திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1001- 1100

பாடல் எண்:- 1001
முப்பொருளாய் நின்றிலங்கு மதியே விந்து
முறையான நிலவுப்புக் கடல் நீருப்பு
இப்பொருளாய்ச் சமைத்தவிதச் சுன்னம் வாங்கி
யிசைந்துகுளி கல்லதனில் நன்றா யாட்டிக்
கைப்பொருளென் றிதையறிந்து வீரம் பூரம்
கருவினிலும் புழுகுகுரு வண்டு நாபி
செப்பதித வகைவகைக்கோர் களஞ்சு கூட்டிச்
சிதையசம் பழத்தினிட ரசத்தால் மாய்த்தே. 

வேறு- கவி
பாடல் எண்:- 1002
மாய மாய மயன தாகிடும்
வாய்வும் வன்னி வருணனுங் கூடினால்
தேய தேயசெம் பொன்னிற மாயிடும்
பாய பாயபகி ரண்டம ளாவியே. 

பாடல் எண்:- 1003
நின்று நாடி நிகழ்த்த மயனமாய்
அன்று நாளுமன் னாள்முழு தாட்டினால்
கண்டி சாடிக ணக்கொரு வீதமாய்ப்
பண்டு ளங்கனி பார்க்கப் பழமதே. 

பாடல் எண்:- 1004
கடலுப் பாவது கடல்நுரை கட்டினால்
கல்லுப் பாவதுங் காணும கத்துகள்
செடல வுப்பு சிவகங்கை கூடினால் 
அவனீ மீதினி லஷ்டசித் தாடுமே. 

பாடல் எண்:- 1005
மாதுவா லைவா லாம்பிகை தன்பதம்
ஏது நாதமு மேகத்தின் வாறுகாண் 
ஊதுந் தாரை யுயிர்காண முரியால்
வாத முன்னெதிர் வந்தெதிர் நிற்குமே. 

வேறு- கவி
பாடல் எண்:- 1006
வெண்மதிநிலவுப்பையறிந்திடும்
வேகமென்னவிதுவீரசுன்னமாம்
நண்பெறுமெழுகேவழித்தங்ஙனே
நாடிபில்லைரவியினில்காய்ந்ததால்
அண்ணல்தன்பதமர்ச்சித்துவட்டியில்
அடியிருக்கமேலோடுதன்மூடியும்
மண்ணதீதமண்சீலைமண்ணேழுமே
வண்ணியாங்கதிர்வாலையில்வைத்திடே. 

பாடல் எண்:- 1007
வைத்துச்சாவல்புடம்போட்டெடுத்துடன்
வானில்குப்பிருவந்தியத்திற்குள்தான்
சித்துவாதச் செகவசியம்மதாஞ்
சீனச்சரக்கறுபத்துடனாலதும்
பற்றுமில்லாப்பளிங்கதுபோல்நிறம்
பாரும்பாரும்பரீட்சைதன்வேதைகாண்
கற்றுமுப்பொருள்காட்டினார்நூல்வகை
காணாதொன்றுங்கருதினேனாண்டையே. 

பாடல் எண்:- 1008
ஆண்டுநூறுமடுத்தென்னபாக்கியம்
ஆயிரத்தைந்நூறில்வாறுகாண்
கண்டுநூல்கள்கல்லுப்பறியாமலும்
காணுங்காணாகருத்தழியார்காண்
மண்டலம்வலிவோடுதிரிந்ததால்
வண்டர்காணும்வகையறிந்தாரில்லை
ஒன்றுமொன்றுஉருவறிந்தாலல்லோ
ஓகோஓகோபாருமுனதருளாண்டையே. 

பாடல் எண்:- 1009
வான்புவிகடல்மண்ணும்விண்ணும்மது
ஏனதுக்கிதுக்கேவல்செய்யும்மதாம்
நானருள்ஞானவெட்டுக்கெதிரொரு
நாடியாடியநான்மறைநூல்களும்
பானுமாலிபரையென்றறிந்திடார்
ஞானமோதுவர்கியானசுகாதீதம்
மானுபாவரெனுஞ்சிவமுத்தர்கள்
ஆனதால்நற்பொருளறிந்தோதினார். 

பாடல் எண்:- 1010
முப்புமுப்புவென்றோதியநூல்கள்தான்
அப்புமப்புவென்றாரறிவார்களோ
செப்பினார்பதினெண்பேர்மகத்துக்கள்
தப்புமோசுத்தசாகரநீரெலாம்
அப்புவினருளான அவ்வாறினால்
கைப்பையேகளிம்பற்றுக்கசடறும்
இப்புவிஜெகவீணாசைகொண்டுவர்
கைப்பையுண்டுங்கருத்தறியார்களே. 

பாடல் எண்:- 1011
வாரிவாரிமகராசமாவதால்
நீறிடும்நவலோகமும்ரத்தினம்
தேறுந்தேறும்வெண்வங்கமொருபலம்
சீரதாய்முப்புசுன்னங்களஞ்சிடை
சாரிசாரிசாரித்துநீறதால்
ஆரபாரமதின்கீழ்மேல்பூசியின்
நீறிநீறியநீற்றினமாகிடும்
ஆறியுங்கதிர்வாலைரவியதே. 

பாடல் எண்:- 1012
அந்தரத்தலர் தாமரைமூலிதான்
அங்ஙனே அரைத்தங்கியும்பூட்டிமேல்
இந்திரக்கவசங்களுஞ்சீலைமண்
ணேழுஞ்செய்துஇரவியில்வைத்தெடுத்
தந்திரப்புடங்குக்குடபுடமாமதில்
அந்தவங்கமதிநிறவெண்மைதான்
சந்திரனொளிபோலும்பிரகாசமாய்
விந்தையாமிதுவெள்வங்கம்நீறுமே. 

பாடல் எண்:- 1013
நீற்றினால்நவலோகமுநீற்றிடும்
நேர்மைநேர்மைநிகரிதுக்கொக்குமோ
சாற்றினார்குருவெள்வங்கச்சுன்னமாம்
தாம்பிரபற்பஞ்சாஸ்திரவேதைகாண்
சூத்திரமிதுசொன்னாரகத்தியன்
தொட்டதெல்லாந்தொடுகுறியாமிது
பார்த்துபார்த்துப்பலபேர்மயங்கினார்
பாடுபட்டால்பலனுண்டுஆண்டையே. 

பாடல் எண்:- 1014
இந்தசுண்ணமெடுத்துக்களஞ்சிடை
யெந்தெந்தசரக்கெல்லாமிசைந்திடத்
தொந்தங்கோடி தொடுத்துமிழ்நீரதால்
அந்தந்தசரக்காவதுமோர்பலம்
அந்தமாய்க்குழைத்தந்தசரக்கின்மேல்
இந்தப்பாகமிதுகவசஞ்செயில்
கந்தப்பூமலரம்பிகைப்பொற்பதம்
சிந்தைவைத்துத்தெரிசிந்துப்போற்றிடே. 

