திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1101- 1200

பாடல் எண்:-1101
நீர்ச்சுருக்கு நீர்க்கடுப்பு நீரடைப்பு நீர்ச்சுரப்பு
பாரதித மேகமதும் பட்டுப்போம்- நீரதனல்
நிம்பப் பழத்தினுட னீரதுவிட் டூட்டியபின்
கப்பிதந்தி மேகம்போங் காண். 

பாடல் எண்:- 1102
வாதமுதல் வாய்வும் வரும்பித்த சேத்துமங்கள்
மாதவிடாய் சூதகமு மாண்டுபோம்- கோதையே
அவரை தொவரை அரக்கீரை தூதுளங்காய்
விரையில்லாக் கத்திரிபிஞ் சாம். 

பாடல் எண்:- 1103
இருவினையால் தாக மெடுப்பதனா லென்றறிந்து
கருத்தறியா தென்னவிதங் காரணமோ- இருவினைநோய்
விகாரமது சன்னிவிடு மூன்று நாளதனில்
அகாரமது நீரதனா லாம். 

பாடல் எண்:- 1104
சார மதில்கிண்டிச் சண்டமா ருதக்குழம்பு
தேறவுங் காணிஞ்சி ரசந்தேனும் சாரமதில்
அதிகாலை யுண்ண அகலுஞ் சுரதோஷம்
சதிசெயுஞ் சன்னியும் போம். 

(விருத்தம்)
பாடல் எண்:- 1105
அரத்தையா மணக்கெண்ணெய் யாடா தோடை
அதன்ரசத்தில் குழம்பதுங் குன்றி தாக்கி
சுரசமிது அவிழ்தமதை யுதைய காலைச்
சூரியனைத் துதித்துபணிந் துடனு முண்ண
பரிட்சையனு போகமென்ன சத்த பேதி
பலாபலத்தைக் கண்டுமருந் தூட்டு வீராய்
வரட்சியொடு வாய்வுதச வாதம் பித்தம்
மருவிவெகு நாளிருந்த மந்தம் போமே. 

பாடல் எண்:- 1106
அன்றுவிட்டுப் பின்புதைய காலந் தன்னி
லறிந்துகுழம் பதனில்குன்றி நாலுக் கொன்று
கண்டீரோ பண்டிதரே பால மந்தங்
கருதுமுன்பு செய்கைவிதங் கருதி டீர்காண்
தெண்டிரையில் குழந்தைகளுக் கிசுவு மூர்ச்சைத்
தெளிந்திடுங்கா ணுப்பசமு மள்ளுந் தீரும்
தண்டுமொன்றாய்ப் பிரளிசத்தி விக்கல் மூர்ச்சை
சாந்தமாஞ் சாந்தமில்லா மறுநா றூட்டே. 

பாடல் எண்:- 1107
நாவறட்சி தோஷமொடு சுரமுஞ் சன்னி
நாள்தோறுங் கனசுரமு நாடுங்காலை
நாவுகரித் திடவரிது குழம்பிற் குன்றித் 
தனையெடுத்து நாலிரண்டு பாகம் வாங்கிப்
பூவையர்க்கு முன்பதுகா ணாவில் தேய்த்துப்
புகல்வீராம் சுடுவெந்நீ ரரையா ழாக்கு
பாவையெனு மைந்தருக்குப் பின்பு ஆண்டே
பாய்ச்சிவிடு குழம்புகுன்றிக் கால்பங் கூட்டே. 

பாடல் எண்:- 1108
ஊட்டுநிலத் துளசிஅவித் துடன்சாற் றைக்கொண்
டுரைத்துமருந் துடனேயுட் கொள்வீ ராகில்
சாட்டியமாங் கிருமிபழ மலமும் போக்குந்
தசையுள்ள வாய்வுமுதல் ரெணமுந் தீரும்
பாட்டிலிந்தப் படிசொன்னோம் பாரில் மாண்பர்
பண்டிதரே யுங்களுக்கும் பலித மாகும்
நாட்டினில்நா லாயிரந்து நானூற் றெட்டு
நல்வினையுந் தீவினையு நாடா தாண்டே. 

பாடல் எண்:- 1109
பரத்தையர்க்குப் பழம்புளியு முளநீர் கூட்டுப்
பாலருக்கு மருந்தூட்டிப் பால்தா னூட்டு
சுரஞ்சன்னி தோஷமதுக் கிச்சா பத்தியம்
சுண்டைக்காய் வற்றலரைக் கீரை யாகும்
உரிசையென்ற உப்புவறுத் துள்ளுக் கூட்டு
ஒருபோது மன்னமது முண்பீராகில்
அறிவீராய்த் தசவாய்வு நோய்கட்கெல்லாம்
ஆகாது மங்கிஷமு மாகா தாண்டே. 

பாடல் எண்:- 1110
பாசியுடன் பருப்புமொச்சைக் கடலை மச்சம்
பாக்குவெற்றிலை புகையிலை சுண்ணாம் போடும்
காகவெனுங் கட்டியொடு கனிகள் தேங்காய் 
கன்னலொடு நல்லெண்ணெய் காற்று நித்திரை
பொசிப்பெடுத்த பின்புரவி யுறக்க மாகா
பொழுதுகதிர் போனபின்பு புகல்வீ ராகில்
தூசிபோல் பறந்துவிடுந் துன்பம் போகுந்
துரைராஜ பண்டிதர்க்குச் சொல்வீ ராண்டே. 

பாடல் எண்:- 1111
மாதர்கருக் குழியில்செனித் திடுநோய் சூலை
வகையாறு விதமதுவு மணங்கு காலைப்
பதராகுங் கருக்குழியில் சனததான் மூடிப்
பாயாது விந்ததுவும் பாழாய்ப் போகும்
விதுரமாங் கருக்குழியில் கிருமி சூழ்ந்தால்
விந்ததனை யுண்டுவெறும் பாழாம் பூமி
போதரவாய்க் கருக்குழில் பூநீர் காரம்
பூர்க்குமந்தப் பூமியைப்போல் பூத்தா லாண்டே. 

பாடல் எண்:- 1112
பூர்க்குமந்தப் பூநீரு உவருண் டானால்
புளிப்பாழு விந்ததனைப் பூநீ ருண்ணும்
ஏர்க்காது இடம்விட்டு இடம்தான் விந்து
இருப்பிடம்விட் டிடம்பாய்ந்தா லினிசெல் லாது
கார்க்காது கருக்குழியில் வாயுவுஞ் சேரக்
கட்டிடுமோ நாதவிந்து கனல்நோய் சேரும்
பார்க்கபனிக் குடமுடையும் பனிநீர் போனால்
பாழாகும் விந்துவும் பாழ்தா னாண்டே. 

