திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1501- 1600

பாடல் எண்:- 1501
கண்டதிந்தசெயநீர்காண்- அயங்
கருதியசட்டியில்கெவுரியைத்தாக்கி
விண்டிடவுநாலுசாமம்- மிக
மென்மேல்வன்னியாக்கினையாகத்
தொண்டுசெய்துசுருக்கேற்ற- கெவுரி
துவண்டுஇறுகிவலுத்திடுமாகில்
நின்றதைப்பார்க்கவெளுத்து- சந்திரன்
நிலவுபளிங்குவெண்துய்யநிறந்தான்- தன. 

பாடல் எண்:- 1502
வெளுத்திடுங்கௌரியைவாங்கி- துருசி
வேகமென்றசுன்னமுப்புவின்சுண்ணம்
அழுத்திடவகைக்குக்கழஞ்சி- அந்த
அம்பிகைநாதவிந்ததுசலம்விட்டு
குளிர்த்தியாய்க்குழைத்ததின்- மேல்காண்
கொஞ்சங்கொஞ்சமாய்ப்பூசிரவிதன்முகத்தில்
வளர்த்தியேகாய்ந்தபின்கொண்டு- பின்பு
மலப்புளியிருபலமாதுநீர்விட்டே- தன. 

பாடல் எண்:- 1503
மயனம்போலாட்டிவழித்து- கெவுரி
மலப்புளிசுன்னங்கவசங்கொடுத்து
வயனமதாய்ரவிவைத்து- மகிழ்ந்
தாறினபின்புமடையன்சுண்ணங்காண்
நியமதாய்ப்பலம்ரெண்டரை- கொண்டினி
நின்றஅமுரியினுப்புமந்திடைகாண்
துயரில்லாமலிரண்டுஞ்சேர்த்துச்- சட்டிச்
சுத்தமாய்கொண்டின்னீரில்பாதி- தன. 

பாடல் எண்:- 1504
பாதியதிலிட்டுகெவுரி- நன்றாய்ப்
பாய்ச்சியேபின்னந்தபாதியுமிட்டு
ஆதியாயத்தியேயத்தி- அதின்
மேலொருசட்டியடக்கமாய்மூடி
நீதியாய்ச்சந்துமண்சீலை- நிலை
நிர்ப்பந்தமாகவுநேராய்முடித்து
தோதியடுப்பின்மேலேற்றி- கம
லாக்கினையாகவுஞ்சாமந்தீமாறா- தன. 

பாடல் எண்:- 1505
மாறாமலும்வன்னிமூட்டி- அது
மாற்றித்தீயாறினபின்னெடுத்தேதான்
பாராய்கெவுரிசுண்ணத்தை- சந்திரன்
பலிங்குநிறமதுக்கதிதமாகும்
சீராய்ச்செம்புபதினாறு- குகையி
லிட்டுஉருக்குமுகமதனில்குன்றி
நேராய்ப்பாச்சிவிடும்போது- கெவுரி 
நிகரில்லாதசெம்பொன்னிதுபத்துமாற்றே- தன. 

பாடல் எண்:- 1506
ரசிதம்பத்துக்கொன்றுநாட்டுகுடவன்- நடப்பு
இருபதுக்கொன்றியபத்தாம்
விசித்தமிந்தகெவுரியாட்டு- வேதை
விஸ்தாரமென்றால்விளங்கவொண்ணாது
பசியொருநாளுமில்லை- சென்மப்
பாதகஞ்செய்திடுவோர்க்கென்னவாய்க்கும்
நிசுத்தமசுத்தமறிந்து- பற்பம்
நேராய்ப்பாடுபட்டுநேரறிந்தோரே- தன. 

பாடல் எண்:- 1507
நவலோகநவரத்னநீறு- நாத
விந்துநீர்விட்டுக்குழைத்துக்கழஞ்சு
இவைதான்பற்பங்களும்நீறும்- பின்னு
மிரும்புரசிதமுந்தங்கமுநீறும்
அயச்சத்துகளெல்லாநீறும்- கரு
வங்கம்வெள்வங்கமுங்குடவனுநீறும்
சவமாகிலுமெழுந்தோடும்- சத
கோடிசரக்குங்காண்தவளமாமாண்டே- தன. 

பாடல் எண்:- 1508
சத்திவிந்துநாதத்தாட்டு- சித்தர்
சமத்தெல்லாங்காரசாரத்தினாட்டு
வெற்றியெய்தும்வேதவாக்கியம்- வீர
சாம்புவமூர்த்திகாண்வெட்டியானாண்டே
சித்தியெய்துஞ்செயமாகும்- தச
தீட்சைபெற்றுமூலந்தெளிந்திடுவோர்கள்
முத்தியெய்துங்கெவுரிசுண்ணம்- பற்ப
முடிந்ததுஆண்டையேமுப்பூவாலாச்சே- தன. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1509
வேலியெனும்பருத்தியின்வே ரஸ்வகெந்தி
கெருடனுமே மிளகுஞ்சுக்கும்
காலியென்ற சீரகமுங் கார்கோலந்
திப்பிலியுங் கடுகு வோமம்
வால்மிளகு பரங்கியுடன் வகைவகையு 
மினஞ்சரிதான் சமனாய்க்கொண்டு
சூலியபி ராமிபதம் பணிந்துபல
மிடைகுறைவாய்த் தூக்குவாயே. 

பாடல் எண்:- 1510
சூரணமாச் செய்துவடிக் கட்டியதில்
பசுங்கிருதந் தேனுங் கூட்டிக்
காரணமாய்ப் பிசைந்துரவி முகம்படவு
மூன்றுநாள் கருதி மேலும்
வாரணமாம் கழஞ்சியதின் பிரமாணம்
லேகியத்தில் வசனி குன்றிச்
சாரணையாய்க் கெவுரிபற்பங் காலையொடு
மாலையுமே சாற்று வீரே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1511
சீராய்ச் செழுங்கெவுரி சேர்த்துவுண்ண லேகியத்தில் 
தீராய ரைமண்டலஞ் செய்கைநிலை யானபின்
பாராய் பரங்கியொடு பல்லரணை நாவரணை
மாறிவிடு நோய்பிணிகள் மண்டையிடி போமதுவே. 

பாடல் எண்:- 1512
மண்டையிடி கண்வலியு மார்வலிகை கால்குடைச்சல்
குண்டிவலி குன்மமெட்டுங் குடல்வாத மேகிடுங்காண்
அண்டையிடி வாழையரை யாப்புசீலை யோடுபுண்கள்
கண்டமணி மாலையொடு கர்ணிகம்விட் டேகிடுமே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1513
விட்டேகு நோய்கள் கோடான கோடி வினைப்பயனும்
கெட்டேக டல்புக்கி சடலம்விட் டேகுங் கெவுரியினால்
கிட்டாது சன்னி சுரமேழு தோஷங் கிறுகிறுப்புத்
தொட்டாலும் பற்பம் விட்டேகு மென்றுசொல் கின்றேனே. 

பாடல் எண்:- 1514
மதுராஜ மேகம் வரும்புண்கள் வாய்வு வாதபித்தங்
கெதியில்லை யென்று கர்மாந் தரநோய்கள் கிடுகிடுத்து
மதிசந்திர சோதி வாருதி பான மதினளவால்
சதிசெய் யுங்கால னெமனென்ற அஸ்திரந் தலைப்படுமே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1515
இஞ்சி சுரசத்தி லிடுங்குன்றி பற்பமது
அஞ்சிப் பயந்தோடு மாறுசன்னி- இஞ்சி
பித்தசுரந் தேனிலிடும் பேசாம லோடிவிடுங்
சத்தேழு தோஷமும்போந் தான். 

