திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1701- 1800

பாடல் எண்:- 1701
பேதாபேதம்பெரியோர்கள்விளக்கிய
நாதவிந்துரகசியமறிந்தபேர்
வேதசாரமெய்ஞ்ஞானவெட்டிகாண்
பாதைபாதைபெருநூலிதுபாதையே- நவ.

(விருத்தம்)
பாடல் எண்:- 1702
பேச்சுரையின் குடுக்கைதனில் குளிகை தாக்கி
லெருவையகத் தீசர்பதந் தொழுது போற்றி
வாச்சுதுநா லாயிரத்து நானூற் றுக்கு
மேல்வருசொச் சம்நாற்பத் தெட்டுவருநோய்க்கெல்லாம்
போச்சுதுகாண் சிவயநம வென்று இஞ்சிப்
புகழ்பெறவுஞ் சுரசமதில் புகல்வீ ராகில்
மாச்சிடுவிடும் பயறளவு முள்ளுக் கேற்ற
வாதத்தா லெடுத்தசுர சன்னி போமே. 

பாடல் எண்:- 1703
பித்தசுரஞ் சந்நியதுக் கிடுமே தேனில்
பிசகாது பயறளவு பின்வாங் காது
உத்தவினைக் கொருவேளை யூட்டும் போது
உடலிலுள்ள சுரதோஷ மோடு மாகில்
செத்தசவ மானாலு மெழுந்து குந்தும்
சிலேத்துமசுர சந்நியதுக் கிடுவீ ராகில்
பற்றறறுங்காண் முலைப்பாலில் பயறுப் பிரமாணம்
பறத்துவிடு மேகசுரம் பாய்ந்து போமே. 

பாடல் எண்:- 1704
சுக்குடனே திப்பிலியு மிளகுந் தூளாய்த்
தொந்தித்துப் பயறளவு குளிகை யூட்டி
இக்குவையா யிஞ்சியதின் சுரசந் தன்னில்
இயம்பிடுமே யொருவேளை யிதுவுண் பீராய்ச்
சொக்கிவிடும் விக்கல்சத்திக் குன்ம மெட்டுஞ்
சூலைபதி னெட்டும்பறந் தோடுங் கண்டாய்
பக்குவமா யமுதுகொள்ளு மிச்சா பத்தியம்
பதார்த்தமென்ன இறைச்சிமீன் பகரா தென்றே. 

பாடல் எண்:- 1705
பறங்கியொடு சித்தரத்தை மிளகுஞ் சுக்கும்
பற்பமதாய்ப் பொடிசெய்து பயறுப் பிரமாணம்
திரமதுவா குளிகையிட்டுத் தேனு மூட்டித்
தீண்டிடுவா ராமாகில் தினமு மொன்று
குலைநோய்கள் குமரகண்டன் முசல்வ லிப்புக்
குஷ்டம்பதி னெட்டுமது குடிபோங் கண்டாய்
அறம்வளர்த்த அம்பிகைப்பெண் ணருளால் சொன்னேன்
ஆண்டையினி மதிதமெல்லா மருளு வேனே. 

பாடல் எண்:- 1706
காயமொடு திப்பிலியு மரத்தை சுக்கும்
கருதுங்கொடி வேலியின்வேர் பட்டை யஞ்சும்
சாயமுடன் வகைசமனாய் வறுத்துத் தூளாய்ச்
சாற்றிடிலுங் குளிகையொன்று தாக்கி மேலும்
உபாயமுடன் வெருகடிப்பிர மாணந் தன்னில்
ஊட்டிவிடு மொருதினத்தி லோடும் வாய்வு
அபாயம்வரு காதுஅசீ ரணமும் போகும்
ஐயிரண்டு வாய்வதுவு மகலு மாண்டே. 

பாடல் எண்:- 1707
மிளகருணை திப்பிலி லவங்கத் தோடே
மிளகுடனே சரிசமனாய் பொடிதான் செய்து
களங்கமில்லா ஆவினுட சுருதந் தன்னில்
கருதியுமே குளிகையொன்று காட்டி மேன்மேல்
விளங்கிடவு முண்டிதனை யிச்சா பத்திய
மிதுவருந்த நோய்களது விடுபட் டேபோம்
துலங்கிடவுஞ் காசமறுஞ் சயகாசம் போம்
சுழற்றலொடு பயித்தியமுஞ் சுவறிப் போமே. 

பாடல் எண்:- 1708
கடுகுரோ கணியதுவு மிளகுஞ் சுக்கும்
கண்டுபரங் கியுங்கடுக்காய்க் கஸ்தூரிமஞ்சள்
இடுமிதனைச் சரிசமனாய்ச் சங்கன் சாற்றி
லிட்டரைத்துப் புன்னைக்கா யளவு நேர்மைக்
கெடுதியில்லா அவ்விலைச்சா றதனி லூட்டிக்
கிலேசமில்லாக் குளிகையொன்று கிளர்த்துங் காலை
விடுமவிழ்தம் பாண்டுவிஷப் பாண்டுக் கேற்ற
விப்புருதி சோகைமுதல் விலகு மாண்டே. 

சிங்கி பஸ்பம்
(தரு)
சிங்கிபற்பமுஞ்சொல்வேனாண்டே- மிருதார்சிங்கி
ஜெயவிஜயசுன்னங்காணாண்டே. 
பாடல் எண்:- 1709
செங்கமலபூபதிகங்கைநதிபெருகும்
பொங்கடல்சூழ்வாரிசெங்கநதியில்வளர்
எங்கும்பரிமளசுகந்தசவ்வாதுவீசும்
குங்குமசந்தனகெந்தமெங்கும்வாசமேவிய- சிங்கி. 

பாடல் எண்:- 1710
தங்கமெனுமம்பிகைபன்னிரண்டாண்டுமுதல்
கொங்கைமதுவின்பந்திங்கள்மதியுணரும்
எங்கலியுமிவளாலிறவாதுடலுயிரும்
இருக்காயசித்தியுமுருக்கமதாயளித்தாள்- சிங்கி. 

