திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 801- 900

பாடல் எண்:- 801
எட்டியடி வைக்கவென் மசக்கை யென்னுடம்பு
கட்டியிழுத் தேமறித்த காரணம்போல்- வெட்டி
மண்டையிடி சூழ்ந்து வலிவயிறு குத்தலுடன்
கண்டகண்ட நோய்கள் வருங்காண். 

பாடல் எண்:- 802
அஷ்டதிங்கள் நாதமடிக் கடிநீர் பாய்ந்துடலில்
கஷ்டமது வாய்ச்செழுமை காணுங்காண்- அஷ்டதிங்கள் 
வாருதியாம் விந்துமலப் புளியிலு முடம்போய்ச்
சேருமுப்பு உப்பதுகாண் சேர்ந்து. 

பாடல் எண்:- 803
சுன்னங் கடுங்காரஞ் சூலது காண்பிண்டம்
அன்னமய மானவர லாறுபோல்- சொன்னேன்
வீரியமாய் நாதவிந்து விந்தே நவாச்சாரங்
காரந்திங்க ளொன்பதில் காண். 

(விருத்தம்)
பாடல் எண்:- 804
கதிர்மதியுங் கூடிக்கடுஞ் சூல தாகிக்
கருவுருவாம் திரண்டுஒரு ரூப மாகி
மதிபெருங் கதிரொளியு ளுருகிப் பாய்ந்து
மகிதலத்தில் வச்சிரப்பை யதன்மேல் சூழ்ந்து
உதிரசுக்கி லங்கூடித் திங்கள் பத்தில்
உருவதுவாய்த் தேகமதா யுதித்த வாறும்
அதிகஜெக மமைத்ததுபோ லாண்டே கேளீர் 
அறிவிந்து நாதமுஞ்சேர்ந் தான வாறே. 

பாடல் எண்:- 805
இந்தவுடல் நாதவிந்து கார சாரம்
இரண்டதுவுங் கூடியொரு ரூப மாகி
விந்தையைநா னுரைப்பதினி யாண்டே மேன்மேல்
மேதினியில் மாதுகர்ப்பந் தரிக்கும் போதில்
அந்தவித பரீட்சையைப்போ லான வாறின்
அவையெல்லாம் யானறிந்து அருளப் பின்னை
தந்திரமா யுடலெடுத்த கூறின் வாய்வால்
தசவாய்வி னுற்பவத்தைச் சாற்று வேனே. 

(வேறு- கவி)
பாடல் எண்:- 806
நாத விந்துரு வான விதங்களை
யாத லால்யா னுரைத்திட மேதினி
பூத மைந்துரு காரசா ரத்தினால்
ஊனு றைந்துரு வானது வாயுவே. 

பாடல் எண்:- 807
வாயு வின்தச பத்தும் விளங்கிட
மாது கர்ப்ப மதிலுறு வாறுபோல்
தேய்வு வன்னி செனித்திடு முப்பினால்
கார சாரங் கடுங்சுசுன்ன மாண்டையே. 

பாடல் எண்:- 808
சயில மாமிர தங்க ளுதகமுந்
தயில லேகியந் தானுரு வஞ்சதும்
மயில மாமதி சூரிய காந்தியால்
அகில மேவிஅம் மாவு படருமே. 

பாடல் எண்:- 809
அஞ்சுரு வாய்தச திங்களி லைங்கோலம்
பஞ்சபூதம் பனிக்கு நீரது
நெஞ்ச மேநீர்க் குமிழுக்குள் ளேசலம்
வஞ்சி மாது மாதந்த மிறங்குமே. 

பாடல் எண்:- 810
இடியிடி மின்னலி டித்து வயிறுவலி
துடிய தாய்நாதச் சுரோணித நீரது
படிபடு படீலென்று கும்ப ஸ்தலம்
முடிகண்டு பாலன் உற்பத்தி யாண்டையே. 

பாடல் எண்:- 811
ஆகுமிந் தப்படி யானது கர்ப்பமுந்
தோகை யர்க்குமிப் படிதொந் தித்திடும்
பாகமூலப் புளியெனு நீரது
ஆக மப்படி யான்கொண்டே னாண்டையே. 

வாரிசாதனை
(தரு)
பாலன் பிறந்ததுகாண்- என்னாண்டையே
பாலன் பிறந்ததுகாண். 

பாடல் எண்:- 812
பாலன்பிறந்துலகாதிதமுன்செங்கோல்
ஆளப்பிரபஞ்சமூவுலகுபுகழ்
காலனில்லை கற்பகோடியுகாந்திரம்
ஞானப்பிரகாசமெய்ஞ்ஞானசிரோமயம்- பாலன். 

பாடல் எண்:- 813
அண்டபகிரண்ட மும்மண்டலமும்புகழ்
நின்றபிர்மாண்டமளாவியமேருஞ்சூழ்
தெண்டிரைப்பதினாலுலகுமஷ்ட
தீவுதீபாந்தரதேவர்களும்மகிழ்- பாலன். 

பாடல் எண்:- 814
விந்துநாதங்காரசாரமுங்கூடி
மேலானகருவிகரணாதிகள்சூழவும்
அந்ததசதிங்களுற்பத்தியாயிந்த
அவனிமீதிலகம்விட்டுப்பாரினில்- பாலன். 

பாடல் எண்:- 815
மாலைப்புளிமதியமிர்தங்காலையில்
வாலைப்பருவமோராண்டுவரும்பதஞ்
சீலத்துடனொருகாலைபோசனங்கொண்
டாவினமிர்தமதிவிதமாண்டையே- பாலன். 