பளிங்கு பாஷாண பற்பம்
(தரு)
பளிங்குபாஷாண பற்பமென்னாண்டையே
பார்க்கவுஞ்சொர்ணபற்பம். 
பாடல் எண்:- 1516
விளங்கலாகும்வெள்ளைவெண்மதிசந்திரன்
கல்மசங்களில்லாக்கண்பார்த்தொருபலம்
துலங்குந்துய்யநிறசுந்தரமாகிடுங்
களங்கமாகும்வெள்ளைப்பாஷாணங்கட்டுமே- பளி. 

பாடல் எண்:- 1517
கருவில்மூலப்புளிகண்டதுமோரிடை
சுரூபசாரநீர்தூக்கிடுநாலிடை
புருவமாய்க்கம்பிஉப்புவெங்காரமும்
புரசனுப்புஉருவியுப்பாண்டையே- பளி. 

பாடல் எண்:- 1518
பூனைவணங்கிப்புகழிந்துவுப்பது
மீனமிதுசரிபாகஞ்சமனதும்
தானேமூலப்புளிநீருறவாக்கியே
சாருமூன்றுதண்ணீர்போலாகிடும்- பளி. 

பாடல் எண்:- 1519
தேனேசெயனீரினில்சேருமுப்பூவதின்
மானேகழஞ்சிடையதிலிட்டுத்தாக்கியே
நானோ அயச்சட்டிதன்னில்பாஷாணமும்
யானும்வைத்துச்செயநீர்சுருக்கானதே- பளி. 

பாடல் எண்:- 1520
ஏற்றநாலுமிடைவிடாச்சாமமும்
போற்றிமூலப்புளியொருதன்பலம்
சாற்றுமோவிந்துநாதநீராட்டிப்பின்
ஏற்றுவங்கவசமினந்தெரியாமலும்- பளி. 

பாடல் எண்:- 1521
காற்றுரவிமுகங்காயவைத்தானபின்
மாற்றுமுப்பின்வகைவகைக்கோர்பலம்
வேற்றிடாவெள்ளெருக்கன் பால்விட்டது
பார்த்துஆட்டிப்பாஷாணத்தின்மேலுமே- பளி. 

பாடல் எண்:- 1522
அட்டியில்லாமலதுகவசங்கன
மருணகாந்தியதுமுகம்வீசிட
கட்டிவைத்துக்கனரவிகாய்ந்தபின்
கவசமேழும்மண்சீலையதுசெய்தே- பளி. 

பாடல் எண்:- 1523
நெட்டிடுமேபுடஞ்சோடசமாவது
கெட்டியதாய்சுண்ணங்கீர்த்தியதாகுமால்
சொட்டுப்போடுஞ்சுண்ணத்தினால்வேதைகாண்
வெட்டிடுமேவெள்வங்கமும்வெள்ளி- பளி. 

பாடல் எண்:- 1524
வெள்வங்கமிருசேரயச்சட்டியில்
கண்விட்டாடக்கனலாக்கினிதீயினால்
பண்பற்றேசலநீரதுபாகமாய்ப்
பாஷாணசுண்ணம்பணவிடைதாக்குமே- பளி. 

பாடல் எண்:- 1525
எண்விதப்புகையெட்டுமேகட்டுங்
கண்விதப்பதமாகக்கருதினால்
விண்ணுமண்ணுமிதுக்கெதிரில்லைகாண்
நண்ணுந்தீதுவராதுகாணாண்டையே- பளி. 

பாடல் எண்:- 1526
சுத்தபற்பஞ்சுகசன்னிதாந்தரீகஞ்
சூலைபேதிசுரதோசம்சீரணம்
உற்றநோய்களின்வாயுவுடகிராணியும்
உள்மூலமாவதுடல்மூலமெட்டதும்- பளி. 

பாடல் எண்:- 1527
வித்தில்மேகம்விப்புருதிகட்டியும்
வெக்கைபுண்கள்வெடிசூலைகுஷ்டமும்
சத்திவிக்கல்சயரோககாசமுந்
தானேபறந்திடுஞ்சங்கைகளில்லையே- பளி. 

பாடல் எண்:- 1528
பற்பங்குன்றிபஞ்சதாரைக்கிருதந்தனில்
பாகமதாகவும்பாய்ச்சுங்காலைமாலை
கெற்பநோயோடிகெதிகெட்டுப்புக்கிடுங்
கிலேசமில்லையரைமண்டலமுண்பீராகில்- பளி. 

பாடல் எண்:- 1529
அற்பநோய்தனக்காவின்பாலன்னமும்
ஆகுஞ்சருக்கரையந்தவிதிப்படி
சர்ப்பவிஷங்கடித்தாலுமேறாதுகாண்
காரசாரசவுகாரமிதாண்டையே- பளி. 

பாடல் எண்:- 1530
இந்தபற்பமீரேழுலோகத்திலும்
சங்கைகாண்பதரிதரிதாகையால்
விந்தைபார்விந்துநாதக்கருவியால்
வந்தநோய்கள்வாராதுசெடத்திலும்- பளி. 

பாடல் எண்:- 1531
மந்தமும்வயிறுமுப்பசமேப்பமுங்
கொந்திடுங்குலைநோய்கள்பறந்திடும்
அந்தமாகுமருணனொளிவுபோல்
அந்தபற்பமெவர்செய்துண்பார்களே- பளி. 

பாடல் எண்:- 1532
வெள்ளைப்பாஷாணமிதுகற்றறிந்திடில்
வேதைகோடிவெள்ளீயம்ரசிதமாங்
கொள்ளைகொள்ளைகோடானகோடிவினை
கூறறிந்துகொடுத்திடநோய்கள்போம்- பளி. 

பாடல் எண்:- 1533
விள்ளயில்லைவேதாந்திகள்சூதுகாண்
விந்துநாதம்வெளிமறைத்தேகினார்
கள்ளமில்லைக்கருதியநோய்களில்
காட்டினார்கருகாண்பதருமையே- பளி. 

பாடல் எண்:- 1534
பற்பங்கோடிபலப்பலநூல்களில்
பாடினார்கள்பழம்பொருளாகவும்
கற்பங்கோடிகருவறியாமலும்
காட்டினார்கள்கனகத்தின்வேதைகாண்- பளி. 

பாடல் எண்:- 1535
சற்பஞ்சாரைசவுக்காரமுப்பூவினால்
தப்பிதங்களொருசங்கைவராதிடில்
அற்பசண்டாளருக்காகுமாகாதிடில்
ஆண்டேஞானவெட்டிஆயிரத்தைந்நூறே- பளி. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1536
இந்தவிதங் குறுமுனிவ ரெனக்குச் சொன்ன
ஏழ்மையடி யேனுரைத்த இயல்பைக் காண்போர்
அந்தரங்க மானதெல்லாம் வெளியாய்ப் பாடி
அப்புவியி லனை வருக்கு மாசா னாக
வந்தவிதி காணரிய ஞான வெட்டி
வசனித்த வாறுகளின் வரலா றெல்லாம் 
பைந்தமிழை யாய்ந்துவிந்து நாத கற்பம்
பாடுபட்டோர்க் கெய்தும்பர கெதிதா னாண்டே. 