பாடல் எண்:- 1711
சந்திரபுஷ்பகரணியில்ஸ்நானபானங்கள்செய்து
உந்தியின்மூலாக்கினை கொண்டுணர்ந்துவாசியோகத்தில்
இந்திரபதவிபெற்றுஇரவியெனும்புளியை
அந்தியிலுணர்ந்துமாலையசடில்லாமலுங்காணும்- சிங்கி. 

பாடல் எண்:- 1712
மந்திரபஞ்சாட்சரத்தைமதியும்ரவியிதென்று
மறவாமலுங்குருவின்துரைசாமியின்சொல்வாக்கால்
சந்தையப்படாமலும்மூலசரக்குமமுரியுண்ட
சாதகத்தாலெனதுசரீரமிதாச்சுதாண்டே- சிங்கி. 

பாடல் எண்:- 1713
மதியென்றமுரிநாலுபடிநீர்பாண்டத்திலிட்டு
விதியென்றதும்ரவிவிளங்குமிதிலொன்றிட்டுப்
பயதிவதுகரைத்துப்பாகமதாய்வடித்து
அதனைமூன்றுநாள்வைத்துஅளவாய்த்தெளிவிறுத்து- சிங்கி. 

பாடல் எண்:- 1714
நீதியாய்வீரமுஞ்சாரநேர்சமானதுசீனமுங்
கெதியாய்ப்பலம்வகைக்குக்கெணிதம்பொடியாய்ச்செய்து
அதிதகாரசாரநீரளந்துபடிதான்வாங்கி
மதுரமாகும்வெள்ளைவிளங்கும்பீங்கானிலிட்டே- சிங்கி. 

பாடல் எண்:- 1715
காரசாரமதுநீகருவியபீங்கானிலிட்டு
நீரதனில்பொடியைத்தாக்கிநெறியாய்ச்சொல்வேன்கேளி
கூறயான்மிருதார்சிங்கிக்குணமாய்ப்பலமிரண்டு
வீரமாய்ச்செயநீரிலூட்டிச்செலுத்துஞ்செயநீரிலாண்டே- சிங்கி. 

பாடல் எண்:- 1716
சீராயக்கம்பினால்செயநீரதைக்கலக்கிப்
பாராயமுப்பூவின்சுண்ணம்பாய்ச்சிடுகழஞ்சியிட்டு
வீராய்க்கதிர்முகத்தில்விசிதநானாக்குநாளும்
பேராய்வற்றவும்விட்டுப்பீங்கான்பதனம்வைத்தே- சிங்கி. 

பாடல் எண்:- 1717
வற்றவைத்தொருபட்சம்வகையாய்ரவிமுகத்தில்
முத்துமுத்ததுபோலுமுனையில்சுற்றிக்கட்டுங்காண்
சித்தர்சொன்னமறப்பைத்திருவள்ளுவனும்விண்டேன்
பற்றிடுஞ்சுற்றிலும்காணும்பசுவின்வெண்ணெய்போலாண்டே- சிங்கி. 

பாடல் எண்:- 1718
நித்தநித்தமூடியயக்கரண்டிகொண்டுவழித்துச்
சித்திபெறவும்பீங்கான்சிறுசாயதனிலிட்டுச்
சுத்தவெண்ணிறவதாய்த்துலக்கமாகுமதிபோல்
வைத்தமருந்தாதீதம்வருகும்வெண்ணெயெடுத்தே- சிங்கி. 

பாடல் எண்:- 1719
சித்திரைவைகாசிநாளில்திறமாய்க்கதிர்முகத்தில்
வைத்திடும்வெண்ணெயைவாரம்வைக்கவைக்கவெளுப்பாம்
புத்துப்போலவுங்கண்டால்பின்னும்வைத்திடும்வாரம்
சுத்தவெண்ணிறமதாம்சிங்கிசுண்ணமிதாண்டே- சிங்கி. 

பாடல் எண்:- 1720
பற்றுப்படாமல்வெள்ளைபரிவாய்க்குப்பியிலிட்டு
நித்தம்பூசித்துவாலைநேமியருள்பதங்காண்
கர்த்திகத்தினருளால்கண்டேன்சிங்கசுண்ணத்தை
விந்துவெனுமமுரிவிந்துநாதத்தாலாச்சே- சிங்கி. 

பாடல் எண்:- 1721
நவலோகங்களும்பற்பம்நவரத்தினமும்பற்பஞ்
சிவமுஞ்சத்தியுங்கூடிச்சேர்ந்துசிங்கிமுப்பாச்சு
புவனந்தனிலும்பொருள்கண்டுரைசெய்வார்களோ
கெவுனாதிகளானாலும்கிலேசப்படுவார்காணும்- சிங்கி. 

பாடல் எண்:- 1722
தவத்திலதிதவந்தரணிதனிலென்னகாண்
மகத்துவக்களுமென்னமதிரகவிகடின்வாயு
கூகவத்துவங்களுமில்லைகற்பகாயசித்தியால்
சவமாகிலுமெழுந்துசற்றேபேசிடுமாண்டே- சிங்கி. 

பாடல் எண்:- 1723
வாய்மொழியால்படித்துவாதாடுவாருலகில்
தாயுந்தந்தையுமல்லாத்தான்பிறக்குமோகிள்ளை
நாய்போலுமேகுலைத்துஞானவாக்கியமெல்லாம்
பேய்போல்தெருத்தெருவாய்ப்பிதற்றிடுவார்களாண்டே- சிங்கி. 

பாடல் எண்:- 1724
பாயுமில்லாமல்கப்பல்பறந்துவிடுமோசும்மாய்
பாருஞ்சக்கரமில்லாப்பாய்ந்திடுமோவண்டிகாண்
நீயும்வாசியில்லாமல்நேராய்நடக்கலாமோ
தூயவெளியென்னவார்சுக்கிலசுரோணிதமாண்டே- சிங்கி. 