பாடல் எண்:- 1015
பூரணச்சந்திரன்போலொளிவீசிய
தாரணைத்தசதீட்சைதவறிடில்
காரணக்குருகண்டுமகிழ்ந்திடும்
வீரியத்தாதுவும்விந்துகட்டிடும்
காரியமாஞ்செந்தூரத்திற்காயமும்
தேரிடுமொருதிங்களுணர்ந்ததால்
மாறமாறமதியமிர்தம்மதுசேரச்
சேரச்செந்தூரமொழிவதே. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1016
முத்துடன் பவளம் பச்சையும் வயிர
முழுவயி டூரியங் கெம்பு
முற்பகப் புஷ்ப ராகமு மிவைகள்
முதிர்ந்திடா மரகதத் தோடு
சத்தெனு மஷ்டரத்தின மிதுகாண்
தனிவகை யொவ்வொன்று பலந்தரன்
தரணியில் வேதை சத்துக ளிலகுஞ்
சந்திர னுப்புவா லதிதம்
விந்தெனுங் குளிக்கல் தனிலுமொவ்வொன்றாய்
விளங்கிடு முப்புவின் சுன்னம்
இதுபண விடைகொண் டருள்பெற அமுரி
விந்துநீர் தனிலிரு சாமம் 
கற்றவர் கமல பொற்பத மடியேன்
கருத்தில்வைத் தர்ச்சனை செய்து
காரண குருவின் கடாக்ஷமும் புரியக்
கனகவே தையுமருள் கூர்வாம். 

பாடல் எண்:- 1017
கனகவே தையுமா மெழுக்கதின் பதத்தில்
கண்டிடை வழித்துயில் லையதாய்க்
கருணைகூர்ந் திலகுங் கதிர்முகம் படவும்
காய்ந்ததை வட்டியில் தாக்கி
வினவிதைத் தனைமேல் மூடிச் செய்கை
விசிதமாய்ச் சீலைமண் ணேழு
விக்கிர மாய்ரவி தன்சுவாலை யில்வைத்து
மிகுபுட மைம்பது எருவில் 
தனமிது வெனுமே புடமெனு மாறித்
தளையெடுத் தனுக்கிரகம் புரியச்
சத்துமுத் ததனில் தந்திர னொளிவாய்ச்
சங்கற் பமில் லாமலே
இனமதா யிலகு மிதுயுவ ரசமா
மெடுத்துட னுருக்கினா லுருகும்
எவர்செய லிதுகா ணமைப்பிருந் ததனாற்
செய்திடு மினியுரைப் பதுவே. 

பாடல் எண்:- 1018
செழுங்கன லொளிவா மழகுதன் விசிதஞ்
செழித்திடும் பவளமோர் பலமாய்த்
தெளிந்தநற் கலுவ மதனிலிவ் வகையைத்
திருத்தமா யூட்டிமென் குருவில்
அழுந்தமுன் னிடைகொண்டமுரிவிட் டாட்டி
யருளிரு சாமமவ் விதமாய்
அதைவழித் திலது மெழுகுபோல் வருத
லருமு கம்பட வருளியே
தெளிந்ததோர் வட்டி யதினதை யூட்டிச்
சிரமுடி மேலதாய் மேவிச்
செய்கைமண் ணேழு சீலையுந் திரமாய்ச்
செப்பிடில் சந்தது மிசைவாய்
விடமெலு மருணன் கனவில்தாக் கிவிளங்
கிடீரெரு வுமன் பதனில்
மேலதாய்ப் புடம்போட் டியல்புசத் திறங்கும்
வெண்ணிற மதியொளி யிதுவே. 

பாடல் எண்:- 1019
ஜெகமெலா நிறைந்த வடிவழ குடைய
திருமலர்க் கமலபொற் பதத்தில்
சீஷனென் றடியேன் சாம்புவ னெனும்பேர்
தெக்ஷணா மூர்த்தியின் செயலாய்ப்
புகழ்விளங் கதிதம் ராஜரத் தினமாம்
பூமவர் பச்சையோர் பலமாய்
புரையில்லாக் கலுவ மதனிலிட் டுபமாய்ப்
பொற்குரு பணவிடை ரூட்டி
அமலர் வீசு மதியொளி விளங்கு
மமுரிவிட் டாட்டிரு சாமம் 
அதிதமா மெழுகு பதமெனும் வருத
லதனையே வழித்துபில் லையதாய்
உகையதாய்க் கதிர்தன் முகம்பட அனலி
லுணர்ந்தெடுத் துடன்வட்டி யதனில்
உபமதா யடங்கி மேல்மூடிச் சீலை
யறுத்தமண் ணேழுசெய் விதமே. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1020
அதிவிதிக் கதிர்தன் னொளிவதும் வீசு
அருணனில் முகம்பட அருளி
அனுக்கிர கம்புரிய ஐந்துபத் தெருவி
லக்கினி யனலது மூட்டி
துதியகத் தீசர் மலரடி பணிந்து
தொழுதுடன் தோத்திரஞ் செய்து
தொடுத்தன லாற்றிப் பசைந்தசத் தளவின்
சுகாதித மெனுஞ்சொல்ல எளிதோ
உதித்தசத் தொளிதா னுவரச மிதுபே
ருலகினில் நிலவதுக் கதிதம்
யோகியாய் ஜெனித்து யோனிதன் வழியி
லுற்பவித் தமைத்தவ னொருவன்
விதிதன்விந் ததனால் தந்தையுந் தாயும்
விரும்பிசை யோகத்தி லமிசை
விளங்குவார் பெரியோ ரிவரிருப் பிடமே
வீடுவந் துரைப்பது மேலோ. 

பாடல் எண்:- 1021
சுகாதிதஞ் சொலவும் ராஜரத் தினமாஞ்
சுடரொளி யிலகிய வயிரம்
சுழிமுனை யிலகு மதியனு மதின்பேர்
துகையுள திதுவடி வுளதாய்ச்
செகாதீத மனைத்து மடி பணிந் தொழுது
திருவுள னாயன்ற னருளால்
தேவரா யுதிப்ப தரிதரி துலகில்
சித்தராய் ஜெனிப்பது மரிது
தகாதுல கதித மனிதராய்ப் பிறந்து
தரித்திர அமிசையி லழுந்தித்
தந்தையாய் செய்கை பூசாபல யோகஞ்
சற்குரு பயனிவை தவத்தில்
யுகாயுக மளவு மனித்தியந்த தினந்தின
மொழிகுவ முலகினில் வாழ்க்கை
உடலுயிர் வளர்த்தி நாதவிந் துளதா
யொருவனே யுலகெலாம் படைத்தே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1022
வயிரமொரு பணவிடைகாண் கலுவத் திட்டு
மகத்தான குருவில்பண விடைதா னூட்டிச்
சயிலமெனு முதகமாஞ் செயநீ றாகும்
தனைவிளங்க மதியமிர்த சலத்தா லாட்டி
அயிலவிது அறிவாரோ ஆண்டே கேளீர் 
அதுமெழுகு போல்மயன மதுகா ணெய்தல்
குயில்மொழிமா தம்பிகைப்பெண் குறித்துச் சொன்ன
கூறதனா லிருசாமங் கூர்வ தாமே. 

