திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 701- 800

பாடல் எண்:- 701
எந்திரமாம் பிறவியெங்கே யெமனு மெங்கே
யிருவினைதான் சூழ்ந்திடலும் பரையிற் குள்ளே
கேந்திர மாநடன சங்கீத மெங்கே
கெர்வம்பிறந் துதித்ததெந்தன் பரையிற் குள்ளே
வந்தனமும் பெந்தனமும் பிறந்த தெங்கே
மகாமந்திரஞ் செனித்ததெந்தன் பரையிற் குள்ளே
அந்தரவா காசமிது பிறந்த தெங்கே
அண்டபிண்ட மெந்தனுக்குப் பரைக்கு ளாண்டே. 

பாடல் எண்:- 702
தேவாரம் பிறந்ததெங்கே திருவு மெங்கே
திருமந்திரம் பிறந்ததெந்தன் பரையிற் குள்ளே
தாவாரம் பிறந்ததெங்கே சைவ மெங்கே
சாத்திரங்கள் பிறந்ததெந்தன் பரையிற் குள்ளே
திவையேழு வாரம்வந்து பிறந்த தெங்கே
திதிவாரம் பிறந்ததெந்தன் பரையிற் குள்ளே
கேவலமா தெய்வமறை பிறந்த தெங்கே
ஜெகமுழுதும் பிறந்ததெந்தன் பரைக்கு ளாண்டே. 

பாடல் எண்:- 703
கங்கையும்வந் துதித்ததெங்கே கிரியை யெங்கே
கருத்துலகந் தழைத்ததெந்தன் பரையிற் குள்ளே
துங்கமணி யோசைசெனித் திருந்த தெங்கே
சோதிசுழி முனையதுவும் பரையிற் குள்ளே
அங்கமெல்லா மமைத்ததெங்கே ஆத்ம மெங்கே
அகண்டபரி பூரணம் பரையிற் குள்ளே
சங்கையில்லாச் சந்தனங்குங் குமப்பூ நூலுந்
தரணிமுத லென்பரையில் தழைத்த தாண்டே. 

பாடல் எண்:- 704
கொண்டலிடி காருமெங்கே குறிதா னெங்கே
கோடிரவி பிறந்ததெந்தன் பரையிற் குள்ளே
அண்டபிண்டம் பிறந்ததெங்கே யாகாச மெங்கே
அக்கினி மின்னலெந்தன் பரையிற் குள்ளே
பிண்டமெனு மெண்டிசையும் பிறந்த தெங்கே
பேருலகம் பிறந்ததெந்தன் பரையிற் குள்ளே
மண்டலமூன் றுதித்ததெங்கே வான மெங்கே
வஸ்துவெனுஞ் செனித்தெல்லாம் பரைக்குளாண்டே. 

பாடல் எண்:- 705
வித்திருந்து வந்தவரை வீட்டுக் குள்ளே
விதவிதமாய்ப் புவியதுக்குள் விளங்கும் வாறு
சித்ததினால் ஜெகம்படைத்த வாறுஞ் சொன்னேன்
தெளிவுடைய மகத்துகள்தா னறிந்து மேவும்
மற்றவர்கள் வாய்மதத்தால் தூஷிப் பார்கள்
மதபேத மெழுநரகில் விழுவார் மேலும்
எத்திசையுந் தழைத்துவுயிர் தாங்கும் போது
எழுவகையு மென்பரைக்கு ளமைத்த தாண்டே. 

பாடல் எண்:- 706
ஜெகதலமும் படைத்தவித மின்னஞ் சொல்வோம்
ஜெகத்திலுள்ள அனேகம்பேர் பொய்சொல் வார்கள் 
அகமகிழ்ந்து வுணரறிந்தோ ரறிந்து கொள்வார்
அறிவில்லா மூடரென்றால் விரிவு சொல்வார்
மகிதலத்தில் முத்திபெற்று வாழ்வார் வாழ்வார் 
மகத்துகளைத் தூஷணிந்தோர் நரகில் வீழ்வார்
ஏகபுவி படைத்தவகை யியல்பாய்ச் சொன்னேன்
இந்நிலத்தி லுள்ளவர்க ளினிகாண் பீரே. 

பாடல் எண்:- 707
ஒன்றான வித்துகளு மமைத்த சீவன்
உதித்தவகை சபைதனிலு முரைத்திட் டோம்நாம்
நன்றான சாதிபல விதம தாகி
நானிலத்தில் நானேதா னான்தான் காணும்
அண்டாத புரமெரித்த பரனுஞ் சொல்ல
அருள்கொடுத்துச் சாம்புவன்தான் மூர்த்தி யென்று
குன்றாத வுடல்பரை யென்று மாண்பர் 
கூறுதற்குச் சாஸ்திரவள் ளுவன்கா ணாண்டே. 

பாடல் எண்:- 708
திக்கிலுள்ள சாஸ்திரங்கள் விளங்கும் போது
திருமார்பில் பூநூ லணிந்து மேவித்
தர்க்கமிடும் வேதியர்கள் திரமுன் பாகத்
தளம்பெரிய வெண்களிறின் மீதி லேறி
எக்கியத்தில் விளைகின்ற அமிர்த முண்டு
ஏகசக்கரத் துய்யவெள்ளைக் குடையும் பெற்று
அக்கினியா தித்தன்மதி மூன்றுக் குள்ளே
அருள்பெற்றுச் சாஸ்திரங்க ளமைந்த தாண்டே. 

பாடல் எண்:- 709
விந்ததனில் நாதமது மிரண்டுங் கூடி
விளைகின்ற கருவிலுந்தா னுருவதாகி
இந்தவுல கந்தனிலும் பிறந்து யானும்
இல்வாழ்க்கை செலுத்திவர வீசன் பாதம்
எந்தைபிரா னடிதொழுது நூல்க ளாய்ந்து
இருவினைஎன் பயனறிந் திருந்தேன் யானும்
வந்தவகை யனைத்தும்பரை மகத்துக் குள்ளே
வாழ்க்கையெல்லா முதித்தவகை வசனித் தோமே. 

பாடல் எண்:- 710
பிறந்தபுவி தனில்வளர்ந்த பெருமை சொன்னேன் 
பின்புலகந் தழைத்தவகை பிரித்துச் சொன்னேன் 
சிறந்தெழுந்த ஜாதிகுல விளக்கஞ் சொன்னேன்
அருந்தமிழைத் தெரிந்தவர்க ளறிந்து கொள்வார்
அறியாத மாண்பர்களு மிகழ வேண்டாம்
இறந்தவுயி ரொடுங்கியுடல் போம்போ தந்த
இடுகாடு ஏகும்வகை யியம்பு வேனே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 711
அன்னையெனுங் கர்ப்பமதி லந்தமதி லேயிருந்து
நன்னயமாய்ப் பத்துதிங்கள் நானகத்தி லேயிருந்தேன்
என்னென்ன அதிசயங்கா ணிவ்வுலகி லேயமைத்து
உன்னிதமெல் லாமமைத்தே னுண்மையிது காண்கிலரே. 