பாடல் எண்:- 816
பூருவக்கியானம்புகழ்வேதசாத்திரம்
ஆறுமேலுமாறாதாரமீராறுமே
சீறுடன்ஞானஞ்சிவயோகசித்திபெற்றுத்
தேறுங்கர்ப்பந்தசதிங்களோராண்டினில்- பாலன். 

பாடல் எண்:- 817
உப்பும்புளியுறவாகுமைங்காயமாய்ச்
செப்பஒண்ணாதுசிவரூபமாதலால்
இப்படியாய்முதல்தீட்சையுமாச்சுது
கைப்புமுறிந்துகனகமீதாண்டையே- பாலன். 

பாடல் எண்:- 818
மாதுவாலாம்பிகைமார்க்கத்தினாலே
மதியமிர்தங்கொண்டுமலப்புளின்சுன்னமாய்
வேதசாரம்வேகத்தினாலுடல்
வேறுகூறாச்சுதுபாருமீதாண்டையே- பாலன். 

பாடல் எண்:- 819
உதகமிதாகுமுவருப்புசுன்னமும்
பதமீராண்டுடன்பாகமுஞ்சென்றது
நிதங்கொண்டிப்பொருள்நிர்மலத்தாய்ப்பதம்
விதமறிந்துயான்வேதைமூவாண்டினில்- பாலன். 

பாடல் எண்:- 820
பானச்சுழிமுனைவானம்புவிகலை
பாயவும்ரேசகப்பூரகந்தன்னிலும்
ஞானகற்பமுண்டுவாசிகும்பித்துடன்
கியானசூக்ஷக்கிரியைமோனமதாகவும்- பாலன். 

பாடல் எண்:- 821
சித்தியருள் முத்திமோக்ஷசுகாதீதம்
நித்தங்கண்டதாரைசித்தத்துடனேயும்
புத்திரயோகவித்துவாமிகனாகவுந்
தத்துவந்தொண்ணூற்றாறுமறிந்துடன்- பாலன். 

பாடல் எண்:- 822
அதிதத்துடன்மதிசந்திரர்சூரியர்
பதியறிந்துபகிரண்டம்பாயவுங்
கெதியடையுமகாராஜயோகத்தில்
பதம்பெற்றருச்சனைவிதியறிந்துடன்- பாலன். 

பாடல் எண்:- 823
தினந்தினமதியமிர்தம்பொழியத்
தனகனகச்சத்துஞ்சித்துமாடவும்
புனல்சொரியும்புஷ்கரணிதீர்த்தத்தில்
இனமிப்படிக்காணேகாந்தமாகவும்- பாலன். 

பாடல் எண்:- 824
காயசித்திகருகற்பத்தினாடல்
மாய்வதேதுமரமுமில்லைகாண்
தாயுமம்பிகைதான்வசமானதால்
நாயிலுங்கடையாவதுமுண்மையே- பாலன். 

(கொச்சகம்)
பாடல் எண்:- 825
தந்தைமதி யாலுதித்துத் தாரணியி லுஞ்சிலநாள்
வந்துபிறந்துபுவிமாய்கைதனி லேயுழன்று
அந்தமதியாலெனது அகமக் குருக்களினால்
விந்தைசில நான்கிரியை மெய்யென் றிருந்தேனே. 

பாடல் எண்:- 826
பொய்க்குரு வினாலெனது பொக்கிஷமெ லாஞ்சிறந்து
கைப்பொருளெல் லாமிழந்தேன் காரியகுருக்களினால்
இப்படியாய் மேதினியில் யான்சிலநாள்போனபின்பு
மெய்க்குரு முனியருளால் மெய்ஞ்ஞானப் பெற்றேனே. 

பாடல் எண்:- 827
எண்சாணுடல்தனி லெய்ந்தொண்ணூற் றாறுவிதங்
கண்ணாரத்தத்துவத்தின் காட்சியெல்லாங்கண்டுணர்ந்து
மண்ணாசை பெண்ணாசை மாய்கைபொரு ளாசைவிட்டு
விண்ணாசை கொண்டுநெறி மெய்ஞ்ஞானம் பெற்றேனே. 

பாடல் எண்:- 828
கற்பமென்றா லற்பமல்ல காயசித்தி யாவதற்கு
உற்பனமே யானறிந்து வுண்டேன் மதியமிர்தம்
தற்பரத்தா லெண்சாண் சரீரமதைச் சுத்திசெய்து
முற்பவமோ ராண்டுசென்று முதல்தீட்சைபெற்றேனே. 

(வெண்பா)
பாடல் எண்:- 829
முதலிருந்த வூழ்வினையை முப்பாழைச் சுட்டுமனம்
பதறாம லுதியாமல் பாடுபட்டேன்- முதலிருந்த
நல்வினையுந் தீவினையு நாடாம லும்பறந்து
வல்வினையைப் போக்கிவிட்டேன் வாறு. 

பாடல் எண்:- 830
காயசித்தி யாலெனது கர்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே- காயசித்தி 
மூலப் புளியதனால் முதல்தீட்சை யாச்சுதினிக்
காலமென்ன ரெண்டாண்டில் காண். 

(கலித்துறை)
பாடல் எண்:- 831
பானத்தைக் கொண்டு மூலத்தை யூட்டிப் பழுதுவரத்
தேனத்தை யுங்கிளி யாகவுஞ் செய்து விதுபதமாய்
மோனத்தை யுண்டு யதிகாலை வாசி யோகத்திலும்
ஞானத்தில் நின்று மவுனம்வைத் தேன்சுழி நாமறிந்தே. 