பாடல் எண்:- 1023
கூறினதோர் மெழுகெடித்துச் சதிரப் பில்லை
குறிப்பாகச் செய்துரவி முகத்தி லூட்டி
வீரியமா யிரவிசுட வட்டிக் கேற்றி
மேலொருதன் வட்டியது மிகவு மூடி
தெரியசந்து வாய்புதைந்து சீலை யேழு
செய்துகதிர் முகம்படவுஞ் செலுத்தி மேவி
நெறியுடைய வைம்பதெருப் புடத்திற் சந்து
நிகரில்லா வச்சிரத்தி னேர்மை யாண்டே. 

பாடல் எண்:- 1024
நிகரில்லாச் சத்துவி னொளிவோ கோடி
நிலைவதித் துய்யநிற மதியோ கோடி
சுகவதித வஜிகரவை டூரியச் சத்து
தொட்டகுறை யிருந்ததனால் சொல்வேன் காணும்
திகம்பரவை டூரியத்தில் பலமொன் றிட்டுத்
சிவகுருவின் பணவிடைதா னோக்கத் தாக்கி
அகமான அமுரிவிட் டிருசா மத்தில்
ஆடையிலு மெழுகுபத மாச்சு தாண்டே. 

பாடல் எண்:- 1025
கண்டுமெழு கெடுத்துசதுர் சீராய் வாலைக்
கதிர்முகவன் சுவாலைபடிக் கடிச தானால்
நன்றுதனி வட்டியிலி மடக்கி வட்டி
நடுமூடிச் சந்துமண் சீலை யேழு
அன்றிரவி முகம்படவும் ரவியில் வாலை
யைம்பதெருப் புடந்தனிலு மடக்கி வன்னி
வென்றுபுட மாற்றியெடுத் துடைத்துப் பார்க்க
மிகவும்வை டூரியத்தில் சத்த தாண்டே. 

பாடல் எண்:-1026
தரணிதனி லிதையறியப் பெரியோர் சொல்லச்
சாற்றினே னிதையெடுத்துப் பதனம் பண்ணிக்
குறைவதுவந் தெய்தாமல் குருவைப் போற்றிக்
கும்பமுனி திருவடியைப் பணிந்து யானும்
மறைவுகளில் லாமலிந்நூல் ஞான வெட்டி
வசனித்தே னாயிரத் தைந்நூ றுக்குள்
துறைகோடி முறைகோடி தொந்தங்கோடி 
தொட்டதெல்லாம் பலிதமெனுஞ் சொன்னாராண்டே. 

பாடல் எண்:- 1027
பூரணச்சந் திரன்மதியை விதிக்கப் போமோ
புஷ்பரா கத்தினுட சத்து நேர்மை
காரணத்தை மனதிலுன்னிக் கவலை நீக்கிக்
காசினியோர் செய்தொழிலில் கருதார் மேலார்
வாரண முனிவரெனுந் தெட்ச ணாயன்
வரத்தாலுந் திருவள்ளுவன் வசன காவியம்
சூரனெனு மதிவீர ஞான சிங்கம்
துரைசாமி பிரமசிருஷ்டி சூக்ஷமாண்டே. 

பாடல் எண்:- 1028
சூட்ச்சாதி சூக்ஷமெனும் புஷ்ப ராகம்
தூக்குமொரு பலமாகக் கலுவத் திட்டுப்
பட்சமெனக் களித்தகுரு பாதம் போற்றி
பரிகுருவில் பணவிடைகொண் டமுரி யாலும்
தட்சணமு மிருசாம மிடைவிடாமல்
சாதித்து ஆட்டிவழித் துண்டை யாக்கி
யிட்சணமுஞ் சதுரடைபோல் பதமாய் வாலை
யிரவிமுகம் படவுலர வெடுத்தா லாண்டே. 

பாடல் எண்:- 1029
வலுவான வட்டிதனி லடக்கி மேலும்
வட்டியது மேல்மூடி மண்ணுஞ் சீலை
விலுவாக சந்துமண் மேலு மூடி
வெகுவாலை ரவியதனில் விளங்க மேவிச்
செலவாகா தெருவதுகே ளஞ்சு பத்து
சிவந்தவன்னி மூட்டிகன லாறிச் சென்று
பெலமான சத்ததுதான் பேரியோ ராலும்
புவியிலமைத் தெவர்களும் புதுமை யாண்டே. 

பாடல் எண்:- 1030
சத்துகளின் சித்துஅறு பத்து நாலும்
தமிழ்முத்துக் கொப்பான வெள்ளே டில்லை
கற்றவர்கள் பழிப்பவரோ கவிக்கொவ் வாதால்
காரணத்தை யறியார்காண் மற்றப் பேரும்
முத்தர்நவ சித்தமற் றுள்ளோ ரெல்லாம்
முனிவனெனப் புகழ்ந்தேத்து முதல்வ ரான
வித்துவா னாயுதித்தாற் கிடைத்த தேது
விந்துத்தோ னவர்செயல்வாழ் விதித்த தாண்டே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1031
ராஜரத்தின ரதிதான் ரத்தினத்தில்கோ மேதகமாம்
பேசவரி தோபெரிதோ பேருலகி லாரறிவார்
தேசமதி லுமனந்தஞ் சென்னிதனி லும்பலங்கொண்
டாசைவைத்துப் பாடுபட்டா லாண்டேய ரைப்பதுவே. 