பாடல் எண்:- 1113
ரதிபுருஷ ரிருவருந்தான் புணரும் போது
நாயகிதன் கருக்குழியில் நாத விந்து
விதியுமதி யிரண்டிடமும் நீறாய்ப் போகு
மிஞ்சிஇடி யிடிக்குமிந்த வேகம் போலாம்
பதியைவிட்டுப் பதியிழந்து பாயும் விந்து
பரத்தையரெண் சாணுடலும் பஞ்சு போலாம்
அதிவிதமாய்ப் புணர்ந்ததனா லண்ட பிண்டம்
அண்டஇடி யிடித்ததுபோ லாகு மாண்டே. 

பாடல் எண்:- 1114
இந்தவிதம் யானறிந்து அனுபோ கத்தை
யினியுரைத்தேன் யாவர்களு மினமாய்க் காண
அந்தமுட னறுவகைதன் சூலை யாலும்
அணுகாது புத்திரேட்சை யமைக்கும் வாறு
சந்ததமாய்ச் சதைமூடில் சதையைத் தின்ன
சண்டமா ருதக்குழம்பிற் பணந்தா னொன்று
விந்தையுடன் சீலைதனில் விரவிப் பூசி
மிகுந்தரவி முகந்தனிலும் விளங்கு வீரே. 

பாடல் எண்:- 1115
வற்றிட நீர்த்திரியி லந்நீர் சண்ட
மருவிய பதனமதாய் வைத்துப் போற்றிச்
சத்தியெனும் பரத்தையர்க்கு அவிழ்தங் குன்றிச்
சண்டமா ருதக்குழம்பு சாற்று வீராய்
பத்தியந்தான் சங்கன்பழச் சாறு வாங்கிப் 
பலமஞ்சில் மருந்திழைத்துப் பாய்ச்சுங் காலை
சித்தியதாஞ் சதைகரைந்து சூலை தீருந்
தீயதனை யாவிதனில் செலுத்தி டீரே. 

பாடல் எண்:- 1116
இருள்சூழு மதிதனிலு மிருக்கும் வீட்டில்
இத்திரியைக் கொளுத்திரவி தனிலு மாட்டிக்
கருக்குழிக்கு மையநடு நேராய் வற்றிக்
கருதிடவும் யோணிவழி புகைதான் பாயச்
சுருக்கமுடன் மாதுமண வாளற் கிந்தச்
சூட்சமிதை யறிக்கையிட்டுச் சொல்லிச் செய்யும்
சுருக்கமுடன் புகையோனி வழியே பாய்ந்து
சதையெல்லாஞ் சுருங்கிவழி சாந்த மாமே. 

பாடல் எண்:- 1117
சாதுரிய மங்கையர்க்குத் திரிநா ளிந்த
சண்டமா ருதக்குழம்பைத் தாக்கும் போது
வாதுசெய்யுஞ் சூலையினால் மலடு மென்று
மாமுனிவ ரெனுக்குரைக்க யானுஞ் சொன்னேன்
தீதுவா ராதுஒரு வேளை யன்னத்
தீங்கான புளிகையுஞ் சேர்க்க லாகா
பூதலத்தில் பெண்மலடு புகலப் போகா
புருடன்மல டெனுமிகவும் புகல்வ தாண்டே. 

பாடல் எண்:- 1118
கேவலமாங் கிருமினால் சூலை யொன்று
கிரகிக்கும் விந்ததனைக் கெர்ச்சித் துண்டால் 
மேவுமட மங்கையர்க்கு மலடென் றென்னில்
மேதினியோர் புகழ்வதுகாண் மெய்யென் றெண்ணிப்
பூவுலகில் செபதபங்கள் பூசை நேமம்
பிரார்த்தனைகள் செய்துபின்னும் புத்திரன் காணார்
ஆவதினா லதற்கவிழ்த மாண்டே கேளீர் 
அதிதசண்ட மாருதத்தை யருள்வ தாமே. 

பாடல் எண்:- 1119
அவிழ்தமென்ற குழம்பதனில் குன்றி வாங்கி
ஆகாச கெருடனந்தக் கிழங்குச் சாற்றில்
கவனமதாய்க் குழைத்துஅதில் கற்கண் டிட்டுக்
காலைதனில் மூன்றுநாள் கருகும்போது
புவனையருள் பதம்போற்றிப் புகட்டும் போது
பொல்லாத கிருமியிருந் திடத்திற் சென்று
முவனமதாய்க் குழம்பதுவின் வேகத் தாலும்
மூடுபனி போல்சூழ்ந்து முடுக்குந் தானே. 

பாடல் எண்:- 1120
முடுக்குமிரு பணயெடைதான் சீலைக் கூட்டி
முன்திரிபோல் திரித்துமூல ரவிதான் வீச
படுக்குமந்தப் பாவனைபோல் கவிழ்ந்து மூடிப்
பாவையர்தன் யோனிநடு மையந் தாக்கக்
கொதித்திடச்சொல் புகையதுகாண் கொடுக்கும் போது
கொலைசெய்யுங் கிருமியெல்லாங் கொடியாய் வீழும்
தடுக்கவொண்ணா நமனாலுந் தடுக்கப் போகா
சாந்தகுண மாமூன்று நாளி லாண்டே. 

பாடல் எண்:- 1121
ஊஷ்ணத்தால் கடுங்கார முடலுண் டாகி
உப்பதனால் விந்துப்பா யுருவ மாறி
வேழ்விளையாங் கருங்குழியும் வெந்து புண்ணாம்
வெகுவிதஞ்செய் தாலும்விந்து தரியா தென்க
பூஷணமாய்ப் பாசனமுண் டுணர்ந்த தாலும்
பொல்லாத உட்காரச் சூலை யாலும்
ஏஷணையா யெரிந்தசயி லங்கள் மாறி
யிரத்தமெல்லாங் கருகிளைத் திடுவா ராண்டே. 

பாடல் எண்:- 1122
இவ்விதங்க ளறியாம லுலக மாண்பர்
ஏடுத்துரைப்பா ரிதுமலடு என்ன பாவம்
செவ்வையினி மலடுகளைச் சிவனா லுந்தான்
ஜெயிக்கமுடி யாதுஜென்மக் கூறென் பார்காண்
அவ்விதமா யுரைத்திடுவா ரவனி மீதில்
அதுவந்தவித மறியார்க ளாண்டே கேளீர் 
கவ்விடவுங் குழம்பதனில் குன்றி வாங்கிக்
கர்ப்பூர வெற்றிலைச்சா றதனிற் காணே. 