பாடல் எண்:- 1725
அன்னமேயம்பிகைமாதுஅமுரிமுலப்புளியும்
ஆரறிவார்களிந்தஅதிசூக்ஷத்தைக்கண்டு
சொன்னேன்மெய்ஞ்ஞானசூக்ஷஞ்சுழியின்முனையதுக்குள்
சூதவிந்தறிந்தால்வாதமேவல்கள்செய்யும்- சிங்கி. 

பாடல் எண்:- 1726
உன்னிதமெனும்பரிதானுருக்கித்துட்டதுபோலும்
ஒருபலத்துக்கெண்ணரையகலமுற்பனங்காணும்
இன்னமிருதார்சிங்கிசுண்ணம்எடுத்துக்கழஞ்சியெடை
உன்னுமிநீர்க்குழைத்துஉருத்தெரியாமல்பூசே- சிங்கி. 

பாடல் எண்:- 1727
பூசிடும்ரவிமுகத்தில்புகலும்பரியுலர
வீசிடுங்கற்பூரமெனும்வெற்றிலைமுதுகாலதும்
மாசியாட்டிக்கவசமதின்மேல்சந்துக்களில்லா
வாசிமண்சீலைசெய்துவதுதெசப்புடமாண்டே- சிங்கி. 

பாடல் எண்:- 1728
வீசியாறியனல்பின்விதமாயெடுத்துப்பாரு
மாசில்லாமலும்பாதான்மலர்ந்துபற்பமாகும்
வேசிவாலையின்மூலநேசத்துடனே
வாசிநாசிநுனிமுனைமேல்வாசியோகங்களாண்டே- சிங்கி. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1729
ரசிதமது பலமதுக்கு மிருதார்சிங்
கிச்சுண்ண நளின மாகும்
விசிதமொரு கழஞ்சியெடை யுமிநீரில்
குழைத்ததற்கு மேலும் பூசி
வசியஉத்தா மணியிலையை யரைத்துநன்றாய்க்
கவசமிட்டு மண்ணுஞ் சீலை
முசியாமல் செய்துதெசப் புடந்தனிலு 
மிவைநீற்று மொழிந்தி டீரே. 

பாடல் எண்:- 1730
வெள்வங்கம் பலமதற்கு மருதார்சிங்கிச்
சுண்ணம்வி ளங்கி டீர்கண்
களங்கமில்லாக் கழஞ்சியெடை உமிநீரினால்
குழைத்துக் கருதி மேலும்
விளங்கும்விஷ்ணு காந்தியரைத்தது கவசஞ்
செய்துமிக விளங்குஞ் சீலை
குளிக்காமல் தெசப்புடம்போட் டெடுத்து
வெகு பதனத்தாக் கூறுவீரே. 

பாடல் எண்:- 1731
கருவங்கம் பலமதற்குச் சிங்கிசுண்ணங்
கழஞ்சியெடை கணக்காய்க் கொண்டு
உருவஉமி நீர்விட்டு மேல்கீழும்
பூசியுரு தெரிய லாகா
அருவான சடைக்கஞ்சா அமுரிவிட்டு
அரைத்துரெண் டடையாய்த் தட்டி
விரிவில்லா மற்கீழும் பதியசந்து
தெரியாமல் விளங்கு வீரே. 

பாடல் எண்:- 1732
மண்சீலைசெய்து தேசப் புடந்தனிலு
நீற்றியதை வளமாய்வைத்து
உணர்வாகத் தாம்பரத்தி லொருபலங்காண்
கழஞ்சிசுண்ணம் உமிநீர்விட்டு
எண்ணமில்லா விதைக்குழைத்துப் பதியசந்து
மூடியதற் கினிமேல் காணும்
விண்ணெனுமோ ரிலையரைத்து உமிநீரிற்
குழைதன்மிகக் கவசஞ் செய்தே. 

பாடல் எண்:- 1733
அதிதமருந் ததனையிரு அடையாகச்
செய்துஅதுக் குள்ளே தாக்கிப்
புரைவருகா மண்சீலைசெய்து தெசப்
புடம்போட்டுப்பின்பு காணும்
முரையனும்பா யுரும்மதற்குச் சிங்கிசுண்ண
மொருக ழஞ்சியுமிநீர் விட்டு
திசையெனுமில் லாமல்படி குழைத்துஅதன்
மேல்பூசித் தெளிவாய்த் தானே. 

பாடல் எண்:- 1734
கறுப்பதுகாண் வசளையது கைப்புமலை
தனிலிருக்குங் கருவாய் கண்டு
உறுப்படியு முனதுஉமி நீரதுவிட்
டரைத்து வுள்ளங் கீழுமேலும் 
அறுபடிரெண் டடைநடுவில் பதியவுங்காண்
வைத்துமண் ணுஞ்சீலை செய்து
துரைப்படியும் பிசகாமல் தெசப்புடத்தில்
நீற்றியதைச் சுண்ணஞ் செய்வார். 

பாடல் எண்:- 1735
எழுகுஒரு பலமதற்குச் சிங்கிசுண்ணங்
கழஞ்சியெடை யியம்புங் காலை
அழகுபெறு முனதுஉமி நீரதனால்
குழைத்துஅதின் மேலும் பூசி
உழலைவரா தெட்டியெனுங் கொழுந்திலுமி
நீரதுவிட் டுருவா யாட்டிப்
பிழைவரு காதடையில்வைத்து சீலைமண்செய்து
தடக்கமதாய் புடந்தானாண்டே. 

பாடல் எண்:- 1736
போட்டெடுக்க அயச்சுண்ணம் பொருமியது
பொற்பத மாய்ப்பொறி போல் நீறு
மூட்டிடவுங் காந்தமொரு பலமதற்கு
ஒருகழஞ்சி யுமிநீர் விட்டு
வாட்டிடவுங் குழைத்துவரி தெரியாமல்
பூசிவன்னி முகமே வைத்து
மேட்டியெனும் விழுதியிலைக் கொழுந்துஉமி
நீரதுவால் விட்டு ஆண்டே. 