பாடல் எண்:- 832
சுழிமுனை யோகஞ் சதுர்நாலு சாமந் தொடுசரமாம்
வழியும் பேரின்ப மதுவாரி யுண்டு வனமதுவாய்ச்
சுழியாமல் காலையு மாலையு முச்சி கண்டத்திலும் 
அழியாப் பதவியில் வாசிகொண் டூதி யருள்பெற்றேனே. 

பாடல் எண்:- 833
தினமொரு வேளை யதிகாலை மூலப் புளிதெளிவாய்
மனமிக்க வுண்டு வருங்கால மாண்டு வருஷமதும்
கனமிப் படியினங் காலையி லுண்டு மாலைவிட்டேன்
இனமிந்தத் திங்கள் தசபத்து மிவ்வித நெஞ்சகமே. 

பாடல் எண்:- 834
ஆண்டிது மூன்று தீட்சைரெண்டாகு மளவறிந்தேன்
வேண்டிய மாது ரதியெனக் காக விரும்பி நின்றாள் 
தூண்டிப் பூராகம் பூட்டி யிழுத்திடுஞ் சொற்பமதாய்
ஊன்றிச் சுழிமுனை வாசியைக் கொண்டு ஊதினனே. 

பாடல் எண்:- 835
முன்னா ளமுரி தசபத்துத் திங்கள் முதற்கொண்டுயான்
அன்னாள் முந்நூறு மமுரியுண் டேனது யென்னவிதம்
சொன்னாள் சடச்சத்தி முன்னா ளிருந்த சுகவினையை
என்னால் மதிகொண்டு சுட்டுநீ றாக்கி யினம்பிரித்தே. 

பாடல் எண்:- 836
இருவினையாகிய கர்மதுர்ப் பாதக மெய்திடினும்
கருநீ றாக்கிப்பா னத்தினாற் சுட்டுக் கணைதொடுத்தேன்
உருகியெண் சாணுடல் பிர்மாதி கற்ப முண்டிடவும்
சுருக்கிக் கறியுப்பமுரியும் பானதின் சூதறிந்தே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 837
கர்த்தனருள் சிவதீட்சைப் பதினொன் றுந்தான்
காயசித்தி யோகசித்தி வாதஞ் சித்தி
வர்த்திகமாய்ச் சித்திசெய்து மாவின் பாலு
மன்னது மிரண்டளவால் பற்றோ யில்லை
வெற்றியெய்தாக் கறிவகைகள் மூலஞ் சேர்ந்தால்
வெறும்பாழு கல்மசத்தால் வேக மில்லை
புத்தியில்லாப் பழுப்பேறும் வெண்மை யில்லை
புளியில்பழு துண்டாகிப் புழுக்க ளாண்டே. 

பாடல் எண்:- 838
புழுக்கள் செனித் துயிர்களதும் புளியைக் கொல்லும்
புளிப்பாழு உவர்ப்பாழு துவர்ப்புப் பாழு
களிப்பாழு கருவிகற்பங் காயம் பாழு
காரமதுஞ் சாரமதுஞ் சயிலம் பாழு
அளியாது புளியருந்த ஆண்டே சொல்லும்
ஆவின்பா லன்னமது மிரண்டும் போதும்
வெளிப்பாழாய்ப் போகாமல் புளிதா னுண்டேன்
வேகமென்ன அதிவேகம் விரும்பி னேனே. 

கற்பமுண்ணும் முறையும் பத்தியமும்
(தரு)
கற்பமுண்டேன்கான்- மூலப்புளி- கற்பமுண்டேன்காண். 

பாடல் எண்:- 839
கற்பமென்றமதிசாரையைக்கொண்டேன்
சத்திநாதமூலப்புளியதுங்கூட்டி
உற்பவமாகமூன்றாண்டிற்காலைமாலை
உண்டுமகாராஜயோகந்தனில்நின்று- கற்ப. 

பாடல் எண்:- 840
அன்னம்மாவின்பாலும்பின்னம்வராமலும்
ஆக்கைதனில்வேகஞ்சேர்க்கையில்லாமலும்
முன்னேமூன்றேமுக்கால்கற்பஞ்சாதித்துப்பின்
அண்டமுண்டேன்வாசிஅப்பியாசஞ்செய்துயான்- கற்ப. 

பாடல் எண்:- 841
கதிரவன்முகங்கண்டதிகாலையில்
மதிதனில்மலப்புளியதுமூட்டி
விதியதுவிட்டகுறையிந்தப்படி
துதிசெய்துமூலச்சுழியில்நின்றுநான்- கற்ப. 

பாடல் எண்:- 842
பானத்தினால்வெகுபழக்கஞ்செய்திட
ஞானசித்திக்கொருகளிப்புண்டாச்சுது
ஊனிருந்தாலுயிர்யோகம்நிலைத்திடும்
நானிருந்ததிவ்விதநாட்டத்திலுஞ்சுழி- கற்ப. 

பாடல் எண்:- 843
காலைதன்னில்புன்னைக்காயளவுரெண்டு
மாலைதன்னில்பதமாகுமதிலொன்று
சீலம்பொழிந்திடுந்தேனருவிபாயும்
ஞாலத்திலும்வாசிநாட்டம்புரிந்துயான்- கற்ப. 