பாடல் எண்:- 1123
ஊட்டிடவும் மூன்றுநாள் மூன்று வேளை
உள்ளிருந்த வர்களெல்லா நீரில் சேர்ந்து
சாட்டியமாய் மலசலத்தைச் சாடுஞ் சாடும்
சடத்திலுள்ள கனல்வேகஞ் சாரித் தேபோம்
மேட்டியிந்தக் கருக்குழிதான் தமன்மேல் சுற்றி
வெண்மதியுஞ் செங்கதிரோன் விளக்கத் தாலும்
நாட்டிவிடுங் குழம்பதனை முன்போல் வற்றி
நயந்துதிரி புகையதனால் நமனாய்ப் போச்சே. 

பாடல் எண்:- 1124
அடுத்தபுகை மூன்றுநாள் கொடுக்கும் போது
அவ்விடத்தி லிருந்தபுண்க ளாறிப் போகும்
தடுத்துரவி மாண்பர்களுந் தடுக்கப் போகா
சாபமெய்து மவநசிய மசிய சுவாகா
கொடுத்தவிழ்த மனுபோகி ராச யோகி
குவலயத்தில் ஞானபண் டிதனாய் வாழ்வார்
தொடுத்தேன்திரு வள்ளுவன்வாக் கமிர்த வாக்கியஞ்
சூக்ஷசடா தாரசுழி தொழுதே னாண்டே. 

பாடல் எண்:- 1125
தொடுத்ததிந்தச் சண்டமா ருதத்தைப் போற்றிச்
சூஷமெல்லா மிந்நூலில் சொல்வேன் காணும்
கொடுத்துவிட்டா ருலகருக்கு மதியோ வில்லை
குணமில்லை வேதாந்தக் கூறு மில்லை
விடுத்துவிட்டா ராமாகில் வினையோ இல்லை
மெய்க்குருவை யறியாத வீணர் வீணர்
அடுத்துபனி ரெண்டாண்டு ஆசான் சொல்ல
அறியலாஞ் சாரவித்தை ஆண்டே கேளே. 

பாடல் எண்:- 1126
சூதகத்தில் வாய்வதுபோய்ச் சொக்குங் காலைச்
சுருதியெனும் வன்னிபித்தந் துணையாய்ச் சேரு
மாதவிடாய் நாகமதும் வஸ்துக் கட்டு
மாதாந்தங் கட்டினதால் மாது தேகம்
ஊதுவுடல் சரீரமெல்லாங் கருப்பை துந்து
உதிரநீர் சூசிகா வாய்வுந் தோன்றி
வாதனையால் வயிறுடம்பு பெருத்து வூதி
மகத்தான அடிமூலம் வாதஞ் சேர்ந்தே. 

பாடல் எண்:- 1127
மாதருக்கிவ் விதக்கூறு மருவுங் காலை
மங்கையர்க்கு மனிதர்சொல்லும் வாறு கேளீர் 
சூதகமுங் கட்டினதால் கெர்ப்பங் காணுந்
தோகையர்கள் கண்டுமந்த விதஞ்சொல் வார்காண்
நாதமென்ற சூலையினால் கெர்ப்பச் சூலை
நாட்டிலிதை யறியபண்டி தஞ்செய் வாரோ
வேதமிந்தச் சூலையினால் மலடென் பார்கள் 
வினைபயனை யொழித்திடவும் விளங்கா ராண்டே. 

பாடல் எண்:- 1128
கெர்ப்பக்கோ ளறிந்துவினை யொழிந்தேன் ஞானி
கேதமிலா ராஜபண் டிதனே யோகி
துற்பவித்த சூலையது நாத சூலை
சுக்கிலமுஞ் சுரோணிதமு மிரண்டுஞ் சேரா
கற்பகமாம் விந்துஒரு வழியிற் பாயுங்
கருக்குழியில் சுரோணிதமுங் கலக்க தாகில்
முற்பகஞ்செய் தனுபோகக் கூறில் லாகாண்
முச்சுடரி னுதித்ததெனு மொழிய லாமே. 

பாடல் எண்:- 1129
மொழிவதுங்காண் சண்டமா ருதக்கு ழம்பில்
முன்பாகங் குன்றியிடை மூன்று நாளும்
அழிஞ்சிவேர்த் தயிலமதில் பலந்தான் வாங்கி
அத்தயிலந் தனிலரைத்து அதன்பின் கேளீர் 
பழையபனைக் கற்கண்டுந் தேனுங் காசும்
பகுந்துடனுஞ் சேர்த்துவுணர்ந் திடுவீ ராகில்
மழையதுபோல் வாரியது மலத்தைப் போக்கு
மனதுதிடச் சித்தமதாய் மகிழச் சொல்லே. 

பாடல் எண்:- 1130
துவரைமுள நீருஞ்சுண்டை வற்றல் கூட்டித்
தூதுபத் திரியினுட வற்றல் சேர்த்து 
அவரையரைக் கீரைமிள கதுவுங் காயம்
அதிபேதிக் காலின்மோர் சுக்கு ஓமம்
விவேகஞான வெட்டியருள் பணிந்து போற்றி
வெள்ளுள்ளி சீரகமு மரத்தை யோடு
தவறாது இவ்வகைகள் சேரா தென்னில் 
தகர்த்துவதும் புளிபுகையுந் தள்ள லாமே. 

பாடல் எண்:- 1131
தள்ளுவது வெட்டுநாள் திரிநா ளுண்டு
சண்டமா ருதக்குழம்பில் பனந்தான் ரெண்டு
தெள்ளிமையால் திரியதுகாண் முன்போல் செய்து
தீங்கில்லா மூவேளை புகைதா னூட்டி
எள்ளளவும் பிழைவரா தெண்சாண் தேகம்
இருந்தகெர்ப்பச் சூடதுபோய் சூலை போகும்
கள்ளமில்லா நீர்களெல்லாங் கடலே புக்குக் 
கருக்குழியுஞ் சுத்தியதாய்க் கருத லாமே. 

பாடல் எண்:- 1132
வாதமென்ற தேகியென்றா லஞ்சு நாள்தான்
மருவும்பித்த தேகியென்றால் நாலு நாள் தான்
நாதசேத் துமதேகி மூன்று நாள் தான் 
நயந்துசண்ட மாருதத்தை நாட்டுங் காலை
வேதமெனுங் கியானபொரு ளதீத மிந்நூல்
விதித்தவிதி யெள்ளளவும் விதம்போ காது
காதலிந்த சாஸ்திரத்தைக் கண்ட பேர்கள்
கைவிடார் கருக்குழியில் கருது வாரே. 