பாடல் எண்:- 1737
இரண்டடைதான் செய்துநடுவில் வைத்து
பதியவுமே யியல்பாய்ச் சீலை
திரளவுங்காண் தெசப்புடத்தில் நீற்றி
யெடுத்திங்கள் மதிக்கொவ்வாது
உறவாது வாபநவாச்சாரம் பலமதற்குச்
சிங்கிசுண்ணங் கழஞ்சியூட்டி
பரவஉமி நீர்விட்டுக் குழைத்துஅதின்
மேல்பூசிப் பகர்வே னாண்டே. 

பாடல் எண்:- 1738
பகரரிய ஆடுதின்னாப் பாளையம்மான்
பச்சரிசிப் பரிவாய்க் கொண்டு
நிகரில்லா உமிநீர்விட் டரைத்துஅதுக்
குள்ளடக்கி நெறியாய் மேலும்
திகழொண்ணா மண்சீலை செய்துஒரு
முழுப்புடத்தில் திறமாய் நீற்றிச்
சுகமதுவாய் நாவச்சார சுண்ணமது
நீற்றினத்தில் சொர்னமாண்டே. 

பாடல் எண்:- 1739
துரிசதுகாண் பலமதற்குச் சிங்கிசுண்ணங்
கழஞ்சியெடை துப்பு நீரால்
பரிசமெனும் பூசிகருஞ் செம்பனிலை
யும்பூவும் பரித்து மேன்மேல்
வரிசைபெற வகைக்குப்படி யுமிநீரி
னாலரைத்து வதுமேல் பூசித்
துரியமெனு மண்சீலை மூன்றதுகாண்
செய்துமிகச் சொல்வே னாண்டே. 

பாடல் எண்:- 1740
ஐந்துவிர லதுக்குமுத லதுவிர லால்
பத்தவைத்து ஐயஞ் சாகில்
சஞ்சலமில் லாதுபுடம் போட்டெடுக்கத்
துரிசதுவுங் சங்கை யேது
பஞ்சமில்லாத் தழைகளெல்லாஞ் சலம்பொழியுந்
தயிலம்வரும் பாடு பட்டால்
வஞ்சமில்லை கற்பமுண்டு வழலையதின்
பெருமையி னால்வசனித் தோமே. 

பாடல் எண்:- 1741
முன்சொன்ன காரிய முறையதுகாண்
சுண்ணமதில் முறையைக் கேளீர் 
இன்னமந்தச் சுண்ணமதி லொருபலந்தான்
கல்லுப்பு உவமை யாகும்
உன்னிதமாம் வெண் கருவி னிட்டொருசா
மமாட்டிவழித் துணர்வாய்ப் பில்லை
வின்னமில்லா ரவியுலர்த்தி யகலில்வைத்து
மேலகலும் விதமாய் மூடே. 

பாடல் எண்:- 1742 
சந்துதெரி யாமலுங்காண் மண்சீலை
யுணரவுஞ் சார்வாய்ச் செய்து
இந்தவித மிதனையிரு பத்தெருவில்
புடம்போட்டு எடுத்துப் பார்க்க
அந்தமிகுஞ் சந்திரனுக் கதிதமிந்தக்
கருவங்க மார்தான் செய்வார்
விந்ததித சுண்ணமிதைக் குப்பிதனி
லடக்கவெகு பதனஞ் செய்யே. 

பாடல் எண்:- 1743
அரிதார மதுக்குயிர்கா ணதிதகரு
வங்கசுண்ணங் கழஞ்சி வாங்கி
உரியஉமி நீரிலிட்டுக் குழைத்ததின்மேல்
பூசியபின் னுடனே பாரில்
பரியாசம் வாராமல் கதிரவன்தன்
முகம்படவும் பண்பாய் வைத்துப்
பிரியமுட னத்திமரப் பட்டைதனி
லுமிநீர்விட்டுப் பலமா யாட்டே. 

பாடல் எண்:- 1744
மயனமதா யாட்டிவழித் திடுமூசை
யதுக்குளரி தாரம் வைத்து
வயனமது வாகவுந்தான் மேல்மூடி
யதினளவால் வலுக்கச் செய்து
செயம்பெறவு மண் சீலை திருத்தமதாய்
மூன்றுவிதஞ் செய்வித் தேபின்
நயமதுகா னாண்டையெரு பத்ததற்கு
ளடக்கமதாய் நாட்டி டீரே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1745
பூனைக்காஞ் சோரியிலை பங்கம் பாளை
புகழ்சமனா யுமிநீரது வாலு மத்தி
மானேகுகை வருவதுவாய்ச் செய்து மேவி
வாங்குமொரு பலந்துருசு வளம தாகத்
தேனேயரி தாரசுண்ணங் கழஞ்சி வீதந்
தினுசளவி னுமிநீரால் குழைத்துப் பூசி
ஆனைமுகன் கமலமலர் பணிந்து போற்றி
அக்குகைமேல் முடி சந்து அருளு வீரே. 

பாடல் எண்:- 1746
மேல்மூடி சீலைமண்ணு மூன்றுஞ் செய்து
மேன்மேலும் பத்தெருவில் புடந்தான் போட
ஆலவிடமுண்டசிவ னாலும் வெல்லா
அறுபத்து நாலுசரக் கசித மாகும்
வேல்விழியம் பிகைமாது நடனஞ் செய்வாள் 
மேலான கெந்தகமுந் தயில மாகும்
பால்போலு மதியுடைய நிறமொவ் வாது
பார்ப்பதற்குத் துருசிசுண்ணம்பாடி னோமே. 

வீரச்சுண்ணம்
பாடல் எண்:- 1747
வீரமொரு பலமதற்குத் தார சுண்ணம்
விளங்கியொரு கழஞ்சியெடை யுமிநீர் விட்டுத்
தேறவுங் காண்குழைத்து அதின்மேல் பூசிச்
செப்புகிறேன் ஞானவெட்டித் திறத்தைக் கேளீர்
வீறுகின்ற நெருஞ்சுதனி லுமிநீர் விட்டு
விமலவா லாம்பிகையைப் போற்றி செய்து
மீறவுங்கா ணரைத்துஅதைக் குகையாய்ச் செய்து
மேலும்பத் தெருவில்புடஞ் செய்வீர் தானே. 