பாடல் எண்:- 1537
கனவதுபோற் கண்டதொரு காட்சி யெல்லாங்
கற்பத்தா லறிந்தெந்தன் கருத்தி னாலும்
இனம்பிரித்து எந்தனுக் குபதே சத்தால்
எடுத்துரைத்தே மினிவர்ம மில்லா தாலும்
அனைவருக்கு மாயுரைத்த பொருளா னல்ல
மகத்துவத்தா லானதல்ல மர்ம மல்ல
தனமிதுகாண் பொக்கிஷத்தை வெளிவிட் டாலுந்
தலைதெறித்து அண்டஇடி சாருந் தானே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1538
பூத்திருக்கு நாதவிந்து பூநீறு வானதுகாண்
மாற்றுஇரு பத்தாண்டில் மலப்புளிபூ நீரதுவாம்
வேற்றுமைக ளில்லையினி மெய்பொய்யறிந் தேமருவக்
காற்றுமழை போலிருந்த காரணத்தைக் கண்டிலரே. 

பாடல் எண்:- 1539
வஞ்சகமில்லா நூலாய்ந்து வைத்திருப்போர்க்கென்னபலன்
சஞ்சலம்வா ராதுவினை சாஸ்திரம்பொய் வாராது
பஞ்சவரு காதவற்குப் பதினெண்பேர் காயமும்போம்
கஞ்சமல ரம்பிகையின் கருணைபெற்று வாழ்பவரே. 

பாடல் எண்:- 1540
இந்நூலை யாய்ந்து இகழ்ச்சிபடு வித்த ஈனருக்குத்
தன்னா லனேகஞ் சதகோடி நோய்களில் சஞ்சலமாய்க்
கன்னான் குறடுகனல்கொண்டுவீசிடுங் காயத்திலும்
சொன்னேன்சொரிகுஷ்டம் வெறிகொண்டுபாய்ந்துசொக்குவரே. 

பாடல் எண்:- 1541
கற்பத்தை யுண்டு கணக்குபத் தாண்டு கழித்தபின்பு
அற்பமிது வென்றறிந் திட்டதா லல்ல ஆச்சுதென்று
உற்பகஞான ஜெகஜோதி யாட்ட முடலதனில்
முற்பகஞ் செய்த பூசாபல யோகமுன் னாள்தவமே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1542
எஞ்செய லாலெய்து மிவ்விதியு மல்ல
தஞ்செய லாலுண்டோ தந்தைவிதி- எஞ்செயலோ
முன்னா ளமைத்த மொழிதவறா தன்னால்
இன்னாள மைப்பதுவு மில். 

பாடல் எண்:- 1543
சயில மிரதுதகந் தயிலமது லேகியமும்
அயிலமதி லுதித்த அஞ்சும்- சயிலமது
அஞ்சுருவு மவித்ததனி லமைத்தபடி யாமாகில்
சஞ்சலங்கா ணில்லைத் தவிர். 

சாதிலிங்க பற்பம்
(தரு)
சாதிலிங்கபற்பங்காண்பஞ்சபூதத்தில்
சோதியானந்தப்பிரகாசங்காண். 
பாடல் எண்:- 1544
ஆதியிலெனக்குள் சாதிவாதிகளனந்தங்கூடி
அந்தரங்கமாப்புதைத்தவிந்தலிங்கவித்தையைநான்
அருள்அம்பிகையாலதிகமிதைஆயிரத்தைந்நூறில்
பிரசங்கமறிந்தம்புவியோர்களுக்காககெம்பீரஉத்தண்டமாலை
சம்பிரமதாகவிளங்கசெம்புலிங்கேசர்பதமேஆயிரத்தெட்டிதழில்கமலமலர்
பாயிரத்தோடனைத்தும்தமிழ்பொழிய
அகிலமுழுதுஞ்செழித்தவனியெங்குந்தழைக்க
அலைகடலுமீரேழும்பலகலைகளும்பாயஅறிவித்தேன்கற்பம்
நாதவிந்தினால்துரியத்தில்நின்றுஆண்டீரைஞ்சில்மேதினியோர்களும்
ரசவேதைகளுழைத்துலிங்கம்வால்களடிபட்டுப்போய்
மாண்டதுமிங்கிலிகத்தால்வறுமைகள்சூழ்ந்து
மாளிகைவீடுந்தனங்களுமிழந்துநாய்களதுபோல்- சாதி. 

பாடல் எண்:- 1545
காடுகள்தோறுந்திரிந்துபேடியாய்க்கண்கெட்டுழன்று
ஊதியம்பதியிழந்துவீதியிலுழன்று
வேதைபொய்யென்றுவெகுவிதமாய்ச்சேதிகளாய்ந்து
உலகுதனில்என்னுக்குள்விசிதரத்னமிருந்துலவுவதுங்
காணாதிப்படியானுமேசுட்டுவிழந்தேன்
பொக்கிஷமெல்லாம்இனியென்னகாணும்
இவ்வுடலினில்கருநெல்லிதோணும்
எவ்விதமாகஇரவிகதிசூரியனொளிவைக்காருமறைத்தவியல்பு
என்னுக்குளிருளுருவைக்காணொட்டாமேக
மிருப்பதுங்கண்டேன்கற்பத்தையுண்டுசிறப்பதாய்விண்டேன்
காயந்தனிலும்வாலாம்பிகைப்பெண்ணமிர்தமூட்டியெனக்கு
அருவுருவையுங்காட்டிசுரூபசித்தியளித்துஅழைத்துமேன்மேலும்
அட்சயபாத்திரங்கொடுத்துப்பொன்மேரும்சுழிமுனையின்முனை- சாதி. 

பாடல் எண்:- 1546
அம்பரவீதியில்வாசிபம்பரஞ்சுழன்றதுபோல்
கும்பித்துஇடைபிங்கலைஸ்தம்பித்துஎங்கெங்கும்பாய்
அஸ்வங்களோடசவாரியதுவிசுவாசித்தாட
அண்டங்கள்பாயஆதாரமாறுங்கடந்துசூதபானத்தையடர்ந்து
அகண்டமண்டலம்வேண்டியுகசண்டலங்கள்தாண்டி
அரூபியாய்நின்றுசுரூபசித்திகருவியைவென்றுஆண்டவன்செயல்
அனுக்கிரகபதவிபெற்றனந்தங்கோடிப்பிரகாசம்
அதிதமதிபெருகியமிர்ததீபத்தைக்கண்டு
அர்ச்சித்துப்பணிந்தேன்மதிமலர்கொண்டனுதினமணிந்தேன்
சொர்க்கவாசலில்அதிலுநுழைந்துஞானவிதியைக்கடந்தப்பால்
அகிலமீதினில்வந்தஅதிசயத்தையருளஆண்டேநீர்கேளீர்பரிசவேதை
ஆரம்பத்தாண்டில்நாதவிந்துநீர்- சாதி. 

பாடல் எண்:- 1547
இங்கிதமாகவும்லிங்கமிதிலும்பலமெடுத்துமிகவுங்காரத்தி
லெட்டுயிடைகாண்பாண்டத்திலிட்டுயிந்துநீர்சார
மிதுமூன்றுபத்திடையுமேரெண்டுமிதமாய்ப்பதம்
இன்பமாய்க்கரைத்தில்லம்விதமாய்த்தெளியவைத்து
இருக்கமூன்றுநாள்பின்புசிறப்பாய்ச்செயநீரைவாங்கி
இனியுரைப்பதுகேள்உருவியுப்புஇசைந்துணர்வீராய்
நாற்பதுபலம்இடரில்லாமலதனில்விடவும்விட்டுவுறைய
வெளியில்லகலடக்குங்கனமாய்ப்பாண்டஞ்சிறுசாய்
இடையொருபடிதான்லிங்கந்தனையுமளவாய்தோளாந்திரங்கயிறுகொண்டு
தூக்கிடுஞ்சுருக்கேறவுமாக்கிடுங்கமலாக்கினை
தாக்கிடுங்கொஞ்சுங்கொஞ்சநீர்வாங்கினால்சொன்னபடியா
மதிமலர்பொங்கும்நாதவிந்துநீர்அதிகம்விடாமல்வாலாம்பிகை- சாதி. 