பாடல் எண்:- 1133
வெந்துகருக் குழியதுவும் புண்ணாய்ப் போகும்
வெட்டையி னால்தேக மீறிப் பாய்ந்து
உந்தியெனுங் கமலமதில் இரணங் கண்டு
ஒரிடியா யிடித்துவயிற்று வலியுண் டாக்கித்
தந்திரமாய்க் கிடைகொடுக்கா பிரட்டல் சோபந்
தாபம்வரு மூழ்வினையாய்ச் சடத்தி லெய்தும் 
விந்துவெனுஞ் சுரோணிதமி ரண்டுங் கூடி
யிருக்குமந்த காலமதில் வாய்வா லாண்டே. 

பாடல் எண்:- 1134
வாய்வுமனு சரிக்குமட மாதர்க் கேதான்
மாதாந்தங் கட்டியது மருவு நாளில்
பாயும்ரதி புருஷருமே புணர்வா ராகில்
பரிதியெனு நாதமதில் விந்துஞ் சேரில்
தேயுவெனுங் கனலேகக் கனலி னாலுஞ்
செவ்விள நீர் போலவுமே யுதிரஞ் சாயும்
பேயதனால் பெரும்பாடு அதீத மென்பார்
பேருலகிற் கல்லெறியு முனியென் பாரே. 

பாடல் எண்:- 1135
சாயுமடை மதமதகில் சலஞ்சரித் தாப்போல்
தங்குதடை யில்லாமல் சாரு மாப்போல்
ஓயாம லுதிரமது மோடிப் பாயும் 
ஒருதிங்கள் நாதவிந்து ஒக்கச் சேர்ந்து
மாயுமட மங்கையரோ டனுபோ கித்தால்
மருவியுமே போகமதில் மகிழ்ந்தா ராகில்
தூயிருமூன் றதுநாலு மஞ்சு மாறு
துகையேழு எட்டிரண்டும் பத்தும் பாழே. 

பாடல் எண்:- 1136
கருவுருவாய்த் திரண்டுகெர்ப்பங் கருது மாப்போல் 
காசினியில் யாவர்களுங் கணக்கேன் பார்காண் 
உருவதுமுண் டாச்சிதென்பா ருலக வாதர்
உறுதியென்பார் துருதமனென்பா ருவமை யென்பார் 
சிறுவரெனும் புத்திரனென்பார் திருமா தென்பார்
சிலபேர்க ளிதுவென்ன செய்கை யென்பார் 
வருவதுசெய் வினையீதென்பார் வளர்பாண் டென்பார்
வசனமெடுத் துரைப்பவர்கள் மாத ராண்டே. 

பாடல் எண்:- 1137
பத்துதிங்கள் சென்றுசரி யாச்சு தென்பார்
பாரில்மட மாதர்வந்து பரிசோ திப்பார்
கற்றுணர்ந்த பேர்கள்பெரு வயிறென் பார்கள் 
கடிந்துரைக்குஞ் சிலபேர்கள் குளிய தென்பார்
குத்தமில்லாப் பலப்பலவாய் யோசிப் பார்காண் 
கூறுவே னாண்டையினிக் குறித்து யானும்
சுத்தமெனுஞ் சண்டமா ருதக்கு ழம்பில் 
சூட்டியெடுத் தொடுகுன்றி கொடுக்கத் தானே. 

பாடல் எண்:- 1138
கொடுக்கிலாத் தூதுளத்தில் பழத்தின் சாற்றில்
குழம்பொரு பணவிடைதான் பொரித்துக் காயம் 
மடக்கலா மிந்தஎடை பதினெட் டுந்தான்
மத்தித்து மூன்றுநாள் மடந்தைக் கீந்து
கெடுக்குமந்த உதிரமதாஞ் சூலை பாயுங்
கெடுதிமல சலஉதிர மெல்லாம் போக்கும்
விடுக்கலாங் கருக்குழியுஞ் சுத்தி யாகும்
விளங்குமுன்பு திரிபுகையை விலங்க லாமே. 

பாடல் எண்:- 1139
சண்டமா ருதத்திரியை முன்போல் பாகந்
தாக்கான யோனிவழிப் புகைதான் சொல்ல
முண்டனெனும் வாய்வுகனல் மேக சூலை
முச்சுடரில் வெட்டைகனல் மூல மெட்டு
கண்டிதமாய்க் குழம்புஅதி வேகத் தாலுங்
கண்காணா தோடிஅனல் புக்கு மாகில்
உண்டிடவு முதிர்சூலை யோடிப் போகும்
உடல்சுத்தி கருக்குழிதன் புண்கள் போமே. 

பாடல் எண்:- 1140
அறுவிதத்தால் சூலையெய்துங் கெர்ப்பக் கோள்கள் 
அடைவுதனை யறிந்திந்த வவிழ்தத் தாலும்
பரவசமாய்ச் சொன்னதிந்நூல் யோகிக் காகப்
பரீட்சையனு போகமிதைப் பாரில் மாண்பர்
கெருவமில்லாப் பண்டிதற்குச் சொன்னே னாண்டே
கேவலமா யிருந்ததனா லென்ன வாய்க்கு
மாறுபடா ஞானவிதி யறிவோ னாகில்
மகாராஜ பூபதிபண் டிதனே ஆண்டே. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1141
அன்னையபி ராமிசிரோ மணியருளா
லாண்டையினி யவிழ்தஞ் சொல்வேன்
நன்னயமாய்ச் சண்டமாரு தக்குழம்பிற்
குன்றியிடை நல்கு வீராய்
மன்னர்மண்ட லீகருமே மகிழ ராஜ
பண்டிதனை வணங்கிப் போற்றி
யின்னிமித்த மறியாசுக சன்னியதும்
விலகிடவு மினிசொல் வேனே. 

பாடல் எண்:- 1142
வேம்பினுட வித்ததனில் வெள்ளாட்டுப்
பிச்சதுவிட் டிழைத்து மேலும்
செம்பதுவின் பற்பமொரு அரிசியிடைக்
குழம்புமரைக் குன்றித் தாக்கி
நம்பியது நாலுமொரு மித்தவர்க்கு
நாவதனில் நன்றாய்த் தேய்த்து
வெம்புதலை வாராமல் வெந்நீருங்
குடிப்பித்து மிகச்செய் வீரே. 

பாடல் எண்:- 1143
நயனமிரு விழியதனில் கலிக்கமிடுங்
கடுகளவு நாடி யேற்ற
பயமணுகுஞ் சன்னியதும் பறந்துவிடுஞ்
சரபாணம் பாய்ந்தாற் போலும்
துயரணுகா துயிருவிழி யதனில்நீர்த்
தாரையது சொரியு மாகில்
சயனமிது கனல்வேக மெண்சாணு
தேகமெல்லாந் தணலா மாண்டே. 