பாடல் எண்:- 712
அம்புவியி லேயுதித்த ஆய்ந்துபரி பாஷைதன்னை
வம்புலகத் தார்வசிய மாய்கையடித் தேபிரிந்து
கும்பிதனி லேயுழன்று குண்டலிதன் பொற்கமலம்
நம்பியிருந் தேசில நாள் ரகசியத்தைக் காண்கிலனே. 

பாடல் எண்:- 713
அண்டரண்ட வான்புவியு மாகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்குங் காயமதி லேயறியும்
வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயொழித்தேன்
விண்டரக சியமதனை விளக்கமது காண்கிலரே. 

பாடல் எண்:- 714
வையமதி லேயுதிக்கு மாண்பர்களே உங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்
ஐயமில்லா வாழ்ந்துலகி லாண்மையகம் பூண்டமதி
பொய்யெனுமிவ வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 715
வீடான மூலச் சுழிநாத வீட்டில் விளங்கும்விந்து
நீடாகி லோகந் தழைத்துப் பெருகி நின்றிலங்குந்
தேடா தழித்த பொருளான பொக்கிஷந் தேடியென்ன
காடான நாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே. 

பாடல் எண்:- 716
எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியி லெய்திடினும்
பொழியச்சு ரோணிதம்நாதவிந்துட்பொருள் போதகத்தால்
கழியக்கழியக் கடலுயிர் தேய்பிறை கண்திமிருந்
தழியப் பெருந்துறை யென்னா ளிருந்து மநித்தியமே. 

பாடல் எண்:- 717
என்னா ளிருந்தென்ன முன்னாள் வினைப்படி யிந்தவுடல்
தன்னா லறிவதுந் தானறியா தென்ன தந்தைவிதி
உன்னா லழிவது முடலுயிர் காய மொழிவதுங்கண்
டன்னா ளனுப்படி கண்டு மிருந்தறி யாதவரே. 

பாடல் எண்:- 718
யோனிக்கு ளாசை யொழியா தநித்திய முங்களுயிர்
தேனுக்கு ளின்பஞ் சுகாதீத மோவருஞ் சிற்றின்பத்தில்
ஊனற்றுக் காய முடலற்றுப் போம்பொழு தொன்றறியா
ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகா டொழிய இனியில்லையோ. 

(வெண்பா)
பாடல் எண்:- 719
இந்தவுடல் காய மிறந்துவிடு மிவ்வுலகில்
வந்தவழி தானறியா வாழ்க்கையோ- இந்தவுடல்
அற்பக் குழியதனி லரவ மிருப்பதெனுங்
கற்பத்தை யாண்டிருமே காட்சி. 

பாடல் எண்:- 720
ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை யுண்டுபசி யாறினால்- ஞானமது
கண்டா லுடலுயிருங் காயம் வலுவாகும்
உண்டா லமிர்தரச முண். 

பாடல் எண்:- 721
சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்னகுரு
வழியறியார்க்கென்னவெய்தும் வாறுகாண்- சுழியறியா
மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
காலனவர்க் கேமரணங் காண். 

பாடல் எண்:- 722
வேத மறைஞான மெய்யுணர்வ தாமாகில்
நாதனரு ளால்பதவி நாடுமே- வேதமறை
நாலுபொரு ளுண்டுனது நற்பொருளின் வாறறிய
பாலுமது நெய்யெனவும் பார். 

மேற்படி (தரு)
பாடல் எண்:- 723
அரகரசிவசம்புவே யருள் புரியும்
பரமானந்தசின்மயகுருவருள் ஞானச்சுழிமதிமலர்பொழியும். 

பாடல் எண்:- 724
திருப்பெருந்துறையருள்மதிமயிர்பொழியுங்கருவூர்தனில்மேவிய
செழித்திடுஞ்சுழிதேனருவியாய்ந்துவழியும்
மருகருசுவம்புகழ்மூலச்சுழிலகுங்கரியுரித்துத்தரித்த
கதிர்கொண்டுபுரமெரித்தசிவசங்கரனே யருள்
திரிபுரமெரிதணல்கொண்டுவீசும்பரனேயெனை
யாட்கொள்ளவருஞ்- சிவசிவ உடலாவிவிட்டெழும்புமாகில்
சுருள்பம்பரமாடியசூக்ஷம்விட்டேகுதே- காயம்
நீர்மேற்குமிழிசுழிமுனையைவிட்டுச்சோபித்துச்சொக்குதேஆவி- அரகர. 

பாடல் எண்:- 725
ஊதுந்துருத்தியில்காற்றையுமேபிடித்தடைத்துப்- பொய்
யுடலெடுத்துமேவுகந்துவாழயான்மகிழ்ந்திருந்தேனேயாண்டே- மனம்
பேதமில்லாமலெண்சாணுடல்மாளிகையில்
பிரியாமலென்னுயிர்பிராணனுக்குமொருபிசகில்லாதிருந்தேன்- இனி
வேதஞ்சொல்லும்படிமாதர்கருக்குழியில்தசதிங்களிருந்துடன்
விளங்கிவாழ்ந்திருந்தலங்கிர்தமாகவே- கரு
நாதவிந்துண்மையை நானறியாமலுமே மிகமகிழ்ந்துபூருவம்
நாயகியாள் கருக்குழியில்வாழ்ந்தேனே- அரகர

பாடல் எண்:- 726
விண்ணுள்ளகாலமிவ்வாழ்க்கையையெண்ணியே- நான்
இருந்தென்னுடல்மெலிந்துடனுயிரலைந்துதேடியே- ஞானம்
நண்ணுதலேசிவநாதபரசுரூபமிருதாளிணையிலடி
நம்பினேன்அன்புஅருள்தருமம்பரமே- விழி
கண்ணுள்ளபோதருள்காட்சியளித்தருஞ்- சிவ
சாம்புவசதாசிவகாரணமானகடாக்ஷமெனக்கருள்வீர்- கெதி
உன்னுடலநம்பியுடலெடுத்தாவியதுமெஞ்ஞானசிரோமய
முதித்திடுந்தாரையிலோடி யொளித்தசைவே- அரகர. 

பாடல் எண்:- 727
கெங்கையிலெழுந்த பங்கயநீரதுபோலும் உடலதுக்குயிரினி
கீர்த்தியாய்வாழ்ந்துடல்நாற்றிசையிலுறங்குஞ்- சந்நிரன்
திங்கள்கதிர்மதியெங்குந்தழைத்தருளுஞ்சிவஞானப்பிரகாசமே
தெண்டனிட்டேஉயிரொண்டியாய்ப்போகுதே- சித
செங்கதிர் சந்திரன்போலுமிருந்துறவாடிஆக்கைதனிலுயிர்
சேடத்தையும்விட்டுப்பிரிந்துடனெழுந்துடனெழுந்தோடி- வன்னி
வெங்கனலோடிய விந்துநாதம்பிரிந்தேதான் பிராணவாய்வதுமிகவுந்
தேய்பிறையாகியமேதினிவாழ்க்கை- அரகர. 