பாடல் எண்:- 1548
மறைந்தசூக்ஷமிதுகாணுரைத்தமதிரவிதான்
விரைத்தேன்ஞானவெட்டியில்பரத்தைத்துதித்துவிந்நூல்
வேகம்பொல்லாதுஅதிகவாசந்தேகம்வெல்லாது
மாய்கையடைந்தோர்செய்வதுங்கடினம்பழுவரும்பலியாதொழுது
அம்பிகைபதமெளிதும்விதியிதுகாண்கெவனம்விடாதே
மனக்கவடுகவனம்படாதேசற்குருவினால்தொட்டகுறை
யிருந்தால்விட்டகுறைவருங்காண்தொடுத்தேன்கோடி
தொந்தங்களடுத்தேன்பனிரெண்டாண்டுசொன்னசொல்லறி
சோமனீரெல்லாஞ்சுருக்கேறித்தொக்காந்தொக்காகிடும்பின்
சாரம்பலம்வெங்காரஞ்சமனாகவும்பொடியாம்
சாதிலிங்கத்தைவாங்கிச்சாரம்வெங்காரமிட்டு
தான்கிளறிடுமேசலமதாகுமேனிந்தவாறேயிரவிதனில்- சாதி. 

பாடல் எண்:- 1549
சாரநீர்களுஞ்சுண்டக்காரமொருதிங்களில்
ஈரமுங்கசிந்தால்ரவியெடுத்துக்கதிர்முகத்தில்
உலரவைத்திடுவாம்சுன்னமதிதம்உப்பிதுகாரம்
புட்டியிலிட்டுசாதிலிங்கமதுசாரணைசெய்யவும்வித்தை
ஓதினாரென்குருவாசானொளித்துசொல்லவில்லைகாண்
ஓகோமாரணமாய்நவலோகங்கள்உவரசங்களுமாய்நவபாஷாணம்
உப்பிதுநாலுமீரைந்துபற்பமதாகுஞ்சரக்கு
சொற்பமிதுவென்றெண்ணிஅற்பமாகிலும்நினைக்காசுண்ணமிதாகும்
வெகுபதனம்இன்னஞ்சொல்லுவேன்காண்ஆண்டேகேளீர்
அருள்லிங்கத்தின்பேரில்குருவண்டுடனேபூரம்அதிதவீரம்
உரமுந்துருசிசுண்ணம்அறுவகைச்சரக்கும்வகைக்குசமன்புழுகு
சரியிடைகழஞ்சிவெள்ளைப்பாஷாணம்- சாதி. 

பாடல் எண்:- 1550
அதனிலிருகழஞ்சுவிதமுங்கலுவத்திலிட்டு
அடைவாய்நாதநீர்விட்டுத்திடமாயிருகடிகை
ஆட்டிமைபோலும்வழித்துஓலைஅதுபதங்காணும்
கொஞ்சங்கொஞ்சமாய்ஊட்டிலிங்கத்திமேலுமுலரக்
கதிரமுகத்தில்வாட்டியடிக்கடிதான்வலுவாய்ச்
சுருக்கேறவைத்துப்பின்கவசம்அறுரெண்டாகில்
சித்தர்சொல்முறைகாண்மூலப்புளியின்
சுண்ணம்வெண்காரம்தாரந்துருசானதில்வெள்ளைகாண்
சுடராகியபேரண்டமெடுமேவழலையஞ்சு
மிடைகழஞ்சிரண்டுசரிசமன்கொண்டெடுத்துக்
கல்லதனில்நாதவிந்துநீர்இசைவாயாட்டி
மயனம்வசமாய்முன்போல்வசம்
இரவிமுகந்தனிலுந்திவியங்கனிதென்றுமெடுத்திவைத்தினிகாண்
கரத்தின்வேகம்விடுத்திடாமலுமேகாயக்காயவும்- சாதி. 

பாடல் எண்:- 1551
திருப்பித்திருப்பிரவிமுகத்திலீரமும்வற்றக்
குறிப்பதுவாய்மறுபின்சிறப்பாய்மூன்றாங்
கவசம்சாரம்வெங்காரந்துருசிவெள்ளைப்புளிசுண்ணநாலும்
சரிசமனாய்க்கழஞ்சுவிதமிரண்டுகலுவந்தனிலடக்கிக்
கருவிநாதவிந்துநீர்கலக்கவிருகடிகைகருதியாட்டிடவு
மயன்மீதுவருதலானதுகாண்லிங்கமதுக்குக்
கவசமுன்போலப்பதமாயருணனொளிவுபடக்
கனதியாகாதிடினுமுலரவுலாவுங்காண்கன
ரவிபடவுமுன்பின்திருப்பிகாயவுஞ்சத்தில்லாவேற்றுமை
வாராதிருவுருவின்மலர்தனருள்விசிதகமலஞ்செழுந்
தேன்பொழியுஞ்சுழிமுனையில்திருநடனம்ஜெகச்சோதியிந்
நூல்சுகாதீதத்தின்பிரகாசவெளியில்கருணைஞான- சாதி. 

பாடல் எண்:- 1552
தீபந்தனிலெனதுகியாபகத்துடனும்வாசியோகத்
தினிலிருந்துயாகமப்படியேயூதிதசதீட்சையாண்டு
மோக்ஷபதவிதெரிசனம்பெற்றேன்சுருதிமுடிசுகஜீவன
மெனக்குத்தொழிலனந்தமளித்தசூக்ஷமறிந்து
இந்தசுகத்தைச்சொல்லுவேன்காணுந்துதிபெற்றலிங்கம்
சுண்ணபூபதிஅமுரியுப்பதுகாண்முன்புமுடித்த
அதுவுப்பதனில்பத்துவிதமஞ்சதுபலங்கொண்
டடிகனத்தசட்டியில்குடிலமில்லாதபடி
அதனிலிட்டதன்மேல்கவசம்வைத்துவிதித்தஞ்சுபலமும்
பின்புமேலிட்டுதனதுமேலுமேன்மேலுஞ்சருவாமலுமேல்மூடி
வெனதுசந்துதெரியாகனதியேழுமண்சீலைதெரியாமல்செய்து
விவேகத்துடன்அறியாதெவர்க்கும்அடுப்பிலேற்றி- சாதி. 

பாடல் எண்:- 1553
அருள்வந்தெய்தும்வன்னியதன்மிகச்சோராமல்
விதியாயக்கமலாக்கினைவிளங்குகடிகையேழு
விடம்விட்டுப்பிரியாவொருநிலைகொண்டனல்சுற்றி
முறியாபதனமாகஎரித்துஆறவுமறுநாளெடுத்து
வைத்துமேகாலைபிரித்துச்செய்கையின்படிபிசகாமலுமெடுக்க
சிவசிவசம்போசெம்புலிங்கேசஅரகரசம்போ
சற்குருநாதாஅகத்தியருள்சித்திமகத்துவலிங்கந்
தவத்திலடியனுந்தன்சபத்திமறவாமலும்
சாதிலிங்கந்தான்அதிதசுண்ணமதியந்தடங்காணும்
நாதவிந்திதால்வீரசெயபூபதிவேதைகளுக்குங்கெடி
சூரனெனுஞ்சவ்வீரந்துரைபூபதிக்குப்பெட்டி
தாம்பரவேதைவிஜயமன்னால்சாற்றவுமெளிதா- சாதி. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1554
பிருதிவி யப்புடனுந் தேய்வு வாய்வும்
பலத்தஆ காசமொடு பஞ்ச பூதம் 
அறிவித்தேன் சரக்கிதுகா ணஞ்சு மாச்சு
அகிலபுவ னங்களினி லார்தான் செய்வார் 
உருதிமன தொருமையினா லோகோ தீட்சை
ஓராண்டு அமுரியுண்டு உடல்வே றானால் 
குறிபடுமென் னாண்டைதச தீட்சை பத்துங்
குருவருளால் முடிந்ததனால் யோக வானே. 