பாடல் எண்:- 1144
தணல்பாயப் பாதாதி கேசம்வரை
யனல்சூழுஞ் சன்னிதோஷம்
அனலருவி யரிக்கும்விதந் தொண்ணூறு
கடிகைமனோ வேகத் தாலும்
புனல்சொரியும் பேதியர்தம் பத்தியமுந்
துவரைமிள- நீருங் கூட்டும்
அனல்வேக மடங்கிடுங்கா ணொருவேளை
யன்னமது மருளு வீரே. 

பாடல் எண்:- 1145
மூன்றுநா ளிந்தவித மொருவேளை
யவிழ்தமது முணருங் காலை
நின்றுவிரு நாசியிலு முன்சொன்ன
வற்றியது நசிய மேத்தப்
பண்டுபழ கினதோஷஞ் சுகசன்னி
பறந்தோடும் பாரில் விட்டுக்
கண்டுமிந்தப் பெரியோர்கள் கருத்ததனா
லெனக்குரைத்த கருவீ தாண்டே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1146
காயா புரியிலகுங் கன்னியபி ராமியருள்
தாயா மதியமிர்தந் தந்துவர மேயளித்தாள்
மாயா மருந்தறிந்தேன் வாசிகொண்டு நான்மகிழ்ந்து 
சாயா விருக்ஷமதின் சஞ்சீவி கண்டேனே. 

பாடல் எண்:- 1147
மதுரசஞ் சீவியுமே வாச்சுதுகா ணாண்டுசென்றால்
விதுரனெனு ஞானசிங்கம் வெட்டியரு ளால்மொழியும்
சதுர்முகஷ்ட கோணவரைத் தாண்டி சண்ட மாருதத்தைச்
சுதனருள்தன் கிருபையினால் சோதிமதி யாயெனக்கே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1148
பிரசண்ட மாருத மெய்ஞ்ஞான போதப் பிரபந்தமாய்
வரமுத்தி ஞான குறுமுனி வாக்கிய மகிழ்ந்தெனக்குத்
திரமாய் விதேகமுங் கல்வியின்பே ரின்பத் தேன்புகழ்ந்து
சரமாயா தீத துரைராஜ பண்டிதன் சதுர்மறையே. 

பாடல் எண்:- 1149
வீராதி வீரவீர ஞான வெட்டியானும்
பேராற் பிரசண்ட மாரூதபா ணப்பிர யோகமதால்
வேரான நோய்க ளதமாயப் பறந்து வெளிப்படவும்
தோரா தவிழ்த மநுபானஞ் சொல்லத் தொடங்கினனே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1150
கண்டீரோ பண்டிதரே காலைதனில் குன்றியது
சண்டமா ருதக்குழம்பைச் சாதித்தால்- எண்டிசையில்
மண்டலத்தோர் காண்க மருவி யொருவேளை
அண்டி பஞ்ச தாரையினி லாம். 

பாடல் எண்:- 1151
வாதமுதல் வாய்வும் வரும்பித்த சேத்துமங்கள்
மாதவிடாய் சூதகமு மாண்டுபோம்- கோதையே
அவரை துவரை யரைக்கீரை தூதுளங்காய்
விரையில்லாக் கத்தரியை மேவு. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1152
சம்பழத்தின் சாறதனில் கற்கண் டிட்டுச்
சண்டமா ருதக்குழம்பு குன்றி கூட்டி
நம்புதலா யதிகாலை தனியே யுண்ண
நாவறட்சி சுரதோஷஞ் சன்னி தீரும்
அம்புவியில் மூன்றுநா ளிச்சா பத்தியம்
அகன்றுவிடு மாண்டையினி யறையக்கேளீர்
கெம்பீர தானமிது வதித வேகஞ்
கேட்டீரோ பண்டிதரே கேள்வி யாண்டே. 

(வேறு- விருத்தம்)
பாடல் எண்:- 1153
அதிவீர சண்டமா ருதக்குழம்பி
லொருகுன்றி அவிழ்தந் தன்னில்
துதிசெய்து மாவிலிங்க மூலமெனும் 
வேர்தயிலங் கழஞ்சி தூக்கி
விதியதுவாய் மிளகுசுக்கு திப்பிலிமென்
பொடியி லத்தேன் விரவிக்கொண்டு
சதிசெய்யும் வினையது காண்சச்சு
வாய்வது தசைக்குஞ் சாற்று. 

பாடல் எண்:- 1154
கதிசெய்யுங் குமரகண்டன் பாரிசமும்
பச்சதொந்தி தமர்வாய் வோடு
மதிமயக்கு முகல்வலியும் காக்கைவலி
மூர்ச்சையதும் வாத ரோகம்
இதுக்கதித முன்னிசிவு பின்னிசிவு
யிரைப்பிரும லெழும்புஞ் சுவாசம்
அதிதமெனும் வாய்வுதசை யையஞ்க
மோரஞ்சு மகலு மாண்டே. 

பாடல் எண்:- 1155
பட்சமிந்தப் படியவுழ்த மதிகாலை
யொருவேளை பாலித் தேதான்
துஷ்டிவினை யகற்றுமஷட குன்மவலி
மூலமெட்டுந் துலைந்து போகும்
கஷ்டமென்ற கர்மமெல்லா மவிழ்தத்தா
லகலுமெனுங் கருதி னோங்காண்
இஷ்டமெனும் பத்தியந்தா னியம்பிடுவீ
ரன்னமிது வேளை தானே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1156
திரிபுரத்தை யெரித்தமதி ரவியைப் போற்றி
ஜெனகாதி ரிஷிகள் பதி னெண்பேர் போற்றிக்
கருவித்து நாதவிந்து கமலம் போற்றிக்
கனகரதந தீபசுழி முனையைப் போற்றி
மருமலரம் பிகைஞான குருவைப் போற்றி
மதிகசகுண் டலிகமல பதமே போற்றி
நிருபமணி மகுடமுடி வான சோதி
நிர்மலத்தாய் பதம்பணிந்து நிகழ்த்து வேனே. 

பஞ்சாமிர்தக் குளிகை
(தரு)
பஞ்சாமிர்தக்குளிகையைப்பாரும்- பூபதியாண்டே
ரஞ்சிதநாதவிந்தாலுநா னுண்டுகண்டேன். 
பாடல் எண்:- 1157
கஞ்சமலர்க்கணேசகமலபாதாரவிந்தஞ்செஞ்சொல்மொழி
மெஞ்ஞானதிருவள்ளுவன்பிரபந்தம்- ஜெகமும்பணியமதியமிர்தபரிபூரண
திரிவம்பலமிகுஞ்சுழியின்முனைககுணை
தெரிசித்தொழுமலர்சூடியும்வருஷித்துதிதமிழ்பாடியும்- பஞ்சா. 

