திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1201- 1300

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1201
மூல குண்டலி மும்மத வாரிசூழ்
ஆல முண்டயான் மால்திரு பொற்பதம்
வாலி குண்டலி மாமுக னைத்தொழச்
சீல மாமலர்ச் சேவடி போற்றுவோம். 

(வேறு)
பாடல் எண்:- 1202
அண்ட ரண்டபகி ரண்ட மண்டல
அகண்ட குண்டலியின் பொற்பதம்
நின்றி லங்குமதி வாரி சூழ்மருவி
நிகழு லாலியவன் நிர்மலம்
கண்ட தாரையுட லாதி யந்தசுழி
கருணை ஞானதமிழ் கருதயான்
தென்ற லாவிகதிர் திருப்ப ரங்கிரியி
திசைமு கன்கமலம் போற்றுவாம். 

(வேறு)
பாடல் எண்:- 1203
வெற்றிதரு ஞானவெட்டி ஆயிரத்
தைம்பதுக்கு மேலா மஞ்சில்
சித்திதருங் காயகற்ப நாலாண்டு
சென்றதின்பின் செனித்த நோய்க்கு
முத்திதரு மவிழ்தமொடு வாதவயித்
தியமுமுப்பு முடிந்த வாறும்
சத்தியமா மமிர்தமுண்டு சண்டனையுஞ்
செயித்துநிலை சாதித் தேனே. 

பாடல் எண்:- 1204
இத்தலத்தில் முன்னோர்கள் மறைத்தமறைப்
பொருள்களெல்லா மியம்ப லானேன் 
கற்றறியார் கற்றுணரக் கற்பசித்தி
யோகசித்தி காய சித்தி
சித்ததித சத்துஞ்சித்து மித்துருசத்
துருக்களின் செய்தி யெல்லாம்
முத்தமிழால் குருமுனியி னனுக்கிரக
மிருந்ததனால் முடிந்த தாண்டே. 

பாடல் எண்:- 1205
முடிவதுமெய்ஞ் ஞானகுரு பரனருளா
லாறாண்டு முடிய வேணும்
வடிவுடைய வம்பிகைவா லாம்பிகைப்பெண்
னருள்இந்நூல் மவுனந் தன்னில்
கெடிவீர சிங்கமெனு ஞானவெட்டி
யாலமைந்த கீர்த்தி தன்னாம்
படிப்படியா யெய்துவதி ரவியதனால்
பதம்பெற்றுப் பாரில் வாழ்வார். 

பாடல் எண்:- 1206
இற்பிறப்பு மகற்றகற்பம் வாசியது
நிலைத்துவிட இயம்ப லானேன்
சற்பமதின் சாரையினால் சருகினதா
லிடையூறு சார்ந்த தாலும்
கற்பத்தை யுண்டுவருங் காலமதி
லவபத்தியங் கருதுங் காலை
உற்பனநோய் வைத்திடிலு மதற்குவயித்
தியஅவிழ்த முரைப்பே னாண்டே. 

கற்பமுண்ணுங்கால் அபத்தியம் நேரிடுமாகில்
அதற்கு வயித்தியம். 
(தரு)
வயித்தியம்பாடுகிறே னாண்டேகேளீர்- வயித்தியம்பாடுகிறேன். 

பாடல் எண்:- 1207
வயித்தியம்பாடுகிறேனுயித்தியமாகவுஞ்
சயித்தியமாம்பித்தசாபசோபந்தீரப்
பயித்தியகாசமும்பரண்டுசோகையுஞ்சொரி
பச்சைகிரந்திகாமாலைபறந்துவிட்டோடவும்- வயித். 

பாடல் எண்:- 1208
மூலப்புளிதனையும்முறைவாய்மைபோலரைத்து
முருட்டியெடுத்துருட்டித்திரட்டிக்காலைமாலையுஞ்
சாலவும்பித்தமுஞ்சோகைக்ஷயமுமதிதகாசத்
தானெனும்பறந்தோடவுநானெனுமுரைத்தேனாண்டே- வயித். 

பாடல் எண்:- 1209
சுக்குடன்வாதமடக்கிதிப்பிலிஓமத்துடனும்
உக்கிரமதாகுமுருக்கன்பூவதுஞ்சேர்த்தரைத்திவை
பக்குவமாகியகாலைமாலையும்விடாமலுண்ண
உக்கிரமதாகியநோய்களோடியும்பறக்குமாண்டே- வயித். 

பாடல் எண்:- 1210
அண்டவாதங்கள்வாய்வுஅசீரணத்தால்பேதியு
மையிருவாய்வரோசிகமதிகமாய்க்கடுகு
மண்டையிடியுஞ்சூலைகிரந்தியரையாப்புடன்
வாதமும்பித்தசேத்மமாறிடுநோய்களாண்டையே- வயித். 

பாடல் எண்:- 1211
பூரணமாமதுவைந்துபுனலாவதுவைந்து
பொறியாவதுமைந்துபுளியைந்துகாயைந்து
ஆரணமாகவரைத்துஅமுரிவிட்டரைத்துண்ண
அலறியோடியொளிக்குமதிதநோய்களாண்டையே- வயித். 

பாடல் எண்:- 1212
காரியசெந்தூரந்தனில்உப்பைச்சேர்த்து
அண்டக்கருவினால்அரைத்துருட்டி
இருவேளையும்உண்டால்எமனபோல்வரும்
நோய்களெல்லாம்நடுங்கிஓடும்- வயித். 