பாடல் எண்:- 1032
பாரிலிருந் தேயுற்ற பண்டிதரே யுங்கள் புத்தி
தாரிகளி லேமயங்கி தாபந்திரி யப்படவோ
நாரியர்தன் கையிலகப் பட்டபுலி பூனையைப்போல்
ஊரி லிருக்குநரி யுபாயமதாய் வாழ்ந்திடுமே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1033
கலைபரவு மம்பிகையே வாலை தேவி
கருணையெனக் கருள்புரிந்த காட்சி யாலும்
வலுத்தன்னிக் கலுவமதில் மருவு முப்பு
வகையதனி லொருபலங்கொண் டமுரி யூட்டி
நிலைத்துவிடு மயனமெழு கதுபா கத்தில்
நிகழாமல் சதுரடையாய் நிகழ்த்தி வாலை
கலையதுவுமுருகிபனி ரெண்டு மோடில்
காந்தியொழி படவும்ரவி கடிச தாண்டே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1034
கெடியான வட்டி கனிலூட்டி மேவிமேல் மூடியதும்
அடியான சீலை வழுவேழு செய்து அருணன்முகம்
படவும் படமொரு அஞ்சுபத் தோர்புட மாறியபின்
தொடவு மதீத கோமேத கச்சத்து சோதிப்பதே. 

பாடல் எண்:- 1035
மரகத வாலைப் பரிபூர ணத்தின் மலரடியில்
வரமே யளித்த குருமுனி பாத மடிதொழுது
நிரமே மரகதம் பலமொன்று பார்வை நிகந்தருவீர்
சரமே வியபதங் கலுவத் தினிலிட்டுத் தாபியுமே. 

பாடல் எண்:- 1036
சற்குரு விந்து நாதமுங் கூடிச் சருவினதால்
வற்கமும் பொருளின் பணவிடை கூட்டி மதியமிர்தம்
முற்க மதாக விருசாம மாட்டி முன்பதமாய்
உற்கந்த விர்ந்து சதுரடை செய்து உலர்த்திடுமே. 

பாடல் எண்:- 1037
கதிர்கோடி வாலை ரவிசூடு பட்டுக் கடிசதுவாம்
பதிமேவி வட்டி மேல்மூடி செய்து பாகமதாய்
மதியேழு சீலைமண்பூசிப் பின்பு வைத்துப்பதம்
மிதமேவு வைம்ப தெருச்சூடி யேவன்னி வீசவுமே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1038
மரகத மாஞ்சற்று வானி லெழுமில்லை
திரமிதுகாண் பதனமிது செப்பினோம்- மரகதத்தில்
ஊரினி லுண்டாய்ந்து உத்தசெய்தி பாடுபடச்
சாரிவர லாங்கடல்சூழ் தான். 

பாடல் எண்:- 1039
மாலின்திரு வாலிலகு மாதவத்தோர் கண்டறிந்த
ஆலிலைமேல் பள்ளிகொள்ளு மாயுன்- மாலின்திரு 
அவ்வெழுத்தும் பேசு மறிவா லறிவறியும்
உவ்வெழுத்தால் வாய்மூடு வோம். 

பாடல் எண்:- 1040
நீலமா ணிக்கமது நின்பல மொன்றுவெடை
வாலைகுரு வெடைபணமாய் வாங்கி- நீலமணி
புரையில்லாக் கலுவமது பூட்டிவிருந் துச்சூட்டி
உரையமெழு சாமு முணர். 

பாடல் எண்:- 1041
மயன மெழுகு மதியமிர்த நீரூட்டி
வயதுகுறை யாதிடைக்கு வன்னி- மயனமெழு
சதிரிடைபோ லிலசூந் தனிக்கதிரோன் தன்முகத்தில்
பயமதுகாண் வாராது பார். 

பாடல் எண்:- 1042
மண்வயிர வட்டி வைத்துமேல் வட்டியதும்
நண்பதிதண் சீலை நாட்டி- மண்வயிர
ரவியில் முகம்படவு நன்னயமா யைம்பதெரு
திரவியமா வன்னியதுஞ் சேர். 

பாடல் எண்:- 1043
மாறிகன லாற்றி மாறிசத்து நீலமணி
கூறுமா ணிக்கமதுக் கொவ்வாது- மாறுகனல்
விந்துநவ சத்து மிகவு மொருசுரூபம்
வைத்துகுரு பணவிடைகா ணாண்டே.

பாடல் எண்:- 1044
அமுரியுடன் றேங்கு அதுபத்துக் கொன்றுயிடை
கமுரியுட னாட்டிக் கருங்குகையில்- அமுரியுடன்
கதவான சத்ததற்குக் கருமயம் ரேசித்துப்
பதனங்கு கைமுக்கால் பார். 

(வேறு- கவி)
பாடல் எண்:- 1045
ஓடுகுகை சீலைவயல் காடுகளின் தோறும்
நீடுமிரு வஞ்சுகர கால்களதின் வாறும்
தேடுநில மண்வளைகல் தோறுமெடு மூடி
கூடுகுகை சந்துபிசைந் தாடும்ரவி சூடே. 

பாடல் எண்:- 1046
கொல்லனுலை யில்லம டக்கமிக வூது
வெல்லலாமி தற்குவித மூன்றுவிசை யேற்று
வல்லமையி தற்குவடி வானநவ ரத்னம்
சொல்லவெளி தோவதனின் சூட்சமறி வாரோ. 

(வெண்பா)
பாடல் எண்:- 1047
சூக்ஷமிதுக் கின்னஞ் சுகாதீதமாய்ப் போசனங்கொள்
வாசமலர் வீசும்வச்சிர தேகம்- சூக்ஷமிது
பச்சைமா ணிக்கம் பருமணிபோ லுண்டையதாய்
வைச்சபொரு ளாண்டே வயசு. 

பாடல் எண்:- 1048
பச்சையிது ரத்னம் பட்டவெளிப் பிரகாசம்
சத்துஎம ரசமிதுகா ணாண்டே- சத்ததுவும்
ஆற்றது காண்களிம்பு அறுபத்து நாலுமது
சேத்ததுகா ணமுரியினால் சீர். 

(வேறு- கவி)
பாடல் எண்:- 1049
சத்துநவ ரத்னமிது எத்ததுமு டைத்து
வித்துகுரு சுன்னமது வீரமணி கூட்டி
யெத்தது மதிப்பிறையின் விந்துநீரி லாட்டி
ஒத்தொரு விநாடியினி லெத்தகுகை யாண்டே. 

பாடல் எண்:- 1050
ஊதியெலி காரமிட வூதவுரு குங்காண்
வீதமொரு கிண்ணிகுகை யேழுமேழு கூட்டி
வாதிகரு மூடிகரு மண்ணதுவி னாலும்
தாதுவடி கட்டிவருஞ் சத்துமிது வாண்டே. 

பாடல் எண்:- 1051
கிண்ணமதில் சூதமொரு சேருவதி லூட்டி
வண்ணதிரு மேனிரசம் வாங்கியதில் சேர்த்துக்
கொண்ணைசரக் காமதுவி னாலுங்கடை யச்சேர்
வெண்ணிறம தாகிரச வெண்ணெயது வாமே. 