பாடல் எண்:- 844
அண்டத்தில்வாசியகண்டத்தில்பாய்ந்திடக்
கண்டத்தில்தாரைகடகத்திலூதியே
மண்டலமூன்றும்வலமாகச்சுற்றியே
தெண்டனிட்டுச்சிவசத்தியைப்பூசித்து- கற்ப. 

பாடல் எண்:- 845
சண்டப்பிரசண்டசராசரந்தாண்டியான்
குண்டலிவாசியைக்கும்பித்துஸ்தம்பனம்
நின்றுகண்டதாரை நிர்ப்பந்தமாகவும்
உண்டுமூலச்சுழிஊதிமேல்நோக்கியே- கற்ப. 

பாடல் எண்:- 846
தந்தைவிதிதலைசுற்றிச்சிமிட்டவும்
இந்தவிதமிகுஇரண்டுவினாடிகாண்
அந்தராசயோகமாண்டுநாளுக்குநாள்
எந்தனொருதிங்களிவ்விதமாண்டையே- கற்ப. 

பாடல் எண்:- 847
வாசியென்றால்பிராணவாய்வுமெழுந்துடன்
வீசியெழுந்துமேல்மூலஆக்கினையினால்
பூசிதமாயண்டரண்டமளாவியும்
நாசிதனில்பனிரெண்டங்குலம்பாய்ந்து- கற்ப. 

பாடல் எண்:- 848
ராஜயோகந்தசதிங்கள்வாலாம்பிகை
நேசத்துடனின்றுநிர்மலரூபமாய்
வாசிநிலைத்திடமூலாதாரத்தினில்
பாசமேன்மேல்வைத்துப்பூசிதமாகவும்- கற்ப. 

பாடல் எண்:- 849
உண்டபின் கற்பமுள்ளவிந்துவிசாரணை
கண்டத்திலூதிக்கலைபிறழாமலும்
இன்றுமூலத்தின்வினாடிகள்ரெண்டுமே
ஒன்றசைவாய்நவத்துவாரமொடாமலும்- கற்ப. 

பாடல் எண்:- 850
மனம்புத்திசித்தமாண்மையொன்றாகவும்
இனமிந்தவாசியேறியண்டத்தினில்
தினமூன்றுவேளைசாதனைசெய்துயான்
முனைசுழியில்மூதண்டம்பாயவும்- கற்ப. 

பாடல் எண்:- 851
வங்கென்றுவூதிவாலாம்பிகைமூலத்தில்
வாசிவாவாவென்றுமார்பிலிருத்தியுஞ்
சிங்கென்றுவூதிசிவரூபத்தினால்
மங்கென்றுமேற்றியும்வாசிசுபாரினில்- கற்ப. 

பாடல் எண்:- 852
இவ்விதமாகஇருத்திமேல்நோக்கிடக்
கல்விச்சுழியில்கதவுந்திறந்திடும்
பல்லிப்படர்ந்தபரஞ்சுடர்காணவும்
அவ்விதமாகரகசியமாண்டையே- கற்ப. 

பாடல் எண்:- 853
மூலச்சுழிமுனைமுடிவிலிருந்து
பாதத்திலேறியும்பானுவினால்வாசி
யாலத்தினாலிந்திரஜாலமதாகவும்
தூலத்திலும்வெகுசூக்ஷத்தைக்கண்டுயான்- கற்ப. 

பாடல் எண்:- 854
நித்திரைசோம்பல்நிகழ்த்தமதிதனில்
சுத்தவயிராக்கியஞ்சூக்ஷசுகாதீதம்
சத்திநாதமூலசைதன்யத்தில்
கர்த்தனருள்பதங்கண்டு மகிழ்ந்துமே- கற்ப. 

பாடல் எண்:- 855
தேகமெனுமெண்சாண்சித்திதருஞ்சுழி
யாகமதுதனிலமுரியுங்கொண்டதால்
வேகமதுமீறிமிக்கனலால்சடம்
யோகசித்தியோராண்டினிலாண்டையே- கற்ப. 

பாடல் எண்:- 856
அமுரிமூலப்புளிஐந்தோராண்டினில்
அமிர்தசூதவிந்தாலும்வலுவதாய்க்
குமுறிடுமலைசாகரநீரெல்லாம்
அமுரிமாறிஅதுசுத்தநீரதாம்- கற்ப. 

பாடல் எண்:- 857
காயாதிகற்பக்கரிசைத்தாலுமே
ஞாயாதிஞாயஞானம்வந்தெய்திடில்
வாய்த்திடச்சலமலமுமாறினால்
காயாதிகற்பங்காணுவோர்ஞானியே- கற்ப. 

பாடல் எண்:- 858
பாழ்வினைபோக்கிமுப்பாழ்கடந்தானந்தம்
சூழஞ்சூடாமணிசோதிப்பிரகாசத்தில்
ஆழிதிரைகடந்தண்டத்திலேறியான்
வாழிமேன்மேலும்மணிவிளக்கேற்றியே- கற்ப. 

பாடல் எண்:- 859
சூழும்வாலை சுரூபமெடுப்பதும்
வாழுமூப்புமயத்தையறுப்பதும்
வேள்விதொண்ணூற்றறுவரும்நீறினால்
பாழும்பாழுமுப்பாழும்போம்நீறியே- கற்ப. 

பாடல் எண்:- 860
யானைசெந்நாயதுக்குள்மரணமும்
பூனையெலிபுழுக்குள்மரணமுந்
தேனைபானந்திசையுண்டவர்க்கொரு
ஞானபேதமெய்ஞ்ஞானிகளாவரே- கற்ப. 