பாடல் எண்:- 728
சூஸ்திரபொம்மையைப்போலப்பாத்திரமாகவுமெண்ணிஆண்மை
கொண்டாகமந்தொல்லுலகிலெந்தன்வாழ்க்கைசெலுத்தியே
திருமாத்திரையோடிருந்துழலுமம்பிகைபாகாமாசிலாமணியே
வள்ளலெனுமுயிருள்ளடக்கமாகுதே- சிவசிவ 
போற்றியசின்மயபூரணஞானப்பிரகாசம்சிவஞானசவுந்தர
புவியின் வாழ்க்கையைவிட்டுடலாத்துமம்பிறந்தே- யுடல்
சாத்தியதேகமிவ்வாழ்க்கையறிந்தவர்ஞானிபுவிதனில்- மிக்க
தத்துவந்தொண்ணூற்றாறுமறிந்தவர்கியானி- அரகர. 

பாடல் எண்:- 729
மாடுமக்கள்பெண்டிர்சுற்றமுமத்தமென்றாசை- வெகு
காலமிருக்கயான்வாழ்க்கையையெண்ணியும்வாழ்புவியிற்பிரியாமல்- இந்த
கூடும்பிரிந்துயரம்பரநாட்டினிலிலங்குங்குறியறிந்துடன்
கோமளவல்லிவாலாம்பிகைசீர்பதம்பணிந்தேன்- திரு
ஆடுஞ்சக்கரத்தினம்பிகைபாகனேயருளேயிருந்தஆவியென்னைவிட்டு
அப்புறம்போய்விடுமாகில்பின்னுந்
தேடும்பொருளதுவீடுங்காணிகளுமெய்யா- இந்த
ஜெகதலந்தனில்வாழ்வுமிகுத்திடுமென்னே- அரகர. 

பாடல் எண்:- 730
ஆதியனாதியுன் பாதங்கெதியென் றிருந்தேன் அதிபிரியத்துடனே
அற்பப்புழுக் குரம்பையிதென் றறியாம லென்னாண்டையே
நீதியாம் மெய்யென்று ஆணவங் கொண்டுலக நேராய்- பிர்ம
நேசமேவூணுதலா யிருந்திப் படியானே- சுழி
சோதிநீதி யறிந்தோதிடுஞ் சாம்புவன் காணும் உடலுயிர்களுஞ் 
சொக்கித் தேய்பிறையாய் மாயா வுடலுங்கண்டம்
ஊதிமூலத்தின் தாரையினாலு முடலு முயிர்களு
மூனெடுத்தே வெகுநாள்க ளிருந்துறவாடி- அரகர. 

பாடல் எண்:- 731
பாரில்பேராசைகொண்டுழன்றுவெகுபொருள்கள்தேடிப்
பரிதவித்துவிருதாவாச்சுதேயறியாமல்- கரத்தன்
சீறுமரவமுப்புரத்தையெரித்தசிவன்தாள்இணையடி
தெண்டனிட்டுவுயிர்ஒண்டியாய்ப்போகுதேஆத்துமாவிகிதம்
பேரிகைக்கொட்டிமுழங்க- சங்கீதங்களாலும்
பிராணன்பிரபல்லியத்தொடுவாழ்ந்ததுபொய்யதாய்ப்போச்சேமுன்பு
நாரியர்கையில்யான்சிக்கியிருந்ததுபோதும்- மாய்கை
நாட்டத்திலும்வெகுநாள்கழித்திடலாச்சே- அரகர. 

பாடல் எண்:- 732
மடலுக்குள்வாசமுமாறியேயோடுமேபிரிந்துஉயிர்
வளர்ந்தகாயஞ்சுடலைக்கரைதேடுதறிந்துபின்னும்
உடலுக்குளாவியொடுங்குதேபோகுதேயாண்டே- ஞான
உத்தமர்கள்சித்தமுறுதிபெற்றிடலாச்சு- வித்தை
கெடமலைக்குயிர்கீர்த்திபெற்றுலகில்வாழ்ந்தேன்- மனு
கேள்வியுதாரணம்ஞானப்பிரசங்கமாய்த்தெளிந்தேன்- வஸ்து
செடமதுக்குள்ளிருந்துமுலாவியநேச- முடல்
சித்திரப்பணிகளாபரணம்பூண்டிடும்வாசம்- அரகர. 

பாடல் எண்:- 733
எண்ணினவெண்ணமெனக்குதவாதென்னமாயம்- செயல்
இந்திரியநாதசுக்கிலசுரோணிதகாயம்- லபி
வெண்ணிடுஞானச்சுழிமுனைசூக்ஷவுபாயம்- வாசி
மேலுங்கீழுங்கண்டதாரையிலூதிடுஞாயம்- கடல்
தண்ணீரினாலுப்புகாரசாரமுண்டமாயம்- ஞான
தற்பறைசோதிசுகாதீதமார்க்கசகாயம்- குரு
புண்ணியத்தால்செய்தபூசாபலன்முன்னோர்வசம்- யோக
புத்திரனாகப்பிறப்பதுந்தந்தைவிசேஷம்- அரகர. 

பாடல் எண்:- 734
ஆணவமாய்கைகாமக்குரோதத்தில்மோகம்- அழிந்
தானபின்புத்திரபாக்கியத்தாலின்பசோகம்- தனம்
வேணுமாபரணபூஷணமாளிகைதாபம்- பின்னு
மேதினியாசைவைபோகத்தினால்சுகதேகம்- மனங்
காணும்பலகர்மத்தினால்செய்கைபோகம்- புரவி
கலியாணியேறிச்சவாரிபுகழவும்வேகம்- பொருள்
தோணும்துரும்பதுவாகும்பசிபதியாகம்- ஞான
சொர்க்கம்வந்தெய்தலுங்கற்பத்தினால்சொல்வதாண்டே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 735
நம்புதலாய் வாழ்ந்துவெகு நாள்கள் தானும்
நன்றுமனந் தன்னிலுந்தா னெண்ணி யானும்
அம்புவியில் மாடுமக்கள் பெண்டிர் சுற்றம்
அயிஸ்வரிய மிப்புவியி லறிந்தேன் காணும்
இன்பமுடன் சுகித்திருக்க இனிதா னென்று
இருந்ததெல்லா மேளிதமா யிழந்தேன் காணும்
எம்பிரான் விட்டகுறை யிருந்திட் டாலும்
என்னூரில் தடம்நோக்கி யியம்ப லாச்சே. 

பாடல் எண்:- 736
ஊழியுள்ள காலமெல்லா மொழிந்து போச்சே
ஊனோடே யுயிரொடுங்கி யூரிற் சென்று
ஆதிரை யான்விட்டுக் கடுத்த வீட்டில்
அருளுடனே பொருளாச்சு அடங்க லாச்சு
ஈழியற்ற விவ்வுலக வாழ்க்கை தன்னில்
ஏளிதமா யிருந்ததென்ன சுகங்கண் டார்கள்
யாழியுடன் மக்கள்சுற்ற மடவார் தானுந்
துணையாக ஒருத்தரிவர்க் காண்கி லேனே. 

பாடல் எண்:- 737
கருவிதனி லுதித்தசிறு காலி ருக்கக்
கணுக்காலும் பாதம்விர லைந்துங் காண
மருவுநகத் தொடுகண்டைக் கால்மு ழங்கால்
வளர்ந்தபெருந் துடையுடனே யிடையி ருக்கத்
திருவோடு வயிறிருக்க அரையி ருக்கத்
தேடியறி யாதலிங்கஞ் சுயம்பாய்க் காண
உருவான அறிவுபுத்தி மனமி ருக்க
ஒருத்தனுமா தனிவழியே யுடன்செல் வேனே. 