பாடல் எண்:- 1052
வெண்ணெயில்வெங்காரமிடவிராகனிடையூட்டிக்
கண்ணின்மணிபோலவுங்கருங்குகையிலிட்டுக்
கிண்ணியதுவேகம்படரத்னமிதுதங்கம்
மண்ணினுடகரவலரைவாள்பகர்வாளாண்டே. 

பாடல் எண்:- 1053
மூசையிலடக்கியுமிமேலுங்கரிதாக்கி
ஓசையிடவூதியிடுஉண்மையிதுகண்டாய்
வாசமலரம்பிகைவாலாம்பிகையைப்போற்றி
வாதரசசூதமணிவாலையருளாண்டே. 

பாடல் எண்:- 1054
இம்மணியும்பாலிலிடஎண்விதநீர்வாங்கும்
அம்பலர்கடாக்ஷமதுளாயிரத்தெண்மாற்று
சம்புதிருவள்ளுசதாசாம்பவனுமாகில்
அம்புவியில்வாதிகளறிந்துவருகாணேன். 

பாடல் எண்:- 1055
காரியெனும்வங்கங்கருவங்கமதுசேர்தான்
வாரியயச்சட்டியிடுவட்டியதுமூடி
நாரியர்சுரோணிதமதாகுமுருவீரின்
சீரியரசத்தையிடுசேருக்கொருபலமே. 

(வேறு)
பாடல் எண்:- 1056
வங்கசல நீரருவி யூதிவிட வுருகும்
வாங்கும்ரச சூதமணி வாலைரச மாகும்
ஓங்குமுனை குப்பியிலு றுத்திர வாதி
ஓகோபுவ னங்கள்மய லோகவய மாண்டே
யெங்குமதி தீபவொளி சூழுமுனை மீதில்
ஐங்கரன் பதக்கமல செங்கதிர் விலாச
மங்களமி வைதொழிலு ரைத்தபரி வேதை
தங்கரச வங்கமிது சாக்சியறி தாண்டே. 

பாடல் எண்:- 1057
வெண்மதிவெண் வங்கரச மேவுமயத் தாடி
வித்துஒரு சேருருக வெண்சாரணை மூலி
உண்ணும்ரச மோர்பலம் தாகவிடு வீர்காண் 
ஓடுருக ஆடிசல மோடியது பாயும்
கண்ணும்ரச வாலையது சூதமணி போமோ
டண்ணுவிடுஞ் சுத்தசல வெள்வங்கநீ றாலும்
கொண்ணுவிடு மேகுளிகை கோடிபரி வேதை
குப்பியில டக்கிரசங் கொண்டிடவுஞ் செய்யே. 

பாடல் எண்:- 1058
இந்தரச மாமதுவு மேமரச மாகும்
அந்தரச தேய்வுஇடை யயமதிரு பத்தும்
இந்தகுகை தன்னிலது நீரதுரோ லாகில்
அந்தமதி வங்கமோ வராகனிடை பூட்டே. 

பாடல் எண்:- 1059
ஊட்டியுமி யூதியெடு பத்தரையு மாகும்
ஓடுமிர சிதமெனு மொண்ணரையு மாகும்
காட்டியவெண் வங்கரச முப்பதொரு வஞ்சும்
காட்டையில் வராகனிடை கனகமது வாண்டே
ஏட்டினில்வி திப்பதனு போகியரு ளாலும்
எட்டியிது பத்தரையு மேருமய மாகும்
நீட்டிடுங்கா ரீயசல சூதரச வேதை
நாட்டினிலு முண்டுரச நன்பரிசப் புகையே. 

பாடல் எண்:- 1060
புகைக்குஉமி சூதரச வங்கமிது கோரு
பொன்மயம் வராகனிடை போடுங்கரு நீரு
துகைக்குப்பதி னாயிரம ணங்குஇடை தேய்வு
சூட்சமிது சூதமிது சூதமிது சொன்னேன்
நகைக்கரச வாதமிதுக் கேவலது செய்யும்
ராஜர்களு நாடுமகிழ் நாமிவர்க்க வைத்த
வகைக்குநவ லோகபரி தங்கமய மாகும்
புகைக்குநிக ருண்டோசெய பூபதிகா னாண்டே. 

(வேறு)
பாடல் எண்:- 1061
கிண்ணமதி லன்னமொடு ஆவினமிர் தங்கள் 
அன்னமது சுவையுமொடு அதிதவகை யெல்லாம்
இன்னவகை யுள்ளசட மென்றனநிற மாகும்
வர்னபரி தங்கவொளி சொன்னேன்தொழி லாண்டே. 

பாடல் எண்:- 1062
அமுரியிதி லுண்ணசட மாக்கையழி யாது
அமிர்தவெளி மதியுங்கதிர் வழலையதி னாலும்
அமிர்தரச பானமுறு காயம்பெல மாகும்
அமுரிரவி மதிதரச வேதையொடு வாமே. 

பாடல் எண்:- 1063
கற்பமதி லுண்ணசட சொற்பமது வல்ல
விற்பகவி னோதரச பானதி னாலும்
உற்பகந ரம்புதச நாடிவலு வாகும்
இப்பொருள றிந்தவர்கள் கற்பனைசெய் வாரே. 

பாடல் எண்:- 1064
அக்கினிமி குந்துவள ரந்தமது கோடி
திக்கினில்சித் தாதிகளுஞ் செய்கையுணர் வாரோ
கைக்கினியி தற்குமணி மந்திரம றிந்தால்
அக்கரையுந் தாண்டியனுக் கிரகம்பெறு வாரே. 

பாடல் எண்:- 1065
முப்புவும றிந்துவுரை தப்புமோகை பாகம்
இப்படியு டற்குறியுஞ் செப்பிடுஞ் சாஸ்திரம் 
சொற்படியு ரைத்ததிரு வள்ளுவனு ணர்ந்த
இப்புவியி லும்மறிவ ரெந்தனுரை யாண்டே. 

(வேறு- கவி)
பாடல் எண்:- 1066
ஆட லாங்கட லுப்புவி னால்ரசம்
காடெ லாமுடல் காந்த மலரினால்
ஓடெ லாம்ரச வாதிகள் தேடினும்
வீடெ லாம்வெளி வேதைக் குருவதே. 

பாடல் எண்:- 1067
உப்பென் றாலுரு வானஉப் பேதுகாண்
செப்பி னார்தெட்ச ணாய னருளினால்
கைப்பு மாறிக் கடல்நுரை கட்டியும்
வைப்பு காண்கடல் வாரிக்கல் லுப்பதே. 

பாடல் எண்:- 1068
காந்த மாமலர்க் காட்டினி லுப்புகாண்
ஆய்ந்து பார்க்க அடிமூல சுன்னமாம்
மாய்ந்து மாய்ந்துவ ரும்புளி மாறினால்
தோய்ந்து அப்புவுந் தோய்ந்தது சொக்குமே. 