பாடல் எண்:- 861
ஈனருக்காயெடுத்ததுஞானமோ
ஏனோவேனோவியம்புறீர்மானுகாள்
ஆனதாலுமறிந்துபாரங்ஙனே
ஞானமுஞ்சுழிநாட்டமறிவரே- கற்ப. 

பாடல் எண்:- 862
அன்னைதந்தையருளாலறிவதோ
உன்னும்பாதியிற்பத்தியமைப்பதால்
வின்னம்வாராவிதியிருந்தால்மதி
சொன்னேன்கற்பச்சுகாதிதசுகமதே- கற்ப. 

வேறு
(விருத்தம்)
பாடல் எண்:- 863
பழகமூ வாண்டி லும்தசமும் பாயும்
பரீட்சைப்பார்த் தருளிய வழக்கம்
அழகது முடைய அம்பிகைக் கமல
மனுதின மர்ச்சித்துப் பணிந்தேன் 
மழைகன நடையும் ரவியெனுங் காற்று
மனிதர்சஞ் சாரமு மாய்கை
பிழையகற் றிடவுஞ் சோம்பலுந் தூக்கம்
பிதற்றலுங் கோபமா காதே. 

பாடல் எண்:- 864
தள்ளுவ தபினி கஞ்சாவெனு மதுவுந்
தகர்ந்துமேற் கரிவகை சுவையும்
விள்ளுவ தினதான் பசும்பய றொடுபால்
மிகவும்பச் சரிசியுஞ் சமைத்து
எள்ளதோர் கரிய வேம்புட னமுரி
உப்பது மிளகுடன் தூளாய்ச்
சள்ளையில் லாம லொருபோ துண்ட
முதுசாம்பவ னுட்கொண்ட திதுவே. 

பாடல் எண்:- 865
அன்புடன் மூன்றாண் டதுவரை முதற்கொண்
டருளினேன் மகாராச யோகம்
இன்பதே னுற்ற மிதுபுளி சுன்ன
மிருதுவைக் கற்பங்கொண் டடைவாய்ப்
பின்பது செலுத்திச் சென்றது போகப்
புளிதனைப் பதனஞ்செய் திடவும்
தென்பெனுஞ் சேதஞ் செய்கையு மிலையார்
திருத்தமாய்ப் பாண்டத்தி லடைத்தே. 

பாடல் எண்:- 866
உதகமென் றமுரி யுனதுள் நின் றிலகு
முவரச மூசிநீ ரிதுகாண்
பதமெனும் புளியோன் றமுரியா லுளதால்
பாகமாய்ப் பாண்டங்கொண் டடக்கி
விதமிது பாகஞ் சமாதிவைத் திருந்த
மிகுந்தமுப் பதுவய தண்டம்
சுதனரு ளாலும் பற்பஞ்செய் துணரச்
சூக்ஷமே சொல்லுவே னாண்டே. 

பாடல் எண்:- 867
மதுரத்தே னின்பா மலப்புளி யிரண்டு
மார்க்கமாய்க் கரைந்துநாள் மூன்றும்
பதனமா யில்ல மேல்மூடி செய்து
பதமதாய் நீர்தெளிந் ததுநீர்
விதமெல்லாங் குப்பி தனிலடைத் ததுபின்
மேருவென் றெனுமண்ட மதனைச்
சுதமதாய்ச் சுற்றித் தயமதின் கம்பால்
தூளதா யிடித்துமா வதுவே. 

பாடல் எண்:- 868
இடித்துமாக் கருவை வடித்துசூ ரணமா
யினியொரு சீலையில் கிழியாய்
முடித்தொரு படிநீர் தோண்டிகொண் டூட்டி
முக்கியமா யாண்டசூ ரணத்தைத்
தடுத்ததிற் பாய்ச்சி வன்னியிட் டெரித்துச்
சலமெலாந் தொக்கிச்சுண் டிடுமால்
படித்தொரு கல்வம் பாய்ச்சியே பின்பு
பழம்புளி யமுருநீர் விட்டே. 

பாடல் எண்:- 869
வரையிரு சாமம் வற்றவற் றதுநீர்
வார்த்ததில் மெழுகது பதமாய்ப்
புரையில்லா வழித்துச் சதுர்பில்லை கட்டிப்
புகழ்கதிர் முகந்தனில் காய்ந்தால்
நிரையடி யோடு உள்ளதாய் வைத்து
நின்றமே லோடது மூடித்
துறையதாய்ச் சிலை கவசமெண் ணேழு
சூட்டியே புடமுழ மாமே. 

பாடல் எண்:- 870
அந்ததோர் புடமிட் டக்கினி மூட்டி
யதுதண லாறிய பின்பு
இந்ததோ ரண்ட மெடுத்துடன் பார்க்க
இந்திர னொளிவதுக் கதிதம்
சந்திரபுஷ் கரணி சாரையி னாட்டஞ்
சாரணை சதகோடி தேர்ந்த
மந்திர சுரூப மவுனமந் திரங்காண்
மகத்துகள் மறைந்தது மிதுவே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 871
சுன்னங்கடுங் காரமிது சுக்கிலசு ரோணிதத்தால்
விண்ணமில்லா தண்டபற்பம் வெகுபதன மாய்க்கருதித்
தன்னையறிந் தேமதியால் தானறிந்து கற்பமதில்
சொன்னேன்குருபஸ்பமதைத் தொடுத்தேன் பணவிடையே. 

