத்திசெய்து பார்.  பாடல் எண்:- 1904 வாசி யடங்கவுமுன் மலசுத்தி சலசுத்தி பேசினது ஞானவெட்டிப் பேசும்- வாசியது ஒன்பது வாரகுழி ஓடாது சுவாசமது மென்குருக டாட்சமெனு மேல்.  பாடல் எண்:- 1905 ஆதியொரு வாண்டி லழுக்குகளெல் லாமுறியும் பேதியிலை யுண்டமுரி பெருமைகாண் ஆதியிலும் முழுவயிரமுன் னாண்டில் முக்காலாம் பின்னாண்டில் பழுதிலைமூ வாண்டுவரை பார்.  பாடல் எண்:- 1906 அரைவயிறு சாதம் புக்கடியு மாகாது துரையதுவு மொருவேளைச் சொன்னோம்- அரைவயிறு அதினாலு மாவதென்ன அமுரிபிடி யன்னம் மெதுவாக அன்னமுண்ணு மேல். 

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900

பாடல் எண்:- 1801 காலியுங்கழிந் தோடுவ தாகையால் வாலிபங்கள் வளர்பிறை மாறிடும் பாலனாய்வாலி பங்களில் கற்பங்காண் வாலையாமினி வச்சிர தேகமாஞ் சீலவாசி சிநேகித மானதால் தூலமேயுடல் சோதிப்பிர காசமாய் மாலியேது மறலியு மேதுகாண் சூலிகபாலி சுடர்கொடி தீபமே. பாடல் எண்:- 1802 தீபகுண்டஞ் செழுந்தேன் பொழிந்திடுங் கியாபகங்கள் கணேச னிருப்பிடம் பாவமேது பரமெனும் பாவமுஞ் சாபமேது சாரத்தா லழிந்திடுந் தூபதீபங் காரசாரமுங் காதலால் தாபமெல்லாம் க்ஷணத்தி லொழிந்திடும் ஆவதென்ன அழிவது மன்னமால் சாவதில்லைகாண் சண்டனு மில்லையே.  பாடல் எண்:- 1803 உப்புங்கார முணர்ந்த ருசிப்பதாய் அப்பும்உப்பும் மறிவறிந் துண்பர்காண் இப்பொருள் கண்டிரவி மதியுமே கைப்பொருளுன் னுள்கணக்கில்லை வேதைகாண்  செப்பினார்கள் தெளிந்தபண் போர்களும் அப்படியாண்டே யகத்தியர் வாக்கினால்  சொற்படி யினிசுரோ ணிதசுக்கும் இப்படிக்கண் டியம்பினே னாண்டையே.  (வேறு-விருத்தம்) பாடல் எண்:- 1804   அந்தணர் முனிவ ரோடு ஆய்ந்தநூல் பதினெண் பேருஞ் சந்தத மாகத் தானுஞ் சாஸ்திர நூல்கள் பாடிச்  செந்துகள் தனிலு மாண்பர் சுத்தராய்த்