பாடல் எண்:- 1213
காலையிலிந்துப்புடனேகறியுப்பிட்டுப்பதுவுங்
கடுக்காயுடனரைத்துக்கலக்கியமுரிதனில்
ஞானமேகொள்ளவுங்குன்மநாடியேக்ஷயங்களோடித்
தேடியேபறக்குநோய்சேதியைக்கேளுமாண்டையே- வயித். 

பாடல் எண்:- 1214
கருவிழுதியின்வேரிலோடியேவடவேர்ப்பட்டை
கானகந்தனிலுமிச்சங்காணுவோர்மதியில்கொள்வோர்
ஆலகாலவிஷந்தினமுரியதின்மேற்கொள்ள
வாலவயதுண்டாகுங்காலனில்லையேஆண்டே- வயித். 

பாடல் எண்:- 1215
கருவசளையுங்கைப்புகாணுவோர்மேருகள்தோறுங்
காடுகள்தோறுந்திரிந்தால்காணுமோகருவசளை
திரிபுவனந்திரிந்துங்காடலைவோர்தமக்குச்
செழுந்தேன்பொழியுமேசொல்வீரிம்மூலிபார்- வயித். 

பாடல் எண்:- 1216
வசளைவால்மிளகுடனரத்தைவாதமடக்கி
வரிசையதாய்க்கழஞ்சிவாங்கிடுமனல்வெதுப்பி
வசளையதுசரக்கும்வாங்கித்தூளதாய்ச்செய்து
வாயுவெனுமமுரிவார்த்துவிட்டாட்டிமைபோல்- வயித். 

பாடல் எண்:- 1217
கதிர்மதியும்வருதலுவகையாக்காலைமாலையும்
கருதிசுண்டைக்காய்பாகங்கண்டுகளிகூறவும்
உதயமண்டலமுண்ணபற்பதமதனிலூட்டி
ஒருபணவிடைகொண்டுஉணர்ந்துயோகஞ்சாதித்தால்- வயித். 

பாடல் எண்:- 1218
நீலக்கொடியின்வேருஞ்சாதிப்பத்திரியேலம்
நேர்சமனவகையதுவுஞ்சேர்த்தெடுத்து
ஞாலமதினீவிட்டுரசனைக்கவனமாட்டி
நாற்பதுநாளிருவேளை நாமேயுண்டுவிட்டோங்காண்- வயித். 

பாடல் எண்:- 1219
கறுப்புக்கையாந்தகரைகருஞ்சீரகமுஞ்சுக்கும்
கடுக்காய்தோடுங்கழஞ்சிவகைக்கிவ்விதமாகும்
நுறுக்கியமுரிதனிலுடலுண்டிருவேளையும்
உபமாய்மண்டலங்கொண்டுஉணர்வீரென்னாண்டையேகேள்- வயித். 

பாடல் எண்:- 1220
கனகாம்பரமெனவுங்காசிடைகாண்வேரின்தோடுங்
கடுக்காய்கற்கடகசிங்காசிடைகணக்கதாகும்
செனகாதிதமேவியஅமுரியதனாலாட்டித்
தினமுமிருதன்வேளையொருமண்டலமுமுண்ண- வயித். 

பாடல் எண்:- 1221
காட்டுமுளகருணைகருத்திலகப்பட்டக்கால்
கறுப்பாயிருந்துகண்டால்பொறுப்பாய்ச்சமூலம்வாங்கி
கூட்டுமிளகுசுக்குரோசனையுங்கஸ்தூரி
கொடுத்துப்பணமரைதானெடுத்துமதிநீர்விட்டே- வயித். 

பாடல் எண்:- 1222
மதிநீர்விட்டுமயனமதுபோல்மெழுகுபதம்
வருதலிரண்டுவேளைமகிழுமண்டலங்காணும்
விதியிருந்தோர்தமக்குவிட்டகுறைவந்தெய்தும்
வேதசாஸ்திரத்திலுள்ளவிசிதமிதுவறியும்- வயித். 

(விருத்தம்)
பாடல் எண்:- 1223
காஞ்சபுளி தனையெடுத்துத் தூளாய்ச் செய்து
கம்பியுப்புக் கிடைக்கிடைதான் கலந்து வுண்ணத்
துஞ்சலென்ற குன்மமெல்லாம் பறந்து ஓடுஞ் 
சுணங்கனுக்கு ஈயாதே தோஷ மெய்தும்
ஓஞ்சலென்ற புளியமுரி சாரணையுங் கூட்டி
யுண்டிடவே நோய்பறக்கு முடனே தானும்
அஞ்சாத நோய்களெல்லா மமுரி தன்னால்
அலரியது முடலைவிட் டகலு மாண்டே. 

பாடல் எண்:- 1224
அகலவும்பத் தியங்காணு மருளக்கேளு
அவிழ்தமதில் கோளாறு அனேக மார்க்கம்
புகலவுநா தாக்களுரைத் தமிர்த வாக்கியம்
பூட்டினார் வெகுநூல்கள் புனித மாக
விகற்பமில் லாமலுரை மறப்பாய்ப் போச்சு
வெளியாகப் பாடியுமே விகற்ப மாச்சு
உறையதுவா யுரைத்திடுநூல் செய்தி யெல்லாம்
உரைதவறா துரைத்துவிட்டா ரொளியாய்த் தானே. 