பாடல் எண்:- 872
காரமதில் சாரம்விட்டுக் கற்பமிதை யிலேகியமாய்ச்
சீருடனே பஸ்பமிட்டுச் செய்விதமா யுண்டேன்காண்
மாறஅதி காலையிலு மாலையிலு மிவ்விதமாய்த்
தேறவுங்கா னுண்டுதச திங்கள்நிறை வேறினதே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 873
சூதா மாய்கை யடராமல் வாசியைத் தூக்கிவிட்டு
ஊதாம லூதிப் பிராணாயமூல முள்ளடங்க
வேதாக மத்தின் விதியை யறிந்துகற்ப வேகமதாய்
ஆதாரங் காண விராஜாங்க யோக மறிந்திட்டனே. 

பாடல் எண்:- 874
மூன்றாண்டு மாச்சுது மூலப் புளியிந்த முக்கியத்தால்
ஆண்டாண்டு மாண்டு மருள் நாலு மாண்டி லறியும்விதம்
காண்டா புரமெரித் தானந்த மூலக் கதிர்மதியில்
தூண்டா மணிவிளக்கேற்றிவிட் டேன்திரு வள்ளுவனே. 

பாடல் எண்:- 875
திருவான சோதி கருவூரு நாட்டில் தேன்பொழியும்
பொருளான வாலாம் பிகைமலர்ப் பொற்பதம் போற்றிசெய்தேன்
அருளா மதிமலர் சிவராஜ போக மறிவித்தனள்
குருவபய கத்தி னுபதேசத் தாலுங் குறைவில்லையே. 

பாடல் எண்:- 876
தனமே வியகரு காரசா ரத்தினில் தான்மருவித்
தினமுமைம் பாச மவுனங்கொண் டேன்திரு வள்ளுவனும்
மனமே வியகுரு வாக்கியத் தாள்மூல வாசிகொண்டு
புனலா வதுங்கணை சரமாற்றி யேற்றிப் பொழிந்திட்டேனே. 

(வெண்பா)
பாடல் எண்:- 877
கல்லுப்பின் வாறு கருத்தறியா துண்டுமனு
வல்வினைக்குள் ளாகிமனம் வாடினார்- கல்லுப்பு
வெள்ளைக்கல் லுப்பு வெகுவிதமா யாய்ந்தாலும்
உள்ளமதி லுண்டென்று உன். 

பாடல் எண்:- 878
என்று மிந்துப்பு எண்சா ணுடலிருக்கக்
கண்டுவறி யாதென்ன காரணமே- என்றுமதி
வாரி யமுரியதை வன்னியிட்டுக் காய்ச்சியபின்
வீரியமா பானுணரு மெய். 

பாடல் எண்:- 879
உப்பின் கசடதுபோய் ஊறலது மாறினதால்
முப்புசுன்ன மாமதற்கு மூன்றுபேர்- உப்பதனால்
கற்பாந் தரங்கோடி காய மிதுவலுத்துச்
செற்பாயும் வாசியினால் தேகம். 

வாசிவசப்படுதல்- வண்ணச்சிந்து
(தரு)
தனனாந்தனனாந்தனனத்தனன தந்ததனனதனதனதனனதனதன
தனனதனதனதனனதனதனதனதானதானதானதனதந்ததனனா. 

பாடல் எண்:- 880
ஜெகமேவியவாருலகுந்தனிலிலகும்பரி
யகவாரிதவானகிலம்புகழ்மதிசந்திரசுகவானுள
பூரணவம்பதிகதிர்சூழ்வட- மகமேரதில்வாழ்ந்திருவம்பல
சுடர்மாமணிகனம்பல- இடைபிங்கலை சுழியின்முனைதுரியாதித
தலமேவிய நான்கலையொத்துரு வலஞ்சுற்றினி- யிடபாரிசமாய் நடனம்புரி
அருள்சாதனை கருவூர்வளநா- டுடன்பாடுளநிருபங்களில்
அதிவானகர்வந் துதிபெற்றொரு மலர்பொற்பதம் விதிதன் செயலென்
தந்தைகூறதிதங்களையுதித்தவந்- தனனாந். 

பாடல் எண்:- 881
மதுபாரமுரியவரிந்துசரீரந்தனிலலிவிந்துகூர்
களிவின்பதரசகெந்தியின்
தசதிங்களுமுண்டமுதேபசு
மமிர்தங்களும்விதபோசனமாம்
விரும்புங்கலைமதிசாரணை
அகங்கொண்டேபகிரண்டமுந்திருவம்பரயுகமண்டல
நதிசூழ்கமலம்வரைசுற்றிதழ்
மணிபூரகமனைவாசியுமே
கரைகண்டுளனருள்தாவென
துரைகண்டுகையாய்தசவாய்வது- மொருமித்துடன்
அரியாசனமே- எவர்க்குமுயிரெனக்கும்பொருள்- அறுநீர்சுவை
செயநீர்கதிர்வருமேமதிமனோவேகமாய்- தனனாந். 