பாடல் எண்:- 1555
யோகமொரு வருஷம்பனி ரெண்டாண் டென்னில்
உதகமது மிறங்குமிட லழிவோ இல்லை
தேகமழி யாதுயிர்காண் சடமே வச்சிரம்
சித்தர்க ளினொருவன் தேவ னாச்சு
சாகாம லிருந்திடலாம் வினைதான் போச்சு
சத்திசிவ தீட்சையினால் சாக்கா டில்லை
ஆகமத்தி லொளித்துவைத்த பொருள்தா னாண்டே
அகத்தியரால் யானறிந்து அருபெற் றேனே. 

பாடல் எண்:- 1556
அறிவித்தே னீற்றினமுங் கார சாரம்
அதினளவால் சரக்குஅறு பத்து நாலும்
விரிந்திடுமே நவலோக நவரத்தி னங்கள்
வெண்ணீறாஞ் சுண்ணமொடு பற்பந் தானும்
தெரியவுமே செந்தூர மனுபா னங்கள்
செய்தொழிலும் வேதையொடு திறமாய்க் காணும்
பரியாச மாயுலகோர் பழியா மற்றான்
பதினெண்பேர் மறைத்தகற்பம் பகர்ந்திட் டேனே. 

பாடல் எண்:- 1557
சாம்புவனென் றேயெடுத்த பேர்தன் னாலுந்
தந்தையெந்தன் பிர்மசரஸ் வதியுந் தாய்தான்
நாமெனுமே விரித்துவிட்டகுறையா லெய்தும்
நாதவிந்து உற்பகத்தால் ஞானி யானேன்
வாமெனுமே வஸ்துவுண்டு யோக வானாய்
மதிரவியின் பிரகாச ஒளிவி னாலுந்
தேனெனுஞ்செங் கமலமலர் பூத்த வாசம்
ஜெகமெல்லாம் பரிமளிக்கச் செய்தே னாண்டே. 

பாடல் எண்:- 1558
பரியாச மாகவுமே பழிப்பார் நூலைப்
பழித்ததனா லெலுவாய்க்கும் பலனோ வில்லை
குறிப்பாகக் கும்பமுனி பாதம் போற்றிக்
குருவருளால் குண்டலியே தொழுதேன் காணும்
துரியதுரி யாதீத நிலையுங் காட்டித்
துவாத சாந்தவெளி சுழிமுனை காட்டி
நெறிபிசகா மூலமென்ற புளிசுண்ணத்தால்
நீற்றினமும் கண்டறிந்து நிலைபெற் றேனே. 

பாடல் எண்:- 1559
பலிதமாய் வான்குமரி லேகி யத்தைப்
பக்குவமா யானருளப் பாரில் மாண்பர் 
மெலிந்தசடம் வலுத்திடுங்காண் வினைதா னில்லை
மேதினியோர்க் காகவுமே விளம்ப லானேன்
சலியாதே நீமனதே கெர்வம் வேண்டாம்
சாஸ்திரத்தைப் பொய்யென்று தள்ள வேண்டாம்
கலியெது கற்பமுண்டால் காயஞ் சித்தி
கனகமுன துள்ளமதில் காண லாமே. 

வான்குமரி லேகியம்
(தரு)
வான்குமரிலேகியங்காணும்- மேகாதிமேகந்
தான்பயந்தோடி யேபோங்காணும். 
பாடல் எண்:- 1560
நான்மகிழ்ந்துலகருக்குவான்குமரிலேகியத்தை
யானுணர்ந்துணரவின்பஞானவெட்டியான்விதிக்கும்
நதிசூழ்ந்திடுஅருள்மேவியமதிசாரநீரெடைநாலது
மலமூலமிதொருகானெடைகுடமுட்டகரைத்தேவடி- வான். 

பாடல் எண்:- 1561
தேனிதைமூன்றுநாள்வைத்துப்பானமுந்தெளியசலம்
ஆனதையேனத்திலிட்டுவூனெனுங்கற்றாழையின்வேர்
செருக்கித்தததுதரித்துத்திடிபிரித்தெத்தனைபடிபத்திடை
யினமுனசலமுடன்சேர்த்தினிபுனல்வைத்திடுவனல்சூழ்ந்திடு- வான். 

பாடல் எண்:- 1562
முன்னமேவன்னியைநாட்டியின்னமுங்கமலாக்கினை
பின்னமும்வராமலுந்தானென்னையுங்கசிந்துவிட
முறியாமலுமலைபட்டழிந்தொழியாமலுங்கொதித்தெத்துட
னிருந்துத்துதிமருந்ததன்றிவையறிந்துப்பதமதுபாகதும்- வான். 

பாடல் எண்:- 1563
கன்னலும்வரும்பாகதுநன்னயத்துடனேசீனி
தன்னினம்பலம்பத்ததுஉன்னிதமாகவும்விட்டு
கலந்துக்கிளரதுபாகுபோலிருந்துக்கனலடிபற்றிடா
மலர்ந்துப்பதம்வருமேவிடில்முறிந்துத்தணலறிந்திப்படி- வான். 

பாடல் எண்:- 1564
சாதிபத்திரிகிராம்புஞ்சோடசம்பதினாறெடை
ஏலமுஞ்சீரகம்ரெட்டியிதுக்குரெட்டிமிளகு
இயல்பாயெடுமிதுசூரணபலமாய்ப்பொறித்திடைமாறிடாப்
பதமாய்வருமிதுபாகுவில்கவரும்படியுடனேயிது- வான். 

பாடல் எண்:- 1565
பாகதுபோலும்வருதல்பதமாய்லேகியங்காணும்
மாவதுமடிபற்றாமல்மார்க்கமாயெடுத்தேனத்தில்
வைத்துபரிசுத்தத்துடனித்தம்மருள்முத்திப்பெற
சித்தத்தனுக்கிரகம்பதஞ்சித்திச்சிவஞானக்குரு- வான். 

பாடல் எண்:- 1566
தத்துவமெய்ஞ்ஞானநெறிசித்தர்களறிந்துசிவ
சத்தியைப்பூசித்துக்கற்பமுத்தியையறிந்துமோட்சம்
தனைப்பெற்றுடன்வினையத்துடல்கனசித்துகள்மனமொத்துடன்
நிலைவைத்துருபரசிததியிலருள்பெற்றனுக்கிரகப்பதம்- வான். 

பாடல் எண்:- 1567
குமரிலேகியந்தனில்குறித்துக்கழற்சியின்காய்
அமிர்தமெனவும்லிங்கமதிதசுண்ணங்குன்றியெடை
அதிக்குட்பதிந்திருவேளையுமிதுக்குப்பொருளரைமண்டலம்
விதிக்கும்பசுமமிர்தத்துடனுதிக்குங்கதிரொளிபோல்வரும்- வான். 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1568
வான்குமரி லேகியத்தில் வைத்துஅரை மண்டலங்காண்
தான்கருதி யுண்டிடவுஞ் சன்னிசுர தோஷமும்போம்
ஊண்வாயு வுளமாந்தை யோடும்விப் பிருதிமுதல்
தேன்மதுர மேகசயந் தித்திப்புநீர் காண்கிலனே. 