பாடல் எண்:- 1225
காலசருங் கையெரியுங் கண்வாய் கூசும்
கண்டமது பச்சைபுண் ணதிதங் காணும்
ஆலவிடந் தீண்டினது போலாந் தேகம்
அசதிமெத்த தீபனமு மதிகங் காணும்
வாலையொரு திங்களுமூன் றாச்சு தானால்
மயக்கமெனும் பேதியதா மனந்தா ளாது
கோலமெனு மனதுமே றேற வேணுங்
கொடிதாகக் கொண்டறிந்து கொள்ள லாமே. 

பாடல் எண்:- 1226
உள்ளிருந்த நோய்களெல்லாம் வெளியே காணும்
உடம்பெல்லாம் புண்ணாக வெந்து நீறு
மெள்ளிலைபோல் மேனியெல்லாந் தடித்துக் காணும்
இந்திரியமு டைந்தல்லோ தண்ணீ ராகும்
கொள்ளியால் சுட்டபுண்போல் நாபி வேகுங்
குமட்டுவதா லவிழ்தத்தைக் கொள்ளாட்டாது
துள்ளிவிழுந் தாலறுமதா மெரியுந் தேகம்
சுருக்கெனவும் நீர்க்கடுப்புந் தோன்றுந் தானே. 

பாடல் எண்:- 1227
ஒட்டொட்டாய் மேனியெல்லாங் கடுப்புத் தோன்றும்
ஊதுமது நீர்த்தாரை யுடனே புண்ணாங்
கட்டிவைத்த பழங்கனிபோல் தேகங் காந்தும்
கலகலென்று நரம்பெல்லாந் தளர்ந்து காணும்
முட்டியல்லோ வாய்வுஅங்கே யேறி மீளும்
முறைமையைந்து திங்களுக்கு ளொருமை யாகும்
ஒட்டியம்போல் வடமயிலாள் தன்னை நம்பி
ஓங்காரப் பீடமதி லூறி டாயே. 

கற்பமுண்ணும்போது நேரிடுந் துன்பம்
(தரு)
தனனாந்தனதனனா- தான- தத்தனாந்தான தனதனனா. 
பாடல் எண்:- 1228
அண்ணமாரேகேளீரோ- அந்த- அஞ்சுதிங்கள்படும் பாடதனில்
என்னவென்றுயானுரைப்பேன்- நல்ல- இடிபோலிடிகள் முழங்கிடவே
மன்னர்மன்னர்கூடியல்லோ- நல்ல- மல்லுயுத்தங்கள் வளர்ந்ததுபோல்
தன்னுடலுந் தன்னுதல்ல- விந்து- தாமரை தண்ணீர்போல்தான் வருதல் 
சொன்னேன்படும்பாடு- இந்நூல்- சூதென்றுந் தள்ளிடலாகாது
உண்டால்தெரியுமதாம்- அமுரி- உடலுக்குள் தொண்ணூற்றறுவருமே
சென்றாலு பித்தியங்காண்- மீளா- சித்திரவதையிதை நீயறிந்து
பண்டுபழகினதால்- பின்பு- பாவையருடன்சேராதே- தனனாந். 

பாடல் எண்:- 1229
கண்டாலும்பேசாதே- மெத்த- கடினமதாம் பேதிதாளாது
நரம்புஎலும்புகளும்- மச்சை- நாடிகளுள்ளபசைகளும்போம்
கரும்புமுறிந்ததுபோல்- அஸ்தி- கட்டுதளர்ந்துவிட்டுவிடுங்காண்
துரும்பாகிடுஞ்சடலம்- செல்லுத்தூணை- யரித்ததுபோல்காணும்
வருமேயனேகம்வினை- மட- மாதுமயல் கொண்டணுகாதே
அந்தியினிற்கொள்வதற்கு- புளி- சந்திற்கிடக்குதுதான்றிந்துந்
தன்னைப்போலிருக்குமதாங்- கற்பந்தானே- யறிந்திடும் பேர்களுக்கு
முன்னமேயான் சொல்லிவிட்டேன் அந்தமுக்கோணமாகியகேசரிபை- தனனாந். 

பாடல் எண்:- 1230
அன்னம்போலிளமயிலாள்- அந்த- அம்பிகைபாதத்தை நம்பினேன்யான்
என்னைப்போலெளியவர்கள்- இனி- எங்கெங்குமுண்டு பார்வையகத்தில்
சாதியில் விந்தீஸ்பரன்காண்- எந்தன்- தாயோபராபரை தானளித்த
வேதியர்குலங்காணும்- பிர்ம- வேதவேதாந்தவிதித்தகுலம்
நாதன்பரமகுருவாம்- பிர்ம- நாதாந்தத்திலவதரித்தோர்
பேதாபேதங்களெந்தன்- சாதி- பிரபல்லியமெவராரறிவார்
ஆறாந்தான்திங்களிலுந்- தேகம்- அசதிகள்மெத்தவுறக்கமதால்
மாறாதது- மக்க- மங்கமாதிதமுதமுமனல்தேகமதே- தனனாந். 