பாடல் எண்:- 1069
அமுரி யுப்புமப் பூவுங் கடசலம்
அமுரி யுப்புமடி மூலம் புக்கினால்
அமுரி யுப்புமம் மண்ணதில் பூர்க்குமாம்
அமுரி மூல மதிதசுன் னங்களே. 

பாடல் எண்:- 1070
காந்த மாமலர் கதிரெனுஞ் சூரியன்
ஆய்ந்து பாரு மதுபுளி மண்ணுதான்
சேர்ந்து தான்கட லுப்புவுங் கூடினால்
ஈந்து தானு மிதுநிக ரில்லையே. 

பாடல் எண்:- 1071
காடு காடுகா டென்றா லறிவரோ
காடு தான்கரு கண்ட மகத்துகள்
வீடு வீடுவீடென் றாலுன்னுக் குள்ளே
நாடு நாடெலாம் நாடித் திரிவதே. 

பாடல் எண்:- 1072
வறுமை யேன்வரும் வாதிக ளுங்களுக்
கருமை யில்லைகாண் கல்லுப் பறிந்ததால்
உருமை யாயரு வானக்கல் லுப்புதான்
சிறுமை யேன்வருஞ் சித்தர்சொன் னார்களே. 

(வேறு- கவி)
பாடல் எண்:- 1073
இடைபின்மேவுகலைசுழி
யிலங்குமதியிரவிசூழுமணிமுடியினில்
விடபரங்கிரியிலமிர்தஞானசுக
வெளிகடந்துஒளிமேவியான்
சடைமுடிமகுடமலர்பொழிந்தருளில்
சற்பரத்தினடிதொழுதுயான்
நிடதராஜயோகவாலைகுண்டலியி
னிருவிதாளடியைப்பணிகுவாம். 

பாடல் எண்:- 1074
மகிதலங்கருவூரிலகுநாடியல்புகழ்
வாரிசூழ்மதுரவேணியில்
அகிலமேவுகதிசந்திரபுஷ்கரணி
அமிர்தமாமதிதன்ரவிபதம்
பகிரதிகள்திருநடனபொற்கமல
பாதபங்கயமுநாடியான்
கெவனசூக்ஷசடாதரமேவிவளர்
கெதியில்நின்றுதொழுதேத்துவாம். 

பாடல் எண்:- 1075
மருவுஞானவொளிமதிவிளங்கு
மணிமலர்முடிக்கமலமீதினில்
கருவூர்நாடுதிருநடனகாயபுரி
கருணைஞானத்தமிழ்பொழியவும்
திருவருளமிர்தஞானவெட்டி
தெளிந்ததோதியாமுமிவைகூறுவாம்
இருள்விளங்குமனுக்கிரகசோதியரு
ளென்னூலின்மொழியையோதுவாம். 

பாடல் எண்:- 1076
பொதிகைமேவுமகத்தீசராலெனது
போதஞானதமிழ்வாக்கியம்
மதிவிளங்கும்ரவிசுடர்பதம்ரவி
மலர்பொழிந்துதொழுதோதினான்
விதியிருந்துமதிபாலுணர்ந்து
விழிசுழியறிந்துதமிழ்பொழியவும்
பதியஞானபரிபூரணத்தினடி
பாதபொற்கமலம்பணிகுவாம். 

பாடல் எண்:- 1077
சண்டமாருதக்குழம்பையானருள
சனகனாதிபலமுனிவரும்
அண்டர்கோனருள் பதினெண்பேர்
மகிமாயிரத்தைந்துநூறதும்
தெண்டிரையுங்கடல்மேருதோறுஞ்
சிவஞானசித்தர்கள்புகழ்ந்திடக்
கண்டிரோஜெகதிமானுகாலுடலில்
காயசித்திகுழம்பாண்டையே. 

பாடல் எண்:- 1078
தன்னைத்தானறியசண்டமாருதமுஞ்
சாம்புவனருளுஞ்சார்புவி
மன்னர்மண்டலிகராஜபூபதிகள்
மகிதலத்தினிலும்வாழ்பவர்
உண்ணுங்கற்பமதுக்கொன்றுகோடிபல
ஊழ்வினைக்குமிதுஅவிழ்தமாம்
வென்றிடும்வினையைவேதையாமிதனில்
வெகுபேய்ப்பிணிநோய்விடுவதே. 

பாடல் எண்:- 1079
மூலசுத்தியிதில்மும்மலங்களாறு
முன்னோர்சொல்லுங்கரிசாலைதான்
வாலையாகும்ரசவாதமும்வருதல்
வானோர்சொல்வதும்வல்லாரையேன்
காலைமாலையதுங்காரசாரமுணர்
காயசித்தியாங்கற்பமாம்
சோலைமலர்விலாசவாசமெனு
சூக்ஷசூக்ஷசடாதாரமே. 

சண்டமாருதக் குழம்பு
(தரு)
சண்டமாருதக்குழம்பிதுகாணுமென்னாண்டே- பிர
சண்டதேகமொழிந்தேவச்சிரதேகமாநன்றே. 

பாடல் எண்:- 1080
அண்டரண்டம்வானத்தளாவியமாமலைசூழும்- வேணி
அற்புதசந்திரபுஷ்கரணிதீர்த்தம்வாழும்- கதிர்
மண்டலண்டரண்டங்களுலாவியவாசி- மதி
மண்டலஞ்சூடியமாமலர்ஞானோபதேசி- சுழி
நின்றிலகுந்தென்பொதிகைவளர்தெக்ஷணாயன்- செகம்
நீடுலகும்புகழர்ச்சித்துபூசிக்குநேயன்- அருள்
கண்டுபொற்கமலபாதபங்கயத்தைநாடி- பிர
சண்டமாருதக்குழம்பையருளுவேன்தேடி- சண்ட. 

பாடல் எண்:- 1081
பரமண்டலமண்டரண்டங்களும்பேதித்துப்- போகும்
ராமபாணத்துக்குப்பின்னிளைப்போகாமலுஞ்சாடும்- சர
மண்டலங்கட்டியறுத்திடலாநதிவ்யஅஸ்திரம்- சார
காரத்தினாலறுத்துநால்வருமெம்மாத்திரம்- சுர
பாணத்தினால்மேகந்தீவுதீபாந்திரமேகும்சேத்துமந்- தொண்ணூற்றாறு
மொருபக்ஷத்தில்நீறியும்வேகும்- கரை
காணப்பிரசண்டத்தைச்சொல்லஉன்னால்வெள்ளேடில்லை
கர்மநோய்கள்துலைந்துவச்சிரதேகமாங்கல்லே- சண்ட. 