பாடல் எண்:- 1569
கட்டியரை யாப்புகன்ன சூலையுடன் கர்ணிகமும்
ஒட்டியப்புண் வாழைசிலை யுட்பிரமி மூலமதும்
ஈட்டியது போலிகழ்ச்சி யெய்துஞ்செவி குத்தலுடன்
மேட்டியென்றே மேகமெல்லாம் விட்டொழிந் துவேகிடுமே. 

பாடல் எண்:- 1570
மார்புத்து வாய்புத்து வாதபித்த சேத்துமங்கள் 
நீர்ச்சுருக்கு நீர்க்கடுப்பு நீராமை நீர்ச்சுரப்பு
தூர்செயுங் குன்மங்களெட்டு சோகையுடன் காமாலை
பேரனந்த நோய்களெல்லாம் பிரிந்துவிடுங் காண்கிலனே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1571
விஷப்பாண்டு வீக்கமும் விக்கலுங் கக்கல் விரோசனமும் 
சுழல்வாத பித்த சூரணமும் பஞ்சு வாசமுடன்
கழல்வாத சன்னி கறடு முறடுங் கட்டிகளும்
மழல்வா தம்வாய்வு சொரிகுஷ்ட மூலமடிபடுமே. 

பாடல் எண்:- 1572
கடுவன் சிலந்தி கரையானு மீளையுங் கண்ணெரிவும்
வடுவன் பவுத்திர மணிகண்ட மாலை பரபரப்பும்
விரியனுந் தேளு மறுபத்தோ ராயிர விஷங்களதும்
பருசிக்க டல்புக்கி புகைபோலும் பற்றிப் பறந்திடுமே. 

பாடல் எண்:- 1573
தீராத நோய்கள் தெளியாத பித்தந் தினவுடனே
வாராது காணும் வழலைப் பெருமையும் வாழ்க்கையினால்
பேரா லெடுபடு மமுரியுண் டால்வினை பேர்ந்திடுங்காண்
சாராது மாய்கை நமனென்ற தீவினை மாறிடுமே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1574
பெண்பா லமிர்தம் விதித்தமதி பானத்தை
உண்பா ருலகுதனி லுண்டோ- வெண்பால்
மூலப் புளியருந்த முப்புரத்தைச் சுட்டிடுங்காண்
காலனில்லை யெப்போதுங் காண். 

பாடல் எண்:- 1575
மதனப்பா லுண்டு மாய்ந்திடுவ தில்லை
மிதமாய்க் கற்பம் விரும்பினால்- மதனப்பால்
லகரியது வேக நிராமயத்தை யுண்டு
சுகம்பெறலாங் காயசித்தி சொல். 

பாடல் எண்:- 1576
சொல்லார் பெரியோர் சொன்னால் வெகுசூக்ஷம்
வெல்லா ருலகத்தோர் விதியிருத்தால்- சொல்லார்
கண்டாலுங் காரங் கருத்தி லதைக்கண்டால்
உண்டாலு முத்தி யுணர். 

நாகபற்பம்
(தரு)
தனனாந்தனதனனாந்தன- தன-தத்தனாந்தனதனதனனாந். 
பாடல் எண்:- 1577
திருப்பெருந்துறையிலகுமெய்ஞ்ஞானஒளி
திருமருவியமதிமலர்சூழும்
பொருப்புனல்நதிபெருகுந்தில்லையனந்த
புருவச்சுழியிடைபின்முனையில்வளர்
அருவுருநாதவிந்தின் அமைத்துவரலாறுகளின்
சூக்ஷமெல்லாம்யானுரைத்தேன்காண்
குருமுனியுரை தவறாமெய்ஞ்ஞானகுருவின் மலர்க்கமலம்
அடிதொழுதடியதுமர்ச்சனைசெய்து
கற்பகக்குண்டலியின் பதங்கருணையருள்
காரமுஞ்சாரமுங்கண்டுகருதினோம்பார்
தற்பரசிகாமணியின் சற்குருபரன்
தாளிணைபொற்பாதமலர்நான்மறவேன்
பரப்பிர்மசிஷ்டையினால்சாம்புவனெனும்
பாடுகிறேனாகபற்பம்வேகமிதுகாண்- தன. 

பாடல் எண்1578
பாகமதாய்நாலுபலங்காண் இடைபிசகா
பானுமதிசாரையது நாலுபடிதான்
சேகரமாம்புளிசரக்குக்கடுங்காரமது
சேர்த்தொருபடியிடித்துச்சூரணமதாய்
வேகமென்றஅமுரிதனில்காரத்தையூட்டி
விருப்பமுடன்கரைத்துமேலதுமூடி
யாகமப்படிதனைமூன்றுநாள்வைத்து
அமுரிதெளிவிறுத்துஅத்தெளிவினில்
கம்பியுப்புச்சீனக்காரம்வெங்காரஞ்சாரங்
கடல்நுரையுப்பதஞ்சுவகைக்குச்சமன்
ரம்மிதமாய்ப்பலமதுகாண்குளிக்கல்லினில்
நாட்டியரைத்தேமூடியதனிலடக்கி
கும்பமதிலுங்கரைத்துமூன்றுநாள்வைத்துக்
குடத்திலிருக்குஞ்சலத்தெளிவிறுத்தி
அம்பகமில்லாமலுமேகமலாக்கினி
அக்கினியைமூட்டியனல்தெட்டிமையதாய்- தன. 

பாடல் எண்:- 1579
தொக்காகிசுண்டிடும்பதமாய்எடுத்துஆறச்
சூட்டிடும்பீங்கானதனில்சொல்லுவேனாண்டே
உக்கிரமதாய்ரவிதனில்எடுத்துவைத்து
உலரஉலரக்கதிர்முகந்தனிலும்
விக்கிரமெனும்வெண்ணிறமதாய்உப்பதுவேகம்
வெளுத்தசர்க்கரைநிறமென்னசொல்வேன்
அக்கரைகரங்கள்படவும்அதிதசுண்ணம்
ஆலகாலவிடமதுக்கெதிரில்லை காண்
ஆதியில்முன்னண்டைபற்பம்கழஞ்சியது
அதிதமுப்புசுன்னமதிலொருகழஞ்சு
நீதியாய்ச்சவ்வீரம்பூரம்வகைவகைக்கு
நேர்மையால்கழஞ்சியெடைதுருசுசுண்ணம்
பேதியிலதிதபேதிகாண்இதின்பெருமை
பேசினார்பெரியோர்ஜெகஜாலமதா
யிதிலொருகழஞ்சியிடைவகைவகை
யிதுவகைகளனைத்துமேகமதாய்- தன. 

பாடல் எண்:- 1580
பனிவிழும்காலமதில்எட்டுநாள்விதம்
பாகமதுவாகவொருவாரமும்வைத்தால்
இனிசலநீரிறங்கும்இதுவென்னமயம்
இறுத்துஇறுத்துக்குப்பியதினுள்ளதாய்
வனிதையின்மாதவிடைபோல்அக்கினிவீசும்
வடித்துவடித்துச்சலமளவதுவாம்
கனதையாயிதையெடுத்துகைபாகமாங்
கருதிமூசையில்நாங்கனலதிகம்
உருகும்பதங்களறிந்துசெயநீரதனில்
ஓரெழுதிரமுருக்கிச்சாய்த்திடவும்தான்
வரும்வெள்வங்கமதுபோல்வெட்டையதுவாய்
வலுத்துக்கட்டியுமறுதிரமுருக்க
அருகுஞ்சவளையதுபோல்மெழுகதினவாறாச்
சரியமறுவெறுதிரமிருக்கப்
பெருகுந்தங்கத்தினிதங்காண்அதுவலுத்துப்
பெருமையென்னால்விளங்கப்பேசரிதுகாண்- தன. 