சூதச்சுண்ணம்
பாடல் எண்:- 1748
சூதமொரு பலமதுவுங் கலுவத் திட்டுச்
சுயமான வீரசுண்ணங் கழஞ்சு தாக்கி
பேதமில்லா உமிநீர்விட்டுக் கடிகை யேழும்
பிலமாக அரைத்துவழித் துண்டை யாக்கி
சோதியெனு மூசிப்பா லிலையை வாங்கிச்
சொல்லுமுமி நீர்விட்டுத் தொந்தித் தேதான்
வீதியெனு மேகுகையதுசெய் திலைச்சார் தன்னில்
விளங்கவுங்காற் பலம்வாங்கி விரைந்தி டீரே. 

பாடல் எண்:- 1749
சாரமதின் சூரவுண்டை தோய்த்துத் தோய்த்து
சங்கையில்லா ரவிமுகத்தில் காயக் காய
மாறியுண்டைச் சாறதுவுஞ் சுண்டச் சுண்ட
மகத்தான கதிர்முகவன் காந்தி வீச
ஊறியந்தச் சாறதுவு முலர்ந்து போகும்
உண்டைதனை யெடுத்துகுகை தனிலு நாட்டி
வாறதுவாய் மேல்மூடி மூன்று சீலை
வசனியுங்காண் பத்தெருவில் புடந்தா னாண்டே. 

பாடல் எண்:- 1750
இந்தரசக் குருவிலொரு கழஞ்சு வாங்கி
யிரும்பதுசட் டியிலும்வெள்ளை வங்கந் தாக்கி
சுந்தரமே யுருகியதுங் கண்விட் டாடும்
சூட்டிவிடுஞ் சூதசுண்ணந் தொந்தித் தாக்கல்
அந்தநீ ரதிகமெல்லாங் குடித்துப் போடும்
அரைகடிகைக் குள்ளாக ரசித மாகும்
எந்தவித மாகிலுமே கற்பஞ் சாதித்
திருப்பதனா லிம்முறையு மெய்து மாண்டே. 

பாடல் எண்:- 1751
இந்நூலில் சொன்முறை யடங்கா மற்றான்
எண்ணூறு வயித்தியந்தா னியம்ப லானேன் 
அந்நூலு மிந்நூலு மார்க்குக் கிட்டு
மனுபோகி கற்பமுண்டோ ரவர்க்குக் கிட்டும்
பின்னுமொரு நாளுமில்லை பிழைதா னில்லை
பெருநூல்கா ணாயிரத்து ஐந்நூ றிந்நூல்
முன்னமேயான் பாடிவிட்டே னாயிரத்து முந்நூறு
முடித்துவைத்தேன் குறளதுவா யுலகோர்க் காண்டே. 

பாடல் எண்:- 1752
இரண்டாயிரத்து முந்நூற்றுச் சொச்சத் துள்ளே
நெறியான தத்துவமுங் கற்பங் கூறும்
அண்ரண்டங் கொள்ளாத அதித மெல்லாம்
அடியுநடு முடிவறிந்து அருள லானேன் 
கண்டுநவ லோகமெல்லா நீற்றிப் போட்டேன்
கரையில்லை துறைகளில்லை கருவின் வறால்
விண்டபொருள் நாதவிந்தின் விதியா லாச்சு
மேதினியி லிதையறியார் விளங்கு வாரோ. 

(வேறு- கவி)
பாடல் எண்:- 1753
மதுவினா லுதித்தசூதம் வாரிவிந்து சாரமும்
அதிதமூல நாதசோதி யந்தகார சுந்தரம்
விதியினா லிசைந்தமுரி வேதசார நாலிடை
அதிகார மோரிடை யளந்துபார் கணக்கிதோ. 

பாடல் எண்:- 1754
விண்ணுமண்ணு மேபிசைந்து வேறதா யொருவினமும்
பண்ணுமே விடுங்கழஞ்சி பாகமாய்ப் பிரமாணமும்
எண்ணிடு மெருகுபோலு மேவுமென் காசிடை
கண்ணிடுங்க திர்முகத்தில்காய்ந்து மலர்ந்து கண்டிடே. 

பாடல் எண்:- 1755
பச்சையா வதுதனி பருதியா துஞ்சுழி
உச்சிதமெ னும்ரவி யுகாரமும் மூலப்புளி
தச்சொரூப மாமதியின் சாரமு மமுரிதான்
வைச்சதோர் பொருளிதுநேர் வாளமுஞ் சமனதே. 

பாடல் எண்:- 1756
அகாரமா யமைத்தது மமுரியால் மடைத்ததும்
உகாரமா யுதித்தது முவரினால் செனித்ததும்
அகாரமு உகாரமு மருவுஞ்செ காகிதம்
சிகாரமே சிவரூப சித்திமுத்தி யாகுமே. 

பாடல் எண்:- 1757
ஏகமாவ தேதுகா ணிசைந்தபாண் டந்தன்னிலும்
வாளமும் வழலையொக்க மாட்டிசில்லு வாகதாய்
ஏனமேயி சைந்துநாடி யேழுசீலை மண்ணதும்
நானுமிப் படியதாய் நளினசெய்கை பாருமே. 

பாடல் எண்:- 1758
பூமியில் குழித்தயிலம் போடுமெவ் விதமாய்
நேமமா யொருவரும் நெருங்கிடா மலும்பதம்
வாமியம்பி கையருள் வாலாம்பிகை மலர்ப்பதம்
சுவாமியென் குருபதஞ் சுகாதிதம் பணிகுவாம். 

பாடல் எண்:- 1759
ஆதியந்த மாய்நிறைந்த அண்டபிண்டஞ் சூழ்ந்திடில்
ஆதியு மனாதியு மதிலுதித்த வாறுகாண்
ஆதியி லமைந்தவிந்து அந்தமூலநாதமாய்
ஆதியில்முன் னோர்மறைத்த அதிவிதமதாண்டையே. 