பாடல் எண்:- 1082
வெறண்டுங்காண்வினைஊழிபறந்திடுந்தங்கம்- மேகம்
இருபத்தொன்றுந்தூசிபோல்பறந்திடுஞ்சிங்கம்- வருங்
கண்டசூலைக்ஷயகாசமரோசிகங்குன்மம்- குத்தல்
மண்டையிடிமதுமேகமகோதரந்துன்பம்- வாய்வு
அண்டவாதமரையாப்புகர்ணிகமும்வயிறுநோய்
நெஞ்சுதொண்டைவலிதொடைவாழைபவுத்திரஞ்சுரநோய்- புகை
கொண்டுபுண்புரைகளண்டப்புற்றும்யோனிப்புற்றும்- குடல்
வாதங்கூனிவாதஞ்சந்தவாதங்கன்னப்புற்றும்- சண்ட. 

பாடல் எண்:- 1083
சூதங்கெந்தியரிதாரமனோசிலைபூரம்- கெவுரி
சூஸ்திரநாபியிருவிநிர்விஷம்லிங்கம்- பத்தும்
சோதியீரைஞ்சுவராகனிடைகொண்டுசிலை- கயிறு
தொங்கலிட்டுப்பாண்டந்தோளாந்திரமெனும்வாலை
அமுரிவிதநாலுக்கொன்றுமூலப்புளியெனுங்காரஞ்சினம்
வெங்காரம்பூநீர்வெடியுப்புதேனுப்புச்சாரம்- பான
வேதைஉப்புஅப்புவிந்துப்புடன்மேனியுருவிவளையில்
மேவுமீரஞ்சுவிசிதமறிந்தருள்போற்றே- சண்ட. 

பாடல் எண்:- 1084
லவணமீரஞ்சுமிடைசரக்கவ்விடைதூக்கி- சாரங்
கவனத்துடன்காரநீர்தெளிந்தேசன்னீர்தாக்கி- இன
மவுனத்துடன்காரசாரத்தில்நீறதில்மூட்டி- உப்பு
லவணத்தையும்பொடிசெய்துநாதவிந்திலூட்டி- பாகங்
கெவனத்திலும்பாண்டங்கேசரமாகவுஞ்- சாற்றி
வாலைபுவனையெனும்பதம்போற்றித்தோளாந்திரமேற்றிக்- கனல
கவனமதாகநீர்தொக்கிடவன்னியைத்தாழ்த்தி- சோதி
கமலப்பிரகாசஒளிவுவரும்பதமாற்றி- சண்ட. 

பாடல் எண்:- 1085
பார்த்துவரும்பதம்பாய்ச்சிப்பீங்கானதில்காரம்- பின்னுங்
கார்த்துக்கதிரவன்வேகம்படஒருவாரம்- இதை
சேர்த்துவைத்திடுஞ்சர்க்கரையைப்போல்வரும்பாகம்- மருந்
தேத்துந்தோளாந்திரமெடுத்துமேவிடும்வேகம்- ரசம்
வேற்றுமையில்லாமிகவுமேன்மேல்சுற்றிப்பாரும்- மெழு
கேத்துஞ்சரக்கதிதங்களனைத்துமேதேறும்- அருள்
சாற்றிமதிமலர்சற்குருமாமுனிபாதம்- வகை
நீற்றுஞ்சரக்குநிகரிதுக்குத்தொந்தபேதம்புகழ்- சண்ட. 

பாடல் எண்:- 1086
வாதமடக்கியுந்திப்பிலிசுக்குடனோமம்- வளர்
சீரகம்ரெண்டுஅரத்தைப்பறங்கிக்குரோசாணி- கடுகு
வீரம்வராகனிடைபொன்னிறமதாய்மேவும்- கனல்
நீதமதாய்ப்பதமாக்கசரக்கிதைவெதுப்பும்- பின்பு
பேதம்வராமல்பொடிபிலக்கநாட்டியிடித்து- ஆண்டே
சேதம்வராதெந்தன்செய்பதங்கள்வரமுடித்து- மேலும்
நாதவிந்துகருவூர்வளநாட்டினிலிலகும்- வேத
ஞானமொருநன்னூலாயிரத்தைந்நூறுமாய்ந்தோரிது- சண்ட. 

பாடல் எண்:- 1087
அதிமதுரங்கோஷ்டங்கடுகுரோகணிகடுக்காய்- சிங்கி
அக்கரகாரமாவாரையுங்காக்கணஞ்சிவதை- பிதுர்
துதியீரைஞ்சுமெடுத்துப்பொன்வறுப்பாய்த்தொடுத்துப்- பொடி
விதித்துவடித்துகஸ்தூரிகுங்குமங்காயம்- பச்சை
மதித்திடுங்குரோசனைவகையிதுமஞ்சு- மகிழ்
வதிகமொன்றுவராகனிடைவகைக்கொன்- றுளங்
கதித்திடுமுன்போலப்பொடியதுஞ்செய்துபாகம்- பதங்
கச்சூருந்திராட்சிபனைமட்டுந்தேங்காயின்கறியும்இவை- சண்ட. 

பாடல் எண்:- 1088
பொருந்துமம்பிகைப்பொற்கமலம்பதம்பணிந்து- வாளம்
மருந்ததைச்சுத்திவசப்படுத்திஅவ்வசையில்- பதம்
இருந்தமருந்துமிவ்வெடையைம்பதுவராகன்- நெடுந்
துருந்தமாகத்தொடுத்துச்சற்குருவைத்தொழுது- சுகம்
விருந்தமுன்மருந்தருந்திடுநூறுமாச்சு- பற்பம்
வராகனிடையசெம்புவெண்ணிறமாகவும்- பாச்சு
குருபுருவத்தினடுசுழிமுனைமலர்சொரிந்து- புகழ்
புனிதமாமெனுங்குளிக்கல்லதனில்பரிந்துசெய்கை- சண்ட. 

பாடல் எண்:- 1089
கோமட்டிமாதளம்பழத்தின்ரசம்விடுத்து- இணை
குறுக்கிடாமலுமூன்றுநாளாட்டிமயனம்- மெரி
யாமணக்கின்வித்தில்தயிலமாமதுமிறக்கி- அருள்
அத்தயிலம்விடும்பதமாயாட்டிடுமுன்போல்- இவை
பூமணக்குங்கருநொச்சிவெள்ளறுகுதுளசிபுனல்- கண்டு
பொற்கையான்வல்லாரைகரிசாலைபிரமி- சங்கும்
ஏமரசமெறிந்தெலுமிச்சம்பழரசந்தான்- இதை
பிணைவிடாமல்வகைக்குமூன்றுதினமருவி- சண்ட. 