பாடல் எண்:- 738
ஆதரவாய் விசர்க்கந்தா னருகே காண
அடுத்தவுள்ளங் கைவிரலீ ரைஞ்சுங் காணப்
பேதமில்லாப் புறங்கைமுழங் கையி ருக்கப்
பெரும்பிடரி முதுகுவிலாக் கொடியி ருக்கச்
சாதகமாய்க் கண்டமண்ட லங்கள் மேவித்
தனித்துதவி யாகவென்னைச் சுமந்தி ருக்க
ஓதியே வேதாந்த மந்திர மிருக்க
ஒடுங்கிப்போ யொருத்தனுமாய்த் தனிச்சென்றேனே. 

பாடல் எண்:- 739
நல்லோர்கள் பெரியோர்கள் வாசந் தன்னை
நயம்பெறவுங் கேட்டசெவி தானி ருக்க
சொல்லாத முழுவசன முடைய நாவும்
சுகமான வாய்கள்தந்த மிதழி ருக்க
நில்லாத ஆங்கார முனையி ருக்க
நீலம்போ லொளிவிழியு மிருக்கத் தானும்
எல்லாரு மெனையெடுத்து வாழ்ந்தி ருக்க
இடுகாடு யோகிப்போ யொருவ னானேன். 

பாடல் பாடல் எண்:- 740
தாழ்வாயு மேல்வாயுந் தானி ருக்கத்
தனித்துவளர்ந் தெழுந்தவுண் ணாவி ருக்க
வாளான மேற்புரு வங்கீழ்ப் புருவம் 
வாசமெனு மூக்கிருக்க வழிதான் காண
நீள்வாசி யோடுகலை நாலி ருக்க
நிலைகாயா விரியெனுமா நிகழ்ந்தி ருக்கக்
கோளான கருவிவிட்டுக் கலையு நாலுங்
கொண்டொடுங்கிப் போம்பொழுது ஒருவனானேன். 

பாடல் எண்:- 741
அசவுபிறந் தவ்விடத்தி லவ்வுந் தோன்றி
அக்ஷரமா மவ்வெழுத்தில் நாடிதோன்றி
இசவதுவாய்க் கருவிதொண்ணூற் றாறுந் தோன்றி
யெலும்புதசை புடைநரம்பு இதுவுந் தோன்றி
நிசவுபழு வெலும்புவீ ரெட்டுந் தோன்றி
நேரான கொடுங்கைக ளிரண்டுந் தோன்றி
முசவுமுட்டுக் காலெட்டு வளையுந் தோன்றி
முதிர்ந்துசெனித் துருவாகி யொருவ னானேன். 

பாடல் எண்:- 742
இடையி னொடு பிங்கலையு மிரண்டுஞ் சேர்த்து
இயல்பான சுழிமுனையென் றுருவ மாகிச்
செடமதுக்குள் வழியதுவாய் வாச லாகித்
தேகமதி லுடனுண்ட செய்கை தன்னால்
மடமதுவா யிடுகாடு கந்த லாகி
வருமெண்சா ணுடலதுவாய் மடியப் பாய்ந்து
சுடுஞ்சுழியாய்ச் சூளையாய்த் துர்க்குழியு மாகித்
துர்ப்பாவை யினம்பதிய ஒருவ னானேன். 

பாடல் எண்:- 743
கருமீரல் செழுமீரல் பொலிவாய் நின்ற
களிதமாய் நாறலுமா பித்துந் தானாய்
வருபொருமல் செழுமலுமாய்க் கிருமி சூழ்ந்து
வகைதோறு வழியுடைய மலமு மாகி
மிருவுமுந்நூற் றறுபதுமுழக் குடலு மாகி
முப்பத்திரண்டு முழுப்பெருங் குடல தாகி
உருவெனுமாய் நவத்துவார வாச லாகி
யுதிரசுக் கிலமதுவாய் ஒருவ னானேன். 

பாடல் எண்:- 744
மலஜலவிந் திரியமெனு மதுமூன் றாகி
வச்சிரத்தோல் போர்த்துவழி பலவாய்த் தோன்றி
நலமெனுமூ ணரைக்கோடி ரோமத் துவாரம்
நாலெட்டு உறுப்பதுவாய் விரலிருப தாகி
விலகுயிர்நான் குயிர்க்குயிரா யென்சா ணீளம்
விரும்புநால் சாண்பெருமன் வாய்கண் மூக்கு
செவியுஞ்ச டம்பிருதிவி யதின்கூ றாகித்
திருத்தமாய்க் காலிரண்டு மொருவ னானேன். 

பாடல் எண்:- 745
கரமிரண்டும் பதினாறு கயிறாய் நின்று
கருதுவீ ணாத்தண்டு தெருவு மாறாய்
இலமேவு மெட்டுத்தூண்முப் பதுவுஞ் சந்து
எழுபதுபே ரெலும்புமுச்சா ணெலும்பு தானாய்
முதிர்முச்சா ணெலும்போடு சதையு மேவி
முக்கியமா யெண்பலமீ ரலுமாய்த் தோன்றி
உதிரமது நானாழி யுறுப்புந் தானா
யுடலதுநாற் பதுவாச லொருவ னானேன். 

பாடல் எண்:- 746
இனமறித லுதிரமாங் கிஷமு மேதை
யெய்துமத்தி தசையோடு சத்த தாது
வினவுபல முப்பத்தி ரண்டு மாகும்
விளங்கும்பழு பதினாறு மிகவுஞ் சேர்ந்து
முனைமுதுகு தண்டுபனி ரெண்டு கோர்வை
மிக்ககளஞ் சசைவதுவே யஞ்ச தாகிச்
செனனநரம் பேழ்சவ்வு மெலும்பு கூடிச்
செடலமதாய்ச் சதைமேவி ஒருவ னானேன். 

பாடல் எண்:- 747
நலமிந்தப் பிடரியினில் நாடி தோன்றி
நரம்புபின்ன லெழுபத்தீ ராயிரம தாகி
அலமிந்த அசவுடல்தான் துவைக்கல் தோன்றி
ஆருயிரும் நாற்பத்து ஆறுந் தானாய்த்
துலக்ககெனுந் தொழுகையிரண் டாயி ரத்துள்
துடர்ந்துவளர்ந் தேயிலகு மாயிரமா யென்னில்
பலபலவாய்ப் பதினாறு கோண மாகிப்
பதியகுண் டலியுமான தொருவ னானேன். 

பாடல் எண்:- 748
நாடிநரம் பெழுத்தீரா யிரத்தில் நலத்த
நரம்பதனில் புறநாடி தானே தோன்றிக்
கூடிநிற விஷ்ணுருத்திர நாடி யாகிக்
கூரான விடைகலைபிங் கலையு மோடி
மூடிமுது கெலும்புபழு பதினா றாகி
மூடுகெழுபத் தொருதுவாரக் குழியு மாகி
ஆடியதோ ரையுழக் குதிர மாகி
அசலெடுத்த வுடலதுவா யொருவ னானேன். 