பாடல் எண்:- 1760
மதிநிறைந்த குப்பியில் மகிழ்ந்துஇத் தயிலமும்
பதியவும்வெ குழதனம் பாரும்பாரும் பண்பெற
விதியினா லமைந்திந்த விந்துநாத பூரணம்
துதியும்வாத மெண்பதுஞ் சிறந்துபோமிதாண்டையே. 

பாடல் எண்:- 1761
வாதநோய் வரும்பிணி அதீதகாலை தன்னிலும்
வீதமாவ தும்பணவெடை யெடுத்துச் சீலையில்
காதலா லுணர்த்திடக் கருதுநோய்க ளோடிடும்
வாதபித்த சேத்துமம் வணங்கிடுங்கா னாண்டையே. 

பாடல் எண்:- 1762
காலைமாலை யேழுநாள் கருதிடுவீ ராகிலும்
மாதுசூத வாய்வதும் வயிர்வலி அசீர்ணம்
மூலமும் பவுத்திர முசல்வலி யனைத்துமே
சூலையுஞ்சுரங்கள் சந்நிதோஷம் போங்கா னாண்டையே. 

பாடல் எண்:- 1763
வாலைபால் கறக்குமே வரும்பிணிகள் மாந்தமும்
சீலமாய்க் குரோசனையுஞ் சண்பகப்பூ சுக்குடன்
சாலவுங் கஸ்தூரியுஞ் சவ்வாதுமே புகழுடன்
சாதிலிங்கந் திப்பிலி மிளகும் பச்சைக் கர்ப்பூரமே. 

பாடல் எண்:- 1764
பச்சையான உப்பதும் பழம்புளி யமுரியும்
இச்சைநாலு மொன்றதா யிதைக்கரைத்து நீரதாய்ப்
பச்சையுந் தெளிந்துநீர் பரிகரித்து வன்னியில்
உச்சிதமா சுண்டினா லுவர்ப்புமா மிதாண்டையே. 

பாடல் எண்:- 1765
அஞ்சுமஞ்சு மொன்றுட னதுபதினொன் றாகவும்
சஞ்சலம் வராமலுஞ் சரிசமன் கழஞ்சிடைப் 
பஞ்சபா தகங்களேகி பாரிலும் பறந்திடும்
நஞ்சுமே முறிந்திடும் ரவிமதியி தாண்டையே. 

பாடல் எண்:- 1766
சரிசமன் மருந்தின தயிலம்விட்டு ஓர்தினம்
வருந்திடு மருந்திதை மயனமாய் வருதலால்
பிறந்திடுவ தேதுகாண் பிரகாசமாய் மெழுகதாம்
மருந்திதைச் சிமிழினில் வருந்தியே துதிப்பரே. 

பாடல் எண்:- 1767
துதித்திடு மாடாதோடை சுரசமா மதிலிதை
விதித்திடுந் துரையின் விளங்கிடீர் பிரமாணமாய்
மதித்திடுங் கனப்பிரளி மாந்தமோ டிசுவதும்
கெதித்துவோ டிபுக்கிடுங் கெணிதமூன்று நாளிலே. 

பாடல் எண்:- 1768
சுரங்கள்சன்னிதோசமும் கிணங்களள்ளுங் கிராணியும்
சுவாசமும் சீரணமும் பசாசுபூத மோடிடும்
திரமானந்த கக்கல்விக்கல் சோகைபாண்டு வீக்கமும்
சுரங்களேழு மோடிடுஞ் சுரசமிஞ்சி யாண்டையே. 

பாடல் எண்:- 1769
கடுகளவு தாகிடுங் கருதிடும் விழிதனில
விடுமுதல் தலைசனாம் விதித்திடும் பால்விட்டுமே
கடுகளவெ டுத்துமத்தி கண்கள் ரெண்டில் வீசிடப்
படும்வினை சுரங்கள்சன்னிப் பத்துமூன்று மேகுமே. 

பாடல் எண்:- 1770
சுத்தவா னறிவதிந்த சூக்ஷமாங் குழம்பதை
வித்துவான் வயித்தியன் மிகுத்தபண்டிதர்களும்
கற்றிடுமெய்ஞ் ஞானிகள் கனத்தயோக வாசிகள்
வித்துவா னிவர்களுக்கு மேலெவர்க ளில்லையே. 

பாடல் எண்:- 1771
வாதபித்த சேத்துமத்தின் வாறறிந்த பண்டிதர்
சூதவிதத்தை வாசியோக சூட்சமத்தைக் காண்கிலீர்
வாதமூல நாடிகாண் மதியும்பித்த வாரிகாண்
நாதவிந்து வாகியும் நடந்தவாறி தாண்டையே. 

பாடல் எண்:- 1772
வாதமா வதும்புளி வருவும்பித் தம்வாருதி
சூதவிந்து நாதமுண்டு தேறிடும் வயித்தியர்
பூதமஞ்சுஞ் சேத்துமம் பொறிபுலன் மூலாக்கினை
வேதசார மூலமும் விளங்கும்பண் டிதர்களே. 

பாடல் எண்:- 1773
இசைந்தநாத மூலமு மெழுந்தவாறு காண்கிலீர்
எழுபத்தீ ராயிரத்தி லேகபோக மாகுமாய்ப்
பசைந்துமண்ணுந் தண்ணியும் பலிதமாயி தாகவும்
இசைந்தபண் டிதர்களே யெண்சாணு டல்சமைந்ததே. 

பாடல் எண்:- 1774
மூலாக்கினை யிருந்தெழுந்து முச்சுடர்க ளானதும்
முப்பாழ்கடந் தெழுந்திருந்து முனைசுழி யறிந்ததும்
காலாக்கினை யிருந்தெழுந்து கற்பஞ்சா தித்தப்புறம்
மூலாக்கினை முடிவில்நின்று முத்திசித்தி யாகுமே. 

