திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1601- 1700


பாடல் எண்:- 1601
குளிகையிதுவேகஞ்- சித்திக்- கொங்கணர்க்கிந்தமுறையளித்தேன்
அழியாதுமூலப்புளி- சரக்- காகிடிலும்புடமஞ்சதுகாண்
வழியாயதில்பதிந்து- வன்னி- வாட்டிடவுமுதலென்றெரிவு
சளையாதிரண்டுமூன்றும்- நாலுஞ்- சங்கையில்லையஞ்சுதானெருவாம்
அஞ்சுபுடமதுகாண்- ஆச்சு- ஆகிலுமேயண்டரண்டங்களும்
வஞ்சமதாயுரைக்க- எந்தன்- வாக்கியங்காணிந்தநூல்பிசகா
நெஞ்சறிவாலுரைத்த- வாசி- நேர்மையினால்குளிகைபாய்ந்திடலாம்
பஞ்சபூதமென்றால்லவோ- கொண்டு- பாய்ந்திடலாங்குளிகைவாயிலிட்டே- தன. 

பாடல் எண்:- 1602
நவலோகமும்பழுக்கும்- நவ- ரத்னங்கள்சத்துச்செந்தூரம்
இவையாகியதயிலம்- இந்த- திராவகங்காணும்வெகுபதனஞ்
சவமாகிலுமெழுந்து- செடஞ்- சாத்தியமானாலெழுந்திருக்குஞ்
சிவனாகிலுமிதனை- வெல்லச்- சித்துகளுண்டோக்ஷணத்திலுந்தான்
தாம்பிரம்பத்துக்கொன்றில்- தச- மாற்றதுகாணுஞ்சந்தேகமில்லை
வாமிந்தப்படிதானுந்- தயிலம்- மாட்டிடவுநவலோகமெல்லாம்
ஆமிந்தப்பத்தரைகாணேன்- எந்தன்- ஆண்டவன்சொற்படியானறிந்தேன்
நாமிந்தப்படிபார்த்து- ரச- சூதமோட்டிலிட்டுவன்னிட்டே- தன. 

வேறு- விருத்தம்
பாடல் எண்:- 1603
ஒருகடிகை கமலவன்னி ஓகோகோ
வொருமரத்தின் கம்பால் தீதான்
வருங்கடிகை பத்துக்குள் வரும்வேகங்
கட்டியது வலுக்குமாகில்
சுரூபமென்ன மூலப்புளி சுண்ணமென்
றதுகவசஞ் சூட்டி யஞ்ச
அருஞ்சிலை மூன்றுசெய்து அஞ்சுபுடம்
போட்டெடுக்க அதித மாண்டே. 

பாடல் எண்:- 1604
சூதமென்ற யானையது நாதவெனும்
விந்தளவில் சுருக்கு மேறி
வாதமென்ற ரசவாதங் கிடுகிடென்று
நடுங்கியே வாய்க்குஞ் சித்தி
காதமல்ல தூரமல்ல காரசா
ரத்தளவால் கண்டுண் டேறிப்
பேதமில்லாக் குளிகையது வெள்வங்க
நீர்குடித்துப் பின்பு ஆண்டே. 

பாடல் எண்:- 1605
புடத்துக்கோ ரொருவதனம் புகழ்நூறு
சாரணையில் புதுமைகாணுந்
திடப்படுத்தும் ரசகுளிகை மூலப்புளி
கவசமதாய் ஜெயமே யாகுந்
தடமினி வங்கமிட்டுச் சேருருக்கிக்
குளிகையிடச் சலநீர் வாங்கும்
நடனதிரு வம்பிகைப்பெண் ணருளதனால்
ரசிதமது மீரைஞ் சாண்டே. 

பாடல் எண்:- 1606
இக்குளிகை பாலிலிட்டு எடுத்திடவும்
பால்கள்சுண்டி யிருக்குமாகில்
அக்குளிகை வாயிலிட்டு அங்கென்றுங்
கண்டத்தி னளவா யூத
சக்கரம்போல் கழல்மூல சரக்கிருக்குஞ்
சார்வில்நின்று சாதித்தாக்கால்
உக்கிரமா யண்டரண்ட மொருநொடிக்குள்
சுற்றிவர லாகுமாண்டே. 

பாடல் எண்:- 1607
இத்தயிலம் ரசிதம்பதி னாறுக் கொன்று
ஈந்திடவும் வயதுபத்து மேன்மே லாகும்
சுத்த அயச் செம்பதுவா மிரும்பைக் காய்ச்சிச்
சுருக்கேற்றத் திராவகத்தால் சுயச்செம் பாகும்
வித்தையென்ன விதுஅயமும் ரவிபோற் காய்ச்சு
மின்னலொளி வாகும்பதம் பூசும் போதில்
சத்துகளெல் லாம்பிரிந்து களிம்பற் றேபோய்த்
தாம்பரமா மல்லியின்பூச் சாற தாமே. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1608
அயமதுவின் செம்புருக்கி நாகபற்பம்
அருளிடவு நூற்றுக் கொன்று
சுயமீதாம் வயதுபத் தரையெனவு
மகத்தீசர் சொல்லும் சூட்சம்
பயமேது பரிவேதை பாடியதோ
ஞானவெட்டிப் பலித மாகுந்
தயிரியமாய்ச் செம்பெடுத்து நாகபற்பந்
தனைகொடுக்கத் தங்க மாண்டே. 

பாடல் எண்:- 1609
குற்றமொன்றும் வாராது குறைவேது
குடவனதும் நூற்றுக்கொன்று
சித்தான திராவகத்தா லுருக்குமுகந்
தனில்சுருக்கச் செயமு மாகும்
வித்தான வயதுபத்து வெள்வங்கம்
நானூற்றுக் கொன்றே யூட்டப்
பத்தான வயததுங்காண் பரீட்சைபார்
நவலோகம் பத்து மாற்றே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1610
திராவகத்தில் குன்றியெடை கிருதத் தூட்டித்
தினமிரண்டு அதிகாலை மாலை யுண்ண
நரைதிரையு மண்டலத்தில் நாடி யோடும்
நரம்புகளு மிறுகிவந்து நன்றாய்க் கட்டுங்
கரைகளில்லை துறைகளில்லை தொந்தங் கோடி
கற்பமுண்டு கனகபரி வேதை செய்து
முறைபிசகா மூலப்புளி சுண்ணத் தாலும்
முடிந்ததுகாண் காயசித்தி முப்பு வாண்டே. 

பாடல் எண்:- 1611
தெளிந்தவர்கள் ஞானவெட்டி யெடுத்து ஆய்ந்து
செயநீருந் திராவகமுஞ் செய்தா ராகில்
களிவேது காயகற்ப மதுங்கு ரெட்டி
கற்பநோய் பிணிகளெல்லாங் காணா தோடும்
அழிவதில்லை யுடலுயிரும் வினைதா னேது
அண்டபுவ னங்களுள்ள காலம் வாழ்வார்
சுழியின்முனை யிடைகலையின் சூக்ஷங் கண்டால்
சுகாதிதத்தி லிருந்துசுக மறியா ராண்டே. 