பாடல் எண்:- 1231
தோராதுடல் கூசந்- தொண்ணூற்- றாறுகருவியுறுஞ் சோபமதாம்
வேறாய்வெவ்வேறுபடுத்தி- மாது- வேதனைபோலுடல்வேசாறும்
வீறுடன்பசிகோபங்கனல்- வேக- மெத்தகாணும்பூரணத்தில்
கூறுடனறிந்துகற்ப- மதி- கொண்டாலல்லோ தேகக்கூறுகாணும்
தேறுமேழுதிங்கள்- மாது- செல்வமயக்கங்கள்பொல்லாது
பேறுபெற்றறிந்தோர்கள்- பிர்ம- கற்பமதின் கூறுபிரபல்யமே
யெட்டாந்தான்திங்களிலும்- மெத்த- கொட்டாவிவிட்டாலுயிர்போகும்
பட்டால்தெரியவரும்- பாடு- பட்டதனாலபாலையாவதுகாண்- தனனாந். 

பாடல் எண்:- 1232
விட்டால்விந்துவெந்திடுங்காண்- மீளாது- காமக்குரோதத்தினால்
கெட்டாருலகருமே- மாது- கேணியோனிதனில் கேவலமாய்
ஒன்பதுகாண்திங்களிலே- பின்- னுபாயமதாகவுந்தேறவேணும்
ஜென்மவினைப்பயன்போகுஞ்- சிவ- யோகராஜாங்கச்செயல்காணும்
பொன்போலுடல்விளங்கும்- மாயப்- போதனைகண்டவர்போய்மீளார்
ஐம்பூதமாரறிவார்- மதி- அப்புஅறிந்தோரவர்மாளார்
பத்தாந்தான்திங்களிலும்- துயர்- பாலன்படும்பாடுமெத்தவுண்டு
கற்றாற்கவியார்காணியங்- கற்பங்- காயசித்திபெற்றால்காலனில்லை- தனனாந். 

பாடல் எண்:- 1233
வித்தால்விளைவுமுண்டு- மிகு- வேதனைமெத்தவெகுபாடு
சற்றாகிலும்பொறுக்காச்- சடஞ்- சாக்காடு சாகாதிருப்பதுபார்
உற்றாருறவின்முறை- சுற்றத்- தார்களொருதுணையானறியேன்
இதுக்குமருந்ததுவும்- புவியில்- எங்குமில்லைகருகண்டறியார்
உதவாதினிவறியேன்கற்ப- முண்டி-டுவோர்மாற்றதுகாணும்
இறவார்கதிர்மதியால்- செட- மெண்சாணுடலும் வலுத்திடுங்காண்
பரவசமாயளித்தேன்- ஜென்ம- பாதகஞ்செய்தால்பறந்து விடுந்
துரைராஜயோகத்தினால்- துன்பஞ்- சேராதுகற்பச்சுகாதீதமே- தனனாந். 

(விருத்தம்)
பாடல் எண்:- 1234
திங்கள்தச பத்தாச்சுப் பால னார்க்குச்
சிறுவனுமே பிறந்திட்டான் திங்கள் பத்தில்
கங்கையணி சடையாரைப் போற்றி நித்தங்
கருத்தாலு மெடுத்துலகில் செனித்தேன் காணா
மங்கையுடன் வாதாடி யமிர்தங் கொண்டு
மனோன்மணிதன் பாதமற வாமல் போற்றி
அங்கிருந்த வண்மையெல்லா முரைப்பேன் காணும்
ஆதிகுரு பாதமற வாமல் தானே. 

பாடல் எண்:- 1235
மூலமெனும் வச்சிரப்பை வீட்டுக் குள்ளே
மூங்கில்முளை போலதுவுங் காரசாரம்
வாலையரு ளாலமைந்த வாறு தன்னால் 
மதிரவியுங் கூடியது மிரண்டு ஆண்டில்
பாலனது போல்ஜெனித்துப் பிறவி யாகிப்
பத்துதிங்கட் குள்ளுஞ்சிறு பால னாகித்
தூலமிந்த மூலமதி லுதித்த வன்மை
சொல்வனினிக் காயம்வந்த சூக்ஷ மாண்டே. 

காயசித்தி 
(தரு)
காயம்வலுத்ததுகா- ணாண்டே- காயம்வலுத்ததுகாண். 
பாடல் எண்:- 1236
காயம்வலுத்ததுமாய்கைமறைந்தது
கவலைதெளிந்ததுசகலமொழிந்தது
நேயனருள்பணிந்தாக்கைவலுத்தது
நீயென்றுநானென்றுநேசமொழிந்தது- காயம். 

படலம் எண்:- 1237
கூற்றுவனென்கிறகொடூரமழிந்தது
கோடானகோடிவியாதிபிறந்தது
யேற்றியிருந்தஇகழ்ச்சிமறந்தது
என்னுள்ளேயீஸ்பரன்தன்னையறிந்தது- காயம். 

பாடல் எண்:- 1238
வாசமாய்நித்திரைபாசமறந்தது
வையகத்தோர்கள்வசியம்பிறந்தது
தூஷணையற்றதுபூசைநைவேத்தியஞ்
சொல்லுமந்திரசெபஞ்சொக்கியும்பேரச்சுது- காயம். 

பாடல் எண்:- 1239
தத்துவந்தொண்ணூற்றாறும்பிரிந்தது
தாதுகள்நாடிசடமும்வேறாச்சுது
சுத்தசலமென்றமுரிதேனாச்சுது
சுகஞானதீபச்சுழியைக்காணலாச்சுது- காயம். 

பாடல் எண்:- 1240
காமப்பாலுண்ட கருத்துமழிந்தது
காமக்குரோதலோபங்கண்டிதமாச்சுது
வாமப்பால்கொண்டுமதியொளிகண்டு
மகிழ்ச்சியடைந்துவச்சிரதேகமாச்சுது- காயம். 