பாடல் எண்:- 749
ஆதார மதில்நாழி வாதந் தோன்றி
அடுத்தமுன் னாழிபித்த நானாழி சேத்மம்
பேதமில்லா மூணரைக்கோடி ரோமத் துவாரம்
பிரியமெனு மெண்கோடி மலத்து வாரம்
சேதமில்லா வைம்பலமா முதிர மாகித்
திருத்தமாங் கிஷநூறு பலமூன் றாகி
வேதமாங் கெந்தமென் பலனு மாகி
விளங்குமிந்த வுடலெடுத் தொருவ னானேன். 

பாடல் எண்:- 750
விளங்குமுடல் ரோமநூற் றெட்டு கோடி
மேதையிரு நூறுபல மேல தாகிக்
களங்கமில்லாப் பெலத்ததோல் முந்நூல் றாறு
கருதுபல மாமாறு நிணம்ப லந்தான்
அளங்கமுந்நூற் றேழுபலங் குடலு மாகும்
அதிதமா மலம் வழுக்கை நாற்பலமு மாகும்
திளங்குஞ்சி வுரிதானுங் கண்கள் நாலுஞ்
சிறக்கநாற் களஞ்சதுவா யொருவ னானேன். 

பாடல் எண்:- 751
நாவுநாற் களஞ்சதுவா யுதித்த வாறும்
நற்கெந்த மூக்குமுக் களஞ்ச தாகி
மேவுமிரு கன்னநாற் களஞ்ச தாகி
யெலும்பெல்லா நூற்றொரு பலமா மென்க
ஏவவுமே யிறைச்சிபல நூற்றறுபத் தஞ்சு
வியல்பாகு முப்பலந்தான் மூளை யாகும்
தாவுந்தா மரைமொட்டு ஐயங்க ளஞ்சு
சலப்பையு முழுநிகள மொருவ னானேன். 

பாடல் எண்:- 752
எண்சாணு தேகமதாய்ப் படைத்த வாறும்
இயல்பான கருவி தொண்ணூற் றாறின் வாறும்
கண்பார்க்க வுடலெடுத்த காயக் கூறும்
கணக்காகத் தத்துவத்தின் கருத்தின் வாறும்
நண்பாக நாமெடுத்த வரலா றெல்லாம்
நலத்தவசை வதினுடைய நாட்டத் தாலும்
பண்பாக இந்நூலா யிரத்தைந் நூறில்
பாடுபட்ட செய்தியெல்லாம் பகர்வே னாண்டே. 

பாடல் எண்:- 753
மதிரவியாய்ப் பிரகாச வொளியாய் மேவும்
வாறிதினா லெடுத்தவர லாறு தன்னை
விதியறிந்த ஞானவெட்டி விளங்கு நன்னூல்
விட்டகுறை தொட்டகுறை யெய்து மாகில்
துதித்துமகிழ்ந் தகத்தீசர் பாதம் போற்றிச்
சூக்ஷமெல்லாம் வெளியாகச் சொல்வேன் காணும்
பதித்துகற்ப சாதனையைப் பகர்வே னாண்டே
பதினெண்பேர் பதம்பணிந் தர்ச்சித் தேனே. 

பாடல் எண்:- 754
திருவுருவாய் விளங்குஞ்சிவ ஞான சத்தி
ஜெகதலமெ லாம்படைத்த சிறுபெண் ணாத்தாள்
அருவுருவா யம்பிகைப்பெண் ணருள்தன் னாலே
அகண்டபரி பூரணமா யளவில் லாத
மருவுமலர்க் கமலவிதழ் மூலா தாரம்
மகிதலத்தி லிலகுவடி வான சோதி
கருவிருந்து நடனமிடுங் கருணை ஞானக்
கதிர்மதியை யின்னதென்று கருது வேனே. 

கற்பசாதனை
(தரு)
பாடல் எண்:- 755
அதிவிதகாயகற்பமருளுவேனாண்டே- சரஸ்வதி
அமிர்தசந்திரபுஷ்கரணிதீர்த்தமுண்டே. 

பாடல் எண்:- 756
மதிபொழிந்தனுக்கிரகபேரின்பத்தேன்மதுரம்- வஸ்து
வாருதிபானம்வாலாம்பிகையினருளமிர்தம்- சுழி
துதிபெருமூலாதாரத்திலுங்கருவின்பம்- நாத
சுக்கிலவிந்துசுரோணிதமும்பேரின்பமதி
விதியிதுகோசபீசமும்விந்துநாதம்- சூத
விந்ததுவும்கெந்திநாதமீதால்ரசவாதம்புகழ்
பேதிப்பதுமறுபத்துநாலுபேரைக்கட்டும்- வாசி
பேரண்டஞ்சுற்றியுமெட்டுமதிபதியாட்டம்- அதி. 

பாடல் எண்:- 757
நாற்பதுக்குள் கற்பமுண்டிடுவோர்க்கென்னபேதம்- வெகு
நாள்கள்கழிந்துநரைத்ததினால்சொல்லும்பேதம்- ஆனால்
கற்பத்தினருளமிர்தமேயுண்டுமறந்தால்- செட
அற்பமதாகியழிந்திடுமுகங்குறைந்தால்- இன்பம்
சொற்பமென்றெண்ணிடுங் கற்பங்கொண்டழிந்தோர்கோடி- சூக்ஷ
சுழிமுனையறியாதென்னமாந்தர்கள்பேடி- யுடல்
உற்பகமாசிபடாலிருந்தவர்க்கெய்தும்- தேக
மூத்தைக்குழியிலடிபட்டபேர்க்கென்னமுழுதும்- அதி. 

பாடல் எண்:- 758
விந்ததிசாரமுமப்புநதிகங்கைசாரை- மதி
மேவியசந்திரபுஷ்கரணியூசிநீரை- ரோம
இந்திரியமிதுவாரியமுரிகார்மேகம்- ஏழு
கடலுவரறுசுவையினில்வரும்வேகம்- அருள்
தந்தைவிதிகருநீர்பதினாறுடன்கூடி- சல
சாகரமாவதெண்சாணுடலுற்பவந்தேடிக்- கியான
மந்திரபஞ்சாக்ஷரமெனுமக்ஷரமுமாகும்- கற்ப
மாமதுவின்பத்தேனெனுமாமலர்சூழும்- அதி. 

பாடல் எண்:- 759
அதிகாரத்தினாலன்பத்தோரக்ஷரமிதுபானம்- உடல்
ஆத்துமாநீர்மேற்குமிழியிடுமிதுவானம்- ஆசை
மகாரத்தினால்செகமாதிதமுமயல்மோகம்- மத
மாசசரியகாமக்குரோதத்தினால்சுகபோகம்- வினை
யகாரத்தினாலெமனிப்படிபாசக்கயிறுகொண்- டுயிர்
எழுந்தெண்சாணுடலழிந்துபோய்விடுமாகில்- சனி
விகாரத்தினாலுமழிந்தேகபுவனமும்வாடி- மயல்
வின்பததினால்சுடுகாடுமரணமுந்தேடி- அதி. 