பாடல் எண்:- 1612
இத்தயில முண்டிடுவோர்க் கென்ன பத்தியம்
இயல்பான ஆவின்பால் கிருத மாகும்
சித்தமதாய்க் கற்பமதுக் கான பத்தியஞ்
சிவயோகி யவர்தனக்குச் சொன்ன வாறு
உத்தவறு சுவையகற்று ஞானிக் காகும்
உள்ளபடி யுண்டுகரை யேற லாகும்
கற்றறியார் தயிலமது வினைநோய்க் குண்டால்
கணக்காகும் புளிபுகையும் கருதி டாரே. 

பாடல் எண்:- 1613
கறிவகையில் வெள்ளாடு முசலு முள்ளான்
கவுதாரி காடையுமாங் காணீர் காணும்
பிரியமுட னாவின்பால் கிருத மாகும்
பிசகாது புளிபுகையுந் தள்ள லாகும்
குறிப்புடனே குக்கிடமு மச்சந் தானுங்
கூட்டிடமே லாகாது குரூர மாகும்
அறிவுடையோர் வியாதியறிந் தகற்ற லாகும்
அதீதகுறை சொச்சமில்லா தருளு வேனே. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1614
சீர்மேவு மகாமேக பூபதிலே
கியங்காணுஞ் செப்பக் கேளீர் 
கார்முகவ னருள்தெளிந்து அகத்தீசர்
கமலபதங் கருதி யானும்
பூமேவு மவிழ்தமதும் புவிதனிலு
முட்கொண்டோர் புகழ்ந்து வாழ்வார்
தார்மேவுஞ் செனகாதி ரிஷிகள் பதம்
போற்றியிதைச் சாற்றுவேனே. 

மகா மேகபூபதி லேகியம் (தரு)
பாடல் எண்:- 1615
மகாமேகபூபதிலேகியங்காணும்- மதிரவியொளிமேவிய
செகாதீதசெயராஜபூபதியிதுகாணும். 

பாடல் எண்:- 1616
சுகாதிதசுகசுழிமுனையருள்திரு அகாரகாரணஉகார
பிரணவமகாரமாமலர்மருவியஒளியினில்
சிகாரஓம்பரிபூரணகுண்டலிதிருவம்பலகுருபரசிவமலரடி
கமலந்தனிலருளமிர்தமதிபொழியநிரூபந்தனில்வடிவாம்பிகையெனைமகிழ்
அவிழ்தங்களில்மிகு அதிகமருள்பெறவும்- மகா. 

பாடல் எண்:- 1617
காரசாரசெயகருதியலவணமும்
பாறைசீனம்வெங்காரதுஞ்சாரமுந்
தாரபூரசவ்வீரமுங்கெவுரியும்
பாரகெந்திபாஷாணமிங்கிலிகமுந்
தனையருள்ரசமனோசிலையதுசூடனு
மிணைதசஇடையரைபலமினிதிடமிது
விடைவகைகரிசமனருள்பஞ்சலவணமுங்
கடவுளினருள்பெறஅடவிதுபொடிசெய்து- மகா. 

பாடல் எண்:- 1618
சீரகமுங்கருஞ்சீரகமிளகதும்
வேருங்கோஷ்டம்வேர்க்கொம்புடன்திப்பிலி
கருஓமங்குரோசாணிவால்மிளகதும்
தேவதாரமக்காரமரத்தையுஞ்
சீறுநாகமலரதிமதுரஞ்செவ்வியம்
மீதுபிதுரோகணிகூகைநீர்பறங்கியும்
சிங்கிவெட்பாலைகார்கோலந்தாணியு
மிங்கிதமெனுங்கடுக்காயுடனிவையதும்- மகா. 

பாடல் எண்:- 1619
தேவதாரிமுக்கத்தாரிசங்குப்பியும்
வேலியுங்கொடிவேலிவெண்சாரணை
வில்வம்விடதாரிவிலாமிச்சு
மொழிஞ்சியுமழிஞ்சியுமூக்குறாவிது
மிளகருணைசெம்பருத்திவேர்விழுதியு
மேனிவெள்ளறுகுவெள்நொச்சிவெண்காக்கணம்
விழிபொத்தியுடன்சிவனாரதன்வேரது
முன்னையுங்கெருடனுமுசுட்டையின்வேரதும்- மகா. 

பாடல் எண்:- 1620
வகையாகியவகைபலமரைசரிசமன்
உகையாய்க்கதிர்முகமொழிவதுபடரவி
திகையாய்வன்னியுமனலில்பொன்னிறந்
துகையாய்ச்சூரணமினமிதுதுடிபெறு
மிடியினம்பொடிபடமிகுபதமிடைகுறை
மறுபடிவெகுபதமுறையுதுவடிசெய்து
பொடியினையருள்சுழிகெதிபெற- மகா. 

பாடல் எண்:- 1621
மதுரசஞ்சீவியதுஇடையரைப்படி
பதியக்கிருதம்பசும்புரவிளநீரதும்
மதித்தாளிதனிரதுசரிசமனிடை
விதிமதாய்ப்பஞ்சதாரைபன்னீரதும்
விசிதமிதுகருதிவிகிதரைபதமு
மிரதினணலிலினைமிகவும்வன்னியடா
வினவுங்கமலதீபஞ்சுகவீதரணைபதங்
கொதியும்மதிபுகலஅதிதபாகுவறிதல்- மகா. 

பாடல் எண்:- 1622
வருதலால்தருப்பரமிதுவருதிடில்
கருதிடில்சரக்கதுபொடியிடவினில்
கருத்ததாகியேகிளறிடில்கருகிடா
துரிதமாய்வகைசூரணமிடுபதம்
விதமிதையெடுசுடரதுபகைமுறிபட
கலவுந்தழவுணரிதுபரிமளமென
தணலினைகனல்மறியெனமிதுவசிகரம்- மகா. 

பாடல் எண்:- 1623
சுகமதாயிறக்கியதிலிடுமருந்தினைப்
பதமாய்க்குரோசனைபுழுகதுவதுமிக
தகமைகஸ்தூரிகுங்குமஞ்சவ்வாதுடன்
உகமையாயிடைகழஞ்சியில்வகையினை
மகிழ்பெறப்பொடியிவைகலறவுங்கிளறிசை
கெடிபெறுமவுழ்தமுந்தடியடிவினைமதை
கடிவிஷமுதல்பிணிமடியவுங்கடல்புகல்
நெடியலேகியம்வெகுபதனம்பதனமிது- மகா. 

(வேறு-விருத்தம்)
பாடல் எண்:- 1624
அம்புவியில் கற்பமுண்டு ஆண்டையினி
நோய்கள்வந் தணுகு மாகில்
நம்பியிந்த மகாராஜ பூபதிலே
கியமிதனை நாடுங் காலை
வம்புசெய்த நோய்களதும் வரும்வினைகள்
பயந்தோடி மடியுங் கண்டாய்
செம்புலிங்கர் பதம்போற்றி லேகியத்தை
வெகுபதனஞ் செய்வீர் தானே. 

பாடல் எண்:- 1625
வாலையெனு மம்பிகையின் மலர்ப்பதமும்
பணிந்துமதி யமிர்த முண்டேன்
மூலமெனக் களித்துபுளி சுண்ணமதின்
சூக்ஷமெல்லா முணர்ந்து மேலும்
ஆலவிஷ மதினளவால் சரக்குகளெல்
லாமடிந்து அவிழ்த மாகும்
காலனில்லை யென்றெந்த னம்பிகையுஞ்
சொல்லவுமே கருதி னேனே. 