பாடல் எண்:- 882
இகம்பரமேவெளியிற்கனிமதுரத்துடனிடராகிய
சஞ்சலத்துள் துடராபலங் கருவாகியபஞ்ச ரூபத்தினிலுற வக்கணை
கதிர்மேவிய பாலமிர்தம் பொழியமுதுண்டபின் கருணாலயஞ் சுழிமேல்சுடர்
சவியத்தசைகலை கொண்டந்திகாலையிலும் புளிநீருகை
அருநீர்சுடருசினாலுனது- கெதியென்னுடன் பசியத்தனை
யெருகும்பியினில் குடியேறிய முனைவாசியும்
பிரியாததுநங்கின வென்றுடன் முதலட்சரந்துடியாகவு
மொருமித்துடன் முடிசுற்றிவினாடித்தறி- தனனாந். 

பாடல் எண்:- 883
வழிகண்டினி பாராதிதப்பெருந்- துறையாகிய
மதவாகியதோகுசிகண்டதின் முனைதாரையில்
சுழியாலும் யான்விழிமாதனுக்கிரசம்பரி- கரைவேதகமாய் ஒருநாளிலும்
பிரியாமலு மபிராமியின்- மலர்ப்பொற்பதம் விதியாய்ப்பணிந்து
தொழுதேயருள்- அறுநீர்புளியுமுறவாய்ரவிமூலந்தனி
லுருவேகமதா யரியுமரன் பிரமாதிகள்- இமையோர்களு மெவராலறி
புவனந்தனில் கருவாய்வெகு செந்தனைவோரின்முடலிப்படி
கருநெல்லியின் கனியுண்டு வெண்ணதிமாமதியருள் கண்டனர்- தனனாந். 

பாடல் எண்:- 884
அனைவோர்களுமேஅறியாரறிந்- தவராகிலுமனவுற்பனமாய்
மதுரந்தனையமுதென்றுள- தெவராகிலுந்தெனமிக்கரு
சுழியென்றதுதவறாமலுநூல்- வழிகண்டுறைமவுனந்தனைக்
கெவனாதிகள்வெகுநாள்யுகஞ்சிவயோகஞ்செய்
தறியாமலும்சவமாகினர்கள்- தவஞ்செய்யகமவர்பெற்றுடன்
உவர்கண்டறியாருதகங்களி- மதபேதமாயிவர்ஞானிகளா
யிலகும்புவியுலகங்களில்பரதேசியதாய்சுகபோகிகள்- குகைசாதனைவயிறுசீவன்
கவனத்துடன்உடல்போய்ச்சுடுகாடேகினர்- தனனாந். 

பாடல் எண்:- 885
தசவாய்வதுவும்வசமாய்க்கலைசுவாசங்களை
யசையாமலுமேஅடியாகிய- மூலந்தனில்
விசுவாகியதும்விதமாய்வயிராக்கியத்துட
னிசவாக்கினைகொண்
டினசிங்கெனமவுனந்தனிலருள் பெற்றுடன்
யோகத்திரு- அருள்பெற்றனுக்கிரகத்துடன்
கெதியாகியதோர்- இருளத்துடன்வரமுத்தியில்
திருவாய்மதுரம்பதமேவியமோட்சத்
துறைகறைகண்டெனுமே- மதியும்
ரவிசிவரூபமும்- குருமந்திரமாய்ப்
புகழ்யங்கென- சுழியின்முனைமுதலட்சரமிதுபின்னிடு
கடையட்சரமறிவித்தனர்- தனனாந். 

பாடல் எண்:- 886
சுகசீவனமாய்எருபோதமு- தமிர்தங்களில்
பெரியோர்களுமே- எரிகும்பிதன்வார்பாடொழிந்
துலகங்களிலும்கருவாளிகள்- அவர்மேவிய
தலவாசமதாய்மருவிப்புனல்- மதுரங்களை
மவுனம்பரி- துரியாதீதமிடைபிங்கலை
சுழியின்முனைகிரிசூழகமாய்- தச
தீட்சையிலதித்தவஞ்- ஜெகசூஸ்திரமாய்நடனந்
திருமடைவாயினிலுயிராகியதோர்
பறவைப்பட்சியடைவைப்போலு
மிவர்தன்னெறி- பார்மதிதன்னிடரவியின்
செயல்களைக்கொண்டுடன்- தசவரண்டினில்
புலனைம்புலன்முனையாந்தனர்- தனனாந். 

பாடல் எண்:- 887
வாய்வோடனல்சேரசையாமலும்- வசமாவது
தேய்போம்பிறைதான்- திறையாலுமலுமதிபூரண
பிறையாவதுமேமதிவன்னியில்- உருவாகிய
பின்னிறவாயுடல்- சேர்வம்பதிகெதியாகியபின்
சிவஞானிகளவர்பெற்றபேர்- துறவறமே
நிசமென்றிரு- பிறவாரிதுமூன்றிலட்சரம்
மீக்காற்றுணர்பழுதென்றிளையார்பத்மப்
பதங்கருணைப்பெறுமறவாதொருநாள்
மவுனந்தனில்- கவனம்விடாரருள்
பெற்றடைவாரமிர்தச்சிவயோகத்தினில்
திருவள்ளுவனுரைதன்மொழி- தமிழ்
வண்ணமுமருள்பெற்றெழும்- தனனாந். 

(கொச்சகம்)
பாடல் எண்:- 888
நற்பிறவி யாயிருந்து நாள்தோறு ஞானமொழி
கற்பனையால் கண்டறிந்து காலமது போக்காமல்
உற்பகமாய்க் கற்பமதி னுட்கருவி னாலுமறி
தற்பரசி காமணியாய்த் தாரணியில் வாழ்வாரே. 

