Posts

Showing posts from September, 2017

குருநாதர் சிவயோகியின் திருவள்ளுவரின் ஞானவெட்டியான்

குருநாதர் சிவயோகி ஐயாவின் ஞானவெட்டியானின் விளக்கவுரை https://www.youtube.com/playlist?list=PLXzX9wD_JRiGvZfLHbNPzYadpioUKJ00L

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளவ நாயனார் அருளிச்செய்த,  ஞானவெட்டியான் - 1500, மூலம் - பாயிரம் - காப்பு (விருத்தம்) பாடல் எண்:- 1 அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால் போற்றி யகண்டபரி பூரணத்தி னருளைப் போற்றி மண்டலஞ்சூ ழிரவிமதி சுடரைப் போற்றி மதுர தமி ழோதுமகத் தியனைப் போற்றி எண்டிசையும் புகழுமெந்தன் குருவைப் போற்றி யிடைகலையின் சுழிமுனையின் கமலம் போற்றி குண்டலிக்கு ளமர்ந்தவிநா யகனைப் போற்றி குகமணியின் தாளிணையைப் போற்றி போற்றி.  பாடல் எண்:- 2 குகனருளின் கிருபையினா லிந்நூல் ஞானங் கூர்ந்துநவ சித்தர்மொழி குறித்து ஆய்ந்து புகழமிர்தச் செந்தமிழா யிரததைந் நூறு புகலவும்பூ தலங்களெல்லாஞ் செழித்து வாழ்க அகமகிழு மம்பிகை பெண் ணருளி னாலே யவனிதனில் ஞானவெட்டி யருள யானும் நிகழ்திருவள் ளுவநாய னுரைத்த வேத நிரஞ்சனமா நிலவு பொழி ரவிகாப் பாமே.  பாடல் எண்:- 3 நிலவுபொழி இரவிமதி யருளினாலே நின் றிலங்கு நாதவிந்தி னிருவி காப்பு வலமிடமாய்ச் சூழ்ந்துவருங் கார சாரம் வழலையெனு மாமதுர வாணி காப்பு உலகமதிற் கடல்சூழ்ந்த புவனை வாலை யோங்கார மூலகண பதியே காப்பு தவமதித சனகாதி ரிஷிகள் பாதஞ்