பாடல் எண்:- 1241
மூலத்தினுள்ளமுப்பாழுமழிந்தது
முன்னமேயன்னமயமும்பிரிந்தது
ஞானத்திலேறவும்வாசிவளரவும்
ஞானசிரோமயகியானவானாண்டையே- காயம். 

பாடல் எண்:- 1242
ஓராண்டுக்குள்ளேயுடல்வெவ்வேறாச்சுது
ஓங்காரத்துள்ளேயுயிருறவாச்சுது
நீங்காதவாசிநிராமயமாச்சுது
நின்னுள்ளேநின்மயம்நேசமதாச்சுது- காயம். 

பாடல் எண்:- 1243
பிராணாயவாசியும்பின்னிட்டிழுக்காமல்
பேசுமூலாதாரம்வாசம்பொருந்திட
வீறானவாயுவுந்தசபத்துங்கூடியு
மேவியொருமித்துத்தாவியுமொன்றதாய்- காயம். 

பாடல் எண்:- 1244
பத்துமொருமித்துப்பாய்ந்திடுநாடிதான்
நித்தம்வாசியதுநேர்பிசகாமலும்
சத்துஞ்சித்தானந்தமுத்தியருள்தருஞ்
சித்தியனுக்கிரகசுத்தமதிலமர்- காயம். 

பாடல் எண்:- 1245
நித்தம்வாசியூதிநின்றுருசாதியும்
மற்றதுகைப்புஅப்புவஞ்சுன்னமாம்
பெற்றபேரிப்படிப்பேர்பெறுஞானிகள்
உத்தமர்சொல்லுமுண்மையிதாண்டையே- காயம். 

பாடல் எண்:- 1246
வாசிநிலையானதேன்மாண்டிடுந்தேகமும்
பாசம்வைத்துவிசுவாசித்துஊதிடும்
பேசப்பேசவெகுகோடிரகசியம்
ஈசனருள்படியனுக்கிரகநிலையினில்- காயம். 

பாடல் எண்:- 1247
இந்தவாசியூதிஎத்தேசகாலமும்
அந்தப்படியனுக்கிரகநிலையினில்
சிந்தைவைக்காமலுஞ்செய்கைவிதப்படி
விந்தையதாகவிளங்கினாராண்டையே- காயம். 

பாடல் எண்:- 1248
சந்தையங்கள்வாராசாட்சிநூலைப்பாரும்
வந்தவழிவருமாறலகப்படும்
எந்தன்கருத்தறிந்தந்தவிதிப்பயன்
நிந்தனையுமில்லாநீடூழிவாழ்வார்களே- காயம். 
 
பாடல் எண்:- 1249
கட்டும்வாசியறுகால்பன்னிரண்டினால்
நெட்டிட்டேறாமலும்நீஞ்சிடநீஞ்சிட
மட்டுப்படுமிந்தஅம்பிகாயோகமுந்
தட்டுப்படுங்கனம்பலசோதியில்- காயம். 

பாடல் எண்:- 1250
அட்டியில்லாமலுமாண்டையினிக்கேளும்
ஒட்டிக்கண்டதாரைஓயாமலூதிடுங்
கெட்டிகெட்டிவச்சிரதேகமதாகிடும்
நெட்டிநெட்டியேறநிர்மலசுரூபமே- காயம். 

பாடல் எண்:- 1251
நாளுநாளுக்குவினாடிவினாடிகொண்
டாளுந்தினந்தினமப்படியேறினால்
ஏழுமேழும்பதினாலுலகங்களும்
சூழுஞ்சூழுஞ்சுகாதீதங்காணுமே- காயம். 

(விருத்தம்)
பாடல் எண்:- 1252
தராதலவி ராசர்களுந் துரும்ப தாச்சு
தரணிதனி லுள்ளவர்க ளெறும்ப தாச்சு
துராதுரைக ளணுமளவு துன்பம் போச்சுத்
துலையாத செகமாய்கை துலைந்து போச்சு
மாராத சுடர்கோப மாறிப் போச்சு
மகிதலமு மண்டரண்டமறிய லாச்சு
வீராதி வீரனென்னும் வேகம் போச்சு
வேதாந்த சாரமெல்லாம் வெளியாய்ப் போச்சே. 

பாடல் எண்:- 1253
கல்லுமலை கரடெல்லாம் பொன்ன தாச்சு
கண்பட்டவிடமெல்லாங் கயிலை யாச்சு
நல்வினை தீ வினைக்கவுழ்தங் கற்ப மாச்சு
நாடினபே ரெல்லோர்க்கு ஞான மாச்சு
சொல்லவல்ல பெரியோர்க்குத் தெய்வ மாச்சு
சூரியப்பிர காசவொளி தோண லாச்சு
புல்லறிவு கொண்டோர்க்குப் பேய்தா னாச்சு
பூரணத்தை யறிந்தவர்க்கு ஞான மாச்சே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1254
காலையிலுண் டாலமுரி கடும்பேதி காணுமதாம்
மாலையிலுண் டாலமுரி வருமே பெருவாழ்வு
காலையிலை யிலுநின்று தடுமாறிப் போகாமல்
மாலையெனும் பாதமலர் வணங்கினேன் பூரணமே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1255
சொல்லவொண்ணாப் பூரணத்தைச் சொல்வே னாண்டே
சோதிமதி யாயிருந்த சூக்ஷந் தன்னை
வெல்லவொண்ணா தாயிரத்தைந் நூறுக் குள்ளே
விரித்துரைத்தேன் மகத்துகளின் மறைப்பெல்லா ந்தான்
வல்லவன் சொல்லவில்லை அம்பாள் சொல்ல
வசனித்தேன் கற்பவிதி மார்க்க மெல்லாம்
நல்குவேன் பட்டசளம் நன்மை தீமை
நயந்திந்நூ லறிவதற்கு நல்கு வேனே. 