பாடல் எண்:- 1626
கருதிடிலும் வாதபித்தஞ் சேத்துமத்தால்
செனித்தவினை காணா தோடு
மருவுமந்த மருந்திடிலும் குஷ்டமரை
மண்டத்தில் மறைந்து போகும்
சுரூபமுந்த லேகியந்தான் தூதளங்காய்ப்
பிரமாணந் தொடுத்து மேன்மேல்
அருந்திடிலு மதிகாலை மாலையிலு
மவிழ்தமதை யருள லாமே. 

பாடல் எண்:- 1627
குன்மமெட்டும் பறந்துவிடக் குறித்திந்த
லேகியத்தைக் கொண்டு மேலும்
இன்பமதாய்ப் பசும்பாலு மிருவேளை
தூதுளங்கா யினிப்பிர மாணம்
உண்பதுவு மொருபக்ஷ முணர்ந்திடவும்
லேகியத்தை யுட்கொள் வாராய்த்
துன்பவினை யேகிவிடு மெளியோருக்
கீந்திடவுஞ் சுகம தாமே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1628
அமுரியுண்ணும் போதுவினை யாகமறி லுஞ்செனித்தால்
குமுறிவிடும் வாய்வதுவுங் குன்றியிடைப் பிரமாணம்
சமுசையம்பா ராதுசன்னி தாபசுர நாவறட்சி
செமுதியிரைப் பிளைப்புமுதல் சேராம லோடிடுமே

பாடல் எண்:- 1629
ஆறுசன்னி யேழுசுரம் மஷ்டகுன்மங் கிராணியெட்டும்
வீறுமே அசீரணமும் வெட்டைமுத லுஷ்ணமும்போம்
தேறுந்தச வாய்வுபத்துந் தீபனமில் லாதிடிலும்
வேறுகூறி லாமலுமே விக்கல்கக்கல் விட்டிடுமே. 

பாடல் எண்:- 1630
பேதியினி லதிசாரம் பேராமை காசமதும்
மேதியினி லுமிகுந்த மேகமெல்லா மோடிவிடும்
தாதுபல னுண்டாகுந் தாரணியி லும்மெவர்க்குச்
சூதகத்தின் வாய்வதுவுஞ் சொல்லாம லோடிடுமே. 

பாடல் எண்:- 1631
பச்சைகெந்தி வாய்வுசட்சு பாண்டுக்ஷய ரோகமதும்
அச்சமில்லாச் சோகைமுத லாறொன்பது நாளில்விடும்
இச்சையிந்த லேகியத்தா லெய்துமிரு தீவினையு
மிச்சமில்லா தேயகன்று வேறுவினை வாராதே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1632
காரமுஞ் சாரமுங் கலந்து கரைத்துக் கருதியபின்
சீரந்த நீரின் தெளிவதும் வாங்கித் தெளிவதனில்
தாரமும் வீரமுங் கெவுரி பாஷாணந் தவளம்வெள்ளை
பூரமும் லிங்க மனோசிலை சீனம் புகைசரக்கே. 

பாடல் எண்:- 1633
புகைசரக் கான அதிதந்தோ ளாந்திரம் பொட்டணமாய்
வகைவகைக் கட்டி வன்னியிட் டேயனல் வாட்டிடவும்
பகைவிஷ மேவி பறங்கிவைப் பாதிடம் படபடத்து
உகையிந்தப் பாகஞ் செய்கையினால் சுத்தி யுற்பனமே. 

பாடல் எண்:- 1634
துரிசத்து வெள்ளைச் சூதமுங் கட்டித் துலக்கமதாய்
அரிவிந்து நாத மாரறி வாரிதி னாண்மையெல்லாம்
விரிவிந்தச் சுத்திக் கெதிரில்லை காணிந்த மேதினியில்
கரிவந்து எந்தன் குடிகொண்டு கற்பங் கலியில்லையே. 

பாடல் எண்:- 1635
கலிவரு காது வறுமைக ளேதுக சடில்லைகாண்
ஒளிவிந்த சோதிப் பிரகாசம் வீசு மொன்பதுவும்
சலியாமல் கட்டுஞ் சரக்குகள் சுண்ணந் தனிமெழுகாம்
பலியாது வென்று வுரைசெய்யு மூலிகைப் பாதகரே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1636
மூலிகையைத் தொட்டு முக்கால் சுருக்கிடவும்
கேலியது வெய்துமெனுங் கேள்விகாண்- மூலிகையால்
பட்டுப் புகைந்துவிடும் பாரசரக் கத்தனையுந்
தொட்டாலுங் கெட்டுவிடுஞ் சொல். 

பாடல் எண்:- 1637
வாதிகளுங் கூடி மயங்கித் தழைகளினீர்
வேதை யிருக்கு தென்று வீண்பாடு- வாதிகளும்
மலைகள் குகைதிரிந்து வைத்திருந்த பொக்கிஷத்தை
அலைந்துசுட்டுக் கரியாக்கினார். 

பாடல் எண்:- 1638
இந்தவிதஞ் சுட்டு விரசமதைக் கருக்கித்
தொந்தித் திடுஞ்சரக்கைச் சோதித்தார்- இந்தவிதம்
வசப்படுமி தேது வழலையில் லாதோஷந்
தசப்புடத்தில் மூலிகையால் சாம். 

பாடல் எண்:- 1639
இப்படி யாயுலக மேம மிருக்குமென்று
கைப்பொருளைத் தோற்றுக் கடனாகினார்- இப்படியாங்
கேள்வி மொழியுணர்ந்து கிலேச மதுவாகிப்
பாழ்வினைகள் சூழ்ந்துவிடும் பார். 

(விருத்தம்)
பாடல் எண்:- 1640
அம்புவியி லுஞ்சிலபேர் வாதி கூடி
யாகமசாஸ் திரங்களெல்லாம் பரிசோ தித்து
நம்புதலாய்ச் சிலபேர்கள் சரக்கைச் சுட்டு
நசித்துநாள் தோறும்வினை நலியுண் டாகி
வெம்புரச மதைக்கொளுத்தி விழியுங் கெட்டு
வெறிபிடித்த குக்கலைப்போல் வேடம் பூண்டு
பம்பகமாய்ப் பரதேசி யெனும்பேர் கொண்டு
பழம்பொருளைக் காட்டி பணம் பறிப்பா ராண்டே. 
பாடல் எண்:- 1641
ஆண்டவகத் தியனைசிவ சத்தி பூசை
யானறிந்தே னகிலமதி லாருங் காணார்
உண்டானோர் பன்னிரண்டு மாச்சு மேலும்
உள்ளமது தனிலமுரி புளியங் கண்டே
சண்டனையுஞ் செயிக்குங்கணை கற்பங் கொண்டு
சரமாரி பேற்றநமன் தகித்துப் போனான்
கண்டதிந்தச் செய்தியெல்லா முலகத் தோர்க்குக்
கனமாகத் தோற்றுமிந்நூல் காணீ ராண்டே.