பாடல் எண்:- 1158
சூதங்கெந்தி மால்தேவி துய்யபாஷாண லிங்கந்- தினுசொன்றுக்குப்
பலந்தானிடையதும் துகையஞ்சது கிளிகொண்டரு பத்ததுவுகமை
தொழுதுநாத மொன்றிடை யமுரிநாலும் மந்திடைச் 
சுகமெய்ப் பொருளது சுத்தியில் தகைமைப்படி யனலக்கினி- பஞ்சா. 

பாடல் எண்:- 1159
வீரமென்றவிந்துநீர்காரமென்றநாவநீர்
வீரமும்பூரமுநன்றாய்மேவியும்விரவியசாடியிலிரவிமதியைச்சாடி
மிகவும்வைத்துநாள்மூன்றுதெளியவைத்துநாளெடும்
விபரத்துடன்கிளிதொடங்கிடகமலாக்கினியனல்வீசிட- பஞ்சா. 

பாடல் எண்:- 1160
நீர்தொக்கிடநாதவிந்ததிதஅட்டுவொட்டுப்புநிறமுந்
துல்யமதிபோலவுநிலவுபோல்நிகரிலகுதிசையிலுலகுமிகபுகழும்
நெடியகனலமிர்தபடிகமெனும்லவனம்நிகழ்பத்தொரு
கதிர்காந்தியில்துருவெண்மதிவொளிவீசவும்- பஞ்சா. 

பாடல் எண்:- 1161
அஞ்சுபஞ்சபூதத்திலாடுஞ்சரக்கதஞ்சு- ஆனால்
சுத்தியிதாண்டேயஞ்சுங்கட்டனமாச்சுஅமுரியுவர்க்கனலில்
விபரமதுசலநீர்புகலரவியினொளிநிறமுஞ்செழுமையுரு
அதுபந்தனமிதுசிப்பியில்லெகுபந்தனபுகையாய்வரும்- பஞ்சா. 

பாடல் எண்:- 1162
இருவிசூஸ்திர நாபிநீருவிசாஸ்திரபேதி- யேலமிதஞ்சு
வகையினமதும்இடைபலமுமவ்விதகடல்நுரையுமிளகும்
மிருசீரகமுஞ் சுக்குவகையு மிடையுபலமெடு மஞ்சினை
திடமித்தொருஇனமாமிவைமனமேவிசீர்- பஞ்சா. 

பாடல் எண்:- 1163
சாதிக்காயும் பத்திரிசெண்பகஞ் சவ்வாது சட்டஞ்
சந்தனங்கஸ்தூரிகுரோசனையுந்- தவளநிறமதிபடிகமடநெகன
தனதுபசுமையொளிகனலும்பூரமதுகாண்சனிதானிடை
யிதுரோகணியதுகாலரைபலமாவதும்- பஞ்சா. 

பாடல் எண்:- 1164
கருதுஞ்சீனச்சரக்குவகைபலமரைகாண்- கடைச்சரக்கது
வஞ்சங்கணக்காய்ப்பலமதுகாண்- கடினம்வுணவுசரக்கதிமது
காலெனக்கடூரமில்லாவகையுங்கருதுமைந்திடைக்காணும்
கவனத்துடனவலேசதுசயனத்துடன்சரிபார்த்திடை- பஞ்சா. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1165
மதிரவியு நாதவிந்து வந்தவர லாறறிய
மதியும்ரவி வாதபித்த மண்ணும்விண்ணு மேபடைத்த
மதியுங்கதிர் சோதிமின்னல் வாரிபொழிந் தேசொரியும்
மதியுஞ்சல சூஸ்திரமாய் வந்தவகை காண்கிலரே. 

பாடல் எண்:- 1166
கருதியதை நாதவிந்து கண்டுமன மென்றிருவைத்
திருமருவெண் சர்க்கரைபோல் தீட்சைபத்துஞ்சென்றதுகாண்
அருவுருபோல் அவ்வும்உவ்வும் அன்னந்தண்ணீருண்டபலன்
வருவதுமுன் போனதெல்லா மதிரவியாற் காண்கிலரே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1167
நாலஞ் சொன்றாகிப் பிருதிவி நாத ரசமுறவாய்
மாலான அப்புமால் தேவி யுப்பு மதிரவியும்
மேலான தீப நதிமேவுஞ் சோதி மெய்க்குருவை
ஆலால முண்ட சிவனாலுஞ் சொல்ல அதுகழஞ்சே. 

பாடல் எண்:- 1168
இருபத்து ஒன்று மொருமித்துச் சுற்றி யினிமருந்தை
ஒருமித்து நாடி யபிராமி பாதமொருபொழுதும்
அறுபத்தில் நின்று கமலால யத்தி லருள்தனையே
புருவத்தி னேரில் துரியாதீ தத்தைப் போற்றினனே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1169
இந்தச் சரக்கதனை யிட்டுக் குளிக்கல்லில்
விந்துகரு நாய்த்தலைசன் வெண்மதிபால்- இந்தசரக்
காட்டியொரு வாரமது தானதன்பின் தேசியின்பால் 
ஆட்டியது முன்போலா மாண்டே. 

பாடல் எண்:- 1170
கேசரியின் பால்விடங் கேட்டீரோ ஆண்டையினி
மேஷம்வெள்ளை யாடதின்பால்விட்டுக்- கேசரியைப்
பொற்கமல மேவிப் பூமலரை யான்பணியச்
சொற்பர ஞானமதி சொல். 

(விருத்தம்)
பாடல் எண்:- 1171
மதிநிலவு ரவியொளி மருவுக்கன் பாலில்
வாரமொரு நாள்பிசகா மயன மாட்டிக்
கதிருதைய மிஞ்சிரச மதனா லேழு
கற்பூர வெற்றிலைச்சா றதனி லேழாம்
சிறுகீரை மூலமிகுத் தொன்று கேட்டுச்
சுத்தசலம் வீட்டுஅனல்படி யொன் றாக்கிக்
குருகுமிந்தக் கியாழமிட்டு வார மாட்டிக் 
கொடிதாக மெழுகுபதங் குடோரி யாண்டே. 

பாடல் எண்:- 1172
குடோரியெனுங் குளிகைநிழ லுலர்த்தல் வாரங்
குடோரமில்லாக் சிறுபயறுபோல் குளிகை செய்து
மிடைபயறி னிடையதுகா ணிடைவெவ் வேறாய்
இருந்தமருந் திடைகுறைந்தா லிதுவே கங்காண்
மடைபயர்களே கவனமில்லா மதிவே றானால்
மருந்ததுவு மிடைகுறைந்து மனிதர்க் கூட்ட
புடமதுகொண் டதுபொழியுங் காந்தி வீசும்
பொல்லாத கிராணிசுர தோஷ மாண்டே. 