பாடல் எண்:- 1775
கால்கள்பன் னிரண்டுமூலங் கைகள்பத்து ஆறுமே
கால்கள்பன் னிரண்டுநாலும் கட்டிடுங் கழிவிலா
கால்களு மிருந்துமூலா தாரமுங் கதிரொளி
கைகளுங் கலையிரெட்டுங் காணுஞ் சாரகாரமே. 

பாடல் எண்:- 1776
சாரகாரம் ரெண்டதுஞ் சரமாறியேற் றவல்லிராய்ச்
சாரகாரமும் பொருந்த சண்டனில்லை யில்லைகாண்
சாரகார வீரபூரஞ் சந்திரசூரி யர்கள்தான்
சாரகார மாறமாறச் சத்துஞ்சித் தானந்தமே. 

பாடல் எண்:- 1777
இந்தஎண்சாண் தேகமா யிரவி மதியுமாய்
இராவுடன் பகலுமாய்ப் பகலுமே யிராவுமாய்
இந்திர னிரவியு மென்னுக்கு ளேயறிந்தபின்
இந்திர னிரவியு மிராப்பகலு மில்லையே. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1778
இருவினை யொழித்து இந்நூ லிருள்தனையகற்றிஞானக்
கருவியை நீற்றி நீராய்க் காலனையெரித்து மேலும்
வரும்பெற கெதிக்குள் வாசி மருவியே யமுர்த முண்டு
அருந்தவ ஞான சோதி யருளில்நின் றர்ச்சித் தேனே. 

பாடல் எண்:- 1779
திருவுரு நடன சோதி தெய்வநா யசனா லிந்நூல்
வருமதி ரவியி னாலு மாய்கைபோய் மவுன முற்றுக்
கருக்குரு தானாய் நின்ற கடவுளின் கமலந் தன்னில்
துரிதமாய்த் துரியா தீதஞ் சொர்க்கவாழ் பதவி சேர்ந்தே. 

பாடல் எண்:- 1780
அதிவித மாயா சத்தி யம்புவி தனிலும் யாவர்
துதிசெய்து பணிந்து போற்ற சுகாதித மறைப்புண் டாகி
விதியிந்த செய்கையாலும் விட்டதோர் குறையி னாலும்
மதிரவி யொளியி னாலும் வாசியில் மகிழ்ந்தே னாண்டே. 

யோக நிலை
(தரு)
சித்திரவிசிதரத்தினதிவ்யஅமிர்தமே- செழுந்
தேனருவிபாயுஞ்சிரோரத்தினதீபமே. 
பாடல் எண்:- 1781
முத்தமிழமிர்தசிவஞானசுரூபி- செக-
மோகனவாலாம்பிகைபுவனாம்பிகையரூபி
சத்திசிவசாம்பவிசடாக்ஷரிகமலஞ்- சர்
வேஸ்பரிசெகதீஸ்பரியெனைத்தற்காக்கவேணும்
வித்தியாதாரணிசர்வாணிவேத- நாயகி
மெய்ஞ்ஞானிகள்பூசித்துத்தரிசித்துமேபணியுஞ்
சுத்தபரிபூரணிசுகாதீதஅன்னமே- சுழி
சூக்ஷசடாதாரப்பிரணவசோதிமுன்னமே- சித். 

பாடல் எண்:- 1782
சூரியசந்திரகாந்திமின்னலொளியே- தூல
சூக்ஷகாரணப்பிரகாசச்சொர்னவொளியே
வாரிசூழமிர்தபானமாமதுரமே- திரு
வள்ளுவன்சொற்பதவிவாழ்விக்கவருமே
துரியதுரியாதீதமும்வாசியும்பாயும்
சுயம்பிரகாசதீபசுடர்சோதிகாணவும்
தேறியபெரியோர்பாதஞ்சேர்வைசெய்யவுந்- திரு
நடனகாரசாரசெய்கையாண்டையே- சித். 

பாடல் எண்:- 1783
வாசிவாசிவயநமவங்கென்றூதியே- வாசு
வரவழைத்துவாய்வுபத்துமாறியூதியே
தேசிகன்திருவடிதெரிசனம்பார்க்க
சிங்கென்றுகண்டதாரைகொண்டுதினந்தீர்க்க
நாசிநுனிமீதில்சுழிநடனசேர்வை- காண
நாதாந்தசின்மயத்தினருநாதனைப்பணிய
ஊசிமுனைமேலதிதவுச்சிகள்கீழுமுள்- மூல
கண்டதாரையாரையோகவாழ்க்கையே- சித். 

பாடல் எண்:- 1784
ஊதிடுங்கண்ட தாரையிலுங்கென்று- மூலம்
உள்ளுக்குள்ளவும்ரே சித்துக்கும்பியூதிடுந்தாரை
ஆதியானசோதிகண்டுஆராதனை- செய்து
அகண்டவெளிகாணுமந்திடத்திலூதவும்
பூதாதியைந்தும்பொருந்திபூரணமதிலுஞ்- சுழி
புருவமையநேரில்நின்றுபுகழுமம்பரமே
நீதியாய்ச்சதாசிவன்தன்நேசமிங்- காண்க
நீடுழிகாலம்வாழ்ந்துமுத்திநிலைபெற்றேன்காணும்- சித். 

(விருத்தம்)
பாடல் எண்:- 1785
சோதியாய் நின்ற தீபச் சுழிமுனைக் கமலந் தன்னில்
நீதியாய் வாசி யூதி நின்றொரு நிலையில் கண்டஞ்
சாதனை யோகஞ் செய்து தற்பரத் தருளைப் போற்றி
நாதனைப்பணிந்துமேன்மேல் நாண்மலிரர்ச்சித்தேனே. 

பாடல் எண்:- 1786
இருபத்தோ ராயிரத்து அறுநூறு சுவாசந் தன்னில்
வருங்கலை யொவ்வொன்றாக வாங்கித்தேய் பிறையில்லாமல்
அருங்கலை யாலுங் கண்ட அதிசய மனேக முண்டு
வருவதுஞ் சொன்னேன் மாண்பா மாய்கையில் மயங்கினாரே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1787
இந்த செனனமிருந் தென்னபல னென்னவிதம்
எந்தவித மாகிலுமே யீசனைக்கண் டேபணிந்தால்
வந்துலபித் தேவிடுங்காண் வாசியென்ற தும்பொருந்த
மந்திரமாய் நின்றசுழி வாசிவச மானதுவே. 