மதனகாமேஸ்வர தயிலம்- வண்ணச்சிந்து
(தரு)
மதனகாமேஸ்வரதயிலமிதாமையா- மதிமோகனமாமயல்
மன்மதசுரூப சுகாதிதமையா. 
பாடல் எண்:- 1642
சுதனருளால்சுகதேகாதிதவாசம்- சாந்துசவ்வாது
சுகந்தபரிமளகஸ்தூரிவீசும்விலாசம்- அப்பிரேகசெந்தூரந்
தொழுதருள்குறுமுனிகமலபொற்பதமலர்பணிய- சதுர்
பலங்கொண்டமுரிமூலப்புளியன்னீரினில்கடலைப்பிரமாணந்
தெளிந்தநீரில்- அப்பிரேகமதிலிடுஅனலிநீர்சுண்டிடும்
வாட்டிக்- குளிக்கல்லினி- லடக்கிநாதவிந்துநீரூட்டி
யிணைபிசகாதாக்கிடுமேதிரிநாளினையாமலுமெழுகாய்
பதமாகுமவ்விதமாய்வருதல்
வழித்தேரவிபில்லையுமழகாய்- உன்னிதமாகவும்
ஆச்சரியமகலடக்கிஅம்புவிமீதில்- ஆவினெருவில்புடமைம்பது
கையெருவினில்தாக்கிஅக்கினிவீசுஆறவும்பூமியதுக்குளாவி
தானியபுடமாறியப்பிரேகம்வாங்கி
அவ்விதபுடமீரைஞ்சுஇவ்விதநாதவிந்துநீரேறி
மெழுகுபதம்- ஆவல்விடும்விடமல்லாடிரண்டுதின
மாட்டி- அன்னாளது- சென்றப்படியதுவழித்தது
கதிர்முகந்தனிலூட்டிரவிதனில்- மதன. 

பாடல் எண்:- 1643
அகோரப்பிரகாசவாலையுமனல்படவீசு- அதிதசுந்தர-
ஐஞ்சுபுடமதுவாகிலுமற்புதநேச- மல்லியின்பூநீர்
அம்பிகைமாதுசுகந்தநீரவ்விதகூறு- குப்பிதனில்
அருளாகசெயம்பெற வேகமதனொளியின்வாறு- குளிகல்லினில்
அம்புவியோரறியாமல்கெம்பீர செந்தூரமிதைநாட்டி- கருஞ்சாவ
லுதிர- மன்னாள்முழுதுமெழுகதுபதம்வருதலுமாட்டி- 
உறவானபின்பு- அதிதகதிர் முகவனொளிவுபடமிகவுந்தாக்கி
சிறுசின்னியாலெனும்- அவிழ்தமதின்கீழ்மேலுமரைத்து
மூலிசைந்துமாக்கி- அகலிலூட்டி கவியமண்சீலையேழுமேத்தி
மார்க்கமதாக- மதியில்குழியிழிசரணிழிய அன்பதுகையில்
தாழ்த்திவன்னியைமூட்டி- அருள்குறுமுனிதிருவடி
தொழுதர்ச்சனை துதித்த அங்கியைப்பூட்டி
அதிரிடவுங்கண்டதாரைகொண்டாவியைவிதித்து
மதிமலர்கொண்டிருவினையொழியமுப்பாழ்கடந்தப்படி
தாண்டி- அம்பியாயோகம்- வரும்பரசுரூபராஜாங்கபூபதியெனும்
வேண்டிதுரியாதீதத்திலறிரெண்கலைபிறழாமலும்
ரேசித்துயூதி- அடிபணிந்து அக்கினியெனுமனலற்றுச்
செந்தூரமிகை சோதி ஆராதனைசெய்- மதன. 

பாடல் எண்:- 1644
தாபரமெட்டுஈரேழுலோகங்களும்வசியஞ்செந்தூரமுண்ண
கிருபாகரசுவாமிக்குவாணசுருபிகள்வசியம்- மோகனமாது
மோதவிதாகசுகாதவைபோகிகள்வசியம்மதனவித்து
வாதிருநால்படிஆவினமிர்தமதுபாகம்பாண்டத்திலூட்டி
அக்கினிவீர ஆவாரையின்கம்பமதுநீடிகமலாக்கினை- அனல்
படவேபதம்வருமேதொக்கிடுமேட்டிஅக்கினியாற்றி
யிக்கனலாவியிகழ்த்தியிறக்கிடுமோகம்- இப்புவிதனிலும்
இரவுசுடநீரில்விசாமலுமாற்றிடுவேகம்- மதனவிந்து
வாரமதா கிவரும்பதமரறியாமல்நிழலுலாவி- வாலையெனும்
மன்மதபோகம்- விரகலாகிரிமாதுமடந்தையர்நீதவினோத
சம்போகக்காமலாகிரி- வாதுபோராடல்துராதுரை
ராஜரும்வசியம்வையகமிதில்மதனகாமேஸ்வரதயிலமிதாகிய
ரகசிம்- குழித்தயிலம்- வாடைவீசாமலுமாற்றிடு
மெளிவராவேகம்பயிரவத்தின்- மலரடிதொழுதருள்
கெதிபெறுமிருபதயோகம்முத்திபெறவும்- மதன. 

பாடல் எண்:- 1645
அதிவிதகுறுமுனியருளியஅவிழ்தசெந்தூரம்பலமெடை
யொன்றறியுஞ்சுத்தித்தகெந்தியதுசமனுறவுசெய்விதூரம்
வெண்ணாவியொன்று- மதுரமும்வகையதும்வசனிருளிக்கல்லினில்
தூளாய்மத்மத்திடவும்மதனவித்திதினிடதயிலம்விட்
டிழையதுமாளஒருசாமநேரமாயரைபோலதுவட்டியரைத்தெடு
தங்கம்- மெழுகதின்பத- மன்மதசுரூப சிகாமணிதேவப்
பிரசங்கம்வசிகரமைய- மாற்றிடுமேவழிதேற்றியுண்டையது
போலாக்கிற்- சீலையதனில்வரிசையதாயொருகிளியதுபோல்
பதமாக்கி- பின்கலயத்தில்- மதனவித்தாகியதயிலம்விட்
டொருபடிமாட்டியிருபக்கத்தில்- வாரதுவாய்சில்லு
வாங்கிக்கம்பமதுகொண்டுபூட்டி- நடுமத்திபம்- வல்லமையாக்
கிளிமயிரதின்கயிர்கொண்டுமாட்டிவன்னியைமூட்டி
வற்றவற்றிடுமத்தன்தயிலமெனுமெதுகொண்டூட்டி
தீபாக்கினைகொண்டக்கினிசூடுதுவினிலதுசுருக்கதுவன
கெந்திமெழுகுஅதுவரும்பதமறியனலதுமாற்றிடலாவி
கலசத்தினில்- விடுமேவெள்ளாட்டமுரிபதமாப்படியதுலாவி
கொண்டிதமாய்ச் சாமந்தனிலுவிதமாய்க்கமலாக்கினை
விசையாய்ச்சுருக்கேற்றிடுமியல்பாய்த்தொந்தமேறிடும். 