பாடல் எண்:- 1173
பாவமென்ன செய்தொழிலின் தோஷத் தாலும்
படித்துகுரு ஆசானைப் பணியா தாலும்
ஆவதென்ன அருள்பொருளு மறியா தாலும்
அடுத்ததச தீட்சைகொண்டு அமைத்த தாலும்
மேவிதிறப் பதுவாசல் திறிவு கோலால்
வெளியாகும் வெளியில்பர வெளியுங் காணும்
தேவரிஷி யோர் பணியுஞ் சுழிமுனை தீபஞ்
சேர்ந்தொருநாள் கடுகையொன்று தெரிசித்தேனே. 

(விருத்தம்)
பாடல் எண்:- 1174
மாதரைவிட் டகன்றுகற்ப மறியா தாலும்
மவுனமென்றே வாசிகொண்டு மாறா தாலும்
வேதனையாம் விந்துவிட்டொ ழிந்த தாலும்
வீண்வேஷ மெடுத்துலகில் விறதா வாலும்
பாதையறிந் தென்னகுறை படிக்கா தாலும்
பாழ்யோனிக் காகமடிந் திடுவா ராகில்
சூதகவித்தை யமுரியென்ற சூட்சத் தாலுஞ்
சுகஞான பதவிதனில் சேர்க்கார் தானே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1175
சாத்தியமென்ற சன்னிசுர தாபசன்னி தானொழிய
மாற்றிவிடு மோஅவிழ்த மந்திரபஞ் சாக்ஷரத்தை
ஏற்றிவிடு மோர் குளிகை யிஞ்சி ரசந்தனிலும்
கார்த்திடுநாள் மூன்றுதினங் காலையொடு மாலையுமே. 

பாடல் எண்:- 1176
தாந்திரிக சன்னிசுரந் தாபசன்னி வாதசன்னி
ஆந்திரிகப் பித்தசன்னி யையமெனுஞ் சேத்மசன்னி
விந்தைசுக சன்னிகுறி மேகமது போல்கறுத்துச்
சுந்தரமாய்ப் பிரதாபஞ் சொல்லிதுய ராற்றும்தே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1177 
வாதத்தில் மூன்று பித்தத்தில் ரெண்டு வன்னியொன்று
தாதுத்த மத்த மீரஞ்சு வாயில் சார்ந்ததெனில்
பூதந் தலைப்பட்டு நானா வினோதம் புலப்படுமாய்ச்
சாதந்த மிதுவறி யாமலு மாண்பர்கள் பேசுவரே. 

பாடல் எண்:- 1178
மூலாக் கினிதன்னில் பித்தமும் வாதமு முன்னிழைந்தால்
காலாக் கினைகொண்டு வன்னியும் வாயுவுங் கருதினதாய்
வேலாக் கினைரண சூராதி வீர விகாரமந்தம்
பாராமல் பூதவே தாளம்போல் வந்து பாயுமதே. 

(வெண்பா)
பாடல் எண்:- 1179
வெள்ளெருக்கு மாவிலிங்கு வேர்க்கொடியும் வேலிபுனல்
மெள்ளைவிடு முருங்கை வேர்ப்பட்டை- உள்ளபடி
இஞ்சியதின் சுரச மினியசரி யஞ்சுமிடை
அஞ்சுபஞ்சு பூதரச மாம். 

பாடல் எண்:- 1180
காலையது மாலை கதிருதய காலத்தில்
வாலைப்பரு வத்தில்வரும் வாதசன்னி- காலைதனில்
இஞ்சியதோ டஞ்சு மினிய சுரசமதில்
அஞ்சி லொருகுளிகை யாம். 

பாடல் எண்:- 1181
விரவியனல் வெதுப்பியெட்டுக் கொருபங்காய்ச்
சுரசமது மினிநீர் வாங்கி
துறவியெனு மமிர்தபஞ்சாட் சரமெனவும்
தொடுத்தவிழ்தஞ் சுகபோ கிக்கு
நிறுவியெனுஞ் சன்னியது வசைவிபர
தோஷமதுஞ் தீருந் தீராச்
சுரசமிந்த நீரதனி லிழைத்துமருந்
திருவிழிக்குஞ் சூட்டி டீரே. 

பாடல் எண்:- 1182
பனிநீர்போல் நீர்த்தாரை கடிகைதொண்ணூற்
றாறுவிழி பகட்டி மூடி
இனியமருந் தனுபானஞ் சுரசமிரு
வேளையிடு மிழைத்து நாவில்
சனியன்விடுஞ் சன்னிசுரந் தாபம்விடுந்
தாந்தரீகந் தலைமேற் கொண்டால் 
மனிதனல்ல வென்றுபுகை வற்றிவசி
யங்கள் செய்து மாற்ற லாமே. 

(வேறு)
பாடல் எண்:- 1183
சூஸ்திர சன்னி வாகந் தொடும்பித்த சேத்ம சன்னி
வேற்றுமை பலதொந் தங்கள் விகாரத்தி னிடரி னாலும் 
சேத்தும மிகவும் விம்மி சென்னிய கனலுண் டாகும்
பார்த்தீரோ வேதஞான பண்டித ரறிகி லீரே. 

பாடல் எண்:- 1184
நாபியில் சூடுண் டாகி நற்குளஞ் சிதறிப் போகும்
நாபியில் வாதஞ் சேரில் நமனதாய் வாயு மீறும்
நாபியில் தோஷ மெய்தும் நாவறட் சியுமே யுண்டாம்
நாபியில் பித்தஞ் சேரில் நளிர்குளிர் சுரங்கா ணாண்டே. 

பாடல் எண்:- 1185
கன்றிடு குடைச்ச லண்டங் கதிர்மதி யிடியுங் குத்தல்
அண்டிடுந் தாப சோப மருட்பிரள் கடுக்குங் கைகால்
குண்டியும் வாயு பித்தங் கொலைவயி றிடிக்கு முஷ்ணம்
கண்டிரோ ஆண்டே யிந்தக் காரசா ரத்தின் வாறே. 

(கொச்சகம்)
பாடல் எண்:- 1186
குரோசனைகஸ் தூரிபச்சை குங்குமஞ்சவ் வாதுசட்டம்
அறுவகையி னோர்பழந்தான் அறுத்ததனி லுங்குழைத்து
மாறுமணி மாத்திரைகாண் வைத்ததிலுந் தேனுமிட்டுக்
கூறதுவாய் மூன்றுதினங் கொண்டிருக்க லாமறியே. 

பாடல் எண்:- 1187
ஆரேழு சன்னியது மாகுமனு பானமதால்
ஈரேழு வாதசுர மிஞ்சிசுர சந்தனிலே
பாரேழு மேபடைத்த பஞ்சாமிர் தக்குளிகை
காரார்க ணேசனருள் கர்மவினை யேகிடுமே. 