பூரணமுறை
(தரு)
பூரணஞ்சொல்லுகிறே- னாண்டைகேளீர்
பூரணஞ்சொல்லுகிறேன். 
பாடல் எண்:- 1256
பூரணகும்பமுனியனுக்கிரகத்தைப்
போன்போலிருத்திடுமைம்பத்தோரக்ஷரந்
தாரணையாகவுந்தற்பரலிங்கஞ்
சதாசிவஞானசடாக்ஷரங்கண்டுயான்- பூரண. 

பாடல் எண்:- 1257
காலத்திலேறியபோதகந்தன்னைக்
கருவாலறிந்து அறிவறிந்தர்ச்சனை
ஞாலத்திலுங்கண்டதாரையிலும்வாசி
நாமறிந்தூதிடவாமப்பால்கொண்டுமே- பூரண. 

பாடல் எண்:- 1258
பச்சைப்பசுங்கிள்ளைப்பாலகன்தன்னையும்
பாவியறியாதபாவனையானதால்
உச்சிதம்வேறுண்டுலகத்தைச்சுற்றியும்
ஒன்றுங்கிடையாமலுண்டார்களாண்டையே- பூரண. 

பாடல் எண்:- 1259
தேசங்களோடித்திரிந்தலையாமலுஞ்
சென்மமீடேறத்தசதீட்சைசெய்துயான்
மோசம்வாராமலும்வாசிகண்டதாரை
ரேசித்துப்பூரணவிலாசத்தைநம்பினேன்- பூரண. 

பாடல் எண்:- 1260
அந்தநல்லுப்பதைச்சந்தித்துக்கொள்வதும்
ஆனால்வெகுமோசமாக்கினையும்வரும்
தந்தையுப்பகன்றுபேதிகடைத்தது
சாரகாரவேகத்தாலுஞ்சுன்னமாண்டே- பூரண. 

பாடல் எண்:- 1261
காலையில்மூலப்புளியுண்டீராண்டினில்
மாலையிலுஞ்சந்திரமாமதிமாறிடும்
வாலைப்பருவம்வருஷமீராண்டுபோய்
மூலச்சுழிமுனைமுத்தியுமெய்துமே- பூரண. 

பாடல் எண்:- 1262
சத்திசிவமொருமித்துஈராண்டினில்
சுத்தவைராக்கியஞ்சூக்ஷமிந்நூல்முறை
வித்தைவேதைக்குவேதாந்தக்கருக்கிடை
சித்தனார்சிலர்சின்மயசித்தியே- பூரண. 

பாடல் எண்:- 1263
அஞ்சுபஞ்சபூதமாதரவாயிந்த
நெஞ்சுநேர்நடுமையத்துவாரமில்
நஞ்சுபோலுமிருந்தாடியநாதனுங்
கொஞ்சியேமேவிக்குழந்தைபோலாவாரே- பூரண. 

பாடல் எண்:- 1264
வாலைவாலைவரும்வயதேகலை
மாறிமாறிமடக்கஅஸ்வங்களை
நீலமேகச்சுவ்வாரியூதியூதி
வினாடிகால்கள்வெளிவராதாண்டையே- பூரண. 

பாடல் எண்:- 1265
காலைமாலையதிகாலையில்வாசியும்
ஆலமுண்டஅமிர்தத்தினால்மூலமும்
பாலையுண்டுவான்குமறிப்பாலுடன்
சோலைவாழும்சிற்றாமணக்கெண்ணெயே- பூரண. 

பாடல் எண்:- 1266
மூலசுத்திமுன்னாளதிகாலையில்
பாலுமென்னப்பகுந்துசரிசமன்
நூலுஞ்சோதியுள்ளுக்குஒருபலங்
காலையில்கரிசாலைமுண்டிடே- பூரண. 

பாடல் எண்:- 1267
சிற்றாமணக்குச்செழுமலர்மேவிய
முத்தாடியானமுன்னமேயெண்ணைய்தான்
நித்தமாமூலிச்சாறுஞ்சரிசமன்
வைத்துவாலைக்கதிர்முகமாண்டையே- பூரண. 

பாடல் எண்:- 1268
பூமிபாரம்புவியில்நாளுக்குநாள்
சாமிநாவிலுண்ணாக்குஅண்ணாக்குமேல்
நாமியொன்றுபெருவிரல்தோய்த்துடன்
நாமிலூட்டினன்நாவினில்தேய்த்திட்டே- பூரண. 

பாடல் எண்:- 1269
சாய்க்கச்சாய்க்கச்சரித்திடுங்கோழையும்
வாய்க்கவாய்க்கவழலையுமற்றது
தேய்க்கத்தேய்க்கச்செனித்திடுஞ்சேத்துமந்
தோய்க்கத்தோய்க்கச்சுழிமுனைகாணுமே- பூர. 