பாடல் எண்:- 1646
மிருகமெடுத்துமறுகலைமதனிலிடுவேகம்வெண்ணாவினாதல்
புகழுமமுரியதுபின் பொருகலயந்தனில் பாகம்கிளிக்
கொண்டேற்றிச் சுடர்கள்கவியக்கனல் தொடுத்துச்சூக்ஷமதாக
சாலஞ்-சுருங்குதலாய்- துடர்ந்து மூன்று விசையுங் கடந்து
தொந்தமேறிடுஞ் சார்வாய்காமேச்சரத்தைக்கோமுட்டிமாதங்கனி
குடைந்து அதுக்குள் நாடிகுறிப்பாய்மண் சீலையேழும்
இருபத்துடனெருவிலிருத்திப்புடமதுபோட்டெடுத்து
ஆறிடும்பாகம்- இசையகவசம் பிரித்திதனைக்குளிக் கல்லினில்விடுத்துக்
கவசமெடுத்- திவ்விதத்தயில ந்தன்னை யிட்டுமத்தித்துச்சிமிளேத்தி
சடாட்சரங்கொண்டெட்டெட்டும் மட்டவசியம்நிஷ்டையுரு
லக்ஷமதுசாத்தி- நேயமதாக- அவிழ்தமெனு மதனமாமோகக்
காமேச்சரத்திலாடும் அம்புவிதனில்- அகிலபுவன செகமதித
லோகாகிதமுந்தேடும்- அஷ்டதிசையும்- அண்டரண்ட பகிரண்ட
மண்டலமும்மகிழும்- நவசித்தர்கள்- அர்ச்சித்து மதியமுர்த
முச்சிதத்துடன் மதுரம்பகழும் அருமறைகள்- ஆகமங்களும் புகழ்
யோகவிதியுமகிழுமாய்ந்து ஞானோப்பரசங்கம்- அடிபணிந்திவர்
துதிமதுர செந்தமிழ்ச் சிந்துபாய்ந்து அவிழ்தமெனும்- மதன. 

பாடல் எண்:- 1647
அலறு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டதுமதமாய்
அனந்தநோய்கள்- அக்கிரமஞ் சன்னியீராறிலகலுமோரேழு
சன்னிவிதமாய்க்- கெந்திமெழுகு- அண்டத்தினுச்சியைக்கீழி
கண்டுடன் கடுளத அரக்கி- மத்தித்திடவும்- அதிதபூதவேதாள
பிதுர்கள் முதல்குறுக்கி- ஆத்துமம் விட்டது விட்டோடியகலு
மனந்தயோசனை தூரமனத்- துமதுவினாக- அஷ்டகுன்மங்களு மெட்டு
துஷ்டநீர்க்கோவையுங்கட்டி யகற்றுமதிசாரங்கள்
ஓரெட்டுக் கிராணியது மீரெட்டுச் சூலையதிதமோடு மினமறுந்து
மேதித்த விரவிதனில் விடுமேகடுகளவு சாடும்காமேச்சரத்தில்
எய்தும் பாண்டு ஈரெட்டுப்பழுதாய்ப்போகும் வினைகள் படுமே
விரகலாகிரி- யின்பமதாகிய போகமிதற்குக் கதலிதனிலிடுமே
எள்ளுப் பிரமாணம்- காராவினமிர்தம் படிகாய்ச்சிடு முக்காலாய் வருங்
கருத்தாயுள்ளுக் குணர்ந்து- கவியப் பச்சைக் கற்பூரம் திவ்விய
சந்தனத்தோடு அரைத்து மேலும்பூசி- பாதாதிகேச மெண்சாணு
பூதாதி ஐந்தும் பரவிப்பாயும் பரிமளாதி பரிபூரண விசித ஒளியாய்
மன்மத சுரூபவடிவா- வெங்களுக்கும் பிரகாச உல்லாசமாவுலகில்
சல்லாபத்துடனடையுலாவ ஸ்திரீமோகவின்பம்- உச்சிதமாகத்
துடர்ந்துபட்சமா யெதிர்கொண் டோடிப்பணிவா- ரட்சியுஞ்சுவாமி- மதன. 

பாடல் எண்:- 1648
உபநயன மாதுகள் விதமதன லீலைகளுயர்ந்து- ஓரேழுகடிகை
உக்கிரமதாகிய விந்துநிக்கிரகத் தாதுவிடாமலுணர்ந்து- ஒரு
ராத்திரிக்குள் ஒருமித்துடனிருவர் பருவத்துடன் சம்போகம்
புணர்ந்து- உனைவிடாமல் தனுவொத்ததிர்ந்து இடைதுடையைத்
திருகிகுழைமலர்ந்து உபஸ்தமதுகனத்து அடிநடுமுன் தடித்துப்
பொருத்துமதமுனைந்து- தசநாடியு விகுத்துக்கப்போதுக்கப்போ
பருத்துப் பசும்பாலுடநி நூந்துபின் போதிளநீ- ரஞ்சிதத்துடனும்
பஞ்சதாரையைப் புகட்டியதிலுறவாய்த் தாம்பூலத்துடனும்- கொஞ்
சிடும்பச்சைக்கற்பூர விஞ்சையது வாயிழைத்து அறிவாய்- 
அடைகாயுணர்ந்து தேகாதிமுழுதும் வெந்நீர்த் தெளிவாய்ப்
பிடிப்பித்துட னிசைவாய்த்- தாதுவிடாது உண்பது நிம்பப் 
பழத்தினுள் விரையரைத்துரட்டி யுணர்வாய்- பாக்கது பிரமாணம்
பொங்கமதாகியவிந்து பொருந்திடாமலுங் கக்கும் போக்கும்
காமசலநீர் எங்கெங்கும் வேர்வைகள் பாயுமிளப்புஞ் சோபதாபங்
கொண்டிருக்கும்- எண்சாணு தேகம்- அங்கங்கேநாடிதளர்ந்து
அசதிகொறுக்குக்குண்டாகியலர்வாள் அந்நேரமேநீ தங்கமாகு
மதனதயிலுமெனு மயனந்தருவாய்- சோபங்கள்தீர நிக்ஷயத்
துடனுணர்ந்து நினைவாய்ச் சதாகாலஞ் சம்போகி- சித்தர்களானால்- 
உச்சிதபோகங்கள்செய்து உருவாய் நாதசையோகி ராஜாங்கயோகி- மதன. 

பாடல் எண்:- 1649
ஆண்டவன்சொற்படியாதிமுனிவருரைத்ததமிழமிர்தம்அருமறை
யோர்- உண்டுணர்வதாய்வினைகளின்றொழிவதேயுலகிலும்மை
மதுவாக்கியம்- பைந்தமிழோதியசிந்துபதமாயருளவின்பரசமாய்
விதித்தைஆசான்- தந்தைமதியிந்தவிதிசெந்தமிழ்வினோத
காமேச்சரமாய்- வேதாசாரத்தின்- சுந்தரசோதிப்பிரகாசமந்திரமவுன
மலர்பொழியும்- சுயம்புலிங்கஞ்சொர்க்ககயிலாசபூரணநற்கமல
மாமதுரம்வழியும்- பேரின்பவெள்ளம்செந்தமிழமிர்தமதி சந்திரமதுர
கலைவிழியும்- சிவசமயம்- தென்பொதிகைமேவிளரென்புகழ்
செகாதிஜெகந்தழைக்கும்- சீவசெந்துக்கள்செவ்விழிக்காக
செந்தூரமைவிழிக்காமரூபிகள்வசியம் செனனவாழ்க்கை- 
விந்துநாதமுஞ்செழித்து ஐந்துபூதமும் வலுத்துப்பிகுவாம்- விசித
ரத்தினம்- அந்தமுமன்மதனைப்போலாவியும்வளர்பிறை
கொண்டாகும் அரூபியாகி- சந்திரசூரியருள்ளவரையு
மெங்கும்பிரகாசந்தழைக்குஞ்- சுழியின்முனைவருமே
யெண்கலையெட்டுமதியமிர்தமும்மூட்டுமமைக்குந்
தெட்சணாமூர்த்திஅடியன்திருவள்ளுவனருளு
மதுரவாக்கியம்வகுக்கும்- விதித்தவிதி- மதனகாமேஸ்பரமும்
வாழிமேன்மேலும்வாழிவாழிகுருவினருள்- மதன. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1650
கும்பமுனி யனுக்கிரக வுபதே சத்தால்
குருவருளால் மதனகாமேச்ச ரத்தைச் சொன்னேன்
எம்பிரான் கிருபையெனக் கெய்துங் காலை
இப்படியான் பாடுபட்டே னெளியோர்க் காக
அம்புவியில் குறளடியேன் பாடு நாளில்
அனேகபே ரெனையெதிர்த்து உரைதான் கேட்க
வான்புலையர்க் கருளவில்லை பெரியோர் கேட்டு
மனமகிழ்ந்து ஆண்டையெனை வாழ்த்தி னாரே. 