(கலித்துறை)
பாடல் எண்:- 1188
கொட்டாவி யிட்டு விக்கலு மேப்பமுங் குன்மக்ஷயம்
ஒட்டாச் சயமீளை உப்பிச மன்ன விரோசனமும்
தொட்டால் வலிவயர் காசமுஞ் சத்தி சுவாசபித்தங்
கட்டோடு சன்னி சுரங்குளிர் குத்தல் கடல்புகுமே. 

பாடல் எண்:- 1189
ஆடா தொடைரச மாதண்டைத் தும்பை யதில்பூரசங்
கோடா சாலைரசம் பொற்றலை யிஞ்சி குறித்திருமூன்
றாறாய சுரசம்வகைக் குப்பலங் கொண்டன் னீரினில்தேன்
நேராய்ச் சரியிடை மாத்திரை யொன்று நிகழ்த்திடுமே. 

பாடல் எண்:- 1190
உரைத்திரு வேளை விழிக்கொரு வேளை யோரைந்துநாள்
துரைப்படி நோய்க ளகல்வது நன்றுசின் னாட்கள்சென்றால்
முறைப்படி வற்றிப் புகைகொண்டு நாசி முடுக்குடனே
மறப்புனல் நீறு நதியாய்ப் பெருகி வழிந்திடுமே. 

(வேறு- கவி)
பாடல் எண்:- 1191
சண்ட மாருதக்கு ழம்பின் வேகஞ்
சதகோடி கோடிவினை சருவிபோங்
கண்ட போதுசுர சன்னி தோஷங்
கடல்புக்கி யோடிவிடுங் காண்கிலார்
விண்ட வேதையிதில் சண்ட மாருதமும்
வெள்ளி செம்பது வெவ் வேறதாய்த்
துண்டு துண்டம்வராக னோரிடையுந்
தூக்கு வாய்தகடு சூக்ஷமே. 

பாடல் எண்:- 1192
ரசித மாவதும் ஐவ ராகனெடை
தகடி லிருந்தகுரு காற்பலம்
விசித மாயமுரி யுடனும் வைத்துகுழை
மேலுஞ் செம்பதுமே பூசிடு
கசிடுங் கதிரில்காய்ந் ததின் னுமியில்
காட்டு மஞ்சுமுற மாமெடு
நேசு கீழதுமேல் வன்னி யிட்டுகனல்
நீறி னாலுமியி னேர்மையே. 

பாடல் எண்:- 1193
நீறி யாறியது பாருஞ் செம்பினொளி
நேரி துக்குவய தெட்டதாய்
மாறி சீவனமும் வாழ்வீர் நாடதிலும்
வாசி வாவெனவும் ரேசிகாண்
வாரி யோடுநிலை வங்கு சிங்கெனவு மாறி
வாழ்வீர் கண்ட தாரையில்
ஆசி யண்டவரை கீழு மேலுமிது
ஆவி நின்றிடம றிந்திடே. 

பாடல் எண்:- 1194
பாரும் செம்பு பசும்பொன்னின் வர்னமது
பரிசை வேதைகுரு பாதைகாண்
வாரி வெள்ளியது வராகநூறு எடை
வாங்கி டுங்குருவிற் கால்பலம்
வேரு மேமுரிவிட் டுமத்தி யதுவெள்ளி
மேலுந் தகடா திதம்
போகு மேகதிரில் வாலை வீசுகனல்
போடு முன்னுமுயல் புடமே. 

பாடல் எண்:- 1195
தகடு நூறுவரைக் கனலில் போடபுடந் தவளமென்ற நிற ரசிதமாம்
முகடு மேவரா வயசு பத்தரையு மோடி யாகிபொன் னாணிதான்
அகடு மேயிலையார் சீவனஞ்செய்து அம்பு விதனிலும் வாசமாய்
எகடு தன்வார மவுன சாதனையி லெய்தி டுமமுரி மாறிடே. 

பாடல் எண்:- 1196
மாறி மாறிவர வாசி யூதிவர வாசி வாசியதும் வீசியுந்
தேது தேறியொரு நாளு நாளுமினி தேக சுத்திசித றாமலும்
வாரி வாரிகட லாழி யானசல மாற மாறகதிர் வாலைகாண்
சூரி சூரியனுந் தேக தேகமொளி சுரூபசூக்ஷசுக சுத்தியே. 

பாடல் எண்:- 1197
வருஷ மொன்றுமதி மாற மாறகதிர்
வர்ன மாமதித வேதைகாண்
புருஷ னோடுரதி போர் மோகமது
போலுங் காரசார போதனை
பரிட்சை யாய்வருதல் காய தேகியெனும்
பாடு பாடுவெகு பாடுகாண்
அருளி லங்குமதி சந்திர புஷ்கரணி
யமிர்த சஞ்சீவியி னாட்டமே. 

பாடல் எண்:- 1198
நாலுங் கண்டுவெகு நாள்கள் சென்றுஉடல்
நாடி நாடி வெகு நாளதும்
போலுங் கற்பமுண ரம்பு விதனிலும்
பூத லத்தில்சில ஞானிக
ளாலும் வாதரச போத னைச்செயலி
லாவி தானுஞ்சுடு காடுபோய்த்
தேலுந் தேலிடினுங் கார சாரகுரு
தேடி தேடியலை வார்களே. 

பாடல் எண்:- 1199
மாதுயோனிதனில் வாழ்க்கை நாள்சிலது
வாடி வாடிசில மாய்கையால் 
ஓது நாள்முழுது மோடி மோடியுழன்
றார்க ளம்புவியி லோர்சிலர்
வாதி னால்சிலது நோய்க ளால்சிலது
வறுமை யால்சிலது நாள்கள்போய்
ஏது காய்ந்தளர்த் தான பின்புசட
மேது நாள்தினமு மில்லையே. 

பாடல் எண்:- 1200
சயில மஞ்சும்ரவி கான லுண்டுவர
தானுந் தன்னறிய லாகுமோ
சபில மாதுவின் சார மாவதனில்
சத்தும் சித்தும்விளை யாடலாம்
சயிலங் காணுதக தயிலஞ் சுண்டுஞ்சை
தன்னியத்தில் மனஞ் சாரிடா
சயில மஞ்சுமது தானே தானது
வாய்த்தா தும்வலுவ தாகுமே. 








Comments

Popular posts from this blog

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண்1- 300

திருவள்ளுவநாயனாரின் ஞானவெட்டியான் பாடல் தொகுப்பு

திருவள்ளுவரின் ஞானவெட்டியான் பாடல் எண் 1801- 1900