பாடல் எண்:- 1270
மண்டலமிந்தப்படிமூலமாவது
வாங்குஞ்சிறுகுடல்வாங்குமூலப்புளி
கண்டதோர்பலங்காலையிலுண்டு
கர்மமலமுந்துர்மாங்கிஷமேகுமே- பூரண. 

பாடல் எண்:- 1271
பாலுஞ்சாதம்பதமாகும்வகைகரி
வேலுமயில்மீதில்வாலசுப்பிரமணியர்
மேலுங்கண்டகாட்சிவிளக்கமருளியுங்
கோலாகாலகுமரகுருபரன்- பூரண. 

பாடல் எண்:- 1272
என்குருசுவாமியெனக்குபதேசிகன்
பொன்போலும்பூரணன்போதித்தனுக்கிரகம்
அன்புவைத்துச்சுழியப்பாச்சாதனை
முன்பனுக்கிரகம்பூரணமாச்சுதே- பூரண. 

பாடல் எண்:- 1273
வழலைக்கபமும்பலமும்மலமும்
விழலாகப்போச்சுதுவேதனையாச்சுது
சுழலும்ரவிமதிசுத்தமொன்றாச்சுது
சோதியொளிநாதச்சுரோணிதம்வாய்ச்சுது- பூரண. 

பாடல் எண்:- 1274
மும்மலமற்றதுமூன்றுமண்டலத்தில்
தம்மையறியச்சகத்திரமாச்சுது
நன்மைதீமையுமிம்மையும்போச்சுது
நாதவிந்தாலும்நவசித்திரவீடாச்சுது- பூரண. 

பாடல் எண்:- 1275
விந்துநீருவெளியிலுலாவிய
அந்தவாய்வுஅதுசப்தத்துடன்
எந்தனாசானெனக்குபதேசமு
மைந்தனென்றுமகிழ்ந்துரைத்தார்களே- பூரண. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1276
புளியதனை யுண்டதனா லாவ தேது
பூரணத்தி லேறியல்லோ தேற வேணும்
வெளியான விந்துவைத்தா னறிய வேணும்
வேதாந்த சாரமதைக் கட்ட வேணும்
களியான காரணத்தை யறிய வேணும்
காரணமுன் சாரமதைக் கட்ட வேணும்
எளிதல்ல விந்தமுரி யிதனா லாச்சு
இன்னமொன்று சொல்லுகிறே னினிதா னாண்டே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1277
கேளும் புளியுப்பால் கேசரம்போய்ப் பாய்ந்துவிடும்
நாலுநா ளாண்டுதிங்கள் நானறிந்தேன்- பீளவுடல்
கண்டேன் கனகசபை காயசித்தியா லறிந்து
உண்டேன் பரந்தனிலும் ஓம். 

ரசக்குளிகை
(தரு)
குளிகைகட்டிக்கொண்டேன்- சூதரச
குளிகைகட்டிக்கொண்டேன். 
பாடல் எண்:- 1278
குளிகையெனுமூலபாதத்திலுநின்று
வெளியொளிதற்பரவெண்மதிசாரத்தில்
நளினமதாகவுநாதத்தைச்சேர்த்துடன்
புளியிலங்கித்துமேபூரணத்தோடவும்- குளிகை. 

பாடல் எண்:- 1279
காரசாரத்தைக்கரைத்தொருபாண்டத்தில்
வீரத்தையுங்கிழியாய்க்கட்டிமேலுடன்
காரத்தைச்சாரத்தையேபொடிதூளாய்
நீரதிலிட்டுநிகழ்ந்திருசாமமே- குளிகை. 

பாடல் எண்:- 1280
பார்த்துவன்னியனல்பாய்ச்சுங்கமலாக்கினை
ஊரலையற்றுவீரமுற்பனமாகுங்காண்
காரசாரசுன்னசங்கைவேகத்தினால்
வாரதினாலதுவஸ்துவுங்கட்டிடும்- குளிகை. 

பாடல் எண்:- 1281
விந்துடனாதமிகவைதசபத்துடனாகிடில்
அந்தமிதுசுன்னமாகிடுமாண்டையே- குளிகை. 

பாடல் எண்:- 1282
சவ்வீரசுன்னஞ்சரக்கையிறுக்கிடும்
எவ்விதமாஞ்சரக்காவதுஞ்சுன்னமாய்க்
கவ்வியுமீந்திடுநீரிற்குழைத்துமே
நவ்விக்கடுங்கதிர்நாடியசுண்ணமே- குளிகை. 

பாடல் எண்:- 1283
வீரசுண்ணத்தால்வெகுவேதையாகிடும்
மேலுந்துரிசுக்குவிராகனுமிநீரால்
காரசுன்னம்படமேலுங்கவசமாம்
சூரியதனில்சுடசுன்னமதாகிடும்- குளிகை. 

பாடல் எண்:- 1284
பாச்சுங்கழஞ்சுப்பாஷாணமசிக்குதுமேல்
தேச்சுக்குருவினில்செங்கதிரில்பட
வாச்சுதமுயிரில்மாட்டிரவியினில்
கூச்சமில்லாமலுங்கூறிதுவாண்டையே- குளிகை. 

பாடல் எண்:- 1285
தசபத்துடனிடைத்தாளகம்வாங்கிடும்
விசையதாயிடில்விராகனுமாகிடில்
கசையஓர்கழஞ்சாமதுசுன்னமும்
இசையஅமுரியில்வேதைக்கவிழ்தமே- குளிகை. 