பாடல் எண்:- 1651
பூருவத்தி லன்னையெனுங் கெர்ப்பந் தன்னில்
புகழாக யானுதிக்கும் போதி லேதான்
மாறுகலை நாற்பதுக்குள் வயது காலம்
வரும்படியாய் மெய்ஞ்ஞானம் வாய்த்த தாலும்
வேறிருபத் தஞ்சதிலும் புவியில் தானும்
வெகுவிசித நூல்களது விதித்தேன் காணும்
ஆரறிவா ரறிந்தவர்க ளவரு மாண்டார்
யானிந்த காயகற்ப மருளி னேனே. 

பாடல் எண்:- 1652
முன்னோர்க ளுரைத்தவிதி முப்பு வாறு
முடித்துவைத்த நூல்களது மோசம் வாரா
தின்னவித மென்றறியா தாலு மாண்பர்
எடுத்தமுறை கருவறியா தெய்தா தொன்றும்
சொன்னவழி யறிந்துகற்ப முண்டு தேறிச்
சுழிமுனையில் வாசிகொண்டு சோதித் தாக்கால்
அன்னையபி ராமியரு ளெய்துஞ் சித்தி
அனுக்கிரகப் பதவிபெற்று அமைப்பா ராண்டே. 

பாடல் எண்:- 1653
வாதவயித் தியமூலப் புலிசுண் ணத்தால்
மருவிதிரு நடனமிடும் வாலைத் தேவி
நாதவிந்து காரமெனுஞ் சாரத் தாலும்
ஞானவெட்டி முழுதுநிறை வேறுங் காலை
காதமில்லை தூரமில்லை நமக்குள் நின்ற
கருவறியா நாளேது காத மேது
ஓதுமிந்த நூல்களெல்லா மொன்றா லாச்சு
உண்மையிருந் துறுதியினா லுபங்கா ணான்றே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1654
நாதவிந்தென் றறியாது நான்மயங்கி னேன் சிலநாள்
பேதமகத் தீசர்சொல்லப் பேர்களறிந் தேமகிழ்ந்தேன்
வாதமென்ன முப்புவென்ன வந்தவர லாறுமென்ன
பூதமஞ்சி னாலுதித்த பூரணத்தைக் காண்கிலரே. 

பாடல் எண்:- 1655
பச்சையென்ற வுப்பதுவும் பார்த்தாலுந் துய்யவெள்ளை
உச்சிதமாய்க்கொண்டுறுதி வுண்டதொருவுப்பதுகாண்
வைச்சபொரு ளாதியிலும் வாரியி னால்செனித்த
தற்சொரூபமாய்விதிக்குஞ் சங்தையிதைக்காண் கிலரே. 

பாடல் எண்:- 1656
சத்திசிவ நாதவிந்து சாரமதுக் காரமதும்
புத்தியத னாலறிந்தேன் புளியமுரி யானதுவும்
வெத்தியிது விண்ணுமண்ணு மேல்கீழு மாயிருக்கும்
சித்தர்கள் மறைத்துவைத்த செய்கையிதைக் காண்கிலரே. 

பாடல் எண்:- 1657
சூதவித்தை யாவதென்ன சுக்கிலசுரோணிதங்காண்
வாதவித்தை செய்துமோசொல் வாருதியைக் கண்டறியார்
பாதையிந்த மார்க்கமெல்லாம் பாடுபட்டு யான்வெளியா
வேதமிது வெனறுரைத்த மெய்க்குருவைக் காண்கிலரே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1658
சுழியா கியமுனை சிங்கார வீட்டின் சுகாதிதத்தில்
அழியாப் பதவி யருள்பெற்று ஞானஅருபத்திலும்
வழியாய் மனக்கண்ணு வேதாந்த சார வெளிதனிலும்
கழியாமல் காய மருள்காட்சி பெற்றுக் கருதினனே. 

பாடல் எண்:- 1659
மதுரம் பெருகு மமிர்தம் பொழியு மதிரவியில்
விதுரங் கணைகொண்டு வீசிவிட்டேனந்தமெய்ப்பொருள் கண்
டெதிர்சேர்வை ஞான துரியாதி தத்தி லிறந்துறவாய்ச்
சுதனருள் வாசியை ரேசித்து நின்று துலங்கினேனே. 

பாடல் எண்:- 1660
வாசியைப் பாச மறவாமல் கண்ட மதின் வழியாய்
நாசியில் வாசி நடவாம லூதி நங்கென் றுயான்
மாதிப் படாமல் மதியுண்டு ஆண்டு மறுவருஷம்
தேசிகன் பாதம் பின்பொன்று தள்ளி தெரிசித்தனே. 

பாடல் எண்:- 1661
மூன்றாண்டு யோகம் பிராணாய வாசி முனைசுழியில்
ஆண்டாண்டு சென்று மூன்றாண்டின் வாசி யவிடத்திலும்
பூண்டந்த மூலத்தைக் கும்பித்து ரேசித்துப் பூரகத்தில்
தீண்டாத சோதி மணிவிளக் கேற்றித் தெரிசித்தனே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1662
அரவங் கடித்தா லாண்டை யினிக் கேளீர் 
குறைவது காணது குற்றமில்லை- அரவமது
தீண்டினால் போதுஞ் சிரசில் விஷமேறி
மாண்டிடுவார் காயகற்பம் வாறு. 

பாடல் எண்:- 1663
உன்விஷந் தானேறி யுயிர்விடுமே யாமாகில் 
தன்விஷத்தா லொன்றறியேன் சாட்சி- உன்விஷமும்
நிழலதுஉன் சாயல் நிற்கையிலு மாண்டு
தழலதுவந் தரவமது சாம். 

பாடல் எண்:- 1664
கண்டிதுபார் சாட்சி கார்க்கோடக னாகிலுந்தான்
உண்டுகற்ப சாதனைசெய் துலகில்- கண்டிதுபார் 
நாபியது பாஷாண நஞ்சதுவுண் டாமாகில்
சோபமில்லை தாபமில்லை சொல். 

பாடல் எண்:- 1665
விஷமு மமிர்தமதா மித்துருவுஞ் சத்துருவும்
மழலையெனுங் கொண்டு அவர்மடிவார்- விஷவமிர்தம்
மெய்சொன்னேன் பொய்சொல்லேன் விந்து ரசபானம்
பொய்சொல்லு வாரில்லை போ. 