பாடல் எண்:- 889
அண்டபற்ப முண்டுவர ஆக்கைதனி லுள்ளவினை
உண்டகற்ப நாலாண்டி லூழ்வினைவந் தெய்திடினும்
கண்டனனு போகமதாய்க் கன்மவினை சூழ்ந்திடினும்
சண்டனது வாய்லபிக்குஞ் சார்வது மறிந்திலரே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 890
வித்தால்விளையு மெய்வாழ்க்கை யென்று மிகமகிழ்ந்தேன்
சத்தாகி லுஞ்சளை யாமலுங் கற்பஞ் சாதித்துயான்
எத்தாக வுண்டு இருந்தாண்டு நாலு மினிக்கடந்து
குற்றம தாக வூழ்வினை வந்து குடிகொண்டதே. 

பாடல் எண்:- 891
என்னுக்கு ளம்பிகை பாதார விந்த மினிபணிய
வின்னம் வராம லூழ்வினை யோடி வெளிப்படுங்காண்
அன்னைவா லாம்பிகை அவிழ்தத் தினால்பிணி யறுவிடச்
சொன்னார் வயித்திய சூட்சச் சூடாமணி சூழ்தில்லையே. 

(வெண்பா)
பாடல் எண்:- 892
இந்த ஜெனன மிருவினைக் கீடாக
வந்துதித்த மார்க்க வல்வினைகாண்- இந்த
அவிழ்தத்தி னாலறுமே ஆக்கை யதுக்குமொரு
தவமதுநாள் முன்செய்த சாந்தி. 

பாடல் எண்:- 893
கற்பத்தினா லுதித்த கர்ம வினையதுவுஞ்
சொற்பதத்தி னாலொழியச் சொல்லுவேன்- உற்பத்தி
மதிபிசகா துண்டக்கால் வல்பிணியு நோயகலும்
அதிவிதமாங் கற்பத்தா லறி. 

(விருத்தம்)
பாடல் எண்:- 894
ஆதியாய் விளங்கு ஞான வெட்டியா யிரத்தைஞ் ஞூறும்
நீதியாம் நிகழ்த்த வாலை நிர்மலத் தாளைப் போற்றிச்
சோதியா னந்த ரூபன் சுயகுறு முனியின் பாதம்
வேதியன் மொழிய ஞான மெய்க்குரு விளங்கத் தானே. 

பாடல் எண்:- 895
மானமும் புவியு மேரும் வாருதி யனுக்கிர கத்தால்
தேனெனு மொழியி னாளே திங்களு மருக்க னாலும்
ஞானம்வந் தமைந்த போது நாதவிந் தருளா லெய்தும்
கானெனுஞ் சூத வித்தை கைவச மாச்சு தாண்டே. 

பாடல் எண்:- 896
வேதியர் குலத்தில் யானும் வந்துதித் தளவை யெல்லாம்
சாதியென் பரைக்குள் வந்த சங்கட மெல்லாஞ்சொன்னேன்
சோதியா னந்த ஞானச் சுழிமுனை நடனங் கண்டு
நாதவிந் துதித்த சூக்ஷ ரகசிய மறிந்தே னாண்டே. 

பாடல் எண்:- 897
அனாதியாய் வெளியாய் நின்ற அரூபத்தை யறிந்தவாறும்
வினாடியான் பிரியா வின்பம் விந்துநின் றுணர்ந்த வாறும்
பணாமுடி மயிர்ப்பா லத்தில் பழம்பொருள் தெளிந்தவாறும்
கனவுபோல் கண்ட காட்சி கற்பத்தா லறிந்தே னாண்டே. 

பாடல் எண்:- 898
அன்னைதந்தை கருவுதனி லுதித்த வாறும்
அகிலமதில் யான்பிறந்து வளர்ந்த வாறும்
சின்னவய தளவில்கல்வி கற்ற வாறும்
தெளிந்துலகத் தோர்களுடன் சேர்ந்த வாறும்
நன்னயமாய்ச் சற்குருவை யடுத்த வாறும்
நம்பிசிவ பூசைதனில் நயந்த வாறும்
இந்நூல்மொ ழியாயிரத் தைந்நூ றுக்குள்
நேர்மையெல்லா மொவ்வொன்றாய் நிகழ்த்துவேனே. 

பாடல் எண்:- 899
அண்டபிண்டப் பிறந்தவர லாறுஞ் சொன்னேன்
அகண்டசத்த தீவுகளு மேருஞ் சொன்னேன்
மண்டலஞ்சூழ் வாரிமதி ரவியுஞ் சொன்னேன்
வாரமுதல் கிரகஉச்ச மாறல் சொன்னேன்
கண்டநக்ஷத் திரமதுவுங் கருவூர் நாடு
கருதொண்ணூற் றாறுஞ்சுட்ட கருத்துஞ்சொன்னேன்
எண்டிசை மஷ்டகுல வெற்புஞ் சொன்னேன்
எம்பிரான் வளமெல்லா மியம்பி னேனே. 

பாடல் எண்:- 900
நால்வகைக்கு ளெழுவகையு நவின்ற வாறும்
நாதவிந்தால் ஜெகம்படைத்த நாதன் வாறும்
தூலவுடல் சூக்ஷமதால் தொகுத்த வாறும்
தொல்லுலகில் சாதிகுலந் தோன்றும் வாறும்
சீலமுடன் பரைக்குள்வந்து செனித்த வாறும்
சிவகுருக டாக்ஷமதால் தெளிந்த வாறும்
பாலமதில் விழிபடைத்த அண்ண லார்தம்
பார்வையினால் யானறிந்து சொல்வே னாண்டே. 

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900