பாடல் எண்:- 1286
தாளகந்தன்னைத்தணல்கதிர்வேகமில்
ஆகமப்படியனலும்படப்படத்
தூளதாகிடும்சுன்னமதாகிடும்
ஆளுமேவருகாதுகாணூறலே- குளிகை. 

பாடல் எண்:- 1287
லிங்கமொருபலமாகவிளங்கிடில்
அங்கதைவீரஜெயசுன்னமுன்னிடை
வங்கத்தினீரினில்மதிவிட்டழைத்துடன்
பொங்கிப்புத்தாகிடில்போச்சுதுசுன்னமே- குளிகை. 

பாடல் எண்:- 1288
தாரமாந்தினிச்சுன்னமதாகிடில்
வீரமாவதிதுக்குஇணையதாய்த்
தாரசுன்னமுந்தங்கமுஞ்சேர்ந்திடில்
தாரஞ்செம்புத்தவளமதாகுமே- குளிகை. 

பாடல் எண்:- 1289
கேசரின்கிருபாகரமேவிய
வாசமாமதிவாழ்க்கைமுயற்சியான்
பேசும்பேசாதெழுத்தறவோதினும்
மேஷமதுவிளங்குமகத்துகள்- குளிகை. 

பாடல் எண்:- 1290
வாசியென்றுசும்மாவாவென்றழைத்தால்
நேசமுன்னாள்நெடுநாளல்லவோ
ஆசைவைத்துஅமுரியோராண்டுநீர்
பாரம்பாசம்பரியாசமில்லையே- குளிகை. 

பாடல் எண்:- 1291
தேசியென்றால்செழுந்தேன்நிறமுமாம்
ஊசியாவதொருமுனைகாணுவாய்
வாசிவாசிவருமென்றழைத்தால்
மாசில்லாக்கதிர்மாறலறிகுவாம்- குளிகை. 

பாடல் எண்:- 1292
கண்டுகண்டுகனவுமறிதலால்
நின்றுநாளுநெடுநாளலுவலேன்
கண்டகண்டக்கருத்தைப்படைத்ததால்
அன்றுமின்று அறிந்தவர்ஞானியே- குளிகை. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1293
விஜயமெனும் ரசகுளிகைமனோவேக அதிதமெனும் விதித்தசங்கை
பசைந்தமண்ணீ ருண்டபலன் தீட்சையிரண் டுடன்சேரப் பனிரெண் டாண்டில்
விசையகுரு தீட்சைவச மாவதுவுங் கடினமது இசையு மாகில்
அசவதுகா னிருபத்தோ ராயிரத்து அறுநூறு மடியிற் சேர்ந்தே. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1294
மூலமதி லடங்கிசுழி யண்டம் பாய்ந்து
முடியில்நின்று நடுவணையின் முனைக்குள் ளாகி
ஆலவிட மாமதுர வாசி யுண்டு
அடியில்நின்று மேலெழுப்பி அண்டம் புக்குக்
காலையிலு மாலையிலுந் தாரை யூதிக்
கமலமலர் குண்டலிவல் லபையைப் போற்றி
வாலையெனு மம்பிகைப்பெண் வடிவென் னாத்தாள்
வசனமது வால்வாசி வசம தாச்சே. 

பாடல் எண்:- 1295
ஒன்றான வுடலுயிரு மொன்றாப் போச்சு
ஒளிவான ரவிமதியு மொருமி தாச்சு
கண்டீரோ மகத்துகளைச் சூரிய சந்திரன்
கதிர்மதியு மொருசுருபங் காணுங் காலை
அன்றாடம் பிராணாய வாசி யூதி
அசைவதுவும் பிரியவொட்டா அமிர்த முண்ணும்
சென்றாடு மிவ்விதமா யுலகில் வாழ்வார்
சிவயோக மிதுவறிந்தால் ஞானி தானே. 

மனோதிடங் கூறல்
(தரு)
தனந்தனந்தனதானானே- தன- தனந்தனந்தனதானானே. 
பாடல் எண்:- 1296
மனமினம்பொருந்திசையருள்தானே- மனந்
துணிந்துநீமிகவிழுவானேன்- கன
மினமனத்துடல்விழுகாதே- ஞானக்
கவியறிந்துநீமறவாதே- தனந். 

பாடல் எண்:- 1297
மூலப்புளியெனுங்கற்பமிதுதானே- வாலைப்
பருவமாய்திவருவோனே- காலை
அரவத்தனிடவெண்சாடை- மாலை
அமுரித்ததுவிஷமறவாதே- தனந். 

பாடல் எண்:- 1298
புவிஇசைந்துவாய்மொழிவாராதே- தவ
மிருந்துஒருநிலைபிரியாதே- மது
வருந்தியருசுவையதமாக- குரு
விருந்தசுழிமுனையருள்பெறவும்- தனந். 

பாடல் எண்:- 1299
கண்சிவந்துபோமதுபாராதே- மதி
குலைந்துகாணிதுசாராதே- உண்
ணுகந்துதசதிங்களுமதிபால்- உட
லுயர்ந்துவேதனையுணராதே- தனந். 

பாடல் எண்:- 1300
அறிவறிந்தபின்னவர்வாராரோ- சுழி
அமர்ந்திருந்தபின்னறிவாரோ- இது
ஒருவிருந்ததின்மலக்கூடு- இன்ப
மிசைந்திருந்ததுர்க்கந்தவீடு- தனந். 

Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900