நாரயண செந்தூரம்
(தரு)
ராஜமேகமகாராஜபூபதியிதுகாணும்- மதுமேகமகோதரம்
பூசிதமாய்வச்சிரகாயம்வலுத்திடுங்காணும். 
பாடல் எண்:- 1666
போசராசமகிபூபதி யெனுநள
ராஜமேக- நாராயண செந்தூர
மாசிலாமறர்மதிநிகர்- கெந்தியு
மீசன்விந்துவை- யிரதமுமிருவகை
யிதுசரிசமனிடை- பணவிடையாவது
மதிமனோசிலையரி- தாரமிங்கி
லிகமுமிதுவிவையிதுபத- முறவுசெய்திரிவகை
யினமறிசரிபணவெடைசமனான்பதும்- ராஜ. 

பாடல் எண்:- 1667
ஏகபூதபஞ்சாக்கினை- வகையிது
தேககாரசெயநீர்- தெளிந்தானதில்
வேகசுத்தியெரித்தேபடி- நீரினில்
பாட்டிகுளிக்- கல்லினிலும்
பதமருக்கனோடுமலரதிதரச- மதனி
லுருக்கும்புளிசுன்னமொரு- கழஞ்சதுவெடை
சுருக்குந்தின்பதம்புரசைமலர்- சலந்தூரித
சிறுதும்பைசெருப்படியின்ரசம்- ராஜ. 

பாடல் எண்:- 1668
மாதுமாதளையின்- மருமலரிதழினில்
நாதநீரதுசல- ரசமதுபொழிந்
தூதுசீந்திமலருபையமெனுஞ்- சலநீர்
வாதுமாமயனமாயது- பதம்வருதலில்
முருக்கன்மலரிதழுஞ்சலதி- ரசமேழும்
வகைக்குவகையொருகடிகை- யேழரையும்
இழுக்கமெமுதின்சுறுக்குந்- தினந்தினம்
பெருக்குமிதுபதங்குறுக்குமேழுசாமம்- ராஜ. 

பாடல் எண்:- 1669
ஆட்டிவழித்தெடுத்தருள்பெற- குருபலம்
வாட்டிக்குப்பியதுக்குள்மாற்றியேழுமண்சீலை
யூட்டிமருந்ததுக்கு- ளுறவுசெய்திடும்பதம்
வாட்டிரவியொளியிலனல்- படகனலதுங்
கருதிடிமதுகுடமரைவி- தமனலது
வதுகுப்பிநிறையமண்ணரவு- மதனில்
மறையமண்ணேழுசீலையருள்பெற- துறை
யிந்தப்படிவிதமெனும்வாலுகையடுப்பில்- ராஜ. 

பாடல் எண்:- 1670
யாகசாலையடுப்பது- வனலாவிசை
பாகமாகஅறுசாமமு- மிணைவிடா
வேகமேகநாராயண- செந்தூரந்
தேகசித்திசெய்பாக- மறிந்திடில்
உசிதமெனும்வன்னிமிதமு- மிகுபதம்
உதிரும்படியனல்பதறும்- பகையில்லர்
உபையமறிவிதங் கவனமொருமன
முறுதினடுமையம்வருகவெனும்புகழ்- ராஜ. 

பாடல் எண்:- 1671
யோகராசசிவயோகியெனும்பர லோகலோக
தெய்வலோகசெகாதிதஞ்
சாகரக்கடல்புவனமதிதமும்- யாவரும்மகிழருள்
பெறகுருபதம்
பரகதியெனுமிடைகலைசுழிமுனை நடுபடு- 
பதிபெறுமலரமிர்தசஞ்சீவிபதம
பரவியகருவினிலுறவுசெய்திடுபிணிபலப்பல
வினையகல்குலைகுலைந்திடுநோய்கள்- ராஜ. 

பாடல் எண்:- 1672
பாசமாசைதுராசை- வினாசனங்
கோசதீசவிதாக்கிரக- வேதனை
பாலைகிரகநவக்கிரகபசாசுக- ளேலசாதனை
வாலைசஞ்சீவியது- பருதியனலது
மெதுபதங்குளிரினை- பதுகுடமுடி
சீலைகவசமண்விலகிடில்- பரிபுர
சுகமலரகிர்த- மிவ்வவிழ்தமும்
பதனஞ்செய்வெகுபத்திரகசியமது- ராஜ. 

பாடல் எண்:- 1673
போதமெனுபனுபானந்- திரிகடுகுதூள்
போதமாவதாடாதோடை- தூதுவளையது
மாதுவெனும்கண்டங்கத்திரி- புட்டவித்தோ
துரசமுடன்மதுரம்- விட்டிழைத்திடில்
அதிகசெந்தூரமதிலரை- பணவிடைதினம்
விதிகனலிருபட்சம்- விலகுநோயெலிகடி
மதிசுரஞ்சயமீளைவருமிரைப்பது- சூலை
துதிமலரடி- கெதிபெறசுழிமுனை- ராஜ. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1674
நாதவிந்து கருவினால் மகாராச மேகவினை நாடாதொன்று
தீதுவரு காதனைத்துக் காளமேக ராஜாங்க செந்தூரத்தால்
வாதபித்த சேத்துமத்தில் வரும்வினைகள் சிதறியது மாறிப்போகும்
வேதமிந்த ஞானவெட்டி மெய்ஞ்ஞான மறிந்தவர்கள் விளம்புவாரே. 

பாடல் எண்:- 1675
குறுமுனிதா னெனக்குரைத்த வுபதேசப்
படியனைத்துங் குறித்தே னின்னூல்
வரும்வினைபொய் மாறிடவும் வாதவயித்
தியமுநன்றாய் வசனித் தேன்காண்
கருக்குருவு மறிந்துசிவ சத்தியருள்
பதம்போற்றிக் கருதுங்காலை
இருள்விளங்கு மதிரவியால் பிரகாச
ஒளியில்நின்று இனிக்கண் டேனே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1676
கண்டபொரு ளின்னதென்று விளங்க லானேன் 
காசினியி லென்மொழியைக் கழித்த பேர்கள்
அண்டஇடி விழுந்துதலை தெறித்துப் போகும்
அம்புவியி லவர்க்குவினை யதீதங்காணும்
விண்டபொருள் நாதவிந்தை வெளிவிட் டோர்கள்
மேதினியி லெழுபிறப்பா யுதித்து நாயாய்த்
தெண்டிரையில் நரகமெனும் வினைதான் சூழ்ந்து
தினைக்குளமைத் தமைப்புமாய் மாள்வா ராண்டே. 

பாடல் எண்:- 1677
வல்லபைகுண் டலியினருள் பதமே போற்றி
வசனித்த ஞானவெட்டி வாக்கியந் தன்னை
அல்லும்பக லுந்துதித்து வருளில் நின்று
அனுதினமு மெனதுகுறு முனியைப் போற்றி
சொல்பிசகா தொழுதுகற்பஞ் சாதித்தோர்க்குச்
சொர்னதெரி சனமுஞ்சுழி முனையுங் காணும்
இல்லமதி லிருந்துசிவ ஞான சூட்சம்
இனியறிந்தோர்க் கிருவினைவந் தெய்தா தாண்டே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1678
நவலோக பூபதியை நாமருள நாதவிந்தால்
புவனசரா சரமளவும் புகழ்விசைய மென்ன சொல்வேன்
குவலயத்தில் மானிடர்கள் கொடுமையினால் கோடிவினை
இவையனைத்து மேயொழிய இனியியம்பக் காண்கிலரே. 