பாடல் எண்:- 1581
பச்சைவண்டுபோலதுவாம்பசுமைநிறம்
பாரதனிலும்மாரறிவர்பாகமதுகாண்
அச்சமில்லானாகப்பச்சைசித்தர்கள்செய்யும்
அதிசயமென்னுற்றுக்கொண்டதுவீய்ந்தால்
மச்சமறிமாத்தறுநூறுசெம்பதுக்கிய
வயதென்னவழலையென்மகிமையதால்
நச்சரவமமுரியுண்டாளினமதால்மீளாதுகற்பச்
சாதனைமூலப்புளியின்சுன்னம்படவும்
நீறுநவலோகமதுங்காரசாரத்தின்
நேர்மையிதினாலும்நவரத்தினநீறும்
தாறுமாறுசெய்கையதனால்குருவறியாசந்
தேகமாகும்வெகுஅந்தேசமாய்த்
தேறினதோர்நாகமதிலும்பலமெடுத்துச்
செய்வீரசுன்னமதில்வராகனரைகாண்- தன. 

பாடல் எண்:- 1582
வீரசுன்னநாதவிந்துநீர்மென்மேலதாகவிட்டு
மத்தித்துமேனாகமேற்கவசமாய்ப்
பரவியும்பூசுரவிஒளிவுபடபானுவின்
முகந்தனிலும்மாகமதுவாய்
சுரவியதின்மேற்கவசம்மூலத்தின்புளி
சுன்னமொருபலமதில்நாதவிந்துநீர்
திரவியமிதுவெனவும்மத்தித்துமேலுந்
தீர்க்கமாங்கவசமதுசெய்துமுடித்து
வாலையருள்பொற்கமலம்மலரடியில்
வணங்கினேனாண்டையிருகரங்குவித்து
சாலவும்பூசித்தடியேன்பாறையுப்பதுந்தானதி
லொருசேர்கொண்டுவிந்துநாதநீர்
கோலமுடனாட்டியதைக்கவசமதுகுறித்து
நாகத்தின்பேரில்கூறதுசெய்து
ஞானமுடன்தாளிலுமிட்டுமேல்மூடிமண்ணு
நற்கவசஞ்சீலையதுஏழுஞ்செய்தே- தன. 

பாடல் எண்:- 1583
முன்முறைபோல்சாமமதுஒருநாள்முழுது
முத்தியெய்ததுசதுர்சாமமொருகம்பமதாய்
இன்பமுடனுமெரித்துதீயாற்றியெடுத்தி
யல்புடனாகசுண்ணமெய்துமுறைகாண்
தெம்புடனேசெம்புருக்கிப்பத்துக்குவொன்று
திருத்தமதாகவுமேயெடுத்திடவும்
அன்புடையபத்தரைமாற்றுஅதிகநிறம்
ஆருமறியார்களிந்தஅதிசயத்தைப்
பன்னீருமாதளம்ரசமும்பசும்பாலும்தேனும்
பாகமதுவால்மிளகுசுக்குதிப்பிலி
யிளநீரும்பலவகைக்குஇதனிலிடும்
இச்சரக்கழஞ்சியெடைச்சூரணமதாய்
குன்றியிடைநாகபற்பங்கூட்டிமத்தித்துக்
கொண்டிடுங்காலைமாலையங்குணமதுவாய்
வேண்டிடுமரைமண்டலம்விசிதமாய்
விளங்கிடுநாகபற்பமேதினியோர்க்கும்- தன. 

பாடல் எண்:- 1584
அண்டவாதமரோசிகமுஞ்சுவாசகாசமை
யிரண்டுவாய்வதும்சீரணமுங்
கண்டமாலைகர்ணிகக்கோடும்பிரமியமுங்
காசபித்தபாண்டுவிஷபாண்டதுவும்
நின்றவயிர்குன்மமும்நீராமையோடுநீர்ச்
சுருக்குநீர்க்கடுப்புநீரெரிப்பும்போம்
இன்றணுகாபுண்புரைகளும்இருபத்தொரு
இசைந்தமேகங்கள்மதுமேகமுதலுந்
தந்தவலிநாசியடைப்புஞ்சயகாசங்கள்
சன்னிசுரதோஷமொடுகிராணியெட்டும்
வந்தவினைவிப்புருதியும்இசிவுவலி
வாந்தியொடுசோபதாபஆயாசமும்
வெந்தணலாய்வீசுங்கனலும்வெடிசூலைகள்
விக்கலுமேப்பமுடனும்வெதுப்புகளும்
அந்தந்தவியாதிகளுமேயுடலும்விட்டு
அலறிப்பயந்துஅலைகடலிற்பதுங்கும்- தன. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1585
வினைப்பயனை யின்னதென்று விரித்துச் சொல்ல
வெளிதல்ல வெகுநோய்கள் வெளிப்பட் டேபோம்
எனைப்போலும் பாடுபட்டுப் பனிரெண் டாண்டு
எடுத்துரைத்தேன் ஞானவெட்டி யெளியோர்க் காக
கனைதொடுத்து வேதையதுந் தொந்தங் கோடி
கருவறிந்து செய்துவிட்டேன் கற்பத் தாலும்
தனையறிந்த தன்னைத்தா னுண்ட தாலுஞ்
சகலகலை செய்தியெல்லாஞ் சாற்று வோமே. 

பாடல் எண்:- 1586
சுருக்கமென்ற பற்கவகை கோடா கோடி
சொன்னார்பதி னென்பேர் சித்து மார்க்கம்
கருக்களென்ற கருவியெல்லாங் கணக்காய்ச் சொன்னார்
காண்பதுவு மரிதரிது கல்வி மானார்
உருக்கமிந்த வுடலுயிரும் நினைக்க வேணும்
உடலுமுயி ரிருந்தல்லோ அறிய வேணும்
மருக்கமழு மாதுரத்ன வாலை தேவி
வடிவமெனு மம்பிகைப்பெண் வாறு தானே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1587
சுழிமுனைக்குள் ளேயிருந்த சோதியறிந் தாமாகில்
வழிபலவுங் கண்டுமதி மாமதுர கற்பமுண்டேன்
ஒழியாது கற்பமுண்டா லுடலுயிரு மேவலுக்கும்
அழியாத காயகற்ப மாரறிந்து வுண்பவராம். 

பாடல் எண்:- 1588
வேற்றுமைக ளில்லையிந்நூல் வெட்டவெளி யாகவும்யான்
பூத்தமலர் வாசமதைப் புகட்டினேன் பூரத்தை
நாற்றிசையி லும்புகழு ஞானவெட்டி யாய்ந்துகற்பம்
பார்த்துணர்ந்து வண்டிடுவோர் பரகெதிக்குப் பாதையிதே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1589
காலங் கழிந்து காயம் நெகிழ்ந்து காற்றுமழிந்
தோலுந் துருத்தியும் நாடி நரம்புந் துவண்டபின்பு
சாலவுங் கற்பஞ் சாராது சார்ந்துஞ் சற்றில்லைகாண்
வாலிப மெய்திடுங் காலத்தில் கற்பம் வசப்படுமே. 