பாடல் எண்:- 760
அண்டசராசரபுவனமேயருள்படைத்தேன்- புகழ்
ஆதியனாதியறுபத்தினால்தீட்சைவிதித்தேன்- கரு
கண்டேனமுரியேகாக்ஷரமென்றதினாலும்காயஞ்- சித்திய
தாங்கற்பதேகவஜீகரத்தாலும்அது- நின்று
ஓராண்டுகொண்டற்புதமாய்ச்சரமாறி- யானும்
நிர்ப்பந்தமாய் வயிராக்கியமாகவுந்தேறு- வாரி
யுண்டேனமிர்தத்தைக்காலையுமாலைவிடாமல்- மித
மோடிடுஞ்சாரையதுநடுமையங்கோடாமல்- அதி. 

பாடல் எண்:- 761
துய்யவெண்சாரைமுன்பின்னகற்றிநடுமையல்
துதிசெய்துசிவயநமஓங்கிலியெனுமபையம்- கற்ப
மையமில்லாமலடிக்கடிமாறியில்லத்தில்- எந்தன் 
ஆத்துமாவீறிவிளங்கமென்மேலுமகத்தில்- தொழில்
வையகத்தோரிணங்காமல்தறிநெய்துமாறி- உடல்
வயிறுகும்பிகடைத்தேறும்படி செய்துமீறியானும்
செய்விதத்தால்பசியாறியொருபோதுமன்னன்- எந்தன்
ஸ்திரீயுடனேசீஷனாகவிருவருமின்னம்- அதி. 

பாடல் எண்:- 762
அகமில்லாமலவனிசஞ்சாரஞ்செய்யாமல்- தினம்
அமுரியேவணைஅகாரம்பொய்யாமல்கற்பம்
சுகஜீகரவின் பமதாகப்பேரின்பம்- மேலுஞ்
சுத்தஜெலம்செலவானதுபோகவுமமிர்தம்- நதி
பாகமாயோடுஞ்சமுத்திரநீரொருபாண்டம்- அது
பானமதைவெகுபத்திரமாகப்பிர்மாண்டம்- இது
ஏகவஸ்துவெனும்வன்னியிட்டெரித்துப்பார்- அன்னம்
மிகவுண்ணும்பதமேலுங்கறிவகைக்கூட்டும்- அதி. 

பாடல் எண்:- 763
இனமதாய்வருஞ்சுத்தசலப்பனிநீர்தான்
இடர்எங்கும்விடாமல்வெகுபதனமறுவகையைக்- கற்பங்
கனம்பொருந்தியகாயகற்பமுபவாசம்- செடங்
காந்திசுயம்புச்சுகாதீதசோதிப்பிரகாசம- பானம்
தினந்தினமறவாமல்சரமாரியுண்டேன்- உடல்
செங்கனலால்சிவந்தெழுந்தசூரியன்கண்டேன்- தேக
மனம்புத்திசித்தமாண்மையும்வெளுத்துநீறாச்சே- கோல
மாதுமரபதிசாரையறுபதால்போச்சே- அதி. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 764
வாரிபுகழ் மாமதுர வஸ்துவெனும் பானமதால்
வீரியமென் றேயிருந்த விந்துபா ழாச்சுதுகாண்
நாரியர்தன் மாய்கைவிட்டு நான்பிரிந்தே னேதளவால்
மாரிபொழிந் தேயமிர்த வாலைரச முண்டேனே. 

பாடல் எண்:- 765
மண்டலமெ லாம்புகழு மந்திரபஞ் சாட்சரத்தை
அண்டமெல்லாஞ் சோதனைசெய் தாகிலுமே யாரறிவார்
நின்றனுல காகிதமு நிராமயத்தைக் காணாமல்
கண்டேன்குறுமுனியால் காயகற்பங் கொண்டேனே. 

பாடல் எண்:- 766
உப்பதுவு மப்புமய மோகோதிரு மாலின்மயம்
அப்புவினால் முப்பாழ மைத்ததுகாண் சுன்னமதால்
செப்பிடிலுங் காயகற்பஞ் சென்றதுமோ ராண்டுவரை
இப்பொருளைப் பத்திரமா யிச்சையுட னுண்டேனே. 

பாடல் எண்:- 767
கற்பமிது அற்பமல்ல காயகற்பங் காலைரவி
உற்பகமூன் றாகுமுக்கா லுடன்கடிகை சென்றதின்பின்
விற்பனைகொண் டன்னைமிக வேதனைவா ராதிடிலும்
நிற்பவயி ராக்கியத்தில் நின்றுகடை யேறினனே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 768
வேதாகமத்தில் மறைசூழ்ந் திலகும் விந்துவிழி
ஆதார மாறுஞ் சுழிமூல சூட்சும மாரறிவார்
சூதான விந்து ரசசூத கற்பச் சுகாதிதங்காண்
நாதாக்கள் போற்று மறுநீ ரமுரி நதியறிந்தே. 

பாடல் எண்:- 769
தினங்கொண் டமுரி திங்களொன் றாகில் திகழமிர்தம்
புனல்வாரி சூழு மதுபான மாறு புகழ்கடிகை
மனங்கொண் டிடுமன்ன போசன முண்டு மதியையுண்டு
கனங்கொண் டிடுங்கற்பஞ் சரமாறி யேத்திக்கருதினனே. 

பாடல் எண்:- 770
மறுதிங்கள் மூன்று அதிகாலை யுண்டு மதியமிர்தம்
அறுமூன்றுந்தள்ளி மறுகடிகை சென்றான அளவதின்பின்
நிறுவாக ரத்தி லுணர்வான அன்னை நிமிஷமிராள்
கிருபா கரமது பானத்தி லேறியான் கீர்த்திபெற்றேன். 

பாடல் எண்:- 771
வருந்திங்கள் நாலு கடிகை யீராறு மதுரரசப்
பெருகும் புஷ்கரணி கடல்சூழ்ந்த வாரிபே ரின்பங்காண்
அரும்பொரு ளான அமுரியுண் டேனந்த வேளைதன்னிற்
குருவான போசனங் களிகூர்ந்து மேனிக் கூறுவனே. 

(வெண்பா)
பாடல் எண்:- 772
பூத்தமலர் வாசம் பொருந்துபரி பூரணத்தில்
வீற்றிருப்ப தஞ்சுதிங்கள் வெண்மதிகாண்- பூத்தமலர்
கடிகை பதினைந்துங் கண்டிதமா யுண்டமுரி
நெடியமல ரன்னமது நேர். 

பாடல் எண்:- 773
இந்தப்படி யதுமூன் றியல்பால் கடிகைதினம்
அந்தந்த நாள்பிசகா தாறுதிங்கள்- இந்தப்படி
முன்னாழி பின்குறையா மூன்றுகடி கைக்குமேல்
அன்னாளோ ராண்டுமது வுண். 

பாடல் எண்:- 774
வாலைப்பரு வம்வாதம் வருமுப்ப துக்குள்
காலைரவி கொண்டுஇது காண்கினுமே- வாலை
நாற்பதுக்குள் மேலதிக நற்பொருளை யுண்பவர்கள்
சீலமருள் காலையன்னஞ் செப்பு. 

பாடல் எண்:- 775
பத்துமொரு வஞ்சகம் பதினைந்து மொருபத்துங்
கற்றுணர்வ திவ்வயது காண்கிலார்- பத்தியுடன்
உச்சியொரு வேளை யுணர்வீரா யன்னமது
இச்சையுடன் கொண்டுணர்வ தின்பம். 