பாடல் எண்:- 1679
தீராது ரோகவினை தீருங்கார சாரமதால்
வாராது விட்டகுறை வந்தா லிதுகிடைக்கும்
தேராத பேர்களெல்லாந் தேர்வதிந் நூலளவால்
மாறாது யோகதிசை வந்தால் மாறுபடுமே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1680
சாரத்தைக் கொண்டு காரத்தை யூட்டித் தான்பிசைந்து
சூரத்தி னால்வீடு கட்டிவிட்டே சுக்கில சுரோணிதத்தால்
ஊரலற் றேயுப்பு முப்பொரு ளாச்சுது உவ்வும்அவ்வால்
வீரமும் பூரம் காரமுஞ் சாரமும் விளங்குவதே. 

பாடல் எண்:- 1681
அல்லாப்பெருமையுஞ் சொல்லால்விளைந்துஆண்டொன்றுபோய்
எல்லா மெனக்கு ளிருக்குது பாரிவை யாரறிவார் 
மெல்லா ரிதைக்கண்டு மெய்யென்று நம்புவர் மேதினியில்
நல்லாரைக் கண்டு வெகுநா ளவர்பதம் நான் பணிந்தேன். 

(வெண்பா)
பாடல் எண்:- 1682
இன்ன பொருளென்று யாவ ரறிந்திலார்
அன்னமது வாய்நின்ற அம்பிகையை- இன்னம்
பூசித்தா லெய்தும் புளியமுரி யுண்டறியார்
வாசித்தா லென்னபலன் வாறு. 

பாடல் எண்:- 1683
வாசித்தா லென்ன வருமோ பெருவாழ்வு
தூஷித்தால் சாஸ்திரமுஞ் சொல்லுமோ- வாசித்து
மாண்டா ரனந்தம் வறுமை யதுசூழ்ந்து 
பூண்டார் சுடுகாடு போய். 

நவலோக பூபதி
(தரு)
நவலோகபூபதிகாண்அருள்- குரு- நாதவிந்தாலிதுகாண். 
பாடல் எண்:- 1684
சிவலோகபரகெதியடைமெய்ஞ்
ஞானசிரோமயசித்தியருள்பெறும்
நவரத்தினஒளிரவிப்பிரகாசத்தில்
தவமதிமலர்கமலபொற்பதம்- நவ. 

பாடல் எண்:- 1685
சவமதாகிலுந்தாள்திறந்துன்னித
மிவையின்னதென்றெழுந்துமூன்றேமுக்கால்
குவலயந்தன்னிலுநமனுக்கிவ்வித
அவிழ்தமுமனுபானத்துடனருள்- நவ. 

பாடல் எண்:- 1686
தங்கமென்றால்பொன்னிமிளைர சிதமுந்
தாம்பிரமுமயம்வங்கமுநாகமும்
இங்கிதமாகியவெங்கலம்வெண்வங்கம்
அங்கமதாகுங்குடவனோடொன்பதும்- நவ. 

பாடல் எண்:- 1687
சங்குப்பாஷாணங்கெவுரிமனோசீலை
தாரம்வீரம்பூரஞ்சாதிலிங்கத்தொடு
சிங்கிக்காடிக்காரமொன்பதீதாகிடில்
பொங்கமதாய்ப்பதினெட்டுவகையுடன்- நவ. 

பாடல் எண்:- 1688
சூதங்கெந்தியிருபத்துவகைசமன்
வீதஞ்சரியிடைமேலிடுங்காற்பலம்
நாதவிந்துகாரகாரங்கரைத்துநீ
ரேதுநாலுமொன்றுஞ்சேதம்வராதிடில்- நவ. 

பாடல் எண்:- 1689
பூதமஞ்சுங்கூடிநாதவிந்தாச்சுது
பூரணமாம்மூன்றுநாள்தெளிந்தானபின்
மாதவிடாயிந்தநீருக்குப்பேரு
பேதமில்லாநவலோகத்தைராவியே- நவ. 

பாடல் எண்:- 1690
பொடியிதும்ராவிபோட்டிடும்நீரினில்
புகழென்னநவபாஷாணமும்பொடி
கெடிரசகெந்தியவ்விதம்பொடி
துடியிதுகாரசாரநீர்தன்னிலும்- நவ. 

பாடல் எண்:- 1691
பலியவுமிந்தநீர்தனில்பாய்ச்சி
மடியவுமனலேற்றியடுப்பினில்
அடிபத்திக்கருகாமலும்மன்னியிட்
டெரியுமேகமலாக்கினையாகவும்- நவ. 

பாடல் எண்:- 1692
சோதியிப்படிச்சுண்டிடும்பாகமாய்த்
தொக்கிடுமேகொதித்தேவெளிகாண்கிலார்
சாதித்திடுங்கொதிசேதம்வராமலும்
வாதித்துநீர்சுண்டவன்னியுமிட்டிடே- நவ. 

பாடல் எண்:- 1693
ஆதியிந்தநவலோகசிந்தாமணி
யாருரைத்தாரகத்தீசரருளினால்
மேதினியோர்கள்வரும்வினைக்காகவும்
போதித்தேஞானமெய்ஞ்ஞானவெட்டியெனும்- நவ. 

பாடல் எண்:- 1694
தொக்குமெறிந்துசுவறிடும்பாகத்தில்
இக்கனல்மாறாதெரித்திடுஞ்சாமமும்
அக்கனலாலிருபத்துங்காரசாரம்
பக்குவமாய்க்கட்டிப்பார்க்கவுருகிடும்- நவ. 

பாடல் எண்:- 1695
சக்கரம்போலவுந்தான்படித்தேசார
காரத்தினுப்பினால்தான்மடிந்தேவிடு
முக்கிரதீயாற்றியொருதினம்வைத்து
உபாயத்துடனுமுடைத்திடும்பாண்டமே- நவ. 

பாடல் எண்:- 1696
இருபத்திரண்டுஇனமுங்கலுவத்தில்
அதுவிட்டுஅல்லிப்பூவதின்சாறதில்
சுரூபமுப்புவதில்கழஞ்சியிடைக்
கருவிதுவெனுங்காணும்வரும்பதம்- நவ. 

பாடல் எண்:- 1697
அரூபமிப்பொருளல்லிச்செழுமலர்
தினமிந்தரசஞ்சேர்த்துஅரைத்திடும்
குருவிப்பொழிலகத்தீசரால்வந்த
சுரூபசித்திசிந்தாமணியாண்டையே- நவ. 

பாடல் எண்:- 1698
வாரமரைத்துவரும்பதமாமெழு
காரசாரங்கனவேகத்தினாலது
தூரமோடுவேதைதூம்பரமாகிடும்
பாருங்குளிகைப்பச்சைபயர்வீதமாய்- நவ. 

பாடல் எண்:- 1699
காருமேகத்தின்கனபுகைசூழ்விதஞ்
சேரும்செம்பதினால்சிறுவீடுகட்டியபின்
தாரும்பொடிசெய்துதான்புகைவீசினால்
ஆருமறியாரதிதமுந்தங்கமே- நவ. 

பாடல் எண்:- 1700
நாலுமூலைசற்சதுரம்புகைபட
வாலைகுண்டலியின்மாமலர்தூவியுஞ்
சோலைவயல்புகழம்பிகையால்வரும்
ஞாலச்சுழிமுனைநாடியுநாண்மலர்- நவ. 

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900