பாடல் எண்:- 1090
வகைக்கொன்றுவிதமூன்றுநாளிராதுமூலி- செய்தை
வகையதாயுணர்முப்பத்தைந்துநாளாட்டியும்வழித்து- இவை
துகைகணக்கறிந்தொருமனதொன்றுசுகமாய்ப்- பின்னூந்
துன்பம்வராமலுமின்பசையோகவைராக்கியம்- மயல்
நகைநகைத்துமினுக்கிக்குலுக்கள்வாசம்- மேலும்
நாடிநாடிடாமலும்ராசயோகந்தனில்நேசம்- குரு
உகையிதற்குவாலாம்பிகைபாதமென்னோடே- தொழு
துள்ளங்கனிந்துடன்வள்ளலெனும்பதம்போற்றி- சண்ட. 

பாடல் எண்:- 1091
சண்டமாருதக்குழம்பைவழித்துச்சிமிளில்- ஏனஞ்
சார்வாய்வெகுபந்தனங்களடைவாய்நெற்பாண்டம்- மறை
மண்டலம்வைத்துவாலாம்பிகைபொற்பதம்பணிந்து- வரும்
வல்வினையூழிமகாசுரஞ்சன்னிகள்மாந்தம்- பாலை
தண்டிடுமுக்கல்பிரளியுமள்ளுடனிசுவும்- மிக
கக்கல்கறுத்தகிரகதோஷமுங்கவுசி- வலி
நின்றிடுமூர்ச்சையும்விக்கலுமேப்பமுமிரைச்சல்- உஷ்ணம்
வெறுப்புமதுப்புங்காக்கவலியதுங்கொறுக்கை- சண்ட. 

பாடல் எண்:- 1092
குமரகண்டவலியக்கினிமந்தமுங்குலைநோய்- குடி
கெடுக்கும்வாய்வினால்மூடிக்குக்கடிப்புப்பிடிப்பும்- இவை
திமிருடன்தசவாய்வுமெழுப்பிடுங்குழம்பு-கிண்டி
திப்பிலிசுக்குடன்மிளகுந்தேனைவிட்டரைத்து- அதில்
சமரசமெனுங்கூட்டிக்கழஞ்சிப்பிரமாணம்- உண்டைதனை
யதுக்குள்குழம்பிட்டுத்தாக்கிடுநோய்க்கு- ரவி
அமிழ்தமதுவெனுங்காலையில்நோயதக்கருது- மிந்த
அவிழ்தமூட்டிமுன்னம்வேம்புடன்பத்திரி- சண்ட. 

பாடல் எண்:- 1093
அகார உகார ஓங்கார மூன்றெழுத்தி- னாலு
மதமாகும்பிணிநோயகன்றுவிடும்படி- அதமாய்ச்
சிகாரவகாரநகாரமவ்வெழுத்தும்- செபி
தெளிந்துடநூற்றியெட்டுஓதிடு- முபமாய்
விகாரமதாகியநோய்கள்பறந்திடுஞ்சுகமாய்- விதி
மேவிஅவிழ்தம்விளங்கிடுமெஞ்சுநாளகமாய்க்- காலை
சுகாதிதசுகமொருவேளைகணக்காய்ச்- சொன்னோம்
தொழிலாளியானால்மணிமந்திரமெனுமவிழ்தம்- சண்ட. 

பாடல் எண்:- 1094
பிரசண்டமாருதபேதாபேதம்பிரித்தாண்டே- சொல்லும்
பெரியோர்வரப்பிரசாதகத்தாலிதுகண்டே- பிணி
குறைவாராதுகாண்பத்தியமுமிச்சாபத்தியம்- குலை
குலைந்துநோய்கள்போங்குணவல்லியமிந்தக்குழம்பு- பின்பு
திரையில்லாமலுஞ்சுக்குடன்திப்பிலிமிளகும்- வெந்நீர்
தினுசதைக்கொண்டுசுரசமாமதில்தேனுங்கிண்டி
பரவசமிதுஅவிழ்தமுங்கொண்டுபாய்ச்சி- பரி
பூரணமாகவுங்காலையிலஞ்சுநாள்முன்போலருள்- சண்ட. 

பாடல் எண்:- 1095
வாலப்பருவம்வருமளவில்வந்தகுன்மம்- மதி
மயங்கியுங்கடல்புக்கிடும்பாரிதுபரிட்சை- பின்னும்
மாலைப்பருவமதுநாலும்பத்துடன்சென்றால்- வஸ்து
பானத்திலுங்குழம்பெடுத்துக்கிண்டியிட்டுட்டி- இன்பச்
சோலைமறப்புடைகொசுவித்தேனதில்பாய்ச்சி- இந்த
சூலைபதினெட்டுக்குன்மமெட்டும்பறந்தோடு- சொல்லும்
வேலைவிழிமடமாதுசூதகத்தினோய்க்கு
மிதுவிடுமந்தப்பாகமேதினியோர்களுக்காமே- சண்ட. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1096
வேல்பொழியு மாது வின்பரச வாலையருள்
பாலுமெனக் கூட்டிமதி பானமிர்த மேயொழிய
ஞாலமெனு ஞானவெட்டி நன்னூல்விதி யாய்விளங்கும்
ஓலமிடு மம்பிகையை யுள்ளுணர்ந்து கண்டேனே. 

பாடல் எண்:- 1097
தேனரு பாய்ந்துசலங் தேங்குமடை யோங்கிவளர்
வான்பொழிய நாதவிந்து மார்க்கமிந்த வாறதனால்
நான்மகிழ்ந்து நோய்தனக்கு நாட்டிலனை வோர்க்குமிது
ஞானபண்டி தர்க்குவிள்ளும் ஞாயமிதைக் காண்கிலரே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1098
பதினாறு கண்ணி மதிரவி சூழும் பாடலையான்
விதிவாறின் மூல விவேகத்தி னாலறி விட்டகுறை
அதிவீர ஞானி திருவள் ளுவன்மொழி யவனிதனில்
நிதிமேவி யதன மளித்தாலு மிந்நூல் நிகழ்விலதே. 

பாடல் எண்:- 1099
கற்றாலு ஞானக் கருத்தறிந் தோர்கள் கமலபதம்
பெற்றாலுஞ் சித்திப்பே ரின்பக் கல்விபிற வாமுத்தி
வைத்தாலும் வெற்றி மருவி யவர்பதம் வணங்கவும்யான்
சித்தாதி சித்தர் பதினெண்மர் தந்த திரவியமே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1100
கண்டீரோ பண்டிதரே காலைதனில் கிண்டியது
சண்டமா ருதக்குழம்பைச் சாற்றினால்- எண்டிசையில்
சீரகமாங் கஷாயத்தில் தேனும்பஞ்ச தாரைவிட்டு
நீரதுவு நாள்மூன்று நேர். 

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900