(விருத்தம்)
பாடல் எண்:- 776
அரிவிந்து மதியமிர்த மதுர வாரி
அவ்வெழுத்தில் பிரணவமா யரவம் பூண்டு
நரியுரியிந் தரித்துசிவ ரூபமாகிக்
கருக்குருவாம் நாதவிந்தின் கருத்தி னாலும்
விரிந்துபல பலவிதமாய் விளங்கு ஞான
வெட்டியரு ளாயிரத்தைந் நூற்றுக் குள்ளே
துரியபொருள் சூக்ஷமெல்லா மாய்ந்து கற்பஞ்
சொல்வன்னி யாண்டை யிந்நூல் சூக்ஷந் தானே. 

பாடல் எண்:- 777
நாதசத்தி பிருதிவியாய் மூலந் தோன்றி
நாதாந்தப் பேரொளியா யுகாரந் தோன்றிப்
பாதமடி சுழிமுனைக்கு ளளவில் லாத
பரப்பிரம சுரூபியதாய்ச் சுகாதீ தத்தில்
மாதாந்தந் தோன்றிநவ நாதத் துள்ளாய்
மண்ணுள்ள தாய்ப்பிர ஞ்சவாழ்க்கை போலும்
ஆதாரங் கீழ்மூலச் சத்திக் கூறின்
அளவெல்லாம் யானுரைப்பே னாண்டே கேளீர். 

பாடல் எண்:- 778
ஓராண்டு அமுரியுண்ணக் காலை மாலை
உச்சியொடு வெகுஉபமா யுட்கொண் டேபின்
மாறாத கனல்வேக மதிக மாச்சு
வன்னியினா லெரியுமிக வளர்ந்து போச்சு
வீறாம லென்னுடலம் வெந்து போச்சு
வேட்கையினால் தேகமெங்கும் வெடித்துப்போச்சு
மீறாது வென்றுமன மிகவும் விம்மி
வேதனைகொண் டேயிருந்த விதிதா னாண்டே. 

பாடல் எண்:- 779
இந்தவித மாயிருந்து கவனங் கொண்டு
இருக்குமந்த வேலைகுரு முனிதான் வந்து
மைந்தனே யென்றழைத்து மகிழ்ந்து முத்தம்
மனதாரக் களிகூர்ந்து வாராய் பிள்ளாய்
சிந்தையுனக் கென்னசிவ ஞானதேசி
ஜெகத்தனிலும் வெகுகோடி காலம் வாழ்வார்
முத்தியுனக் குபதேசந் தந்தேன் தந்தேன்
மூவுலகில் சித்துவிளை யாடு வாயே. 

பாடல் எண்:- 780
கருக்குருவை யரிசிபசும் பயறு மாவின்
கருதிடில்வெண் ணாவின்பசும் பாலுங் கூட்டி
ஒருபோது மன்னஞ்சமைத் துண்ணம் போது
உடன்கூட்டு மமுரியுப்பு உண்டால் மோக்ஷம்
குருவருளை மனதிலெண்ணி ரவியி லன்னங்
கொள்ளுமதி ராத்திரியி லாவின் பால்கொள்
அரும்பொருளை மறவாதே யோராண் டாகில்
அதிகாலை யமுரியுண்டு மதியி லாண்டே. 

பாடல் எண்:- 781
அருளெனும் ரவியிருபத் தஞ்சு நாழி
யானபின் மூலமென்ற புளியி னேர்மை
கருவுருவென் றெடுத்துஅந்தி கருணை மேவிக்
காரமதி லமுரிவிட்டுக் கண்ட மாத்திரம் 
திருவுருவா யுண்ணையிலுங் கார சாரம்
செய்விதமா யுபமாகத் தீட்சை யொன்றாம்
மருவுகந்த வாசமல ரன்னந் தண்ணீர்
வசனமது போலமுரி கார முண்ணே. 

யோகசாதனை
(தரு)
பாடல் எண்:- 782
ஆனந்தபூரணதிவ்யபரிமளகெந்தம்- சுழிமுனை
ஆதாரமூலச்சுகந்தசுரோணித அந்தம். 

பாடல் எண்:- 783
ஞானசுகாதீதசூக்ஷசடாதார- பீடம்
செகநாதப்பிரகாசப்பிராணலயமேவியமாடம்- கதிர்
வானஞ்சூழ்சாகரமேருதீவாந்தர நாடு- புவி
மதிதலங்கருவூர்வளர்நாட்டினில்வீடு- மலை
சோனையருவிசூழ்பானமளாவியசீலம்- மதிவளர்
சோதிமணிசித்திரக்கூடமளாவிய மூலம்- புனல்
கானலுலாவியசிவசிங்காதனமேரு- சத்தி
காரத்தினாலளவில்லாச்சரக்கெல்லாநீறு- ஆனந்த. 

பாடல் எண்:- 784
அந்தத்திலுமூல ஆக்கினைமேவம்பிர்மாண்டம்- அனல்
அக்கினிசூழும்ரவிகதிர்வன்னியைக்கண்டோம்- இவை
சுந்தரநாதச்சுரோணிதசூரியகாந்தி- எங்குஞ்
சுடரொளிவெளிபிர்மகபாலமுமேந்தி- நாபி
உந்தியின்கீழ்வரை கந்தமூலவர்க்கக்கனிதான்- உப்பு
உவரென்றால்மூலப்புளிநவநீதமினிதான்- வர்னஞ்
செந்தூரஞ்சோதிஅமுதுவிளங்கியதங்கம்- திரு
மாலுடன்தங்கைசரஸ்வதிமேவியஅங்கம்- ஆனந்த. 

பாடல் எண்:- 785
அம்பிகைவாலையபிராமியென்றும்பிரசங்கம்- திரு
அண்டரண்டபகிரண்டமளாவியசிங்கம்- திரு
நம்பியிருந்துலகாதீதம்புகழ்நாதம்பிருதிவி
நாட்டத்திலுங்காயகற்பமுண்டோரசவாதம்- இன்பங்
கும்பிதனிலிருந்தேநடனம்புரிவாசி- ஏமங்
கோரக்கர்மூலிசடையென்றுமேபரதேசி- பழம்
வெம்புங்கனியென்றுஎங்கும்பிரகாசமாம்வீசும்- இந்த
வீடுதனில்ரெண்டுவெளிதனிலொன்றுநேசம்- ஆனந்த. 

பாடல் எண்:- 786
சங்கப்பிரசங்கசிங்காரமாயெங்கும்பிரசங்கம்- புவி
தனித்துபார்க்கசவுக்காரமாம்பொங்குமேவங்கம்- கோசம்
லிங்கத்தின்கீழடிவாரத்திலும்பின்னாக்கீசம்- உண்ட
நிர்மலநிர்க்குணபாரையென்றும்நிருவாசம்- அருள்
அங்கத்திலுமெண்சாண்கும்பிதனில்மலக்கூடு- அதை
ஆராய்ந்துபார்க்கஅனேகங்கண்காட்சிதான்காடு- பரி
தங்கமெனும்வடிவானவாலாம்பிகைசுரூபம்- இதைச்
சார்ந்துகொண்டுபரிசோதிக்கும்எங்கும்ரூபம்- ஆனந்த. 