பாடல் எண்:- 1590
வாராது யோகம் வாசிவ சப்பட்ட மதிரவியால்
மாறாது கற்பம் வலுவந்த தேக வாழ்க்கையினால் 
மீறாது ஞான மிகப்படித் தாலும் வித்தையல்லால்
தேறாத பேருக்கு மெய்ஞ்ஞான வெட்டி தெளிந்திடுமே. 

பாடல் எண்:- 1591
கண்கள் விழியு மிருள்மூழ்ந் துநாடி கலகலத்து
பெண்கள் மயல்கொண்டு விழிந்தழிந் தேபெரு நோய்க்கிடமாய்
வெண்தந்த மாறி மெய்நரை கண்டு வினைப்பயனால்
மண்ணுக் கிடமெனுஞ் சுடுகாடு சொந்த மாளிகையே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1592
ஞானத் தெளிவில் நாடிவிடு வோர்தமக்குப்
பானத்தை யுண்டு பரீட்சைபார்- ஞாலத்தில்
தெளியாதா ராகில் செகமாய்கை சூழ்ந்து
களியுவா ரென்றறியுங் காண். 

பாடல் எண்:- 1593
நாடிநரம் பசைந்து நரைதிரையு முண்டாகில்
தேடியென்ன ஞானந் தெளியாது- பேடி
மாய்கை யதுசூழ்ந்து மாயுஞ் சுடுகாடு
தாயெனக்குச் சொன்னவழி தான். 

பாடல் எண்:- 1594
காணாது கண்ட காட்சி யதுயானும்
கோணாது மாய்கையதின் சூட்சங்- காணுது
கற்பமதை யுண்டால் காய நெகிழாது
தற்பரையெப் பொழுதுஞ் சார். 

வாலை திராவகம்
(தரு)
தனனாந்தனதனதனனாந்தன- தத்தனாந்தானதனதனனா. 
பாடல் எண்:- 1595
சீர்மேவியகமலந்- திரு- வம்பிகைப்பொற்பாதம்நம்பியருள்
கார்மேவியகருணை- கற்ப- சாதனைகாட்டியெனக்குரைத்த
பார்மேவுங்கும்பமுனி- குரு- பாதமலர் பணிந்தேயடியேன்
தார்மேவியமதுரம்- சார- காரப்பெருமையைச் சாற்றிடினும்
ஞானச்சுழிநடன- திவ்விய- நாட்டத்திலும் வாசியோட்டத்திலும்
வானம் பொழியுமதி- கடல்- வாருதியின் திருமால்பதியில்
ஈனம்வராமலுங்காண்- மிக- யோகத்தினால் தவஞானத்தினாலும்
பானமிகவுணர்ந்து- பரி- பாஷையெல்லாமாய்ந்துபாடுகிறேன்- தன. 

பாடல் எண்:- 1596
சித்திரபூரணவாலை- திவ்விய- திராவகத்தையாண்டேயானுரைப்பேன்
வெற்றியெனும்படிகம்- நவாசாரம்- பூநீறுகம்பி வெங்காரம்
பத்துயுடன்பாறையுருவு- பச்சை- கற்பூரமும் நல்லபண்ணையுடன்
சதியெனுமாமேனி- பாண்டந்- தானதுவப்புதசையதுவும்
பத்திமொருபாண்டமெனும்- பின்பு- பக்குவமாய்வகையஞ்சுபலஞ்
சத்தோடவேமூலம்- புளி- சுண்ணமதும்படிசூரணமாய்
எத்தாயமுரியெனுஞ்- சார- மேலுமதாய்ப்படிநாற்பதுகாண்
சித்தாகவுங்கரைத்து- மூன்று- நாளதனைவைத்துச்சேகரமாய்- தன. 

பாடல் எண்:- 1597
ஆனாலுமேசரக்கு- அரி- தாரமும் வீரங்கெவுரியதும்
தானாகும்வெள்ளையுடன்- சாதி- லிங்கமும்பூரமனோசிலையும்
வேனானசிங்கியதும்- விந்து- நாதமென்றால் ரசகெந்தியதாந்
தேனான பச்சையதுந்- திரு- நீலகண்ட ரெனுமேசரக்கு
குவகைக்வகைப்பலமாய்- வலு- வானசரக்கொருசீலைதனில்
திகையாமலுங்கிழியாய்- தினு- சர்வதெல்லாங்கட்டித்தொங்கலிட்டு
துகையாயடுப்பினிலுஞ்- சொன்னேன்- சுத்தமெனுங்கனபாண்டமதி
வகையாய்தெளிவிறுத்து- ஒரு- சாலிலிட்டுக்கொஞ்சங் கொஞ்சமதாம்- தன. 

பாடல் எண்:- 1598
புரைதான்வராமலுடன்- சீலை- பொட்டணமாய்கட்டித்தொங்கலிட்டு
வரையாமலடுப்பில்வைத்து- வன்னி- மாட்டிடவுங்கமலாக்கினைதான்
திரையாய்நுரையகற்றி- செழுந்- தேனெழும்பிவருகாமலுடன்
கரையாமலுஞ்சரக்கு- கணக்- காவதுஞ்சென்றுஆறிடவும்
இனமாயிறக்கியதை- யிருந்- தாறினபின்னெடுத்தாமதனை
கனமாகவேசரக்கைக்- கண்டால்- கல்லதுபோலுமிறுகிடுங்காண்
மனமேமதிபிசகா- வரும்- மார்க்கமிந்தவுப்புவாருதியால்
தனமேபீங்கானிலிட்டு- ரவி- தன்முகத்திலிதுகாய்ந்திடினுந்- தன. 

பாடல் எண்:- 1599
கதிர்முகங்காய்ந்திடினுங்- கன- வாலையெனுங்குடந்தன்னிலுந்தான்
சதிராகவுஞ்சரக்கைத்- தனிச்- சூரணமாய்ச்செய்துமேலும்
தாயுதிராமலும்படியே- உப்பு- ஒக்கச்சரக்குத்தூளொன்றாக்கி
அதிராமலுங்குடத்தி- லிட்டு- ஆனபின்பு அக்குடமதின்மேல்
செம்பதினாற்செய்ததொரு- செப்- பாலையதுக்குடமேல்பூட்டி
தம்பனவதாகவுமே- சீலை- சாற்றிடீர்வெண்கருமாவுளுந்து
செம்மையாய்க்கவசமது- செய்து- சீர்பெறவும்வாலுகையடுப்பில்
அம்பாளருள்பெறவும்- வன்னி- அக்கினிமூட்டியெடுத்திடுமுன்- தன. 

பாடல் எண்:- 1600
பாலையதின்வாயில்- குப்பி- பாய்ச்சியேமேலும்சலம்பொழிய
செலமதுவுஞ்சொரியும்- இந்த- திராவகத்தையென்னசொல்வேன்
சலமாய்ப்பொழிந்ததின்பின்- தயிலந்- திராவகங்காணேன்ரத்தவர்ணங்
கலையாமலுமிறங்கும்- இந்தக்- காரணத்தைக்கண்டுஆரெடுப்பார்
ஒருநாழிகைசுருக்கில்- சூத- மோடாதுகட்டிவலித்திடுங்காண்
இருநாழிகைதனிலும்- ரசம்- மேலும்புகையசையாதிருத்தல்
உருவாகவுங்கடிகை- தச- மூலவன்னிகமலாக்கினையில்
சுருங்கியொடுங்கிவிடுஞ்- சொன்ன- சொல்லறியும்பத்துநாழிகையில்- தன. 

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900