பாடல் எண்:- 1788
வாசியைக்கொண் டூதிகண்டமார்புநடு நேர்கீழ்மையம்
பூசிதய பாசமதில் பூரணத்தி லும்நினைவாய்
வாசிவா சிவயநமவா வென்றும்வி நாடிபத்தும்
நாசிநுனி தீபமதில் நான்பணிந்து நின்றேனே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1789
நமசிவய வென்று நாட்டத்தி லுமனம் நான்மகிழ்ந்து
அமைப்பதுவும் வந்து அணுகின தால்அவ்வும் உவ்வுஞ் சித்தி
இமையவ ராலு மிவ்வழி கண்டு இருப்பதுகாண்
இமைப்போதும் வாசி நிலைத்தத னால்நெஞ்ச நேர்படுமே. 

பாடல் எண்:- 1790
வாசியைக் கண்ட தாரையி லூதி மருவிமனம்
ரேசித்துப் பூரித்துக் கும்பித் துவாசி நின்றிடவும்
பேசிடும் பேசா திடமுனக் கெய்தும்பிர பல்லியங்காண்
காசிக்கும் ராமே சுரத்துக் கும்வாசி காண்கிலரே. 

பாடல் எண்:- 1791
நடப்புக் கெட்டாத நாதாந்த வாசி நாட்டத்திலும்
அடர்ந்தூதி கண்ட அகண்டம்பெரு வெளியம் மூலத்திலுங்
கடந்தந்த மூலக் கருக்குழி நாடிக் கழிந்துவிடா
துடர்ந்து வோங்காரப் பிராணாய வாசி தூக்கத்திலே. 

பாடல் எண்:- 1792
ஓங்காரங் கொண்டு வாசிகீழ் பாய உதாரணமாய்
நீங்காம லம்பிகை பாதார விந்தம்நிர்ப் பந்தமாய்
வாங்காமல் வாசி மேல்நோக்கி சாதனை வசப்படவும்
தேங்காமல் தேங்கித் திருச்சிற்றம் பலந்தனைத் தெரிசித்தேனே. 

பாடல் எண்:- 1793
எந்நாளு மிந்த வெண்சா ணுடலி லிருந்தவுயிர்
தன்னால் வளர்பிறை தசைபத்து வாயுவுந் தன்னுக்குள்ளே
முன்னாளில் விட்டகுறைவந்து சூழ்ந்து முடிந்ததுகாண்
இன்னாளி லைவரும் யானுமொன் றாகி யிருந்திட்டனே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1794
கற்பமத னால்முடிந்த காயசித்தி வீட்டினிலும்
உற்பகமா வாசியிருந் தோங்கினால்- கற்பமதால்
நவரத்தின வீட்டில் நாதனுமே யானுமாய்
அவரொருவ னாயிருந்தோ மாண்டே. 

பாடல் எண்:- 1795
அசைவுறுந் தாலல்லோ யைம்பூத மாச்சுதுகாண்
நிசவோடும் பாவனைபோல் நீஞ்சினேன்- அசைவதனால்
பத்துப் பனையுயரம் பாய்ந்துஅண்ட கோசரமாய்
நித்தநித்தம் வாசிகொள்ளு நெஞ்சே. 

பாடல் எண்:- 1796
வான்புவியு மாதல் மதியுப்பு ரவியதனால்
நானு மருள்பெற்று நான்மகிழ்ந்து- வானம்
நாலு பொருளறிந்தால் ஞானம்வந்து வாய்க்கும்
காலும்பனி ரெண்டளவால் காட்சி. 

பாடல் எண்:- 1797
ஈராறு மெட்டெட்டு மிரவி மதிகாணும்
வாறாக வாசிகொண்டு மாறினால்- ஈராறும்
கற்றோரே கற்றார் காயசித்தி பெற்றார்
வித்தால் விளைந்ததுகாண் வித்து. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1798
அருள்பொருளுங் காயசித்தி கற்பஞ் சொன்னேன்
அண்டமதில் நிறைந்துநின்ற கருவுஞ் சொன்னேன்
வரும்வினைக்குள் வல்வினையின் மாறல் சொன்னேன்
மதுரதமிழ் பொழியுமதி ரவியுஞ் சொன்னேன்
திருவுருவாய் நின்றிலங்குஞ் சிவமுஞ் சத்தி
திங்களின்சந் திரகாந்தி தேவ மாது
இருவினையை யகற்றியெனக் கமிர்த மூட்டி
யெனைவளர்த்த அபிராமி மூலந் தானே.  

பாடல் எண்:- 1799
மூலமெனும் வாசியொளி வான பீடம்
மூதண்டப் பிராணாய முனைமே லாகக்
காலனையுஞ் செயித்தகதிர் மதிநீர் சாரங்
காயசித்தி கற்பமிந்தக் கருத்தி னாலும்
ஆலவிட மமுரியினா லாண்டுக் குள்ளே
அதிதசுத்தி ஆச்சுஅப்பி உப்பி சாரந்
தூரவுடல் சூட்சமதும் பெலத்துப் போச்சு
துவாத சாந்தவெளி யறிய லாச்சே. 

(வேறு - கவி)
பாடல் எண்:- 1800
இந்தவாசி யெழுந்திடு மூலமும்
அந்தகார மப்புமுப்புங் கூடியும்
விந்தையாய்ப் பழமூலமு மூலமும்
வெந்துநீரால் வெடிசுண்ண மாதலால்
எந்தனாவி யெண்சா ணுடல்சுத்தியாந்
தந்தைவிந்து தரணியி லிட்டநாள்
அந்ததோர் குறைஅவ்வித மாகிடில்
விந்தினாலுடல் வேறுகூ றாண்டையே. 

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900