பாடல் எண்:- 787
மானுமழுவுமதிமலர்சூடியவாசம்- சத்தி
வாறுவென்னால்சொல்லஎட்டலையிப்படிநேசம்- மூலம்
நானுமென்னாண்டையுன்பாகங்தகதியென்றுநம்பி- வாசி
நானறிந்திப்படிஞானயோகந்தனில்- கும்பி
ரசந்தேனுமேமதுபானமதுரமோராண்டு- கற்பஞ்
சென்றுஈராண்டினில்தோகக்கசடுபோம்கண்டு- செடம்
ஊனெனுமையத்துறக்கமற்றுச்சிவயோகம்- வாசி
உற்பகமூலசிவராச அம்பிகாயோகம்- ஆனந்த. 

பாடல் எண்:- 788
காயந்ததனில்கசடானநீர்களெல்லாமொழிந்தேன்- கற்பச்
சாதனையாலெமனவனென்றவினையொழிந்தேன்- வாசி
தேய்பிறையென்றசுவாசத்தினால்வெகுகாலம்- சிவ
யோகஞ்செய்துமுத்திமோக்ஷமடைவுஞ்சீலம்- இனி
மாயாசத்திகிரியாசத்தியினால்வளர்பிறைதான்- மூல
வாசிவசமாகநாதசத்திகற்பத்துறைதான்- கக்கும்
நாயிலுங்கடையாகியவள்ளுவனாண்டே- ஞான
சித்திதனில்முத்திமோக்ஷவடையவுங்கண்டேன்- ஆனந்த. 

பாடல் எண்:- 789
வேதத்திலும்பொருள்மாதுவாலாம்பிகைநாதம்- சத்தி
யோகத்திலுஞ்சிவஞானசுகாதீதபோதம்- பஞ்ச
பூதத்திலுமூலகுண்டலியாதியனாதி- ஞான
போதத்திலும்பேரானந்தமகாராஜயோகம்- கியான
போதத்திலுஞ்சத்திபொக்கிஷசூத்திரங்காணும்- இந்தப்
புகைப்பொருள்திறவாதென்னவாகிக்கவேணும்- இது
காதற்றவூசியறியுமகத்துகள்- பேதம்
கைகாட்டத்தொடுகுறிகண்டப்புளிநாதம்- ஆனந்த. 

பாடல் எண்:- 790
காயமென்றமதுபானமமுரியில்தானும்- ரவி
சத்தியெனும்மூலப்புளியதிலூட்டியானும்- கற்பந்
துறையெனப்படிகடிகையிரண்டுபத்தஞ்சில்- அந்த
சுகந்தமாமலர்மூலப்புளிகற்பமென்சொல்- பரை
உரையெனப்படிஅந்திவருநிகழ்காலம்- உப
முணர்ந்துஇவ்விதவாண்டுவருமதிகாலம்- இருள்
திரைவிலக்கிரிபாயமாயுண்டிடுங்கற்பம்- தினந்
தெசதிங்கள்வரும்பருவத்தில்கற்பமுவர்ப்பே- ஆனந்த. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 791
அருணனுத யத்திலதி காலைமுதல் கொண்டமுரி
வருணசல புஷ்கரணி வாருதியை யான்மறவாத்
தருணமிது பத்துமஞ்சுற தாண்கடிகை மேலதிதல்
கருனையுட னுண்டுமிக்க காரமதைக் கண்டேனே. 

பாடல் எண்:- 792
காரமுடன் சாரமதுங் காலைதள்ளி மாலைதனில்
பூரமென்ற மூலமிந்தப் பூரணத்தைக் கூட்டியேநான்
நேர்வுரு வாக்கிபதம் நேர்மைதவ றாமலுமே
சீரதுவா யுண்டுவரத் தேகமொளி வானதுவே. 

பாடல் எண்:- 793
சூரியன்போல் காந்தியொளி சோதிமின்னல் போலுமுடல்
வீரியமா யானுணர வேகமொரு திங்களிலும்
ஏறிவிடுஞ் சுன்னமர மிந்திரிய நீர்வரும்போல்
தேறிமன் னீரதுவாய்த் தேகமிந்தக் கூறாமே. 

பாடல் எண்:- 794
பச்சைப் பசைந்துமண் பாருஞ்சல நீர்ப்பசுமை
உச்சிதமென் னாலுரைக்க வொன்றுவிட்டு ரெண்டுதிங்கள்
வைச்சபொரு ளெய்தும்பசு மஞ்சள்நிற மாய்வருதல்
மச்சமிதை யானறிந்து மார்க்கமினிச் சொல்வேனே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 795
திங்களு மூன்றில் மதுவாரி நாதஞ் செழுங்கனல்போல்
பொங்குநீர்பாய்ந்து வருபோது வண்டுபொன்னுருவாய்த்
தங்கநிறந் திங்கள் நாலுக்குநாள் ளேவருஞ் சாரையது
மங்கைப் பருவமஞ் சாகிடுந் திங்கள் வளர்பிறையே. 

பாடல் எண்:- 796
வளர்பிறை யஞ்சில் புளியதும் வாங்கி வாலைரவி
குழையப் பிசைந்து நீர்விட்டுக் கூட்டிக் கொடுரவியில்
இழையவும் வைத்திரு சாமஞ்சென் றாகு மினியதுபின்
பழையப் படியுவர் மேலும் படித்து பகருவதே. 

பாடல் எண்:- 797
பார்க்க விப்பாகம் வரும்பதம் பார்த்துப் பிசைந்த மண்ணைத்
தீர்க்கமதா யுண்டு செய்வித மாறு திங்கள்தனில்
ஏர்க்க விவ்வாறு யிரவிசெம் மானிடு யிவ்விதங்காண்
ஆக்கறி யாமல் பசியாறி யுண்டு யறிந்திலனே. 

பாடல் எண்:- 798
உதிரம் பெருகிப் பசுமைய தாய்நரம் போடிருக்கும்
மதுரம் புளகித்துச் சத்தேழு திங்கள் வாருதியும்
விதுரம் பிறந்து தேகாதி தேக மினுமினுப்பாம்
மதுரமெல் லாஞ்செழுஞ் சூரியன் போல்வரும் பாரிதுவே. 

பாடல் எண்:- 799
எட்டினில் திங்க ளுருவாகிப் பிண்டமெண் சாணுடல்போல்
முட்டி விலாவு மிருபக்கஞ் சூழ்ந்து முடுகியுதைத்
திட்டுக ளோடி வயிறுதொந்துள் விம்மித் தேகமெல்லாங்
கட்டி யிழுக்கு மடமாதுக் கேயது காரணமே. 

(வெண்பா)
பாடல் எண்:- 800
சோர்ந்து மனம்வாடிச் சூழ்ந்துவரு நித்திரையும்
கூர்ந்துமிக நானிருந்த கொள்கைபார்- சேர்ந்துமிக
மாய்கை மசக்காகி வாந்திமிக வுண்ட அன்னம்
பாய்ந்துவிடும் வாய்வதும் பார். 



Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900